October 17, 2019

பரம்பொருள்-பதிவு-73


             பரம்பொருள்-பதிவு-73

தர்மர் :
"நாங்கள் மன
வேற்றுமையினால்
பிரிந்ததில்லை !"

"எங்களுக்குள் சண்டை
என்பது உண்டானதில்லை !"

"சண்டையினால்
நாங்கள் பிளவு பட்டு
நின்றதில்லை !"

"ஒரு பெண் எங்கள்
ஐவரையும் பிரித்து
விடுவாள் என்பதை
ஏற்றுக் கொள்வதற்கில்லை!"

"ஒரு பெண்ணால் எங்கள்
வாழ்க்கையில் பிரிவு
ஏற்படும் என்பதற்கான
எந்தவிதமான
சாத்தியக்கூறுகளும் இல்லை"

"யாராலும் எங்களை
பிரித்து விட முடியாது ;
என்ற நிலை
இருக்கும் போது
ஒரு பெண் எங்கள்
ஐவரையும் எப்படி
பிரித்து விட முடியும்? "

"அன்றும் நாங்கள்
ஒற்றுமையாக இருந்தோம் ;
இன்றும் நாங்கள்
ஒற்றுமையாக இருக்கிறோம் ;
நாளையும் நாங்கள்
ஒற்றுமையாகத் தான்
இருப்போம் ;"

"ஒரு பெண் எங்கள்
ஐவரையும்
பிரித்து விடுவாள்
என்ற சந்தேகம்
கொள்ளத் தேவையில்லை"

நாரதர் ;
"உலகில் நடக்கும்
எந்த ஒரு செயலும்
ஒன்றுடன் ஒன்று
தொடர்பு உடையது "

"ஒன்றுடன் ஒன்று
தொடர்பு இல்லாமல்
எந்த ஒரு செயலும்
நடைபெற முடியாது "

"ஒரு செயல் ஒரு
விளைவைக் கொடுத்தால்
அதே செயலும்
அந்த செயலை ஒத்திருக்கும்
மற்றொரு செயலும்
அதே விளைவைத்தான்
கொடுக்கும் என்று
நினைத்தால் தவறாகும்"

"ஒவ்வொரு செயலின்
விளைவும் காலத்திற்கு
ஏற்றாற் போல்
மாறிக் கொண்டே இருக்கும்"

"இறந்த காலத்தில்
ஒற்றுமையாக
இருந்தீர்கள் ;
நிகழ்காலத்தில்
ஒற்றுமையாக இருக்கிறீர்கள் ;
எதிர்காலத்திலும்
ஒற்றுமையாக இருப்பீர்கள் ;
என்று எவ்வாறு
சொல்ல முடியும்?"

"நாளை என்ன நடக்கும்
என்பது யாருக்கும்
தெரியாது ;
அப்படி இருக்கும்போது
ஒற்றுமையாகத் தான்
இருப்போம் என்று
எப்படி அரிதியிட்டுச்
சொல்ல முடியும் ;
நிச்சயமில்லாத ஒன்றை
நிச்சயமாக எப்படி
சொல்ல முடியும் ?"

“பரம்பரை பரம்பரையாக
ஒற்றுமையாக இருந்த
குடும்பம் திருமணம்
முடித்து குடும்பத்தில்
நுழைந்த ஒரு பெண்ணால்
பிரிந்த கதைகள்
இந்த உலகத்தில் உண்டு ;
ஒரே வீட்டினுள்
ஒன்றுபட்டு ஒற்றுமையாக
இருந்த குடும்பம்
திருமணமான பெண்
உள்ளே புகுந்ததால்
வீடும் சொத்தும்
பிரிக்கப்பட்ட கதைகளும்
இந்த உலகத்தில் உண்டு ;
ஊரே போற்ற வாழ்ந்த
குடும்பங்களும் ;
மாடிமீது மாடி கட்டி
வாழ்ந்த குடும்பங்களும் ;
ஒன்றுபட்டு ஒற்றுமையாக
வாழ்ந்த குடும்பங்களும் ;
திருமணமான பெண்
உள்ளே நுழைந்ததால்
பிரிந்த கதைகளும்
இந்த உலகத்தில் உண்டு ;"

"அப்படி இருக்கும் போது
இறந்த காலத்தையும்
நிகழ்காலத்தையும் ஒப்பிட்டு
எதிர்காலத்தில்
இப்படித்தான் இருப்போம்
என்று சொல்வதை
எப்படி ஏற்றுக்
கொள்ள முடியும் "

"அறிவுபூர்வமாக
சிந்தித்து பார்த்தீர்களானால்
உண்மை என்ன
என்பது விளங்கும் "

