October 05, 2018

திருக்குறள்-பதிவு-31


                         திருக்குறள்-பதிவு-31

தாயின் வயிற்றில்
கர்ப்பப்பபை
என்னும் உறையில்
நிறைந்துள்ள நீரில்
தான் கருவானது
உருவாகி வளரும்

இந்த உலகத்தில்
உயிரினங்கள்
முதலில்
நீரிலிருந்து தான்
தோன்றியது என்பதை
இது குறிக்கிறது

குழந்தை தாயின்
வயிற்றிலிருந்து
பிரிந்து
இந்த பூமியில்
நிலத்தில்
விழுகிறது

நீரில் இருந்த
உயிரினம்
நிலத்தில்
வாழ்வதற்குரிய
தகவமைப்பைப்
பெற்றதை இது
குறிக்கிறது

நிலத்தில் வாழ்ந்து
கொண்டு இருந்த
குழந்தை
தவழ்ந்து செல்கிறது

உயிரினங்கள்
நிலத்தில் தவழ்ந்து
செல்வதை இது
குறிக்கிறது

குழந்தை
தாயின் வயிற்றில்
நீரில் இருந்தது
முதல் தரையில்
தவழ்ந்து சென்றது
வரை உள்ள
நிகழ்ச்சியானது,
நீரில் உயிரினங்கள்
தோன்றியதையும்,
விலங்கின்
பரிணாமத்தையும்,
குறிக்கிறது.

தவழ்ந்து சென்ற
குழந்தை எழுந்து
நிற்க முயற்சி
செய்யும் போது
அடிக்கடி கீழே
தரையில் விழுந்தாலும்
குழந்தை
இரண்டு கால்களால்
நிற்பதற்கு தொடர்ந்து
முயற்சி செய்து
நிற்க ஆரம்பிக்கிறது

இது உயிரினங்கள்
எழுந்து நிற்க
முயற்சி செய்து
எழுந்து நின்றதைக்
குறிக்கிறது

இரண்டு கால்களால்
நிற்க ஆரம்பித்த
குழந்தை
இரண்டு கால்களால்
நடந்து முயற்சி
செய்தபின்
இரண்டு கால்களால்
ஓடுகிறது

எழுந்து நின்ற
உயிரினங்கள்
நடந்து சென்றதையும்
பின்பு ஓடியதையும்
இது குறிக்கிறது

தன்னுடைய
அன்றாடத் தேவைகளை
நிறைவேற்றிக் கொள்ள
பிறரின் தயவை
நாடிய குழந்தை
வளர்ந்தவுடன்
தன் அன்றாடத்
தேவைகளை தானே
பூர்த்தி செய்வதற்குரிய
ஆற்றலைப் பெறுகிறது.

எழுந்து நின்ற
குழந்தை முதல்
தன் தேவையை
தானே பூர்த்தி
செய்து கொள்வது
வரை உள்ள
நிகழ்ச்சியானது
விலங்கிலிருந்து
மனிதன்
தோன்றியதையும்
மனிதன் அடைந்த
முழு வளர்ச்சியையும்
இது குறிக்கிறது

இவ்வாறு குழந்தையில்
இருந்து தொடங்கி
குழந்தையின் வளர்ச்சியில்
ஏற்பட்ட மாற்றம் வரை
நாம் யோசித்து
பார்த்தோமேயானால்
உயிரினங்களின்
பரிணாமத்தை நாமே
வெளிப்படுத்துவதை
நாம் உணர்ந்து
கொள்ளலாம்

விஞ்ஞானியான
சார்லஸ் டார்வின்
உலகம் முழுவதும்
சுற்றிப் பார்த்து
தான் புறக்கண்களால்
கண்டதை
ஆராய்ச்சி செய்து
குரங்கிலிருந்து
மனிதன் வந்தான்
அதாவது விலங்கிலிருந்து
மனிதன் வந்தான்
என்று சொன்னார்.

