December 14, 2018

தவறான கருத்திற்கு பதில் !!


              தவறான கருத்திற்கு பதில் !!

#பெண்களைப் பற்றி
வில்லியம் கோல்டிங்
என்னும் ஆங்கில
நாவலாசிரியர்
சொல்லுவது இதுதான்:-

பெண்கள் தங்களை
ஆண்களுக்கு சமம் என்று
முட்டாள்தனமாக எண்ணிக்
கொண்டிருக்கின்றனர்
என்றே நான் நினைக்கிறேன்…….

பெண்கள் ஆண்களுக்கு
நிகரானவர் இல்லை;

மாறாக, ஆண்களைவிட
பன்மடங்கு உயர்ந்தவர்கள்
பெண்கள்..

ஒரு பெண்ணிடம்
நீ எதையாவது கொடுத்தால்,
அவள் அதனை பெரிதாக்கி
சிறப்பு செய்துவிடுவாள்.

உன் உயிர்
அணுவைக் கொடு,
அவள் உனக்கு
ஒரு குழந்தையைத்
பெற்றுத் தருவாள்.

ஒரு வீட்டைக் கொடு
அதனை அவள்
குடும்பமாக
மாற்றிக்காட்டுவாள்……

நீ மளிகைப்
பொருட்களைக் கொடு
அவள் விருந்து படைப்பாள்..

நீ வெறும் புன்னகையை
செய்தால் போதும்

அவள் தன் இதயத்தையே
உனக்குக் பரிசளிப்பாள்……..

நீ கொடுப்பது எதுவாயினும்
அதனை பலமடங்கு
பெரிதாக்குவது
பெண்ணின் குணம்.

எனவே நீ அவளுக்கு
*சிறிய அளவில்
 துன்பம் தொல்லை*
கொடுத்தாயானால் அவள்
உடனே அதையே
டன் கணக்கில்
உனக்குத் திருப்பித்தருவாள்
என்பதைமட்டும்
எப்போதும் மறந்துவிடாதீர்.
///////////////////////////////////////////////////////////

ஒரு பெண்ணுக்கு நீ
கொடுப்பது எதுவாயினும்
அதை பலமடங்கு
பெரிதாக்குவது பெண்ணின்
குணம் அதாவது
நீ பெண்ணிற்கு
எதை கொடுத்தாலும்
அதை பெரிதாக்கி
டன் கணக்கில்
திருப்பித் தருவாள்
என்பது தான் இதில்
சொல்லப்பட்ட கருத்து
இந்த கருத்தே தவறானது

ஒரு பையன்
ஒரு பெண்ணை
காதலிக்கிறான்
அந்த பெண்ணிடம் சென்று
நான் உன்னை
காதலிக்கிறேன்
நீ இல்லை என்றால்
நான் செத்து
விடுவேன் என்கிறான்
இப்போது அந்த பையன்
அந்த பெண்ணிடம்
காதலை காட்டுகிறான்
எதை கொடுத்தாலும்
பன்மடங்கு பெரிதாக்கி
டன் கணக்கில்
திருப்பிக் கொடுக்கும்
அந்த பெண்
அந்த பையனிடம் என்ன
செய்து இருக்க வேண்டும்
காதலை பன்மடங்காக
பெருக்கி அந்த பையனிடம்
காதலை கொடுத்திருக்க
வேண்டும் ஆனால்
அந்த பெண்
காதலைக் காட்டாமல்
வெறுப்பைக் காட்டுகிறாள்
அப்படி இருக்கும்போது
இந்தக் கருத்து எப்படி
சரியானது என்று
சொல்ல முடியும்


இந்த உலகம்
ஒரு பெண்ணிற்கு
எதை கொடுத்தாலும்
அதை பன்மடங்காக
பெருக்கி இரண்டு
நிலைகளில் அந்த பெண்
திருப்பித் தருவாள்

ஒன்று
ஒரு செயலை
ஒரு பெண் விரும்பினால்
அதற்குரிய பலனை
அந்த பெண் பன்மடங்கு
திருப்பித் தருவாள்

இரண்டு
ஒரு செயலை
ஒரு பெண்
விரும்பவில்லை என்றால்
அதற்குரிய பலனை
அந்த பெண் பன்மடங்கு
திருப்பித் தருவாள்

ஒரு பையன்
ஒரு பெண்ணை
காதலிக்கிறான்
அந்த பெண்ணிடம் சென்று
நான் உன்னை
காதலிக்கிறேன்
நீ இல்லை என்றால்
நான் செத்து
விடுவேன் என்கிறான்
அந்த பெண்ணிற்கு
அந்த பையனை
பிடித்து இருந்த
காரணத்தினால்
அவள் அந்த
பையனுக்கு தன்
காதலை பன்மடங்கு
திருப்பித் தருகிறாள்

