April 17, 2019

பரம்பொருள்-பதிவு-3


                         பரம்பொருள்-பதிவு-3

“நம் உடலில் கடவுள்
எங்கு இருக்கிறார்.
அவரை அடையக்கூடிய
வழி என்ன,
எந்த முறையைப்
பின்பற்றி அவரை
அடையலாம் என்பதை
உணர்ந்தவர்கள்

அந்த முறையைப்
பின்பற்றி கடவுளை
அடையக்கூடிய வழியின்
மூலமாக பிரயாணித்து,

கடவுள் தரிசனம்
பெற்றவர்கள் ;

கடவுளிடமிருந்து தனக்கு
வேண்டியதை பெற்றுக்
கொண்டவர்கள்;

கடவுளுடன் இரண்டறக்
கலந்தவர்கள்;

ஞானம் என்ற உயர்நிலை
அடைந்தவர்கள்;

ஜீவசமாதி அடையக்கூடிய
நிலையில் இருந்தவர்கள்;

பிறப்பை அறுத்தவர்கள்;

இறப்பை வென்றவர்கள்;

முக்தி நிலையை நெருங்கிக்
கொண்டிருந்தவர்கள் ;

என்று ஆன்மீகத்தின் உயர்
நிலைகளை அடைந்தவர்கள்
அனைவரும் தாங்கள்
அடைந்த உயர்ந்த நிலைகளை

உலகில் உள்ள மக்கள்
அனைவரும் பெற வேண்டும்
என்ற உயர்ந்த நோக்கத்துடன்
நம் உடலுக்குள்
செயல்படும் இந்த மூன்று
முக்கியமான ஆன்மீக
விஷயங்களையும்
மறைபொருள்
ரகசியங்களாகவும்,
சூட்சும விஷயங்களாகவும்,,
ரகசிய குறியீடுகளாகவும், 
இந்து மதக்கோயில்களில்
வைத்து - இந்து மதக்
கோயில்களைக் கட்டி
இருக்கின்றனர் “

“நம்முடைய உடலை
அடிப்படையாக வைத்து
கட்டப்பட்டது தான்
இந்துமதக் கோயில்கள் “

“நம்முடைய உடலுக்குள்
கடவுள் எந்த இடத்தில்
இருக்கிறார் என்பதை
கோயிலின் கர்ப்பக்கிரகத்தில்
வைக்கப்பட்டிருக்கும்
மூலவர் சிலை குறிக்கும் !

“நம்முடைய உடலுக்குள்
கடவுளை அடைவதற்கு
எந்த வழியை நாம்
பயன்படுத்த வேண்டுமோ
அந்த வழிகள் கோயிலின்
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
மூலவர் சிலையை
மையமாக வைத்து சுற்றிலும்
ஏற்படுத்தி வைத்திருக்கும்
வழிகளைக் குறிக்கும் !

“நம்முடைய உடலுக்குள்
கடவுளை அடைவதற்கு
நாம் எத்தகைய
முறையைப் பயன்டுத்த
வேண்டுமோ - அத்தகைய
முறை  கோயிலில்
வழிபாட்டு முறைகளாக
வைக்கப்பட்டிருப்பதைக்
குறிக்கும் !”

“நம்முடைய உடலுக்குள்
எந்த முறையைப் பின்பற்றி
எந்த வழியின் மூலமாக
இறைவனை அடைகிறோமோ
அந்த முறைகள் கோயிலில்
அனைவரும் எளிதில் புரிந்து
கொள்ளும் வகையில்
அமைக்கப்பட்டிருக்கிறது”

“எல்லா இடங்களிலும் உள்ள
கடவுளுடன் தொடர்பு கொண்டு
தனக்கு தேவையானதை
இறைவனிடம் இருந்து
பெற்றுக் கொணடு
தன்னுடைய ஆசையை
பூர்த்தி செய்து கொள்ள
முடியாமல் இந்த உலகில்
வாழ்ந்து கொண்டிருக்கும்
மக்கள் அனைவரும்…………….?

