May 05, 2019

பரம்பொருள்-பதிவு-11


                       பரம்பொருள்-பதிவு-11

“மந்திரத்தைப்
பயன் படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்து கடவுள் சிலைக்கு
உயிரூட்டுவதற்கு இரண்டு
விதமான முறைகள்
பின்பற்றப் படுகின்றன”

ஒன்று :
"ஒருவர் தனியாக இருந்து
மந்திரத்தைப் பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்து கடவுள்
சிலைக்கு உயிரூட்டுவது!"

இரண்டு :
"ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்
ஒன்றாக சேர்ந்து
மந்திரத்தைப் பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்து கடவுள்
சிலைக்கு உயிரூட்டுவது!"

ஒன்று  
“கடவுள் சிலைக்கு
உயிரூட்டுவதற்கு தனி
ஒரு நபராக மந்திரத்தைப்
பயன் படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்வது என்பது
கடினமான ஒரு விஷயம்
பக்திமார்க்கத்தின்
உச்ச நிலையை
தொட்டவர்களால்
மட்டுமே சாத்தியம் “

"மந்திரத்தைப் பயன்படுத்தி
செய்யப்படும்
பிராண பிரதிஷ்டையில்
கடவுள் சிலையின்
ஒவ்வொரு உறுப்பையும்
உயிர்ப்பெறச் செய்து
கடவுள் சிலையை
கடவுளாகவே மாற்றும்
செயல் நடைபெறுகிறது ;"

"கடவுள் சிலையின்
ஒவ்வொரு உறுப்பையும்
உயிர்ப்பெறச் செய்வதற்கு
ஒவ்வொரு உறுப்பிற்கும்
என்று தனித்தனியாக
மந்திரம் உள்ளது ;
அந்த மந்திரத்தைப்
பயன்படுத்தி
ஒவ்வொரு உறுப்பையும்
உயிர்ப்பெறச்
செய்ய வேண்டும் ;
கடவுள் சிலையின்
ஒவ்வொரு உறுப்பையும்
உயிர்ப் பெறச் செய்து
உயிரூட்டுவதற்கு
பெரும்பாலும் கால்
பாதங்களில் உள்ள
விரல்களில் இருந்து
ஆரம்பிக்கிறார்கள்; "

"கடவுள் சிலைக்கு
உயிரூட்டுவதற்காக
மந்திரத்தைப் பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்யும் போது
பிராண பிரதிஷ்டையானது
முதலில் கடவுள் சிலையின்
கால் பாதங்களில் உள்ள
விரல்களில் இருந்து
ஆரம்பிக்க வேண்டும் ;
கடவுள் சிலையின் கால்
பாதங்களில் உள்ள
விரல்களில் இருந்து
ஒவ்வொரு உறுப்பாக
உயிர்ப்பிக்கச் செய்ய
பிராண பிரதிஷ்டை
மந்திரத்தை சொல்ல
ஆரம்பிக்க வேண்டும். :"

"அவ்வாறு ஒவ்வொரு
உறுப்பிற்கும் ஒவ்வொரு
மந்திரமாக சொல்லிக்
கொண்டே வர
ஒவ்வொரு உறுப்பும்
உயிர்ப்பெற்றுக்
கொண்டே வரும் ;
அதாவது கடவுள்
சிலையில் செதுக்கப்பட்டுள்ள
ஒவ்வொரு உறுப்பும்
உயிர்ப்பெற்று
உயிரோட்டம் உள்ள
ஒன்றாக மாறிக்
கொண்டே வரும் ;
கால் விரல்கள், கால்.
தொடை, இடுப்பு, கை
கழுத்து,தலை என்று
ஒவ்பொரு உறுப்பையும்
உயிர்ப்பெறச் செய்வதற்குரிய
மந்திரத்தைப் பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டையை
தொடர்ந்து செய்து
கொண்டே வர
கடவுள் சிலையின்
ஒவ்வொரு உறுப்பும்
உயிர்ப்பெற்றுக்
கொண்டே வரும் ;
கடவுள் சிலையின்
அனைத்து உறுப்புகளும்
உயிர்ப்பெற்ற பின்
இறுதியில் கடவுள்
சிலை கடவுளாகவே
மாறி விடுகிறது;"

"ஆமாம் கல் கடவுளாக
மாறி விட்டது"