சார்லஸ் டார்வினுக்கு
பல நூற்றாண்டுகளுக்கு
முன்பாகவே
மெய்ஞ்ஞானியான
நம் முன்னோர்கள்
இருக்கும் இடத்தை
விட்டு எங்கும் நகராது
ஒரே இடத்தில்
இருந்து தன்
அகக் கண்களால்
இந்த உலகம்
முழுவதையும் கண்டு
தாங்கள் கண்டதை
தசாவதாரத்தில்
நரசிம்ம அவதாரத்தின்
உருவமான
சிங்கத்தின் தலையும்
மனித உடலையும்
கொண்ட உயிரினத்திலிருந்து
மனிதன் வந்தான்
என்று சொன்னார்கள்

இப்பொழுது நாம்
விலங்கு முகமும்,
மனித உடலும் கொண்ட
உயிரினமான
யாளியிலிருந்து
மனிதன் வந்தான் என்ற
புதியதொரு தகவலைத்
தெரிந்து கொண்டிருக்கிறோம்
என்பதை நினைவில்
கொள்ள வேண்டும்

 --------- இன்னும் வரும்
----------  05-10-2018
//////////////////////////////////////////////////////////


October 04, 2018

திருக்குறள்-பதிவு-30


                      திருக்குறள்-பதிவு-30

உலகில் பிறக்கும்
எந்த ஒன்றும்
அது பிறக்கும் போது
அந்த பிறப்பு
அதற்கு சிறப்பைப்
பெற்றுத் தருவதில்லை
ஆனால்,
அதன் வளர்ச்சியில்
ஏற்படக்கூடிய
மாற்றமே
அதற்கு சிறப்பைப்
பெற்றுத் தருகிறது

குழந்தை பிறக்கும்போது
அக்குழந்தை
எந்தவிதமான
சிறப்பையும்
பெறுவதில்லை
ஆனால்,
குழந்தை வளர்ந்து
இச்சமுதாயம்
பாராட்டும் வகையில்
மாற்றம் அடையும் போது
அக்குழந்தை சிறப்பைப்
பெறுகிறது

விதையிலிருந்து செடி
பிறக்கும் போது
அது சிறப்பைப்
பெறுவதில்லை
ஆனால்,
செடி மரமாகி,
மரத்தில்
பூ காயாக
மாற்றம் அடையும்போதும்,
காய் கனியாக
மாற்றம் அடையும்போதும்,
சிறப்பைப் பெறுகிறது

பசுவிலிருந்து கன்று
பிறக்கும் போது
அந்த பசுக்கன்று
எந்தவிதமான
சிறப்பையும்
பெறுவதில்லை
ஆனால்
பசுக்கன்று வளர்ந்து
பசுவாக மாற்றம்
அடையும் போதும்,
பாலைக் கொடுக்கக்கூடிய
அளவில் மாற்றம்
அடையும் போதும்,
சிறப்பைப் பெறுகிறது

மண்ணினால் பானை
செய்யும்போது
அந்த பானை
பிறக்கிறது
இவ்வாறு
அந்த பானை
பிறக்கும் போது
அப்பானை சிறப்பைப்
பெறுவதில்லை
ஆனால்.
அப்பானையை
நெருப்பில் இட்டு
சுட்டப்பின் பானை
பயன்படுத்தக்கூடிய
அளவிற்கு மாற்றம்
அடையும்போது
சிறப்பைப் பெறுகிறது

செங்கலைச்
செய்யும் போது
அச்செங்கல்
பிறக்கிறது
இவ்வாறு செங்கல்
பிறக்கும்போது
அச்செங்கல்
சிறப்பைப்
பெறுவதில்லை
ஆனால்
அந்த செங்கல்
தீயினால் சுடப்பட்டு
சுட்ட செங்கலாக
மாற்றம் அடைந்து
பயன்படுத்தக்கூடிய
அளவிற்கு
மாற்றம் அடையும்போது
சிறப்பைப் பெறுகிறது

உலகில் உள்ள
அனைத்தையும்
நாம் உற்று
நோக்கினால்
பிறப்பை விட
மாற்றம் சிறப்பானது
என்பதை நாம்
உணர்ந்து கொள்ள
முடியும்

