October 04, 2019

பரம்பொருள்-பதிவு-68


             பரம்பொருள்-பதிவு-68

இந்திரபிரஸ்தம் :

" மதில் சுவர்கள்
வானத்தை முட்டி
நிற்கின்றன - என்று
சொல்லத்தக்க வகையில்
உயர்ந்த மதில்
சுவர்களோடு
ஆழமான அகழிகள் சூழ
இந்திரபிரஸ்தம் நகரம்
நிர்மாணிக்கப்பட்டது "

" நகரின் நுழைவாசல்
கருடனின் விரிந்த
இறக்கைகள் போலிருந்தன ;
கூரான கொக்கிகளும் ;
கம்பி சுற்றிய
பெரிய தூண்களும் ;
பெரிய இரும்புச்
சக்கரங்களும் ;
வேறுபல யந்திர
சாதனங்களும் ;
கோட்டைமதில் மீது
பொருத்தப்பட்டு
யாராலும் வெல்லவே
முடியாத நகரமாக
இந்திரபிரஸ்தம்
நகரம் விளங்கியது "

"நகரின் வீதிகள்
அகலமாகவும்
பாதுகாப்பானதாகவும்
இருந்தன ;
கேளிக்கை விடுதிகளும்
செயற்கை குன்றுகளும்
ஏரிகளும் குளங்களும்
பிரமிபூட்டும்
வகையில் நிரம்பி
இருந்தன ;
தாமரை, அல்லி
போன்ற பூக்கள்
பூ பூத்து நிரம்பி
இருந்தன ;
அன்னம், வாத்துக்கள்
ஆகியவை காண்போரை
கவரும் வகையில்
உலாவந்து கொண்டு
இருந்தன ;
மொத்தத்தில்
தேவ நகரம் போல
இந்திரப்பிரஸ்தம் நகரம்
காட்சி அளித்தது "

"வயல்களில் மிக
அதிக அளவில் கரும்பு
விளைந்து விட்டதால்
தேவைக்கு அதிகமாகி
விட்டது - இதனால்
வெட்டுவதற்கு அவசியம்
இல்லாமல் சாய்ந்து
விழுந்து அதில் இருந்து
புறப்பட்ட சாறு
ஆறாய் ஓடி
குளங்களை ஏற்படுத்தியது
அன்னப்பறவைகள்
அந்த கருப்பஞ்சாறு
குளங்களில்
நீந்திய காட்சி
பிரம்மிக்கத்தக்கதாக
இருந்தது."

"பேரழகுடன் விளங்கிய
இந்திரபிரஸ்தம் நகரில்
இந்திரலோகத்தில்
கிடைக்காத
பொருட்கள் கூட கிடைத்தன"

"திலோத்தமை என்ற
இந்திரலோகத்து
பேரழகியும் அங்கே
இருந்தாள் "

"இந்திரபிரஸ்தம்
நகரில் தங்கி வாழ
பிராமணர்களும் ;
வியாபாரிகளும் ;
கலைஞர்களும் ;
வந்தார்கள் "

"இந்திரபிரஸ்தத்தில்
ஏராளமான மக்கள்
குடியேறினர்  ;
இல்லை என்ற
சொல்லுக்கே
இடமில்லாமல்
பல தொழில் புரிந்து
மகிழ்வுடன் வாழ்ந்தனர்  "

"பிறருக்கு
தீங்கு செய்ய வேண்டும்
என்ற எண்ணம்
கொண்டு தீங்கு
செய்யாதவர்கள் ;
பஞ்சமா பாதகங்கள்
என்று சொல்லப்படக்கூடிய
பொய், சூது,
கொலை, கொள்ளை,
கற்புநெறி பிறழ்தல்
ஆகியவைகளை
நினைத்து கூடப்
பார்க்காதவர்கள் ;
அன்பு, கருணையை
வாய்மொழி
வார்த்தையாக மட்டும்
சொல்லாமல்
செயல் வடிவில்
காட்டுபவர்கள் ;
தங்கி வாழக்கூடிய
நகரமாக இந்திரபிரஸ்தம்
நகரம் திகழ்ந்தது "

"பாண்டவர்களின்
அரண்மனை
நகரின் ஒரு அழகான
நல்ல இடத்தில்
அமைந்திருந்ததோடு
குபேரனின்
இருப்பிடம் போல
செல்வச்செழிப்புடன்
காணப்பட்டது"

"திரௌபதியை
திருமணம்
செய்து கொண்ட
பஞ்சபாண்டவர்களான
யுதிஷ்டிரர்,
பீமன், அர்ஜுனன்,
நகுலன், சகாதேவன்
ஆகியோர்
திரௌபதியுடன்
இந்திரபிரஸ்தத்தில்
வாழ்ந்து வந்தனர்"

"இத்தகைய சூழ்நிலையில்
நாரத மகரிஷி
இந்திரபிரஸ்தத்திற்கு
வருகை புரிந்தார்"

"நாரதர்
ஏன் வருகிறார் ?
எதற்காக வருகிறார்?
என்ன காரணத்திற்காக
வருகிறார்?
என்ன பிரச்சினையை
கொண்டு வரப்போகிறார்?
என்ன பிரச்சினையை
உருவாக்கப்போகிறார்?
என்ன பிரச்சினையை
பெரிதாக்கப்போகிறார்?
என்று பஞ்சபாண்டவர்களும்
திரௌபதியும் நினைத்து
கலக்கம் அடைந்து
கொண்டிருந்த நிலையில்
தேவரிஷி நாரதர்
அவர்களை நோக்கி
நடந்து வந்து
கொண்டிருந்தார்"

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
------------04-10-2019
//////////////////////////////////////////


No comments:

Post a Comment