"நாளை ஒரு தவறு
நடக்கப்போகிறது
என்று தெரிந்தும்
அதை தடுப்பதற்கான
நடவடிக்கைகள் எதுவும்
எடுக்காமல் இருப்பது
புத்திசாலித்தனமில்லை ;
தவறு நடந்த பிறகு
வருத்தப்படுவதை விட
தவறு நடக்காமல்
இருப்பதற்கு எந்தவிதமான
நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டும்
என்று யோசிப்பது நல்லது;"

"எத்தகைய ஒரு
செயலை பின்பற்றினால்
திரௌபதியும்
நீங்கள் ஐவரும்
மனக்கசப்பு இல்லாமல்
சண்டை இல்லாமல்
ஒற்றுமையாக
இருக்கமுடியுமோ?
அந்த செயலைச் செய்ய
நடவடிக்கை
எடுக்க வேண்டும்”

“ஒற்றுமையாக இருந்த
அண்ணன் தம்பிகள்
ஒரு பெண்ணால்
பிரிந்த கதை
உங்களுக்கு தெரியுமா ?
அந்த கதையை
உங்களுக்கு சொல்கிறேன்
கேளுங்கள் என்று
கதையை சொல்லத்
தொடங்கினார் நாரதர்”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
----------17-10-2019
//////////////////////////////////////////


October 16, 2019

பரம்பொருள்-பதிவு-72


            பரம்பொருள்-பதிவு-72

நாரதர் :
"திருமணமான பெண்
எவ்வாறு நடந்து
கொள்ள வேண்டும்
என்பதற்கான விதிகள்
வரையறுக்கப்பட்டுள்ளன"

"திருமணம் முடித்து
பிறந்த வீட்டிலிருந்து
புகுந்த வீட்டிற்கு
வரும் பெண் ;
புகுந்த வீட்டின்
பழக்க வழக்கங்களுடன்
தன்னை ஒன்றிணைத்து ;
புகுந்த வீட்டின்
பழக்க வழக்கங்களுடன்
தன்னை ஐக்கியப்படுத்திக்
கொள்ள வேண்டும் ;
பிறந்த வீட்டின் பெருமைகளை
பிறருடைய முகம்
சுளிக்கும்படி
பேசித் திரியக்கூடாது ;"

"திருமணம் முடித்து
வரும் பெண்
கணவனுடைய மனதை
அறிந்து அவன் எண்ணும்
எண்ணத்தின்படி
நடக்க வேண்டும் ;
கணவனுடைய மனதில்
உள்ள எண்ணத்திற்கு
மாறாக நடக்கக்கூடாது;"

"அதிகாலை கணவன் விழித்து
எழுவதற்கு முன் எழுந்து  ;
கணவன் அடிதொழுது ;
பின்பு இறைவன்
மலரடி தொழுது ;
அன்றாடக் கடமைகளை
முடித்து கணவன் வேலைக்கு
செல்லும் முன்னர்
அவன் விருப்பப்படும் உணவை
அவனுக்கு பரிமாறி ;
அவன் சாப்பிடும் வரை
அருகில் இருந்து கவனித்துக்
கொள்ள வேண்டும் ;"

"கணவன் வேலைக்கு
சென்றவுடன் வீட்டில் செய்ய
வேண்டிய வேலையையும்;
குடும்பத்தை வழி நடத்துவதற்கு
செய்ய வேண்டிய வேலையையும்
செய்ய வேண்டும்;"

"மாலை கணவன் வரும்
நேரம் அறிந்து ;
வாசலில் அமர்ந்து
வழிமேல் விழி வைத்து
கணவன் வருகைக்காக
காத்திருக்க வேண்டும் ;

"வேலை முடித்து வரும்
கணவன் மனம் வருத்தப்படாமல்
நடந்து கொள்ள வேண்டும் ;
கணவனை உறங்க வைத்த
பிறகே உறங்க வேண்டும் ;"

"புகுந்த வீட்டில் கணவனுக்கோ?
கணவனுடைய
உறவினர்களுக்கோ ?
கணவனைச்
சார்ந்தவர்களுக்கோ ?
பிறந்த வீட்டினிலோ
பிறந்த வீட்டின்
உறவினர்களாலோ ?
பிறந்த வீட்டைச்
சார்ந்தவர்களாலோ ?
ஏதேனும் அவமானமோ?
அல்லது
பிரச்சினையோ ஏற்பட்டால்
திருமணம் செய்து
முடித்து வந்த பெண் ;
பிறந்த வீட்டை எதிர்க்க
தயங்கக்கூடாது;
அவர்கள் உறவை
அறுக்கக்கூடிய சூழ்நிலை
வந்தாலும் புகுந்த
வீட்டின் மானம் காக்க
உறவை அறுக்க
தயங்கக்கூடாது ;"

