January 08, 2019

திருக்குறள்-பதிவு-81


                        திருக்குறள்-பதிவு-81

"Father Bruno……….!
நீங்கள் இந்த
நீதிமன்றத்தில்
ஒரு குற்றவாளியாக
குற்றம் சுமத்தப்பட்டு
கைதியாக நின்று
கொண்டிருக்கிறீர்கள் !
உங்கள் மீது சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டுக்களுக்கு பதில்
சொல்வதற்கு மட்டுமே
உங்களுக்கு அனுமதி
வழங்கப்பட்டுள்ளது !
எதிர்த்துக் கேள்வி
கேட்பதற்கு உங்களுக்கு
எந்தவிதமான அனுமதியும்
வழங்கப்படவில்லை
என்பதை முதலில்
நீங்கள் தெரிந்து
கொள்ளுங்கள்…………..! “

" பல குற்றங்களுக்கு
காரணமானவர் நீங்கள் !
குற்றவாளி என்று
சொல்வதற்கு முழுத்
தகுதியுடையவர் நீங்கள் !
ஒரு குற்றவாளி எங்களைப்
பார்த்து எப்படி கேள்விகள்
கேட்க முடியும்…………………! "

"கேள்விகள் கேட்கும்
அதிகாரம் எங்களிடம்
மட்டுமே உள்ளது
கேட்கும் கேள்விகளுக்கு
மட்டுமே பதில்
சொல்லுங்கள் என்றார்
கார்டினல் சார்டோரி
(Cardinal Sartori) “

"உங்கள்மேல் குற்றம்
சுமத்தி உங்களை
குற்றவாளி என்று
நிரூபிக்க பல்வேறு
விதமான ஆதாரங்கள்
உள்ளன "

"நீங்கள் எழுதிய
அறிக்கைகள் ;
வெனிஸ் நகரத்தில்
நடத்தப்பட்ட விசாரணையில்
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு
நீங்கள் அளித்த பதில்கள் ;
நீங்கள் எழுதியுள்ள
புத்தகங்கள் ;
மற்றும் பைபிளில்
ஆண்டவரால் சொல்லப்பட்ட
கருத்துக்கு எதிராக
நீங்கள் சொல்லியுள்ள
கருத்துக்கள் ; ஆகிய
அனைத்தையும் நாங்கள்
ஆராய்ந்து பார்த்ததில்
ஒரே ஒரு விஷயம்
மட்டும் தெள்ளத்
தெளிவாக விளங்குகிறது "

"அதாவது நீங்கள்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபைக்கு எதிரானவர்
என்பதும் ;
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிரானவர் என்பதும் ;
கிறிஸ்தவ மத
நம்பிக்கைக்கு
எதிரானவர் என்பதும் ;
தெளிவாகிறது "
என்றார் விசாரணைக்குழு
கார்டினல்களில் ஒருவர் “

"எனக்கு இயேசு
கிறிஸ்துவின் மீதும்
கிறிஸ்தவ மதத்தின்
மீதும் நம்பிக்கை
உண்டு ஆனால்
கிறிஸ்தவ மதத்தில்
கடைபிடிக்கப்பட்டு வரும்
நம்பிக்கைகளின் மேல்
நம்பிக்கை கிடையாது"

"நான் ஒரு தத்துவவாதி
நான் ஒரு மிகப்பெரிய
தத்துவ அறிஞனும்
கிடையாது : மிகப்பெரிய
விஞ்ஞானியும் கிடையாது :
தத்துவமும், விஞ்ஞானமும்
எனக்குப் பிடிக்கும் :
த‘த்துவமும், விஞ்ஞானமும்
என்ன சொல்கிறதோ
அதை பேசினேன் :
அது உங்களுக்கு
பிடித்து இருந்தால்
ஏற்றுக் கொள்ளுங்கள் :
பிடிக்கவில்லை என்றால்
விட்டு விடுங்கள்  :
அப்படி செய்யாமல்
என்னை கைது பண்ணி
குற்றவாளியாக்க ஏன்
முயற்சி செய்து
கொண்டிருக்கிறீர்கள்…………….? "

"நான் தத்துவமாகவும்,
விஞ்ஞான ரீதியாகவும்
பேசிய பேச்சுக்களையும்       
கண்டு பிடித்து சொன்ன
கருத்துக்களையும் கிறிஸ்தவ
மதத்துடன் இணைத்து
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக செயல்பட்டான் ;
என்று குற்றம் சுமத்தி
கிறிஸ்தவ மதத்திற்கு
விரோதியாக என்னை
அடையாளப்படுத்தி ;
கிறிஸ்தவ மக்கள்
என்னை விரோதியாக
நினைக்கும்படி வைத்ததோடு
மட்டுமல்லாமல் ;
என்னை குற்றவாளி என்று
நிரூபிக்க முயற்சி செய்து
கொண்டிருக்கிறீர்கள் !"
என்றார் ஜியார்டானோ
புருனோ.