ஒரு பையன்
ஒரு பெண்ணை
காதலிக்கிறான்
அந்த பெண்ணிடம் சென்று
நான் உன்னை
காதலிக்கிறேன்
நீ இல்லை என்றால்
நான் செத்து
விடுவேன் என்கிறான்
அந்த பையனை
அந்த பெண்ணிற்கு
பிடிக்கவில்லை
என்ற காரணத்தினால்
இப்போது அந்த பெண்
அந்த பையன் மீது
வெறுப்பை பன்மடங்கு
காட்டுகிறாள்

இப்போது
யோசித்துப் பாருங்கள்
ஒரு பெண்
அன்பு என்றாலும்
கோபம் என்றாலும்
பன்மடங்கு திருப்பித்
தருவாள் என்பது
தவறான கருத்து

ஒரு செயலை
ஒரு பெண் விரும்பினால்
அதற்குரிய பலனை
அந்த பெண் பன்மடங்கு
திருப்பித் தருவாள்
ஒரு செயலை
ஒரு பெண்
விரும்பவில்லை என்றால்
அதற்குரிய பலனை
அந்த பெண் பன்மடங்கு
திருப்பித் தருவாள்
என்பது தான்
சரியான கருத்து
என்பதை நாம்  உணர்ந்து
கொள்ள வேண்டும்

மேலும்,
ஆங்கில நாவலாசிரியர்
வில்லியம் கோல்டிங்
என்பவர் அயல்
நாட்டைச் சேர்ந்தவர்
சொன்னார் என்பதற்காக
அவருடைய கருத்து
சரியான கருத்து
என்று ஆகி விடாது

கம்பர்
இளங்கோவடிகள்
கண்ணதாசன்
பட்டுக் கோட்டை
கல்யாணசுந்தரம்
போன்ற  கணக்கிலடங்காத
மாபெரும் அறிவாளிகளை
நாம் மறந்து விட்டால்
இந்த நிலை தான்
தமிழகத்திற்கு
ஏற்படும் என்பது
நன்றாகத் தெரிகிறது

என்றும் அன்புடன்
K.பாலகங்காதரன்
14-12-2018
//////////////////////////////////////////////







December 12, 2018

ரஜினி என்ற மூன்றெழுத்து மந்திரம் !!


                ரஜினி என்ற
                மூன்றெழுத்து மந்திரம் !!

மனிதன் தன்னுடைய
வாழ்க்கையில்
இரண்டு செயல்களை
செய்வது என்பது மிகவும்
கடினமான விஷயம்

ஒன்று :
இந்த உலகத்தில்
தனக்கென்று ஒரு
இடத்தை பிடிப்பது

இரண்டு :
பிடித்த இடத்தை
தக்க வைத்துக்
கொள்வது

ஒரு சாதாரண
குடும்பத்தில் பிறந்து ;
நடத்துனராக
வேலை செய்து ;
தனக்கென்று ஒரு
தனிப்பட்ட திறமையை
உருவாக்கிக் கொண்டு
அந்த திறமையைப்
பயன்படுத்தி
கடுமையாக உழைத்து ;
ஏளனம்
செய்தவர்களையும்,
எள்ளி
நகையாடியவர்களையும்
புறக்கணித்து ;
உழைப்பின்
மேன்மையாலும்
பழகும் தன்மையாலும்
குணத்தில் உயர்ந்து ;
தனக்குள் குடி
கொண்டிருந்த
நிதானம் ; பொறுமை ;
என்ற இரண்டு
மிகப்பெரிய
சக்தியைப் பயன்படுத்தி
பல்வேறுபட்ட
நிலைகளில் இருந்து
தன்னை வந்து
தாக்கிய எல்லாவிதமான
இடையூறுகளையும்
கடந்து சென்று ;
எதிரிகளை எழவே
விடாமல் வீழ்த்தி ;
துரோகிகள் இனி
துரோகியாக யாரிடமும்
இருக்கக் கூடாது என்று
களை எடுத்து
சூப்பர் ஸ்டார்
என்ற பட்டம்
பெற்றது என்பது
ரஜினி
இந்த உலகத்தில்
தனக்கென்று ஒரு
இடத்தைப்
பிடித்ததைக் குறிக்கும்

