August 13, 2019

பரம்பொருள்-பதிவு-53


                   பரம்பொருள்-பதிவு-53

" இறந்து
எலும்பும் ; சாம்பலுமாக;
இருந்த பூம்பாவை
எலும்பும்; சதையுமாக;
அங்கம் பெற்று ;
உடல் பெற்று ;
உயிர்பெற்று  ;
வந்த காரணத்தினால்
பூம்பாவை !
அங்கம் பூம்பாவை ! என்ற
பெயரைப் பெற்றாள் "

"அங்கம் என்றால்
உறுப்பு என்று பொருள் ;
பாவை என்றால்
பெண் என்று பொருள் ;
அங்கம் பூம்பாவை
என்றால்
பூவைப் போன்ற
உடலைக் கொண்ட
பெண் என்று பொருள் ;"

" உயிர்பெற்ற
அங்கம் பூம்பாவையும்
சிவநேசரும்
அவருடைய மனைவியும்
அங்குக்கூடியிருந்த மக்கள்
அனைவரும் ஒன்றாக
திருஞான சம்பந்தரை
பக்தியுடன் வணங்கி
நின்ற வேளையில் மக்கள்
திருஞான சம்பந்தரைப்
பார்த்து பேசத் தொடங்கினர் "

மக்கள் :
" இறந்த பூம்பாவையை
உயிரோடு எழுப்பிக்காட்டி
நீங்கள் செய்த
அற்புதத்தைக் கண்டு
நாங்கள் மெய்
மறந்து நின்றோம் !"

" சிவபெருமானுடைய
சக்தியையும்
சிவபெருமானுடைய
அடியவராகிய உங்களுடைய
சக்தியையும் நேரில் கண்டு
தெரிந்து கொண்டோம் !"

" நாங்கள் அனைவரும்
சைவமதத்திற்கு
மதம் மாறுவது என்றும் ;
சிவபெருமானை
வழிபடுவது என்றும்
முடிவு செய்துள்ளோம் !"

திருஞான சம்பந்தர் :
" ஒரு மதத்தில் உள்ள
கடவுளை வணங்கிக்
கொண்டிருப்பவர்கள் ;
வேறு மதத்தில் உள்ள
ஒருவர் செய்யும்
அற்புதச் செயல்களைப்
பார்த்து அந்த
அற்புதத்தால் ஈர்க்கப்பட்டு
அற்புதம் செய்தவருடைய
மதத்திற்கு மதம் மாறி
அந்த மதத்தில் உள்ள
கடவுளை வணங்குவது
என்பது தவறான
செயல் ஆகும் "

" கடவுளின்
உண்மைத் தன்மையை
உணர்ந்து தான்
கடவுளை வணங்க
வேண்டுமே தவிர
அற்புதங்களைக் கண்டு
மதம் மாறுவதும்  ;
கடவுளை
வணங்குவதும் கூடாது ;"

" நான் இறந்த பூம்பாவையை
உயிரோடு எழுப்பியதற்கு
காரணம் இறந்தவரை
உயிரோடு எழுப்பும்
சக்தி படைத்தவர்கள்
எங்கள் மதத்தில்
மட்டுமே உள்ளனர் ;
வேறு மதத்தில் இல்லை ;
என்று பிற மதத்தவர்கள்
சொல்லிக் கொண்டு
திரியும் பொய்யான
கருத்துக்களைத் தவறு
என்று நிரூபிக்க
வேண்டும் என்ற
காரணத்திற்காகவும் "

" இறந்தவரை எழுப்பும்
சக்தி படைத்தவர்கள்
சிவபெருமானை
வழிபடும் சைவ
மதத்திலும் உள்ளனர் ;
என்ற விஷயத்தை
பிற மதத்தினரை
உணரச் செய்ய வேண்டும் ;
என்ற காரணத்திற்காகவும் '

"இந்த உலகத்தில்
சைவ மதமே
உண்மையான
மதம் என்பதையும் ;
இந்த உலகத்தில்
சிவபெருமானே
உண்மையான
கடவுள் என்பதையும் ;
இந்த உலகத்தில்
உள்ள அனைவரும்
உணர்ந்து கொள்ள
வேண்டும் ; என்ற
காரணத்திற்காகவும் '

"இறந்த பூம்பாவையை
உயிரோடு எழுப்பினேன்!
அற்புதம் செய்து காட்ட
வேண்டும் என்ற
எண்ணத்தினால் அல்ல"

" கடவுளின்
உண்மைத் தன்மையை
உணர்ந்து தான்
மதம் மாறி
கடவுளை வணங்க
வேண்டுமே தவிர ;
கடவுளின் உண்மைத்
தன்மையை உணராமல்
மதம் மாறி கடவுளை
வணங்கக் கூடாது ;"