" நீங்கள் எழுதிய
எழுத்துக்கள் பேசிய
பேச்சுக்கள் அனைத்தும்
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக இருக்கிறது
என்று ஒரு நாள்
கூட நீங்கள் நினைத்துப்
பார்த்ததில்லையா……………………..?

“ Father Bruno
நீங்கள் கிறிஸ்தவ
குடும்பத்தில் பிறந்து ;
கிறிஸ்தவ
குடும்பத்தில் வளர்ந்து ;
கிறிஸ்தவராக
இருந்த நீங்கள் :
கிறிஸ்தவ பழக்க
வழக்கங்கங்களைக் கற்று
கிறிஸ்தவ
மதபோதகரான நீங்கள் :
கிறிஸ்தவ மதபோதகர்களில்
சிறந்தவராகக்
கருதப்படும் நீங்கள்
ஏன் நீங்கள் சார்ந்துள்ள
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக செயல்படுகிறீர்கள் ”
என்றார் விசாரணைக்
குழுவில் உள்ள
கார்டினல்களில்
இன்னொருவர்.

“ நான் மதவாதி அல்ல !
ஒரு தத்துவவாதி !!
நான் மதத்தை
பின்பற்றவில்லை ;
தத்துவத்தைத் தான்
பின்பற்றினேன் ;
நான் சொன்னது
தத்துவ ரீதியாக
சரியானது ;
நீங்கள் அதை
மத ரீதியாக
தவறு என்கிறீர்கள் ;
உங்களுக்கும் எனக்கும்
ஒரே ஒரு
வித்தியாசம் தான்
நீங்கள் மதவாதி
நான் தத்துவவாதி
அவ்வளவு தான்” என்றார்
ஜியார்டோனோ புருனோ

---------  இன்னும் வரும்
---------  08-01-2019
///////////////////////////////////////////////////////////


January 06, 2019

திருக்குறள்-பதிவு-80


                      திருக்குறள்-பதிவு-80

ரோம் நகரம்
வந்தடைந்த
ஜியார்டானோ
புருனோ சிறையில்
அடைக்கப் பட்டார்.

ஜியார்டானோ
புருனோவை
விசாரிப்பதற்காக
அமைக்கப்பட்ட
விசாரணைக் குழுவில்
சிறப்பு வாய்ந்த
கார்டினல்கள் ,
திறமை வாய்ந்த
கிறிஸ்தவ
மதபோதகர்கள் ,
ஆகியோர் இருந்தனர்

சிறையிலிருந்து
அழைத்து வரப்பட்ட
ஜியார்டானோ புருனோ
விசாரணை
மண்டபத்தில் ,
விசாரணைக் குழு
முன்னிலையில் ,
தன்னந்தனியாக
கைதியாக நின்று
கொண்டிருந்தார்.

ரோம் நகரத்தில்
விசாரணை
மண்டபத்தில்
விசாரணை
ஆரம்பமானது

“நோலா (Nola)
என்ற நகரத்திலிருந்து
வந்திருக்கும்
தந்தை (Father)
ஜியார்டானோ
புருனோ அவர்களே ! ”

“நீங்கள் சூரியனை
மையமாக வைத்து
பூமி சுற்றுகிறது
என்று நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ்
சொன்ன கருத்து
சரியானது என்றும் ;
பூமியை மையமாக
வைத்து சூரியன்
சுற்றுகிறது என்று
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்து தவறானது“
என்றும் சொல்லி
இருக்கிறீர்கள்”

“இதன் மூலம்
நீங்கள் கிறிஸ்தவ
கடவுளுக்கு எதிராகவும் ;
கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபைக்கு
எதிராகவும் ;
புனித தந்தையாக
கருதப்படும் போப்புக்கு
எதிராகவும் ;
கருத்து சொல்லி
இருக்கிறீர்கள்“

“மேலும் நீங்கள்
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராகவும் ;
கிறிஸ்தவ
மதபோதனைகளுக்கு
எதிராகவும் ;
தீங்கு விளைவிக்கும்
நடவடிக்கையில்
ஈடுபட்டதாக
குற்றம் சாட்டப் பட்டு
இப்போது நீங்கள்
எங்கள் முன்னால்
நின்று கொண்டு
இருக்கிறீர்கள் ”

“இந்த நீதிமன்றம்
உங்களுக்கு
நல்ல முறையில்
நல்லவிதமாக
தீர்ப்பு வழங்கவே
விரும்புகிறது ”

“நீங்கள் பரிசுத்த
ஆவியின் பெயராலே
உங்களுக்காக
வாதாடுவதற்கு
யாரேனும் இருந்தால்
அவர்களை நீங்கள்
கேட்கலாம் “ என்றார்
விசாரணை அதிகாரி.