இரண்டு
"ஒருவர் தனியாக
இருந்து மந்திரத்தைப்
பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்து கடவுள் சிலைக்கு
எப்படி உயிரூட்டினாரோ
அதே முறையைப்
பின்பற்றியே
ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்
ஒன்றாக சேர்ந்து
மந்திரத்தைப் பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்து கடவுள் சிலைக்கு
உயிரூட்டி கடவுள்
சிலையை கடவுளாகவே
மாற்றி விடுகிறார்கள்"

"ஆமாம் கல் கடவுளாக
மாறி விட்டது"

"ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்
ஒன்றாக சேர்ந்து
கடவுள் சிலைக்கு
உயிரூட்டுவதைக்
காட்டிலும் ;
ஒருவர் தனியாக
இருந்து
கடவுள் சிலைக்கு
உயிரூட்டுவது
கடினமான செயல்
என்பதைப் புரிந்து
கொள்ள வேண்டும் "

"மந்திரத்தைப்
பயன் படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்யப்பட்டு
உயிரூட்டப்பட்ட
கடவுள் சிலைக்கும் ;
மந்திரத்தைப் பயன்
படுத்தாமல் பிராண
பிரதிஷ்டை செய்யப்பட்டு
உயிரூட்டப்பட்ட கடவுள்
சிலைக்கும் ;
என்ன வேறுபாடு
என்று தெரியுமா………………..?”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
---------  05-05-2019
/////////////////////////////////////////////////////


May 04, 2019

பரம்பொருள்-பதிவு-10


                       பரம்பொருள்-பதிவு-10

“மந்திரத்தைப்
பயன் படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை செய்து
கடவுள் சிலைக்கு
உயிரூட்டுவதற்கு
இரண்டு விதமான
முறைகள் பின்பற்றப்
படுகின்றன”

ஒன்று :
"ஒருவர் தனியாக
இருந்து மந்திரத்தைப்
பயன்படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை
செய்து கடவுள்
சிலைக்கு உயிரூட்டுவது!"

இரண்டு :
"ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்
ஒன்றாக சேர்ந்து
மந்திரத்தைப்
பயன்படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை
செய்து கடவுள்
சிலைக்கு உயிரூட்டுவது!"

ஒன்று :
“தனி ஒரு நபராக
மந்திரத்தைப்
பயன் படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை
செய்வதற்கு
ஆன்மீகத்தின்
உச்ச நிலையை
தொட்டவர்களால்
மட்டுமே சாத்தியம் “


“ஆன்மீகத்தின் உச்ச
நிலையைத் தொட்ட
ஒருவர் மந்திரத்தைப்
பயன்படுத்தாமல்,  
பிராண பிரதிஷ்டை
செய்வதற்கு முன்னால்
கடவுள் சிலையை
மனக்கண்ணில்
கொண்டு வந்து
தனது வசதிக்கேற்றபடி
கடவுள் சிலையை
முதலில் நான்கு கூறுகளாக
பிரித்துக் கொள்வார் “


“ஒவ்வொரு கூறிலும்
சக்தியைச் செலுத்திக்
கொண்டே செல்வார் ;
ஒவ்வொரு கூறும்
சக்தியால் முழுமையாக
நிரம்பிக் கொண்டே
வரும்; - கடவுள் சிலை
முழுவதும் சக்தியால்
நிரப்பப்பட்ட நேரத்தில்
கல்லாய் இருந்த
கடவுள் சிலை
கடவுளாகவே மாறி விடும் ;”.

“ஆமாம் கல் கடவுளாக
மாறி விடுகிறது”.

இரண்டு ;
“கடவுள் சிலைக்கு
பிராண பிரதிஷ்டையின்
மூலம் உயிரூட்டுவதற்காக
கடவுள் சிலையைச்
சுற்றிலும் நான்கு நபர்கள்
குறிப்பிட்ட இடைவெளியில்,
ஒரு குறிப்பிட்ட திசையில்,
ஒன்றாக அமர்ந்து
கொள்வார்கள் - நான்கு
நபர்களையும் ஒன்றாக
இணைக்கும் வகையில்
நான்கு நபர்களும் சேர்ந்து
முதலில் சக்தி வாய்ந்த
சக்தி களத்தை
உருவாக்கிக் கொள்வார்கள்;”