“ கோயிலுக்கு சென்று
கோயிலில் பின்பற்றப்படும்
வழிபாட்டு முறைகளை
சிறிதும் பிழையில்லாமல்
எந்தவிதமான குறைவும்
இல்லாமல் பின்பற்றி “

“ கர்ப்பக் கிரகத்தில் உள்ள
மூலவர் சிலையை சுற்றி
உள்ள வழிகளைப் பின்பற்றி
கர்ப்பகிரகத்தை அடைந்து “

“கர்ப்பகிரகத்தில் உள்ள
மூலவர் சிலையுடன்
தொடர்பை ஏற்படுத்திக்
கொண்டு “

“தங்களுக்கு தேவையானதை
இறைவனிடம் இருந்து
பெற்றுக் கொண்டு
தன்னுடைய ஆசையை
பூர்த்தி செய்து கொள்ளும்
வகையில் இருக்கும்படித்
தான் இந்துமதக் கோயில்கள்
கட்டப்பட்டிருக்கின்றன”

“மலையில் உள்ள
படிக்கட்டுகளின் வாயிலாக
கோயிலை அடைவது என்பது
கடவுளை அடைவதற்கான
முறையைக் குறிப்பது ஆகும் !

“கோயிலை அடைந்தவுடன்
கோயிலைச் சுற்றி
வந்து கர்ப்பகிரகத்தை
அடைவது என்பது
கடவுளை அடையக்கூடிய
வழியைக் குறிப்பது ஆகும்”

“கர்ப்பகிரகத்தில் உள்ள
கடவுளை அடைந்து
கடவுளை வணங்குவது
கடவுள் எங்கு இருக்கிறார்
என்பதைக் குறிப்பது ஆகும்!

“உலகத்தில் உள்ள
அனைத்து இந்து மதக்
கோயில்களில் இந்த
மூன்று விஷயங்களும்
தான் முக்கியமாக
இடம் பெற்றிருக்கிறது
என்பதை அனுபவ பூர்வமாக
உணர்ந்து கொள்ளுங்கள்”

--------   இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  17-04-2019
/////////////////////////////////////////////////////



April 15, 2019

பரம்பொருள்-பதிவு-2


                        பரம்பொருள்-பதிவு-2

“கடவுள் எங்கு
இருக்கிறார் ;
அவரை அடையக்கூடிய
வழி என்ன ;
எந்த முறையைப்
பின்பற்றி அவரை
அடையலாம் ;
என்பதை உணர்ந்தவர்கள்
இந்த பிரபஞ்சம் முழுவதும்
அங்கிங்கெனாதபடி எங்கும்
எல்லா இடங்களிலும்
நீக்கமற நிறைந்திருக்கும்
இறைவனுடன்
தொடர்பு கொண்டு
தனக்கு தேவையானதை
இறைவனிடம் இருந்து
பெற்றுக் கொண்டு
தன்னுடைய ஆசையை
பூர்த்தி செய்து கொள்ளும்
முறையை அறிந்தவர்களுக்காக
கட்டப்பட்டதல்ல  
இந்து மதக்கோயில்கள் “

“ கடவுள் எங்கு
இருக்கிறார் ;
அவரை அடையக்கூடிய
வழி என்ன ;
எந்த முறையைப்
பின்பற்றி அவரை
அடையலாம் ;
என்பதை உணராதவர்கள்
இந்த பிரபஞ்சம் முழுவதும்
அங்கிங்கெனாதபடி எங்கும்
எல்லா இடங்களிலும்
நீக்கமற நிறைந்திருக்கும்
இறைவனுடன்
தொடர்பு கொண்டு
தனக்கு தேவையானதை
இறைவனிடம் இருந்து
பெற்றுக் கொண்டு
தன்னுடைய ஆசையை
பூர்த்தி செய்து கொள்ள
முடியாதவர்கள்
ஆகியோருக்காகக்
கட்டப்பட்டது தான்
இந்து மதக்கோயில்கள் “

“ எளிமையாக சொல்ல
வேண்டுமானால்
எல்லா இடங்களிலும்
நிறைந்து இருக்கக்கூடிய
இறைவனுடன் தொடர்பு
கொண்டு தனக்கு
வேண்டியதை
பெற்றுக் கொள்ள
முடியாதவர்களுக்காக
கட்டப்பட்டது தான்
இந்து மதக்கோயில்கள் “

“ கடவுள் எங்கு
இருக்கிறார் ;
அவரை அடையக்கூடிய
வழி என்ன ;
எந்த முறையைப்
பின்பற்றி அவரை
அடையலாம் ;
என்பதற்குரிய வழிமுறைகள்
அனைத்தையும் கொண்டு
அமைக்கப்பட்டிருப்பது தான்
இந்து மதக்கோயில்கள் “

“ இந்து மதக் கோயில்களில்
பின்பற்றப்படும் முறைகளான

“இறைவனை
வணங்குவதற்கு என்று
முறைப்படுத்தி
வைக்கப்பட்டிருக்கும்
இறை வழிபாட்டு  முறைகள்; “