“நான் யார்
என்பதும் ;
நான் படைத்த
படைப்புகள் எத்தகைய
தன்மைகளைக்
கொண்டவை
என்பதும் ;
அவைகள் எத்தகைய
அர்த்தத்தை
கொடுக்கக் கூடியவை
என்பதும் ;
எனக்கு தெரியும் ! ”

“விசாரணையின் போது
எப்படி பேச
வேண்டும் என்ற
கலையும் ;
பேச்சு வார்த்தையை
எப்படி நடத்த
வேண்டும்
என்ற கலையும் ;
எனக்கு நன்கு தெரியும்
அதனால் எனக்காக
நானே வாதாடிக்
கொள்கிறேன்” என்றார்
ஜியார்டானோ புருனோ ! “

“ உங்களுக்காக
நீங்கள் வாதிடுவது
என்பது உங்கள்
தனிப்பட்ட உரிமை
உங்களுக்கென்று
வழங்கப்பட்ட
அந்த உரிமையை
நல்ல முறையில்
பயன்படுத்திக் கொண்டு
உங்கள் தரப்பு
வாதங்களை
நீங்கள் எடுத்து
வைக்கலாம்”என்றார்
விசாரணை அதிகாரி

“வெனிஸ் நகரத்தில்
நான் சொல்லிய
கருத்துக்கள்
கிறிஸ்தவ மதத்தைச்
சேர்ந்தவர்களுக்கு
மன வருத்தத்தை
தந்து இருக்குமேயானால்
அதற்காக நான்
வருத்தம் தெரிவிக்கிறேன்
என்று நான்
வெனிஸ் நகரத்தில்
கேட்டுக் கொண்டும்
அதனை ஏற்றுக்
கொள்ளாமல்
ரோம் நகரம்
அழைத்து வந்து
நீதி மன்றத்தில்
விசாரணை என்ற
பெயரில் என்னை
கைதியாக நிற்க
வைத்தது மட்டுமல்லாமல்
ஒரு நீதிபதி
முன்னால் நின்று
கொண்டு நான்
விசாரிக்கப்பட வேண்டுமா…..?
ஏன் என்னுடைய
வார்த்தைகள்
உங்களுக்கு போதாதா…………….?
ஏன் அவைகளை
என்னுடைய தரப்பு
வாதங்களாக
நீங்கள் எடுத்துக்
கொள்ளக் கூடாதா ……………….?”
என்றார் ஜியார்டானோ
புருனோ ! “

---------  இன்னும் வரும்
---------  06-01-2019
///////////////////////////////////////////////////////////


January 03, 2019

திருக்குறள்-பதிவு-79


                        திருக்குறள்-பதிவு-79

ஜியார்டானோ புருனோவால்
அற்புதம் என்றால் என்ன
என்று உணர்த்தப்பட்டு
அற்புதத்தை உணர்ந்து
அற்புதத்தில் அற்புதமாகவே
மாறிய பெண்ணான
போஸ்கா(FOSCA) ;

ஜியார்டானோ புருனோவால்
ஆன்ம ஒளி
ஏற்றி வைக்கப்பட்ட
பெண்ணான
போஸ்கா(FOSCA) ;

ஜியார்டானோ புருனோவை
கைதியாக ரோம்
நகருக்கு தொடர்
விசாரணைக்காக
அழைத்துச் செல்லக்கூடாது
என்பதற்காக போராடிய
பெண்ணான
போஸ்கா(FOSCA) ;

ஜியார்டானோ புருனோ
குற்றமற்றவர்
அவரை விடுதலை
செய்ய வேண்டும்
என்பதற்காக பல்வேறு
முயற்சிகள் எடுத்த
பெண்ணான
போஸ்கா(FOSCA) ;

ஜியார்டானோ புருனோ
என்பவர் எத்தகைய
தன்மைகளைக்
கொண்டவர் என்பதை
ஜியார்டானோ புருனோ
உயிருடன் வாழும்
காலத்திலேயே அவரை
முழுவதுமாக அறிந்து
வைத்து இருந்த
ஒரே பெண்ணான
போஸ்கா(FOSCA) ;

ஜியார்டானோ புருனோவை
ரோம் நகருக்கு
கைதியாக தொடர்
விசாராணைக்காக
அழைத்துச் செல்ல
காத்துக் கொண்டிருந்த
கப்பலுக்கு சற்று
தொலைவில்
நின்று கொண்டிருந்தார் ;