“கடவுள் சிலையானது
நான்கு கூறுகளாகப்
பிரிக்கப்படும் ;
ஒவ்வொருவரும்
அவர்களுக்கு என்று
ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு
கூறிலும் சக்தியை
நிறுவ வேண்டும் ;
ஒவ்வொரு கூறையும்
குறிப்பிட்ட முறையின்
மூலம் - குறிப்பிட்ட
சக்தியின் மூலம்
சக்தியை நிரப்ப வேண்டும். ;”

“ஒருவர் தலைவராக
இருந்து அந்த குழுவில்
இருக்கும் மற்ற மூன்று
நபர்களையும் வழிநடத்திச்
செல்வதோடு மட்டுமில்லாமல்
மூன்று நபர்களுடன்
இணைந்து சக்தியை
கடவுள் சிலையில்
நிரப்புவதற்கான செயலில்
ஈடுபடுவார்.”

“பிராண பிரதிஷ்டை
செய்யும் நால்வரும்
தவத்தை தொடர்ந்து
செய்து கொண்டே
தவத்தின் உச்ச
நிலைக்குச் செல்வார்கள்;
அத்தகைய உச்ச நிலைக்கு
சென்று விட்ட பிறகு
ஒவ்வொருவரும்
தங்களுக்கு என்று
ஒதுக்கப்பட்ட கூறில்
சக்தியை செலுத்துவார்கள்;
அவ்வாறு சக்தியை
செலுத்திக் கொணடிருக்கும்
போது ஒருவர்
உயர்ந்த நிலைக்கு
சென்று சமாதி (அல்லது)
மகா சமாதி அடைந்து
விட்டால் தலைவராக
இருப்பவர் சமாதி
அடைந்தவருடைய
பணியையும் சேர்த்து
செய்ய வேண்டிய
மிகப்பெரிய பொறுப்பையும்
ஏற்க வேண்டி வரும்;”

“பிராண பிரதிஷ்டையை
நிறுத்தாமல் நான்கு பேர்
செய்ய வேண்டிய பணியை
மூன்று நபர்கள் மட்டுமே
தனியாக இருந்து
செய்து முடிப்பார்கள்;”

“கடவுள் சிலையின்
நான்கு கூறிலும்
சக்தியானது முழுவதுமாக
நிரம்பியவுடன்
கல்லாய் இருந்த
கடவுள் சிலை
கடவுளாகவே மாறி விடும் ;”.

“ஆமாம் கல்
கடவுளாக மாறி விட்டது”

“மந்திரத்தைப் பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்யப்படும் கடவுள்
சிலைகளைக் காட்டிலும்  ;
மந்திரத்தைப்
பயன்படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை
செய்யப்படும் கடவுள்
சிலைகள் மிகவும்
சக்தி வாய்ந்தவை ;
என்பதை நினைவில்
வைத்துக் கொள்ளுங்கள்; “

“மந்திரத்தைப்
பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை
எவ்வாறு
செய்யப்படுகிறது
என்பது தெரியுமா……………?”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 04-05-2019
/////////////////////////////////////////////////////


May 02, 2019

பரம்பொருள்-பதிவு-9


                        பரம்பொருள்-பதிவு-9

பிராணன் + பிரதிஷ்டை=
பிராண பிரதிஷ்டை

" பிராணன் என்றால்
உயிர்ச்சக்தி என்று
பொருள் ;
பிரதிஷ்டை என்றால்
நிறுவுதல் என்று
பொருள் ;
பிராண பிரதிஷ்டை
என்றால்,
உயிர்ச்சக்தியை
நிறுவுதல்
என்று பொருள்”

“அதாவது
கடவுள் சிலைக்கு
உயிர்ச்சக்தியை அளித்து
கடவுள் சிலையை
கடவுளாகவே மாற்றி ;
கடவுளாகவே
இருக்கும்படிச் செய்வதற்கு ;
பெயர் தான்
பிராண பிரதிஷ்டை”

“உலகம் முழுவதும்
செய்யப்படும்
பிராண பிரதிஷ்டையை
இரண்டே இரண்டு
நிலைகளில் பிரித்து
விடலாம்”

