October 11, 2019

பிறந்தநாள்-10-10-2019


            பிறந்தநாள்-10-10-2019

அன்பிற்கினியவர்களே,

“10-10-2019 அன்று
பிறந்தநாள் கண்ட எனக்கு
வாழ்த்து தெரிவித்த
உலகம் முழுவதும் இருக்கும்
என்னுடைய ரசிகர்கள்,
அன்பு உள்ளங்கள்
மற்றும்
நேரில் வந்து வாழ்த்து
தெரிவித்த அனைத்து
உயிரனைய உறவுகளுக்கும்
என் நன்றியினைத்
தெரிவித்துக் கொள்கிறேன்”

“நான் ஒரு
DATA ENTRY COMPANY-ல்
வேலை செய்து
கொண்டிருந்த காலகட்டம்
என் கீழ் 30 பேர்
பணிபுரிந்து வந்தார்கள்”

“இந்த சூழ்நிலையில்
மேனேஜர் என்னை
கூப்பிட்டு புதிய
PROJECT வந்திருக்கிறது
அதற்கு 5 நாள் தான்
TIME 10-10- DEMO
பண்ண வேண்டும் என்று
சொன்னார் அங்கே மற்ற
TEAM களுக்கும் அதே
சொல்லப்பட்டது ;
நான் சொன்னேன்
10-ம் தேதி எனக்கு
பிறந்தநாள் என்னை
9-ம் RELEASE  பண்ணுங்கள் ;
10-10 எனக்கு விடுப்பு
கொடுங்கள் என்றேன் ;
பார்த்துக் கொள்ளலாம்
என்று சொன்னார் ;”
சொன்னபடி என்னை
9-ம் தேதி RELEASE
பண்ணவில்லை ;
மேனேஜர் என்னைப் பார்த்து
பாலா எல்லாவற்றையும்
பார்த்தது நீ தான்
10-ம் தேதி வந்து
முடித்து விட்டு சீக்கிரம்
கிளம்பி விடு என்று
சொன்ன போது
4 நாள் வீட்டிற்குக்
கூட செல்லாமல்
ஆபிஸில் இருந்து
வேலை செய்த எனக்கு
மன வருத்தத்தை அளித்தது
கோபத்துடன் இருந்தேன் ;”

“10-ம் தேதி காலை
அனைத்தையும் சரிபடுத்தி
முறைப்படுத்தி விட்டேன்
முழு வேலை
முடிய காலதாமதம்
ஆகும் இதனால்
மனம் வருத்தப்பட்ட
நான் பணியாளர்கள் டீ
சாப்பிடும் இடம் சென்று
டீ சாப்பிட்டுக்
கொண்டிருந்தேன்”

“அங்கே இருந்தவர்கள்
பேசிக் கொண்டிருந்தார்கள்
கண்ணதாசன் மிகப்
பெரிய கவிஞர்
அவர் எழுதிய பாடல்களில்
ஒரு பாடலில் உள்ள
கவிதை வரிகளான

“அத்தான் என்னத்தான்
அவர் என்னைத் தான்
எப்படிச் சொல்வேனடி”

என்ற பாடலில் உள்ள
கவிதை வரிகளைப்போல்
எழுதமுடியாது என்று
பேசிக்கொண்டிருந்ததை
கேட்டுக் கொண்டிருந்த
நான் கோபத்தில்
சும்மா இருக்காமல்
அவர்களை அழைத்து
அம்மா கண்ணதாசன்
மிகப்பெரிய கவிஞர் சரி
அதில் எந்தவித மாற்றுக்
கருத்துக்கும் இடம் இல்லை ;
ஆனால் கண்ணதாசன்
எழுதிய அந்தப்
பாடலில் உள்ள கவிதை
வரிகளைப் போல்
எழுத முடியாது என்று
சொல்லக்கூடாது ;
யாரும் முயற்சி செய்து
இருக்க மாட்டார்கள் ;
என்று தான் சொல்ல
வேண்டுமே தவிர
அந்த பாடலைப் போல
எழுதுவது எளிமையானது
தான் என்றேன் ;”