“இறைவனை பூஜிப்பதற்காக
செய்யப்படும் பூஜை முறைகள்;”

“ இறைவனை
வணங்குவதற்காக
உச்சரிக்கப்படும் மந்திர
உச்சாடண முறைகள் ; “

“செய்யப்படும் ஹோமங்கள்; “

“பின்பற்றப்படும்
மதச்சடங்குகள் ;”

“கடை பிடித்து வரும்
மத நம்பிக்கைகள் ; “

“மதக்கோட்பாடுகள் ; “

“கொண்டாடப்படும்
பண்டிகைகள் ; “

“வாசிக்கப்படும்
புனித நூல்கள் ; “

இவைகள் அனைத்தும்
கடவுளுடன் இணைந்து
தனக்கு வேண்டியதை
பெற்றுக் கொள்ள
முடியாத நிலையில்
யாராக இருந்தாலும்-
அவரும் கடவுளுடன்
இணைந்து தனக்கு
வேண்டியதை பெற்றுக்
கொள்ள வேண்டும் என்ற
உயர்ந்த நோக்கத்துடன்
அமைக்கப்பட்டு
பின்பற்றப்படும்
முறைகள் தான்
இந்து மதக்கோயில்களில்
உள்ளவை அனைத்தும்”

“எல்லா இடங்களிலும்
நிறைந்திருக்கக் கூடிய
இறைவனுடன் தொடர்பு
கொண்டு தனக்கு
வேண்டியதை பெற்றுக்
கொள்ளும் ஆற்றல்
ஒரு சிலருக்கே
இருக்கிறது - இந்த
உண்மையை உணர்ந்தவர்கள்
இறைவனிடம் இருந்து
தனக்கு வேண்டியதை
பெற்றுக் கொள்வதற்காக
கோயிலுக்கு செல்லும்
ஒவ்வொருவரும்
இறைவனுடன் தொடர்பு
கொண்டு - தனக்கு
வேண்டியதை பெற்றுக்
கொள்ளும் வகையில்
சக்தியின் மையங்களாக
இந்து மதக் கோயில்களை
உருவாக்கி வைத்திருக்கின்றனர்”

“இந்து மதக் கோயில்கள்
அளவிடற்கரிய
ஆன்மீக ரகசியங்கள் ;
சூட்சும முறைகள் ;
மெய்ஞ்ஞானத்தின்
உயர் தன்மைகள் ;
அறிவு; ஞானம்; முக்தி;
ஆகியவற்றை அடையக்
கூடிய முறைகள்
ஆகிய அனைத்தையும்
தன்னுள் கொண்டு
உச்ச சக்தியின்
மையங்களாக எப்படி
இருக்கின்றன என்பதை
நாம் தெரிந்து கொள்ளாமல்
இந்து மதக்கோயில்களின்
சிறப்பை நம்மால்
உணர்ந்து கொள்ள முடியாது

---------  ஜபம் இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  15-04-2019
/////////////////////////////////////////////////////

April 14, 2019

பரம்பொருள்-பதிவு-1


                      பரம்பொருள்-பதிவு-1

உலகில் உள்ள எந்த
ஒரு மதத்தை
எடுத்துக் கொண்டாலும்
அவர்கள் கடவுளிடமிருந்து
தங்களுக்கு தேவையானதை
பெற்றுக் கொண்டு
தங்களுடைய ஆசையை
பூர்த்தி செய்து
கொள்வதற்கு இறைவனை
இரண்டு நிலைகளில்
வணங்குகிறார்கள்

ஒன்று
ஜபத்தின் மூலம்
இறைவனை
வணங்குகிறார்கள்

இரண்டு
பிரார்த்தனையின் மூலம்
இறைவனை
வணங்குகிறார்கள்

ஜபம் என்பது ஒருவர்
மட்டும் தனித்து
இருந்து இறைவனை
வணங்குவது

பிரார்த்தனை என்பது
ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்
ஒன்றாகக் கூடி
இறைவனை வணங்குவது

ஒருவர் மட்டும்
தனியாக இருந்து
மனதை அடக்கிக்
கொண்டே உள்ளே சென்று
மனதின் அடித்தளமாக
இருப்பு நிலையாக உள்ள
இறைவனை வணங்குவது
ஜபம் எனப்படும்

ஒன்றுக்கு
மேற்பட்டவர்கள்
ஒன்றாகக் கூடி
மனதை இந்த பிரபஞ்சம்
முழுவதும் விரித்து
மனதிற்கு அடித்தளமாகவும்
இருப்பு நிலையாகவும்
அனைத்திலும் நீக்கமறவும்
நிறைந்திருக்கும்
இறைவனை வணங்குவது
பிரார்த்தனை எனப்படும்