"கணவனுடைய
அனுமதி இல்லாமல் ;
கணவனுக்கு தெரியாமல் ;
பிறந்த வீட்டிற்கு
சென்று வருவதோ?
பிறந்த வீட்டில்
உள்ளவர்களுடன் உறவுமுறை
கொண்டாடுவதோ?
பேச்சு வார்த்தையோ?
கொடுக்கல் வாங்கலோ?
வைத்துக் கொளளக் கூடாது"

"எந்த விஷயத்தை
பின்பற்ற வேண்டும் என்று
கணவன் சொல்கிறானோ?
அந்த விஷயத்தைத் தான்
பின்பற்ற வேண்டும்;
அவ்வாறு பின்பற்றாமல்
கணவனுக்கு தெரியாமல்
கணவன் வணங்கும்
தெய்வத்தை வணங்காமல்
மறைமுகமாக வேறு
கடவுளை வணங்குவது ;
மறைமுகமாக
வேண்டாத நண்பர்களுடன்
தொடர்பு கொள்வது ;
மறைமுகமாக பணத்தை
சேமித்து வைத்து
தேவைப்படுபவர்களுக்கு
கொடுப்பது; போன்ற
மறைமுகமான செயல்களைச்
செய்யக் கூடாது;"

"எளிமையாக சொல்ல
வேண்டுமானால்
திருமணம் முடித்து
பிறந்த வீட்டிலிருந்து
புகுந்த வீட்டிற்கு
வரும் பெண்
கணவனுடைய மனதை
அறிந்து அவன் எண்ணும்
எண்ணத்தின்படி
நடக்க வேண்டும் ;
கணவனுடைய மனதில்
உள்ள எண்ணத்திற்கு
மாறாக நடக்கக்கூடாது;"

"ஒரு கணவனை மட்டுமே
திருமணம் செய்து
கொண்டு வரும் பெண்களே
தன்னுடைய
கணவனின் தேவையை
பூர்த்தி செய்ய முடியாமல்
அவதிப் படும்போது……………?
ஐவரை மணந்த திரௌபதியே
எப்படி பஞ்ச பாண்டவர்களின்
தேவையை அறிந்து
அவர்கள் மனம் அறிந்து
அவர்களுடைய மனம்
வருத்தப்படாமல் உன்னால்
எப்படி நடந்து
கொள்ள முடியும் "

"ஐவருக்கும் மனவருத்தமோ
கோபமோ இல்லாமல்
எந்தவிதமான பிரச்சினையும்
இல்லாமல் ஐவருடைய
தேவையையும்
பூர்த்தி செய்வது என்பது
ஒரு மனைவியால்
இயலாத காரியம் ;
ஐவருக்கும் உனக்கும்
சண்டையும் குழப்பமும்
அமைதியின்மையும் ஏற்படத்
தான் வாய்ப்பு இருக்கிறது"

"பிரச்சினைக்குரிய இந்த
விஷயத்தைப் பற்றி
பஞ்ச பாண்டவர்களாகிய
நீங்களும் திரௌபதியும்
சிந்தித்து பார்த்தீர்களா
என்று பேச்சை
நிறுத்தினார் நாரதர்"

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
------------16-10-2019
//////////////////////////////////////////

October 15, 2019

பரம்பொருள்-பதிவு-71


            பரம்பொருள்-பதிவு-71

“தங்களை நோக்கி
வந்து கொண்டிருந்த
நாரதரை நேர் எதிர் சென்று
பஞ்ச பாண்டவர்களும்
திரௌபதியும் வரவேற்றனர் “

தர்மர் :
"தேவ ரிஷியே தங்கள்
வரவு நல்வரவாகுக !

தங்கள் வரவால் எங்கள்
நகரம் பெருமையடைந்தது !

எங்கள் மாளிகை
புனிதமடைந்தது !

எங்களை
ஆசிர்வதியுங்கள் !

(என்று பஞ்ச
பாண்டவர்களும், திரௌபதியும்
நாரதர் காலில் விழுந்து
நாரதரை வணங்கினர்)

"எல்லா நலமும் பெற்று
வளமுடன் வாழ்க !
என்று பஞ்ச
பாண்டவர்களையும்
திரௌபதியையும்
நாரதர் வாழ்த்தினார் "

"பஞ்ச பாண்டவர்களும்
திரௌபதியும்
ஒன்றாக இணைந்து
நாரதரை ரத்தின
சிம்மாசனத்தில்
அமர வைத்து
நாரதருக்கு
ராஜ உபசாரம் அளித்து ;
நாரதருக்கு செய்ய
வேண்டிய அனைத்து
பணிவிடைகளையும்
குறைவில்லாமல் செய்து ;
தங்களுக்கு அருளுரை
வழங்குமாறு கேட்டுக்
கொண்டதற்கிணங்க
நாரதர் பேசத்
தொடங்கினார் ”