“ அந்த அறையில்
இருந்தவர்கள் அனைவரும்
என்னை சுற்றி
வந்து விட்டனர்
இவ்வளவு பேசுகிறீர்களே
உங்களால் எழுத
முடியுமா என்றனர் ?
ஏன் முடியாது
என்னால் முடியும் என்றேன்;
அப்படி என்றால்
எழுதுங்கள் என்றனர்
இது ஒன்றும் பெரிய
விஷயமில்லை - நான்
கொஞ்சம் வெளியே
சென்று விட்டு வருகிறேன்
SECTION-க்கு  வாருங்கள்
எழுதித் தருகிறேன்
என்று சொல்லி விட்டு
வெளியே சென்று விட்டு
அரை மணி நேரம்
கழித்து என் SECTIION
வந்த போது அனைத்து
TEAM உறுப்பினர்கள்
SHIFT CHANGE
நேரமாக இருந்ததால்
அனைவரும் இருந்தனர் ;”

“ஒரு பெண் வந்து
என்னிடம் சொன்னார்
நீங்கள் கவிதை எழுதுவதாக
சொன்னீர்களாம்
அதனால் தான் அனைவரும்
வந்திருக்கிறார்கள் என்ற
செய்தியைக் கேட்டு
அதிர்ச்சி அடைந்தேன்;”

“ஒருவர் வந்தார் பாலா
நீ கவிதை எழுதும்
வரை நாங்கள் WAIT
பண்ணுகிறோம் ;
கவிதை எழுது
என்றார்கள் - எனக்கு
என்ன செய்ய வேண்டும்
என்று தெரியவில்லை ;
கட்டாயம் கவிதை எழுதித்
தான் ஆக வேண்டும்
என்ற நிலைக்கு
கொண்டு வந்து விட்டார்கள் ;
நான் சரி கவிதை
நான் எழுத மாட்டேன்
நான் சொல்லிக்
கொண்டே வருகிறேன்
யாரேனும் எழுதுங்கள்
என்றேன் அப்படி செய்ய
உங்களால் முடியுமா என்று
அனைவரும் ஆச்சரியத்தால்
வாய் பிளந்தார்கள் “

“மைக் என்னிடம்
கொடுக்கப்பட்டது ;
நான் கவிதை சொல்லத்
தொடங்கினேன் முடியும்
வரை எந்தவித
சத்தமும் இல்லாமல்
அமர்ந்து இருந்த
150 பேரும் நான்
கவிதையை சொல்லி
முடித்த போது
BALA HAPPY BIRTHDAY
என்று அனைவரும் ஒரே
மாதிரி எழுப்பிய ஒலி
அந்த அறையையே
அதிர வைத்தது ;”

நான் சொன்ன
கவிதை இது தான்

“உன்னைத் தான்
முதலில் தான்
பார்த்துத் தான்
மனதில் தான்
காதல் தான்
வந்தது தான்”

“வந்ததால் தான்
உன்னைத் தான்
காதலித்துத் தான்
திருமணம் தான்
முடிக்கத் தான்
விருப்பம் தான் “

“உனக்குள் தான்
இல்லை தான்
காதல் தான்”

“இருந்தால் தான்
என்னைத் தான்
காதலித்துத் தான்
திருமணம் தான்
செய்வாய் தான்”

“முடியாமல் தான்
போனதால் தான்
பைத்தியமாகத் தான்
மாறித் தான்
போய்த் தான்
விட்டேன் தான்
நான் தான்”

“இது தான் நான்
சொன்ன கவிதை
மறக்க முடியாத
பிறந்த நாள்களில்
இதுவும் ஒன்று”

----------என்றும் அன்புடன்
-----------K.பாலகங்காதரன்

-----------10-10-2019
////////////////////////////////////////////////










October 08, 2019

சரஸ்வதி பூஜை,விஜயதசமி வாழ்த்துக்கள்-2019


             சரஸ்வதி பூஜை
       விஜயதசமி வாழ்த்துக்கள்-2019

அன்பிற்கினியவர்களே !