எனவே,
பிறப்பை விட
மாற்றம் சிறந்தது
என்பதை
பிறப்பின் மூலம்
பிறந்து கொண்டிருக்கும்
ஆண் இனமும்,
பெண் இனமும,
உணர்ந்து கொள்ள
வேண்டும்
அப்படி
ஆண் இனமும்,
பெண் இனமும்
உணர்ந்து கொண்டால்
மட்டுமே
ஆண் இனமும்,
பெண் இனமும்,
மாற்றத்தின் மூலம்
தோன்றிக்
கொண்டிருக்கும்
ஆணும், பெண்ணும்
சேர்ந்த இனத்தை
மதித்து நடக்கும்
இல்லையேல்
மதிக்காது என்பதை
நாம் உணர்ந்து
கொள்ள வேண்டும்

சார்லஸ் டார்வின்
குரங்கிலிருந்து
மனிதன்
தோன்றினான் என்று
உயிரினங்களின்
பரிணாமக் கோட்பாட்டை
சொல்லி இருந்தாலும்;

நம் முன்னோர்கள்
தசாவதாரத்தில்
சிங்க தலையும்,
மனித உடலையும்
கொண்ட
உயிரினத்திலிருந்து
மனிதன்
தோன்றினான் என்று
உயிரினங்களின்
பரிணாமக் கோட்பாட்டை
சொல்லி இருந்தாலும்;

விலங்கும், மனிதனும்
சேர்ந்த உயிரினமான
யாளி என்ற
உயிரினத்திலிருந்து
மனிதன்
தோன்றினான் என்று
உயிரினங்களின்
பரிணாமக் கோட்பாட்டை
நாம் தெரிந்து
வைத்திருந்தாலும்;

இவைகள் எல்லாம்
தேவையில்லாமலேயே
நாமே உயிரினங்களின்
பரிணாமக் கோட்பாட்டை
எளிதாகத் தெரிந்து
கொள்ள முடியும்
அது எப்படி
என்பதைப் பற்றி
இனி  பார்ப்போம்

--------- இன்னும் வரும்
---------- 04-10-2018
/////////////////////////////////////////


October 02, 2018

திருக்குறள்- பதிவு-29


                      திருக்குறள்- பதிவு-29

மாற்றத்தின் மூலம்
தோன்றிய
ஆண் இனம்
பெண் இனம்
ஆகிய இரண்டு
இனங்களும்
பிறப்பின் மூலம்
தோன்ற ஆரம்பித்து
பிறப்பின் மூலம்
தோன்றிக் கொண்டு
வருகிறது

மாற்றத்தின் மூலம்
தோன்றிய இனமான
ஆணும், பெண்ணும்
சேர்ந்த இனம்
பிறப்பினால் தோன்றிய
ஆண் இனத்தில்
மாற்றம் ஏற்பட்டும்,
பிறப்பினால் தோன்றிய
பெண் இனத்தில்
மாற்றம் ஏற்பட்டும்,
ஆணும், பெண்ணும்
சேர்ந்த இனம்
மாற்றத்தின் மூலம்
தோன்றிக் கொண்டு
வருகிறது.

மூன்று இனங்களும்
மாற்றத்தின் மூலம்
ஒரே நேரத்தில்
தோன்றி இருந்தாலும்
ஆண் இனமும்,
பெண் இனமும்
எண்ணிக்கையில்
அதிக அளவில்
இருக்கின்ற காரணத்தினால்
இந்த இரண்டு
இனங்களும் குறைந்த
எண்ணிக்கையில் இருக்கும்
ஆணும், பெண்ணும்
சேர்ந்த இனத்தை
சமுதாயத்திலிருந்து
புறக்கணித்து
வைத்திருக்கிறது;
ஒதுக்கி வைத்திருக்கிறது;
இழிவு படுத்தி
வைத்திருக்கிறது;

பெரும்பான்மையாக உள்ள
ஆண் இனமும்
பெண் இனமும்
இச்சமுதாயத்தில்
தாங்கள் சந்தோஷமாக
வாழ்வதற்குரிய அனைத்து
வசதிகளையும் செய்து
வைத்துக் கொண்டு
வாழ்ந்து கொண்டு
இருக்கிறது ஆனால்
அன்றாட வாழ்க்கையை
நடத்துவதற்கு தேவையான
அத்தியாவசியமான
அடிப்படையான
தேவைகளைக் கூட
சிறுபான்மையாக உள்ள
ஆணும், பெண்ணும்
சேர்ந்த இனத்திற்கு
ஆண் இனமும்
பெண் இனமும்
செய்யாமல் விட்டது
தான் மிகப்
பெரிய வேதனை

