October 06, 2019

பரம்பொருள்-பதிவு-69


             பரம்பொருள்-பதிவு-69

நாரதர் :

“நாரதர் சாதாரண
மனிதர்களைப் போல்
ஆண் பெண்
சேர்க்கையினால்
பிறந்தவர் அல்ல ;
அவர் பிரம்மதேவரின்
பக்குவமான
சிந்தனையினால்
அவரது மனதிலிருந்து
தோன்றிய உத்தம
புருஷர் நாரதர்

“அவரது தந்தை
பிரம்மதேவரால் கூட
எளிதில்
செல்ல முடியாத
வைகுண்ட லோகத்திற்கு
நினைத்த மாத்திரத்தில்
செல்லும் தகுதி
படைத்தவர்
நாரதர் “

“வேத மந்திரங்களை
ஆகாயத்திலிருந்து
கிரகிக்கக்கூடிய
விசேஷசதன்மை
பெற்ற ரிஷிகளில்
முக்கியமானவர்
நாரதர் - என்று
ரிக் வேதத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது

“ஸாமவேதத்திலும்
நாரதர் சிறப்பிடம்
பெறுகிறார்”

“முக்காலங்களையும்;
மூன்று
லோகங்களையும்;
கடந்து செல்லக்
கூடியவராகவே
எல்லா புராணங்களும்
நாரதரை
கூறுகின்றன;
இதனால் தான்
நாரதர்
திரிலோக சஞ்சாரி
என்றும்
அழைக்கப்படுகிறார்”

“மூவுலகையும்
சுற்றி வந்து
மூவுலகிலும்
நடைபெறும்
பல்வேறு நிகழ்வுகளை
அறிந்து அதை
எடுத்துச் சென்று
யாருக்கு தேவையோ
அவரிடம் சேர்க்கும்
விசேஷ தூதுவராகவும்
பத்திரிக்கையாளராகவும்
செயல்படுகிறார்
நாரதர்

“இசைக்கருவியான
வீணையைக்
கண்டுபிடித்தவரும்
நாரதரே

“அனைத்து அசுரர்களும்
தேவர்களும்
மதிக்கும் ஒரே
ஒரு ரிஷி
நாரதர்மட்டுமே”

“அனைத்து
தேவர்களையும்
சிறைப்பிடித்த
ராவணன் கூட
நாரதரை விட்டு
வைத்ததன் காரணம்
நாரதர் மீது
ராவணன்
வைத்திருந்த
மரியாதை தான்”

“நாரதர் சந்தன
முனிவரிடம்
இருந்து பூமி
வித்தையை கற்றுத்
தேர்ந்தார் ;
வித்தைகளிலேயே
மிக உயரிய
வித்தையாக
இது கருதப்படுகிறது ;
இது மட்டுமின்றி
ஆயக்கலைகள்
ஆறுபத்தி நான்கையும் ;
கற்றுத் தேர்ந்தவர்
நாரதர் “

நாரதருக்கு மரணம்
என்பதே இல்லை ;
என்று புராணங்கள்
கூறுகின்றது
வெகுசிலரே இந்த
அமரத்துவத்தை
அடைந்திருக்கிறார்கள் ;
மொத்தமாக 12 நபர்கள்
மட்டுமே இந்த
சிரஞ்சீவி வரத்தை
பெற்றவர்கள் ;
என்பது
குறிப்பிடத்தக்கது “

“முக்தி பெற்ற
தளத்தில்
நித்தியமாக
வீற்றுள்ளவர்
நாரதர் “

“இத்தகைய பல்வேறு
சிறப்புகளைக் கொண்ட
நாரதரைத் தான்
நாம் கலகக்காரர்
என்கிறோம் ;
கலகம் விளைவிப்பவர்
என்கிறோம் ;
பிரச்சினையை
உண்டு பண்ணுபவர்
என்கிறோம் ;
இருவருக்கிடையே
சண்டையை
ஏற்படுத்துபவர்
என்கிறோம் ;
உறவுகளுக்குள் பிளவை
உண்டாக்குபவர்
என்கிறோம் ;”

“ உண்மையில்
நாரதர் எத்தகைய
உயரிய செயலைச்
செய்கிறார்
என்பதும் ;
பிறரை எத்தகைய
செயலைச்
செய்யத் தூண்டுகிறார்
என்பதும் ;
தெரியுமா………………………..?”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
----------- 06-10-2019
//////////////////////////////////////////

No comments:

Post a Comment