ஒன்று :
மந்திரத்தைப் பயன்
படுத்தாமல் பிராண
பிரதிஷ்டை செய்வது

இரண்டு :
மந்திரத்தைப் பயன்
படுத்தி பிராண
பிரதிஷ்டை செய்வது

“ மந்திரத்தைப்
பயன் படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்வதைக் காட்டிலும் ;
மந்திரத்தைப் பயன்
படுத்தாமல் பிராண
பிரதிஷ்டை செய்வது
கடினமான விஷயம்”

“அந்தக் காலத்தில்
மந்திரத்தை
பயன் படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை
அதிக அளவில்
செய்யப் பட்டது;- ஆனால்
இந்தக் காலத்தில்
மந்திரத்தைப்
பயன்படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை
செய்யக்கூடியவர்கள்
அரிதாக இருக்கின்ற
காரணத்தினால்
மந்திரத்தைப் பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்யப்படுகிறது “

“ இந்த பிரபஞ்சம்
முழுவதும்
அங்கிங்கெனாதபடி
எங்கும், எல்லா
இடங்களிலும் நீக்கமற
நிறைந்திருக்கும்
இறைவனுடன்
தொடர்பு கொண்டு ;
தனக்கு தேவையானதை
இறைவனிடம் இருந்து
பெற்றுக் கொண்டு ;
தன்னுடைய ஆசையை
பூர்த்தி செய்து கொள்ளும்
முறையை அறிந்தவர்கள் ;
மந்திரத்தைப் பயன்
படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை
செய்கிறார்கள் ; “

“அதுமட்டுமில்லை
உண்மையை
உணர்ந்தவர்கள் ;
ஞானம் பெற்றவர்கள் ;
ஜீவசமாதி அடையும்
நிலையில் இருப்பவர்கள் ;
முக்தியில் மூழ்குவதற்காக
தயார் நிலையில்
இருப்பவர்கள் ;
ஆகியோர் மந்திரத்தை
பயன் படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை
செய்கிறார்கள் “

“மந்திரத்தை பயன்
படுத்தாமல் பிராண
பிரதிஷ்டை செய்யும்
உண்மையை உணர்ந்தவர்கள்
கடவுள் சிலைக்கு
சக்தியை செலுத்தி
கடவுளாகவே மாற்றி
கடவுளாகவே இருக்கும்படிச்
செய்கிறார்கள் “

“ மந்திரத்தை பயன்
படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை
செய்யப்பட்ட கடவுள்
சிலைகள் மிகவும்
சக்தி வாய்ந்தவைகளாக
இருக்கும் ;
இவற்றின் சக்தி
அளவிடற்கரியது ; “

“ இத்தகைய சிலைகள்
இந்துமதக் கோயில்களில்
கர்ப்பக் கிரகத்தின்
சிலைகளாக வைக்கப்
படுமானால் இத்தகைய
கடவுள் சிலைகள்
இந்துமதக் கோயில்களில்
சக்தி வாய்ந்த
மையங்களாக இருக்கும் “

“ மந்திரத்தை பயன்
படுத்தாமல் பிராண
பிரதிஷ்டை செய்வது ;
என்பது - தன்னுடைய
உயிரைக் கொடுத்து
இன்னொன்றுக்கு
உயிர் ஊட்டுவது ;
போன்றது - ஆன்மீகத்தில்
உயர் நிலை
அடைந்தவர்கள் மட்டுமே
இந்த முறையைப்
பயன்படுத்த முடியும்;”

“ ஆன்மீகத்தில் உயர்
நிலை அடையாதவர்கள்
இந்த முறையைப்
பயன்படுத்தினால்
யார் செய்கிறாரோ
அவருடைய உயிருக்கு
உத்தரவாதம் இல்லை “

“மந்திரத்தைப் பயன்
படுத்தாமல் பிராண
பிரதிஷ்டை செய்யப்படும்
கடவுள் சிலைகள்
எவ்வளவு சக்தி
வாய்ந்தவைகளாக இருக்கிறது
என்பதைத் தெரிந்து
கொள்ள வேண்டுமானால் ;

மந்திரத்தைப் பயன்
பயன்படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை
கடவுள் சிலைக்கு
எவ்வாறு செய்யப்படுகிறது
என்பதைத் தெரிந்து
கொள்ள வேண்டும்……….?”

-------- இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 02-05-2019
/////////////////////////////////////////////////////