ஆண்கள் கழிவறை
பெண்கள் கழிவறை
என்று தங்கள்
இனத்திற்கு மட்டும்
எல்லா இடங்களிலும்
கழிவறைகளை
ஏற்படுத்திக் கொண்ட
ஆண் இனமும்
பெண் இனமும்
ஆணும், பெண்ணும்
சேர்ந்த இனத்திற்கு
எங்கும் கழிவறை
அமைக்காமல்
விட்டதிலிருந்து
ஆண் இனம்,
பெண் இனம்
ஆகிய இரண்டு
இனங்களும்
எவ்வளவு பெரிய
மனிதத் தன்மையற்ற
செயலை செய்து
இருக்கிறது என்பது
தெரியும்

அனைத்து இடங்களிலும்,
அனைத்து செயல்களிலும்,
அனைத்து துறைகளிலும்
தங்களை மட்டுமே
முன்னிறுத்தி செயல்களைச்
செய்து வரும்
ஆண் இனமும்,
பெண் இனமும்
ஆணும், பெண்ணும்
சேர்ந்த இனத்தை
புற்க்கணித்தே வைத்து
இருக்கிறது

ஆணும், பெண்ணும்
சேர்ந்த இனத்திற்கு
பெற்றோர்கள் புறக்கணிப்பு,
சொந்தக்காரர்கள் புறக்கணிப்பு,
சுற்றத்தார்கள் புறக்கணிப்பு,
கல்வியில் புறக்கணிப்பு,
வேலை வாய்ப்பில்
புறக்கணிப்பு,
வீட்டை வாடகைக்கு
விடுவதில் புறக்கணிப்பு,
பழகுவதில் புறக்கணிப்பு,
என அனைத்து
நிலைகளிலும்
புறக்கணிக்கப்படும் போது
அவர்கள் தங்கள்
வாழ்வாதாரத்திற்காக
என்ன செய்வார்கள்

பிச்சை எடுப்பதும்,
தவறான தொழிலில்
ஈடுபவதும்,
போன்ற செயல்களைச்
செய்பவர்கள்
ஆண் இனத்திலும்
பெண் இனத்திலும்
இருக்கிறார்கள்
ஆனால் குறைவான
எண்ணிக்கையில் இருக்கும்
ஆணும், பெண்ணும்
சேர்ந்த நிலையில்
உள்ளவர்கள் தங்கள்
வாழ்வாதாரத்திற்காக
செய்யும் செயல்களை
மட்டும் இச்சமுதாயம்
பெரியதாக பார்க்கிறது

ஆண்டாண்டு காலமாக
சமுதாயத்தால்
புறக்கணிக்கப்ட்டு வந்தாலும்;
சமுதாயத்தால்
இழிவுபடுத்தப்பட்டு
வந்தாலும்;
இச்சமுதாயம் மனித
இனத்தில் ஒரு இனமாக
அவர்களை மதிக்காமல்
அவமதித்தாலும்;
அவர்களை எதிலும்
சேர்க்காமல்
புறக்கணித்து வந்தாலும்;
அத்தனை கஷ்டங்களையும்
தாங்கிக் கொண்டு,
அத்தனை
மனவேதனைகளையும்
தாங்கிக் கொண்டு,
ஆணும், பெண்ணும்
சேர்ந்த இனத்தில்
உள்ளவர்கள்
போராடிக் கொண்டு
ஒவ்வோரு துறையிலும்
முன்னேறிக் கொண்டு
வருகிறார்கள்

அவர்கள் முன்னேற்றத்திற்கு
ஆண் இனம், பெண் இனம்
ஆகிய இரண்டு இனங்களும்
உதவி செய்யாவிட்டாலும்
பரவாயில்லை
அவர்கள் முன்னேற்றத்தை
தடை செய்யக்கூடிய
செயல்களைச் செய்யாமல்
இருந்தாலே போதும்

--------- இன்னும் வரும்
---------- 01-10-2018
///////////////////////////////////////////////