இந்த பிரபஞ்சம்
முழுவதும் நீக்கமற
நிறைந்திருக்கும்
இறைவனுடன்
தனித்த நிலையில்
இறைவனுடன்
தொடர்பு கொண்டு
தனக்கு தேவையானதை
தனித்த நிலையில்
பெற்றுக் கொள்ள
முடிந்தவர்களால்
தனிப்பட்ட முறையில்
செய்யப் படுவது
தான் ஜபம்

இந்த பிரபஞ்சம்
முழுவதும் நீக்கமற
நிறைந்திருக்கும்
இறைவனுடன்
தனித்த நிலையில்
இறைவனுடன்
தொடர்பு கொண்டு
தனக்கு தேவையானதை
தனித்த நிலையில்
பெற்றுக் கொள்ள
முடியாத நிலையில்
இருப்பவர்கள்
ஒன்று சேர்ந்து
ஒன்றாகக் கூடி
இறைவனை வணங்கி
தங்களுக்குத் தேவையானதை
பெற்றுக் கொள்வது
தான்  பிரார்த்தனை

ஒருவர் மட்டும்
தனித்த நிலையில்
வீட்டிலோ
(அல்லது)
கோயிலிலோ
(அல்லது)
ஏதேனும் ஒரு இடத்திலோ
யாருடனும் சேராமல்
செய்வது தான் ஜபம்

ஒன்றுக்கு மேற்பட்டோர்
ஒன்றாகக் கூடி
வீட்டிலோ
(அல்லது)
கோயிலிலோ
(அல்லது)
ஏதேனும் ஒரு இடத்திலோ
பலருடன் சேர்ந்து
ஒன்றாகக் கூடி
செய்வது தான்
பிரார்த்தனை

பிராணனை கட்டுப்படுத்தும்
சுவாசப் பயிற்சி
பிராணனை அறிய
முற்படும்
பிராணாயாமம்
பிராணனை
முறைப்படுத்தும் வாசி
ஆகியவற்றை
செய்பவர்கள்
ஜபிக்கிறார்கள்
ஜபத்தில் வரும்
அவற்றை தனியாக
மட்டுமே செய்ய முடியும்

மந்திரத்தை வெளிப்படையாக
ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்
ஒன்றாகக் கூடி
உச்சாடணம் செய்தல்
கடவுளைப் பற்றிய
பாடல்களைப் பலர்
ஒன்றாகக் கூடி
பாடுதல் ஆகியவை
பிரார்த்தனையில்
வரும்

சுருக்கமாக சொல்ல
வேண்டுமானால்
ஜபம் என்பது
மனதை ஒடுக்கி
இறைவனை
உட்புறமாக உணர்வது
பிரார்த்தனை என்பது
மனதை விரித்து
இறைவனை வெளிப்புறமாக
உணர்வது ஆகும்

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  14-04-2019
/////////////////////////////////////////////////////

April 12, 2019

திருக்குறள்-பதிவு-135-சுபம்


                   திருக்குறள்-பதிவு-135-சுபம்

“கலிலியோ இறந்து
350 ஆண்டுகளுக்குப்
பிறகு கலிலியோவைப்
பற்றிய விசாரணை
1990-ஆம் ஆண்டு நடந்தது.
இந்த விசாரணையின்
இறுதியில்-பவுல் இரண்டாம்
ஜான் போப் 1992-ஆம்
ஆண்டு அக்டோபர் மாதம்
31-ம் தேதி கலிலியோவிற்கு
எதிராக நடத்தப்பட்ட
அனைத்து செயல்களுக்காகவும்
வருத்தம் தெரிவித்ததோடு
மட்டுமல்லாமல் மன்னிப்பும்
கேட்டுக்கொண்டார்”

“சூரிய மையக் கோட்பாடு
கண்டுபிடிக்கப்பட்ட
வரலாறு என்பது
பலபேர் தங்களுடைய
வாழ்க்கையை இழந்ததால்
கட்டப்பட்ட வரலாறு ;
பலபேருடைய இறப்பின் மேல்
கட்டப்பட்ட வரலாறு ;
அனைவரும் தெரிந்து
வைத்திருக்க வேண்டிய
வரலாறு ;”

"பூமியை மையமாக வைத்து
சூரியன் சுற்றி வருகிறது
என்ற பூமி மையக்
கோட்பாட்டை வெளியிட்டார்
டாலமி "