(மக்கள் அமைதியாக
நின்று கொண்டிருந்தனர்
சிவநேசர் பேசத்
தொடங்கினார்)

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 13-08-2019
//////////////////////////////////////////////////////////

August 08, 2019

பரம்பொருள்-பதிவு-52


                 பரம்பொருள்-பதிவு-52

" இறந்த பூம்பாவையை
உயிரோடு எழுப்புவதற்காக
திருஞான சம்பந்தர்
தாம் வாழ்ந்த காலத்தில்
மாமயிலையில்
கபாலீச்சரம் என்னும்
கோயிலில் குடி
கொண்டிருக்கும்
சிவபெருமானுடைய
அருளைப் பெறுவதற்காக
மாதந்தோறும்
மக்களால் சிறப்பாகக்
கொண்டாடப்படும்
பல்வேறு விதமான
விழாக்களை
மாதம் வாரியாக
புரட்டாசி; ஐப்பசி;
கார்த்திகை; மார்கழி;
தை; மாசி; பங்குனி;
சித்திரை; வைகாசி;
ஆனி; ஆடி; ஆவணி;
என்று வரிசைப்படுத்தி
திருஞான சம்பந்தர்
பத்து பதிகங்கள்
பாடினார் "

"திருஞான சம்பந்தர் முதல்
பதிகத்தை பாடி முடித்தபின்
பூம்பாவை உருவம் பெற்றாள் ;
எட்டாவது பாடல் பாடியதும்
பன்னிரண்டு ஆண்டுகள்
வளர்ந்த அளவினை எய்தினாள் ;
கும்பாபிஷேகத்தை காணாமல்
போனாயோ? பூம்பாவை என்று
திருஞான சம்பந்தர் பத்தாவது
பதிகத்தை பாடி முடித்தபின்
பூம்பாவை உயிர்
பெற்று வந்தாள்;"

" 7 வயது பெண்ணாக
இறந்த பூம்பாவை
12 வயது நிரம்பிய அழகு
பதுமையாக பூம்பாவை
உயிர் பெற்று வந்தாள் ; "

" உயிரற்று எலும்பும்,
சாம்பலுமாக இருந்த பூம்பாவை
உயிர்ப்பெற்று எலும்பும்,
சதையும் கொண்ட
பெண்ணாக பூம்பாவை
உயிர் பெற்று வந்தாள் ;"

" ஊர்வசி ; ரம்பை ;மேனகை ;
திலோத்தம்மை ;போன்ற
தேவ மாதர்களே கண்டு
பொறாமைப்படும் படியான
அழகுடன் அழகு
தேவதையாக பூம்பாவை
உயிர் பெற்று வந்தாள் ;"

" பூம்பாவையைக் கண்ட
பிரம்மா தான் படைத்த
படைப்புகளிலேயே அற்புதமான
படைப்பு பூம்பாவையின் படைப்பு
என்று பூம்பாவையைப் பார்த்து
பிரம்மாவே ஆச்சரியப்படும்
வகையில் பூம்பாவை உயிர்
பெற்று வந்தாள் ;"

"திருஞான சம்பந்தர் இறந்த
பூம்பாவையை உயிரோடு
எழுப்பிய அதிசய காட்சியைக்
கண்டு அனைவரும் பிரமித்து
நின்றார்கள் ; இறைவனின்
அருளாசியுடன்
திருஞான சம்பந்தர்
நிகழ்த்திய இந்த அற்புத
செயலைக் கண்டு தேவர்கள்
பூமாரி பொழிந்தார்கள் ;
ஹர ஹர மகாதேவா என்று
மக்கள் உணர்ச்சி மேலிட்டால்
எழுப்பிய ஒலி அந்த
இடத்தையே அதிரச் செய்தது ;

" இறந்தவர்களை
எழுப்பும் சக்தி
சிவபெருமானை வழிபடும்
சைவமதத்திற்கு கிடையாது ;
சிவபெருமானை வழிபடும்
சைவமதத்தை சார்ந்தவர்கள்
இறந்தவர்களை எழுப்பியதாக
சரித்திரம் கிடையாது ;
என்று காழ்ப்புணர்ச்சியின்
காரணமாக பேசிய பிற
மதத்தைச் சார்ந்தவர்கள் ; "

"இறந்தவர்களை எழுப்பும்
சக்தி எங்கள் மதத்திற்கே
மட்டுமே உண்டு !
இறந்தவர்களை எழுப்பும்
சக்தி படைத்தவர்கள்
எங்கள் மதத்தில்
மட்டுமே உள்ளனர் ;
இறந்தவர்களை எழுப்பும்
சக்தி படைத்தவர்கள்
வேறு எந்த மதத்திலும்
கிடையாது என்று
வீண் பெருமை பேசிக்
கொண்டு திரிந்த பிற
மதத்தைச் சேர்ந்தவர்கள் ; "