பல கோடிகள்
புழங்கும் கனவுத்
தொழிற்சாலையில் ;
வீழ்த்தி விட காத்திருந்த
எதிரிகள் தன்னைச்
சுற்றி நின்று
கொண்டிருந்த நிலையில் ;
தோல்வி காண
வைக்க துரோகிகள்
நேரம் பார்த்துக்
கொண்டிருந்த நிலையில் ;
கீழே விழுவாரா
பார்த்து ரசிக்கலாம்
என்று இரக்கமில்லாத
நெஞ்சங்கள் பார்த்துக்
கொண்டிருந்த நிலையில் ;
அழிந்து விட்டால்
கை கொட்டி சிரிக்கலாம்
என்று பார்த்துக்
கொண்டிருந்தவர்கள்
மத்தியில் ;
உழைப்பால் உயர்ந்து
திறமையால் தன்னை
இந்த உலகத்திற்கு
பிறரிடமிருந்து
வேறுபடுத்தி காட்டி
தனக்கென்று ஒரு
இடத்தைப் பிடித்ததோடு
மட்டுமல்லாமல்
அதை 40 ஆண்டுகளாக
தக்க வைத்துக் கொண்டு
இருக்கும் அந்த
மூன்றெழுத்து
மந்திரத்திற்குப் பெயர் தான்
ரஜினி

இந்த உலகத்தில்
எனக்கென்று
ஒரு இடத்தைப் பிடித்து
அந்த இடத்தைத்
தக்க வைத்துக்  
கொள்வதற்கு முன்பு
உலகில் உள்ள
அனைவருடைய
வீட்டு வாசற்படியிலும்
அலுவலக வாசற்படியிலும்
நான் காத்துக் கிடந்தேன் ;
எனக்கென்று ஒரு
இடத்தைப் பிடித்து
அந்த இடத்தை நான்
தக்க வைத்துக்
கொண்டபிறகு
உலகில் உள்ள
அனைவரும் என்
வீட்டு வாசற்படியிலும்
அலுவலக வாசற்படியிலும்
காத்துக் கொண்டிருக்கின்றனர் ;
என்ற வார்த்தை
ரஜினி
என்ற மூன்றெழுத்து
மந்திரத்திற்கு கச்சிதமாக
பொருந்தும் வார்த்தை

ரஜினியைப் பற்றி
ஆயிரம் கருத்து
வேறுபாடுகள் இருந்தாலும்
ரஜினியை நண்பர்களாக
நினைப்பவர்களும் சரி ;
ரஜினிக்கு ரசிகர்களாக
இருப்பவர்களும் சரி ;
ரஜினிக்கு எதிரியாக
இருப்பவர்களும் சரி ;
ரஜினியை எதிரியாக
கருதுபவர்களும் சரி ;
இவர்கள் அனைவரும்
ஒப்புக் கொண்ட
ஒரு விஷயம்
உண்டு என்றால்
அது இது தான்

தன்னுடைய நடிப்பாலும் ;
தன்னுடைய சிரிப்பாலும் ;
தன்னுடைய ஸ்டைலாலும் ;
இந்த உலகத்தை
40 வருடங்களாக
கட்டிப் போட்ட மந்திரம்
என்ற ஒன்று இந்த
உலகத்தில் உண்டு
என்றால் அது
ரஜினி
என்ற மூன்றெழுத்து
மந்திரம் மட்டுமே
என்பதை அனைவரும்
ஒப்புக் கொண்டுள்ளனர்.

12-12-2018 - அன்று
பிறந்தநாள் காணும்
ரஜினி
என்ற மூன்றெழுத்து
மந்திரத்திற்கு என்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் !!

----K.பாலகங்காதரன்
----12-12-2018
///////////////////////////////////////////







திருக்குறள்-பதிவு-67


                      திருக்குறள்-பதிவு-67

ஜியார்டானோ
புருனோவின்
தந்தையின் பெயர்
ஜியோவான்னி புருனோ
(Giovanni Bruno)
இவரது தந்தை
ஒரு இராணுவ
அதிகாரி இவரது
தாயாரின் பெயர்
பிரௌலிஸா
ஸாவோலினோ
(Fraulissa Savolino)

ஜியார்டானோ
புருனோ
கல்வி பயில்வதற்காக
1562-ஆம் ஆண்டு
நேபில் நகருக்கு
சென்றார்
1565-ஆம் ஆண்டு
தனக்கு வைக்கப்பட்ட
பெயரான
பிலிப்போ புருனோ
(Filippo Bruno)
என்ற பெயரை
ஜியார்டானோ புருனோ
(Giordano Bruno)
என மாற்றிக்
கொண்டார்
1572-ஆம் ஆண்டு
இவர் கிறிஸ்தவ
மத போதகராக
ஆவதற்குரிய
மதக்கல்வி பயின்றார்
1575-ஆம் ஆண்டு
ஜியார்டானோ புருனோ
(Giordano Bruno)
கிறிஸ்தவ
பாதிரியார் ஆனார்