“கல்விக்குக் கடவுள்
சரஸ்வதி என்று
வழங்கப்பட்டு வருவது
தவறான கருத்தாகும் ;
அறிவுக்குக் கடவுள்
சரஸ்வதி என்று
வழங்கப்படுவதே
சரியான கருத்தாகும் ; ”

“அறிவு
இரண்டு வழிகளில்
பெறப்படுகிறது

ஒன்று  : படிப்பறிவு
இரண்டு: பட்டறிவு”

“புத்தகங்களைப்
படிப்பதின் மூலம்
பெறப்படும் அறிவு
படிப்பறிவு ; ”

“அனுபவத்தின்
மூலம்
பெறப்படும் அறிவு
பட்டறிவு ; ”

“இந்த இரண்டு
நிலைகளிலும்
பெறப்படும்
அறிவுக்குக்
கடவுள் தான்
சரஸ்வதி”

“அறிவு, செல்வம், வீரம்,
என்று தான் சொல்ல
வேண்டும் ;
கல்வி, செல்வம், வீரம்,
என்று சொல்வது
தவறான ஒன்றாகும் ;”

“அறிவு இருப்பவர்
அறிவைப் பயன்படுத்தி
பல்வேறு வேலைகள்
செய்து செல்வத்தை
சம்பாதிப்பார் ;
அந்த செல்வத்தை
கொடுத்து வீரம்
நிறைந்த ஆட்களை
துணைக்கு வைத்துக்
கொள்வார் ;
அதாவது அறிவு
என்பது யாருக்கு
இருக்கிறதோ
அவர் செல்வத்தையும்
வீரத்தையும்
சம்பாதித்துக்
கொள்வார் “

“செல்வம் வைத்து
இருப்பவர்
அறிவு நிறைந்த
ஆட்களை செல்வம்
கொடுத்து வேலைக்கு
வைத்துக் கொள்வார்
வீரம் நிறைந்த
ஆட்களை செல்வம்
கொடுத்து வேலைக்கு
வைத்துக் கொள்வார் ;
அதாவது செல்வம்
என்பது யாருக்கு
இருக்கிறதோ
அவர் அறிவையும்
வீரத்தையும்
சம்பாதித்துக்
கொள்வார்”

“வீரத்துடன்
இருப்பவர்
அறிவு நிறைந்த
ஆட்களை வீரம்
கொண்டு மிரட்டி
தங்கள் வேலையை
சாதித்துக் கொள்வார் ;
செல்வம் வைத்து
இருப்பவர்களை
தங்கள் வீரத்தைக்
காட்டி செல்வம்
சம்பாதித்துக்
கொள்வார் ;
அதாவது வீரம்
என்பது யாருக்கு
இருக்கிறதோ
அவர் அறிவையும்
செல்வத்தையும்
சம்பாதித்துக்
கொள்வார்;”

“இந்த உலகம்
முழுவதும்
எடுத்துக் கொண்டால்
அறிவு, செல்வம்,
வீரம் இந்த மூன்றும்
கொண்டவர்கள்
யாரும் இல்லை”

“அறிவு, செல்வம்,
வீரம் இந்த மூன்றில்
ஏதேனும் ஒன்று
இருந்தால்
மீதி இருக்கும்
இரண்டையும்
யாருக்கு திறமை
இருக்கிறதோ
அவர் சம்பாதித்துக்
கொள்வார்”

“அறிவு, செல்வம்,
வீரம் இந்த
மூன்றில் உயர்வு
தாழ்வு இருக்கிறது ;
அறிவு உயர்ந்தது ;
மற்ற இரண்டும்
அறிவுக்கு
கீழானது தான் ; “

“உனக்கு அறிவு
இருக்கிறதா?
உனக்கு அறிவு
இருந்தால்
இப்படி எல்லாம்
பேசுவாயா?
உனக்கு அறிவு
இருந்தால்
இப்படியெல்லாம்
செய்து இருப்பாயா?
உனக்கு அறிவு
இருந்தால் இப்படி
எல்லாம் நடந்து
கொள்வாயா?
என்று தான்
கேட்பார்களே தவிர
கல்வி அறிவு
இருக்கிறதா என்று
யாரும் கேட்க
மாட்டார்கள் “

“எனவே, கல்விக்குரிய
கடவுளாக சரஸ்வதியை
வழிபடாமல்
அறிவுக்குரிய
கடவுளாக சரஸ்வதியை
வழிபட வேண்டும் “

சரஸ்வதி பூஜை
விஜயதசமி
வாழ்த்துக்கள்-2019

---------என்றும் அன்புடன்
----------K.பாலகங்காதரன்

----------08-10-2019
//////////////////////////////////////////



October 06, 2019

பரம்பொருள்-பதிவு-69


             பரம்பொருள்-பதிவு-69

நாரதர் :