நாரதர் ;
" ஒரு குடும்பத்தின்
தலைமகன் நல்ல
குணநலன்களைக்
கொண்டவனாக ;
அனைவரையும் அனுசரித்துச்
செல்லக் கூடியவனாக ;
குடும்பத்தின் கஷ்டம்
நஷ்டம் உணர்ந்து
செயல்படுபவனாக ;
எந்தவிதமான பிரச்சினை
வந்தாலும் சமாளித்து
குடும்பத்தை வழிநடத்திச்
செல்லக் கூடியவனாக ;
பெரியோர்களை மதித்து
பெரியோர் சொல் கேட்டு
பெரியோர்கள் காட்டும்
நல்வழி நடந்து செல்பவனாக ;
இருந்தால் மட்டுமே
அக்குடும்பமும்
அக்குடும்பத்தில் உள்ள
அனைவரும் எந்தவிதமான
குறைவும், மனவருத்தமும்
இல்லாமல் மகிழ்ச்சியாக
இருக்க முடியும் "

"குடும்பத்தில் உள்ள
தலைமகன் நல்ல குணம்
இல்லாதவனாக இருந்தாலோ ?
தனக்கு தோன்றியதை
செய்து கொண்டு சுற்றித்
திரிந்து கொண்டு இருந்தாலோ ?
குடும்பக் கஷ்டம் தெரியாமல்
கவலைப்படாமல் அலைந்து
திரிந்து கொண்டிருந்தாலோ ?
ஊதாரித் தனமாக சுற்றிக்
கொண்டிருந்தாலோ ?
சம்பாதிக்காமல் வீண்
விரயம் செய்து
கொண்டிருந்தாலோ ?
பெரியோர்கள் சொல்
கேட்காமல் இருந்தாலோ?
பெரியோர்கள் வார்த்தைகளை
மதிக்காமல் இருந்தாலோ ?
பெரியோர் காட்டும் நல்வழியில்
நடக்காமல் இருந்தாலோ ?
அத்தலைமகன்
மட்டுமல்ல அக்குடும்பமும்
கஷ்டப்படத் தான் நேரும்"

"பஞ்சபாண்டவர்களின்
தலைமகன் தர்மர்
நல்ல குணநலன்களைக்
கொண்டவனாக
இருக்கின்ற காரணத்தினால்,
பாண்டவர்களாகிய
நீங்களும் உங்களைச்
சார்ந்தவர்களும் பல்வேறு
துன்பங்களை அனுபவித்தாலும் ;
கஷ்டத்தில் கவலையுற்றாலும் ;
மன அமைதியுடன்
இருக்கிறீர்கள் ;"

"கௌரவர்களின்
தலைவமகன்
துரியோதனன்
நல்ல குணநலன்கள்
இல்லாமல் இருக்கின்ற
காரணத்தினால் கௌரவர்களும்
அவரைச் சார்ந்தவர்களும்
அனைத்து செல்வங்களை
வைத்திருந்தும் மன அமைதி
இல்லாமல் தவிக்கிறார்கள்"

"ஒரு குடும்பத்தின்
தலைமகன் நல்ல
குணநலன்களைக்
கொண்டவனாக இருப்பது
எவ்வளவு முக்கியம் என்பதை
தெரிந்து கொள்ளுங்கள்"

"அதைப் போல ஒரு
நாட்டின் தலைமகனான
அரசனும் நல்லவனாக ;
மக்கள் மனம்
அறிந்து நடப்பவனாக ;
மக்கள் குறைகளை கேட்டு
அதை நிவர்த்தி
செய்பவனாக ;
இருந்தால் மட்டுமே
ஒரு நாட்டையும் ;
நாட்டிலுள்ள மக்களையும்
எந்தவிதமான மன
குறையும் இல்லாமல்
மகிழ்ச்சியாக வைத்துக்
கொள்ள முடியும் ;"

"அந்த விதத்தில்
குடும்பத்தின் தலைமகனாக ;
நாட்டின் தலைவனாக ;
தர்மத்தின் காவலனான
தர்மரே இருக்கும் போது
பாண்டவர்களுக்கும்
இந்திரபிரஸ்தத்திற்கும்
என்ன குறை
ஏற்படப்போகிறது
என்று சொல்லிக் கொண்டே
திரௌபதியை நோக்கி
பேசத் தொடங்கினார்
நாரதர்”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
-----------15-10-2019
//////////////////////////////////////////