"நாங்கள் பின்பற்றும்
மதமே உண்மையான மதம் ;
நாங்கள் வணங்கும் தெய்வமே
உண்மையான தெய்வம் ;
நாங்கள் வணங்கும்
தெய்வத்தைத் தவிர உலகத்தில்
வேறு எந்த ஒரு தெய்வமும்
உண்மையான தெய்வம் இல்லை ;
என்று உண்மை அறியாமல்
பேசித் திரிந்து கொண்டிருந்த
பிற மதத்தைச் சார்ந்தவர்கள்  ;"

" எங்களுடைய தெய்வமே
மக்களுடைய பாவங்களை
ஏற்றுக் கொண்டு மக்களை
துன்பங்களிலிருந்து விடுதலை
செய்து நன்மைகளை வழங்க
வந்த தெய்வம் ;
எங்களுடைய தெய்வம்
மட்டுமே மக்களைக்
காப்பாற்றக்கூடிய ஒரே
தெய்வம் என்று பிழைப்புக்காக
பொய் பேசிக் கொண்டு
போலி நாடகம் நடத்திக்
கொண்டிருந்த பிற
மதத்தைச் சார்ந்தவர்கள் ;"

" திருஞான சம்பந்தர்
பூம்பாவையை உயிரோடு
எழுப்பிய காட்சியைக் கண்டு
மிரண்டு போய் என்ன
செய்வது என்று தெரியாமல்
ஓடிபோய் ஒளிந்து கொண்டனர்
பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் ; “

" 7 வயதுடைய
பெண்ணாக இறந்து ;
12 வயதுடைய பெண்ணாக
உயிர்ப்பெற்று ; அழகு
பதுமையாக நடந்து
வந்த பூம்பாவை
16 வயது நிரம்பிய
திருஞானசம்பந்தரின்
பொற்பாதங்களில் விழுந்து
வணங்கினாள் ;

"சிவநேசர் தனது மனைவியுடன்
திருஞான சம்பந்தரின் கால்களில்
வீழ்ந்து வணங்கினார்"

" அங்குக் கூடியிருந்த மக்கள்
அனைவரும் இறைவனின்
திருவருளை நினைத்து மண்மீது
வீழ்ந்து திருஞான சம்பந்தரை
வணங்கினார்கள் "

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 08-08-2019
//////////////////////////////////////////////////////////



August 05, 2019

பரம்பொருள்-பதிவு-51


               பரம்பொருள்-பதிவு-51

பதிகம் – 6
"மடலார்ந்த தெங்கின்
மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான்
கபாலீச்சரம் அமர்ந்தான்
அடல் ஆனேறு
ஊரும் அடிகளடிபரவி
நடமாடல் காணாதே
போதியோ பூம்பாவாய் "

பொருள் விளக்கம் :
“அழகிய மடல்களைக்
கொண்ட தென்னை
மரங்கள் நிறைந்த
மாமயிலையில்
கபாலீச்சரம் என்னும்
கோயிலில் அமர்ந்து அருள்
செய்து கொண்டிருக்கும்
சிவபெருமானுக்கு
மாசி மாதத்தில்
பவுர்ணமியோடு கூடிய
மகம் நட்சத்திரம் வரும்
மாசி மகமான புண்ணிய
நாளில் பக்தர்கள் கடலில்
நீராடி சிவபெருமானை
வழிபட்டு கொண்டாடும்
மாசி கடலாட்டு விழாவில்
வலிமை பொருந்திய
காளையின் மேல்
சிவபெருமான் பவனி வந்து
பக்தர்களுக்கு அருள் வழங்கும்
அற்புதக் காட்சியைக்
காணாமல் போனாயோ
பூம்பாவை என்கிறார் “

பதிகம் – 7
" மலிவிழா வீதி
மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான்
கபாலீச்சரம் அமர்ந்தான்
பலிவிழா பாடல்செய்
பங்குனி யுத்திரநாள்
ஒலிவிழாக் காணாதே
போதியோ பூம்பாவாய் "