"டாலமி சொன்ன
பூமியை மையமாக வைத்து
சூரியன் சுற்றி வருகிறது
என்ற பூமி மையக் கோட்பாடு
தவறானது என்றும் ;
சூரியனை மையமாக
வைத்தே - பூமி சுற்றி
வருகிறது என்ற சூரிய
மையக் கோட்பாடே
சரியானது என்றும் ;
தனது ஆய்வுகளின் மூலம்
கணக்கீடுகளாலும்,
குறியீடுகளாலும்
வெளியிட்டார்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்"

"டாலமி சொன்ன
பூமியை மையமாக வைத்து
சூரியன் சுற்றி வருகிறது
என்ற பூமி மையக்
கோட்பாடு
தவறானது என்றும்
நிக்கோலஸ் கோப்பர் நிக்கஸ்
சொன்ன சூரியனை
மையமாக வைத்து
பூமி சுற்றி வருகிறது
என்ற சூரிய
மையக் கோட்பாடே
சரியானது என்றும்
தனது தத்துவங்களின்
மூலமும்
ஆராய்ச்சிகளின் மூலமும்
வெளியிட்டார்
ஜியார்டானோ புருனோ"

"பூமியை மையமாக வைத்து
சூரியன் சுற்றி வருகிறது
என்று டாலமி சொன்ன
பூமி மையக் கோட்பாடு
தவறானது என்றும் ;
சூரியனை மையமாக
வைத்து
பூமி சுற்றி வருகிறது
என்ற சூரிய மையக்
கோட்பாடே
சரியானது என்றும் ;
வார்த்தைகளால் மட்டும்
சொல்லாமல் தனது
தொலை நோக்கியின் மூலம்
நிரூபித்துக் காட்டினார்
கலிலியோ"

" நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் ;
ஜியார்டானோ புருனோ ;
கலிலியோ ;
ஆகியோர்
சூரியனை மையமாக
வைத்து பூமி சுற்றி
வருகிறது - என்ற சூரிய
மையக் கோட்பாட்டை
நிரூபிப்பதற்காக
தங்களுடைய உயிரையே
கொடுத்தவர்கள் "

" உலக வரலாற்றை
எடுத்துக் கொண்டால்
தான் என்றும் ;
தனது என்றும் ;
தனது குடும்பம் என்றும் ;
தனது சந்ததி என்றும் ;
சுயநலத்துடன் வாழாமல் 
சமுதாய நலன் ;
பொது மக்கள் நலன் ;
பிறர் நலன் ; ஆகியவற்றை
கருத்தில் கொண்டு
பிறருக்காகவே வாழ்ந்தவர்கள்
உண்மையை நிரூபிப்பதற்காக
தங்கள் உயிரையே
கொடுத்திருக்கின்றார்கள்
என்பது தெரியவரும் "

" பல்வேறு அறிஞர்கள் ;
பல்வேறு காலகட்டங்களில் ;
ஆராய்ச்சி செய்து ;
பூமியை மையமாக வைத்து
சூரியன் சுற்றவில்லை ;
சூரியனை மையமாக
வைத்துத் தான் பூமி
சுற்றி வருகிறது என்று
தங்கள் ஆராய்ச்சியின்
மூலமாக கண்டுபிடித்து
நிரூபித்தனர் "

" இதன் காரணமாக
இன்று நாம் சூரியனை
மையமாக வைத்து
பூமி சுற்றி வருகிறது
என்ற உண்மையை
தெரிந்து கொண்டிருக்கிறோம் "

"சூரினை மையமாக வைத்து
பூமி சுற்றி
வருகிறது என்ற
சூரிய மையக் கோட்பாட்டை
புத்தகத்தில் படிக்கும்போதோ
(அல்லது)
பிறர் சொல்லக்
கேட்கும் போதோ
சூரியனை மையமாக வைத்து
பூமி சுற்றி வருகிறது
என்ற சூரிய மையக்
கோட்பாட்டை
நிரூபிப்பதற்காக
தங்கள் உயிரையே கொடுத்த
நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ்
ஜியார்டானோ புருனோ
கலிலியோ
ஆகியோரின் இரத்தம்
தோய்ந்த வாழ்க்கை அந்த
கோட்பாட்டின் பின்னால்
இருக்கிறது என்பதை மட்டும்
நினைவில் கொள்ளுங்கள்"

---------- திருக்குறள் (சுபம்)

---------  இன்னும் வரும்


----------  K.பாலகங்காதரன்
---------  12-04-2019
/////////////////////////////////////////////////////