September 28, 2018

திருக்குறள்-பதிவு-27


                     திருக்குறள்-பதிவு-27

யாளி சிலை
அதிக அளவில்
செதுக்கப்பட்டு
பெரும்பாலான கோயில்களில்
மட்டும் வைக்கப்பட்டு
ஏன் பிற இடங்களில்
வைக்கப்படவில்லை
என்பதை மனிதன்
யோசித்து இருந்தால்,
கோடிக்கணக்கில் பணம்
செலவு செய்து
கணக்கில் அடங்காத
மனித உழைப்பை
பயன்படுத்தி கட்டப்பட்ட
கோயில்களில் எல்லாம்
தேவையில்லாத
ஒரு சிற்பத்தை
‘பெரும்பாலான
எண்ணிக்கையில்
வைக்க வேண்டிய
அவசியமில்லை
பின் எதற்காக யாளி
சிற்பத்தை கோயிலில்
வைத்தார்கள்
யாளி சிற்பத்தில் ஏதோ
ஒரு ரகசியம் இருக்கிறது
என்பதை மனிதன்
சிந்தித்து இருந்தால்
யாளி என்ற
உயிரினத்திலிருந்து தான்
மனிதன் வந்தான்
என்பதை மனிதன்
அறிந்து இருப்பான்

இந்து மதக் கோயில்களில்
ஆகம சாஸ்திர விதிகளின்படி    
கட்டப்பட்ட பல
கோயில்களுக்கு
நம்மில் பலர்
சென்றிருந்தாலும்
எத்தனை பேர் இந்த
யாளி சிலையைப்
பார்த்திருப்பார்கள்;
அப்படியே பார்த்து
இருந்தாலும்
இந்த சிலை என்ன
சிலை என்று
எத்தனை பேர் யோசித்து
இருப்பார்கள்;
எந்த விஷயத்தை
உணர்த்துவதற்காக
இந்த சிலை
செதுக்கப்பட்டிருக்கிறது
என்று சிந்தித்து
இருப்பார்கள்;
மனிதன் சிந்திக்காத
காரணத்தினால் தான்
யாளி பற்றிய
ரகசியத்தை மனிதனால்
கண்டுபிடிக்க முடியவில்லை

யாளி சிலை
தென் இந்தியாவில்
உள்ள ஆயிரக்கணக்கான
கோவில்களில்
லட்சத்திற்கும் மேற்பட்ட
சிலைகள் செதுக்கப்பட்டு
வைக்கப்பட்டு உள்ளன
உலகில் எந்த
ஒரு உயிரினத்திற்கும்
இந்த எண்ணிக்கையில்
முழு உருவ
முப்பரிமாண சிலைகள்
கிடையாது என்பதை
இந்த உலகம்
சிந்தனை செய்யத்
தவறி விட்டது

யாளி என்றால்
என்ன என்று மக்கள்
தெரிந்து கொள்ள
வேண்டும் என்பதற்காக
யாளிகளுக்கென்று
தமிழர்கள் தனியாகவே
ஒரு வரிசையை
கோவில் கோபுரத்தில்
ஒதுக்கி இருக்கிறார்கள்
அது யாளி வரிசை
என்றே அழைக்கப்படுகிறது

ராஜ ராஜ சோழன்
கட்டிய தஞ்சைப்
பெரிய கோயிலில்
யாளிக்கென்று ஒரு
முழு தனி வரிசையே
ஒதுக்கப்பட்டுள்ளது

மேலும் தஞ்சைப் பெரிய
கோயில் மட்டுமின்றி
மதுரை மீனாட்சி
அம்மன் கோயில்,
இராமேஸ்வரம் கோயில்,
சிதம்பரம் நடராசர் கோயில்,
காஞ்சிபுரம் வரதராஜப்
பெருமாள் கோயில்,
தென்காசி விஸ்வநாதர்
கோயில் என்று
தமிழ் மன்னர்களால்
கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான
பழமையான கோயில்களில்
எல்லாம் இரண்டு
கால்களில் நிற்கும்
யாளி சிலை
வைக்கப்பட்டிருக்கிறது

யாளிகள் பல்வேறு
வடிவங்களில்
செதுக்கப்பட்டு கோயில்
தூண்களில் வைக்கப்பட்டு
இருக்கிறது
சிங்கத்தின் தலை
கொண்டதை
சிம்மயாளி என்றும்,
யானை முகத்தை
கொண்டதை
யானையாளி என்றும்,
ஆட்டுத் தலை கொண்டதை
மகரயாளி என்றும்,
குதிரை முகம் கொண்டதை
குதிரை யாளி
என்றும் அழைக்கப்படும்
சிலைகளே அதிக
அளவில் கோயில்களில்
வைக்கப்பட்டு இருக்கும்

இவ்வாறு பல்வேறு
வடிவங்களில்
யாளி சிலைகள்
செதுக்கப்பட்டிருந்தாலும்
யாளிகள் என்பவை
பொதுவாக
சிங்கத்தின் முகத்தையும்
மனித உடலையும்
கொண்டு இரண்டு
கால்களில் நிற்கும் படியும்,
இரண்டு கைகள்
இருக்கும்படியும்,
வடிக்கப்பட்ட
சிலை என்பதை
அனைவரும் நினைவில்
கொள்ள வேண்டும்

குரங்கிலிருந்து
மனிதன் வந்தான்
என்று சார்லஸ் டார்வின்
சொல்லி இருந்தாலும்,
தசாவதாரத்தில்
விலங்கும், மனிதனும்
சேர்ந்த ஒரு உயிரினமான
யாளி என்ற
உயிரினத்திலிருந்து
மனிதன் வந்தான் என்று
நம் முன்னோர்கள்
சொல்லி இருந்தாலும்,
மனிதனில்
முதலில் தோன்றியது
ஆணா, அல்லது பெண்ணா
என்பதை நாம் இது வரை
சிந்திக்க வில்லை
என்றால் இந்த
நேரத்தில் இருந்து நாம்
சிந்திக்கத் தொடங்குவோம்

--------- இன்னும் வரும்
---------- 28-09-2018
//////////////////////////////////////////////////////////



No comments:

Post a Comment