பொருள் விளக்கம் :
“திருவருள் எழுச்சியை
விளைவிக்கும் திருக்கோயில்
விழாக்கள் இடைவிடாமல்
நிகழ்ந்து கொண்டிருக்கும்
வீதிகளைக் கொண்ட
மாமயிலையில் கபாலீச்சரம்
என்னும் கோயிலில் அமர்ந்து
அருள் செய்து கொண்டிருக்கும்
சிவபெருமானுக்கு
பங்குனி மாதத்தில்
உத்திர நட்சத்திரத்தில்
பவுர்ணமி வரும்
பங்குனி உத்திரம்
புண்ணிய நன்னாளில் பக்தர்கள்
பக்தி பரவசம் மேலிட்டு
ஆரவார ஒலியை  எழுப்பி
பக்தர்களால் கொண்டாடப்படும்
பல்வேறு விழாக்களை
காணாமல் போனாயோ
பூம்பாவை என்கிறார் “

பதிகம் – 8
"தண்ணா அரக்கன்தோள்
சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலைக்
கபாலீச்சரம் அமர்ந்தான்
பண்ணார் பதினெண்
கணங்கள்தம் அட்டமிநாள்
கண்ணாரக் காணாதே
போதியோ பூம்பாவாய் "

பொருள் விளக்கம் :
“வீரமும் கோபமும் ஒருங்கே
கொண்ட இராவணனுடைய
தோள்களை நெரித்தவனும்
அழகிய திருவடிகளைக்
கொண்டு மாமயிலையில்
கபாலீச்சரம் என்னும்
கோயிலில் அமர்ந்து அருள்
செய்து கொண்டிருப்பவனுமாகிய
சிவபெருமானுடைய
அருளைப் பெறுவதற்காக
பண்ணோடு பாடக்கூடிய
சப்தரிஷிகள்,தேவர்கள்,
அரம்பையர்கள், அசுரர்கள்,
தானவர்கள், தைத்தியர்கள்,
நாகர்கள், கருடர்கள்,
கிண்ணரர்கள், கிம்புருசர்கள்,,
யட்சகர்கள், வித்தியாதரர்கள்,
அரக்கர்கள், கந்தர்வர்கள்,
சித்தர்கள், சாரணர்கள்,
பூதகணங்கள், பிசாசர்கள்
ஆகிய பதினெட்டு கணத்தினரும்
வணங்கும் சித்திரை அட்டமியில்
கொண்டாடப்படும் விழாவைக்
காணாமல் போனாயோ
பூம்பாவை  என்கிறார் “

பதிகம் – 9
" நற்றா மரைமலர்மேல்
நான்முகனும் நாரணனும்
உற்றாங் குணர்கிலா
மூர்த்தி திருவடியைக்
கற்றார்க ளேத்துங்
கபாலீச்சரம் அமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே
போதியோ பூம்பாவாய் "

பொருள் விளக்கம் :
அழகிய தாமரை மலர் மேல்
உறையும் நான்முகனும்,
நாராயணணும் தரிசிக்க
முடியாத சிவபெருமானுடைய
அடி முடிகளை அனைவரும்
தரிசிக்கும் வகையில்
மாமயிலையில் கபாலீச்சரம்
என்னும் கோயிலில் அமர்ந்து
அருள் செய்து கொண்டிருக்கும்
சிவபெருமானுடைய
அருளைப் பெறுவதற்காக
வைகாசி மாதத்தில்
கொண்டாடப்படும்
ஊஞ்சலாட்டுத் திருவிழாவைக்
காணாமல் போனாயோ
பூம்பாவை என்கிறார் “

பதிகம் – 10
" உரிஞ்சாய வாழ்க்கை
அமணுடையைப் போர்க்கும்
இருஞ்சாக் கியர்க
ளெடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலை சூழ்ந்த
கபாலீச்சரம் அமர்ந்தான்
பெருஞ்சாந்தி காணாதே
போதியோ பூம்பாவாய் "

பொருள் விளக்கம் :
“உடை அணியாமல் வாழும்
சமணர்கள், உடையைப்
போர்த்திக் கொண்டு
வாழும் கரிய சாக்கியர்கள்
தம் வாய்க்கு வந்ததை
எல்லாம் பேசிக் கொண்டு
திரியும் இந்த மண்ணுலகில்
மாமயிலையில் கபாலீச்சரம்
என்னும் கோயிலில் அமர்ந்து
அருள் செய்து கொண்டிருக்கும்
சிவபெருமானுடைய
அருளைப் பெறுவதற்காக
ஆனி, ஆடி, ஆவணி
ஆகிய மாதங்களில்
சிவபெருமானுக்கு
ஆயிரமாயிரம் ஆதிசைவப்
பெருமக்கள் வந்து ஞானாக்கினி
வளர்த்துச் செய்யப்போகின்ற
கும்பாபிஷேகத்தை
காணாமல் போனாயோ
பூம்பாவை என்கிறார் “

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
---------  04-08-2019
//////////////////////////////////////////////////////////