இந்த போஸ்காவைத்
(FOSCA) தான்
ஜியார்டானோ புருனோ
கப்பலில் ஏறுவதற்கு
முன்பு திரும்பி
புன்முறுவல் செய்தார் ;

ஜியார்டானோ புருனோ
போஸ்காவைப் (FOSCA)
பார்த்து சிந்திய
இந்த புன்முறுவலுக்கு
பின்னால் மறைந்திருந்த
ஆயிரக்கணக்கான
மறைபொருள் ரகசியங்கள் ;
வார்த்தைகளால்
வார்க்க முடியாத
உண்மைகள் ;
இவர்கள் இரண்டு
பேருக்கும் மட்டுமே தெரிந்த
ஒரு மாபெரும் ரகசியமாக
இருக்கும் படி
இந்த பிரபஞ்சம் செய்து
விட்டது ; என்பது
மறக்க முடியாத
உண்மை ; என்பதை
அனைவரும் நினைவில்
கொள்ள வேண்டும் ;

ஜியார்டானோ புருனோவை
கைதியாக ரோம்
நகருக்கு அழைத்து
செல்வதற்காக காத்துக்
கொண்டிருந்த கப்பலில்
ஜியார்டானோ புருனோ
ஏறும் போது ஜியார்டானோ
புருனோ தன்னுடைய
முதல் அடியை எடுத்து
அந்த கப்பலில் வைத்தார்

ஜியார்டானோ புருனோ
கப்பலில் எடுத்து
வைத்த முதல் அடி
அவருடைய இறுதி
யாத்திரைக்கான முதல்
அடியாக இருக்குமோ
என்று வெனிஸ் நகரத்தின்
மக்கள் எண்ணினர்.

ஏனென்றால்
ஜியார்டானோ புருனோ
வாழ்ந்த கால கட்டத்தில்
கைதியாக குற்றம்
சுமத்தப்பட்டு ரோம்
நகருக்கு அழைத்துச்
செல்லப் பட்டவர்களில்
பெரும்பாலானவர்கள்
நிரபராதி என்று தீர்ப்பு
வழங்கப்பட்டு விடுதலை
செய்யப்பட்டதாக
சரித்திரம் இல்லை.

குற்றம் சுமத்தப்பட்டு
கைதியாக வந்தவர்களை
ரோம் நகரம் முக்கியமாக
மூன்று நிலைகளில்
கொன்றிருக்கிறது

ஒன்று :
சிறையில் வைத்து
கொடுமையான
சித்தரவதை செய்து
கொன்றிருக்கிறது ;

இரண்டு :
வீட்டிக் காவலில் வைத்து
சித்திரவதைகளை அளித்து
கொன்றிருக்கிறது ;

மூன்று :
மனிதத் தன்மை
இல்லாமல் உயிரோடு
எரித்து கொன்றிருக்கிறது ;

இத்தகைய
காரணங்களினால் தான்
ஜியார்டானோ புருனோ
கைதியாக தொடர்
விசாரணைக்காக ரோம்
நகருக்கு செல்வதற்காக
கப்பலில் எடுத்து
வைத்த முதல் அடி
அவருடைய இறுதி
யாத்திரைக்கான
முதல் அடியாக
இருக்குமோ என்று
அங்கு கூடியிருந்த
மக்களை சந்தேகம்
கொள்ள வைத்தது

இருப்பினும்,
ஜியார்டானோ புருனோ
மீண்டும் திரும்பி வருவார்
என்ற நம்பிக்கையுடன்
வெனிஸ் நகரத்தில்
வாழும் மக்கள்
மட்டுமல்ல
வெனிஸ் நகரமே
ஜியார்டானோ புருனோ
வந்து விடுவார் என்ற
நம்பிக்கையுடன்
காத்துக் கொண்டிருந்தது

மிகப்பெரிய தத்துவ
மேதை சிறந்த
எழுத்தாளர்
மாபெரும் விஞ்ஞானி
என்று பல்வேறு
சிறப்புகளைக் கொண்ட
ஜியார்டானோ புருனோவை
சுமந்து கொண்டு கப்பல்
ரோம் நகரை நோக்கி
சென்று கொண்டிருந்தது

ஆமாம் ஜியார்டானோ
புருனோ கைதியாக
தொடர் விசாரணைக்காக
ரோம் நகரை நோக்கி
கப்பலில் பிரயாணம்
செய்து கொண்டிருந்தார்

---------  இன்னும் வரும்
---------  03-01-2019
///////////////////////////////////////////////////////////