ஜியார்டானோ
புருனோ எதையும்
வெளிப்படையாகப்
பேசக் கூடியவர்
எந்த ஒரு
விஷயத்தையும்
ஆராந்து பார்த்து
எது நல்லது
எது கெட்டது
என்று முடிவு
செய்து அதன்படி
செயல்படுபவர்

ஒருவர் சொன்ன
கருத்து தவறு என்று
தனக்கு தெரிந்தால்
அதை தைரியமாக
சுட்டிக் காட்டத்
தயங்காதவர்
ஒரு தவறான
கருத்தை காலம்
காலமாக மக்கள்
பின்பற்றி வந்தால்
அந்த கருத்து தவறு
என்று எடுத்துக் காட்ட
தயங்காதவர்

ஜியார்டானோ புருனோ
கிறிஸ்தவ மத
போதகராக இருந்தும்
கிறிஸ்தவ மத
போதகராக ஆவதற்காக
கற்பிக்கப்படும்
கற்பித்தலில் உள்ள
பழக்க வழக்கங்களை
ஆராய்ந்து அதில்
உள்ள குறைகளைச்
சுட்டிக் காட்டினார்

கிறிஸ்தவ மத
போதகராக ஆவதற்கு
கற்பிக்கப்படும்
கற்பித்தலில் எப்படி
நடந்து கொண்டே
பேச வேண்டும்
என்பதும்
எப்படி நின்று கொண்டே
பேச  வேண்டும்
என்பதும்
எப்படி மனிதர்களுடன்
பழக வேண்டும்
என்பதும்
கற்றுக் கொடுப்பது
என்பது ஒரு
மதபோதகர்
இச்சமுதாயத்தில்
எப்படி செயற்கையாக
நடந்து கொள்வது
என்பதை சொல்லித்
தருவது போல்
அமைகின்ற
காரணத்தினால்
இந்த கற்பித்தல்
முறையின் மூலம்
ஒரே மாதிரியான
ம்த போதனை
செய்பவர்களைத் தான்
உருவாக்க முடியுமே
ஒழிய உண்மையான
மத போதகர்களை
உருவாக்க இயலாது
என்று கத்தோலிக்க
கிறிஸ்தவ கற்பித்தலில்
உள்ள குறையைச்
சுட்டிக் காட்டினார்

அதற்கு கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபையினர்
கிறிஸ்தவ மதத்தை
எதிர்க்கிறார்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையையும்
அச்சபை பின்பற்றி
வரும் நடை
முறைகளையும்
எதிர்க்கிறார் என
ஜியார்டானோ புருனோ
அவர்களின் மீது
குற்றம் சுமத்தினர்
எனவே,
ஜியார்டானோ புருனோ
1576-ஆம் ஆண்டு
பாதிரியார் வாழ்க்கையை
துறக்க வேண்டிய
கட்டாயத்திற்கு
தள்ளப் பட்டார்

இதன் தொடர்ச்சியாக
ஜியார்டானோ புருனோ
அறிவு ஒருவனை
உயர்த்தும்
அறியாமை ஒருவனை
வீழ்த்தும் என்பதை
புரிந்து கொண்டார்
இதனால் அவருக்கு
அறிவின்
மேல் காதலும்,
அறியாமையின் மேல்
வெறுப்பும் அவருக்கு
ஏற்பட்டது

இதன் விளைவாக
ஜியார்டானோ புருனோ
ஒரு புரட்சியாளனாக
மாறினார்
பாராம்பரியமாக இருந்து
வரும் அதிகாரத்தையும்
அந்த அதிகாரத்தைப்
பயன்படுத்தி அதிகாரம்
செய்பவர்களையும்
அவர் ஏற்றுக்
கொள்ள மறுத்தார்
இதனால் அவர்
தனிமைப் படுத்தப்
பட்டார் இதன்
விளைவாக இவர்
பல நாடுகளில்
நாடோடியாக அலைய
வேண்டி இருந்தது
ஆனாலும் உண்மைகளைச்
சொல்வதில் எந்தவிதமான
தயக்கமும் அவருக்கு
ஏற்படவில்லை

உண்மையை சொல்வதன்
மூலம் என் உயிர்
போகும் என்றால் நான்
அந்த உண்மையை
கண்டிப்பாக சொல்வேன்
என்றார் ஜியார்டானோ
புருனோ

--------- இன்னும் வரும்
---------  11-12-2018
///////////////////////////////////////////////////////////