“நாரதர் சாதாரண
மனிதர்களைப் போல்
ஆண் பெண்
சேர்க்கையினால்
பிறந்தவர் அல்ல ;
அவர் பிரம்மதேவரின்
பக்குவமான
சிந்தனையினால்
அவரது மனதிலிருந்து
தோன்றிய உத்தம
புருஷர் நாரதர்

“அவரது தந்தை
பிரம்மதேவரால் கூட
எளிதில்
செல்ல முடியாத
வைகுண்ட லோகத்திற்கு
நினைத்த மாத்திரத்தில்
செல்லும் தகுதி
படைத்தவர்
நாரதர் “

“வேத மந்திரங்களை
ஆகாயத்திலிருந்து
கிரகிக்கக்கூடிய
விசேஷசதன்மை
பெற்ற ரிஷிகளில்
முக்கியமானவர்
நாரதர் - என்று
ரிக் வேதத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது

“ஸாமவேதத்திலும்
நாரதர் சிறப்பிடம்
பெறுகிறார்”

“முக்காலங்களையும்;
மூன்று
லோகங்களையும்;
கடந்து செல்லக்
கூடியவராகவே
எல்லா புராணங்களும்
நாரதரை
கூறுகின்றன;
இதனால் தான்
நாரதர்
திரிலோக சஞ்சாரி
என்றும்
அழைக்கப்படுகிறார்”

“மூவுலகையும்
சுற்றி வந்து
மூவுலகிலும்
நடைபெறும்
பல்வேறு நிகழ்வுகளை
அறிந்து அதை
எடுத்துச் சென்று
யாருக்கு தேவையோ
அவரிடம் சேர்க்கும்
விசேஷ தூதுவராகவும்
பத்திரிக்கையாளராகவும்
செயல்படுகிறார்
நாரதர்

“இசைக்கருவியான
வீணையைக்
கண்டுபிடித்தவரும்
நாரதரே

“அனைத்து அசுரர்களும்
தேவர்களும்
மதிக்கும் ஒரே
ஒரு ரிஷி
நாரதர்மட்டுமே”

“அனைத்து
தேவர்களையும்
சிறைப்பிடித்த
ராவணன் கூட
நாரதரை விட்டு
வைத்ததன் காரணம்
நாரதர் மீது
ராவணன்
வைத்திருந்த
மரியாதை தான்”

“நாரதர் சந்தன
முனிவரிடம்
இருந்து பூமி
வித்தையை கற்றுத்
தேர்ந்தார் ;
வித்தைகளிலேயே
மிக உயரிய
வித்தையாக
இது கருதப்படுகிறது ;
இது மட்டுமின்றி
ஆயக்கலைகள்
ஆறுபத்தி நான்கையும் ;
கற்றுத் தேர்ந்தவர்
நாரதர் “

நாரதருக்கு மரணம்
என்பதே இல்லை ;
என்று புராணங்கள்
கூறுகின்றது
வெகுசிலரே இந்த
அமரத்துவத்தை
அடைந்திருக்கிறார்கள் ;
மொத்தமாக 12 நபர்கள்
மட்டுமே இந்த
சிரஞ்சீவி வரத்தை
பெற்றவர்கள் ;
என்பது
குறிப்பிடத்தக்கது “

“முக்தி பெற்ற
தளத்தில்
நித்தியமாக
வீற்றுள்ளவர்
நாரதர் “

“இத்தகைய பல்வேறு
சிறப்புகளைக் கொண்ட
நாரதரைத் தான்
நாம் கலகக்காரர்
என்கிறோம் ;
கலகம் விளைவிப்பவர்
என்கிறோம் ;
பிரச்சினையை
உண்டு பண்ணுபவர்
என்கிறோம் ;
இருவருக்கிடையே
சண்டையை
ஏற்படுத்துபவர்
என்கிறோம் ;
உறவுகளுக்குள் பிளவை
உண்டாக்குபவர்
என்கிறோம் ;”

“ உண்மையில்
நாரதர் எத்தகைய
உயரிய செயலைச்
செய்கிறார்
என்பதும் ;
பிறரை எத்தகைய
செயலைச்
செய்யத் தூண்டுகிறார்
என்பதும் ;
தெரியுமா………………………..?”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
----------- 06-10-2019
//////////////////////////////////////////