December 04, 2019

பரம்பொருள்-பதிவு-92


             பரம்பொருள்-பதிவு-92

"அதிசய நிகழ்வுகள்
பல நிகழ்ந்து
கொண்டிருக்கும் இந்த
பிரபஞ்சத்தில் - மீண்டும்
ஒரு அதிசய நிகழ்வு
நடைபெற்றது !
ஆனால், இது யாரும்
சிந்தித்துப் பார்க்க முடியாத
வித்தியாசமான நிகழ்வு !
இந்த பிரபஞ்சத்தில்
இந்த நிகழ்வு
இதற்கு முன்னர்
நடைபெற்று இருக்கிறதா ?
என்று யோசிக்க
வைக்கும் நிகழ்வு !"

"இந்த பிரபஞ்சமே
வித்தியாசமான
நிகழ்வுகளினால்
நிரம்பி இருக்கும் போது ;
இந்த நிகழ்வும் ஒரு
வித்தியாசமான
நிகழ்வு தான் !"

"நாக கன்னிகையான
உலூபியிடம்
காதல் வயப்பட்ட
மனிதப் பிறவியான
அர்ஜுனன் உலூபியின்
காதலை ஏற்றுக் கொண்டு
உலூபியின் ஆசையை
நிறைவேற்றினான்,."

"நாக கன்னிகையான
உலூபியும் ;
மனித பிறவியான
அர்ஜுனனும் ;
ஒன்றாக இணைந்தனர் "

"இந்த நிகழ்வு தான்
பிரபஞ்சத்தின்
ஒரு அதிசயிக்கத்தக்க
நிகழ்வாக நடைபெற்றுக்
கொண்டிருந்தது"

அர்ஜுனனும் உலூபியும்

" ன்பு
மழையில் நனைந்து  ,

சை
வெள்ளத்தில் நீந்தி ,

ன்பக் கடலில் மூழ்கி ,

ந்து கொண்டனர்
மகிழ்வை
ஒருவருக்கொருவர் ;”

ள்ளத்தில் பற்றி
எரிந்த காதல் தீயை ,

துகுழல் கொண்டு
அதிகரிக்கச் செய்தனர்
இருவருடைய
பிணைப்பின் மூலம் “

ண்ணத்தில்
இருந்த காதல்

ற்றம் பெற்று
காமத்தின் உச்சத்திற்கு
சென்றது “

யம் இன்றி
அனைத்து விதமான
இன்பங்களையும் ,

ன்றாக இருந்து
துய்த்தனர் ,

ரிடத்தில்
இருந்தபடியே “

ஷதமாய் இருந்தது
அவர்களுடைய பிணைப்பு
அவர்களுடைய
காதல் நோய்க்கு “

“இ தே காதலில்
தொடங்கி காமத்தில் முடிந்த
இன்ப விளையாட்டிற்கு
உதாரணமாக இருந்தது "

"எதிர்காலத்தின் முக்கிய
நிகழ்வுகள் அனைத்தும்
அர்ஜுனனை சுற்றியே
நடக்க வேண்டி
இருந்த காரணத்தினால் ;

வரலாற்றின் முக்கிய
பக்கங்கள் அனைத்தும்
அர்ஜுனனை பற்றியே
எழுத வேண்டி
இருந்த காரணத்தினால் ;

யாரும் நினைத்து
கூட பார்க்க முடியாத
முக்கியமான
சாதனைகளை அர்ஜுனன்
நிகழ்த்த வேண்டி
இருந்த காரணத்தினால் ;

பரம்பொருளே
அர்ஜுனனுக்கு சேவை
செய்ய வேண்டி
இருந்த காரணத்தினால் ;

அதர்மத்தை அழித்து
தர்மத்தை நிலை நாட்ட
வேண்டியவர்களில்
முக்கியமான
ஒருவனாக அர்ஜுனன்
இருந்த காரணத்தினால் ;

பாண்டவர்களுடைய
புகழை உலகறியச்
செய்ய வேண்டிய
கடமை அர்ஜுனனுக்கு
இருந்த காரணத்தினால் ;

எதிர்காலக் கடமைகளின்
பொருட்டு நிகழ்கால
இன்பங்களை துறக்க
வேண்டிய முக்கிய
கடமை அர்ஜுனனுக்கு
இருந்த காரணத்தினால் ;

உலூபியுடன் அர்ஜுனன்
நீண்ட நேரத்தை
செலவிட முடியவில்லை ;"

"அன்று பகலும் இரவும்
அர்ஜுனன் உலூபியுடன்
அந்த அரண்மனையில்
தங்கினான் "

"தனக்கு நிறைய
கடமைகள் இருப்பதாலும் ;
தான் செல்ல வேண்டிய
நேரம் வந்து விட்டதாலும் ;
உலூபியை விட்டு பிரிய
வேண்டிய தருணம்
வந்து விட்டதாலும் ;
தான் பிரிந்து செல்ல
அனுமதி அளிக்க வேண்டும் ;
என்று உலூபியிடம்
கேட்டான் அர்ஜுனன் "

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 04-12-2019
//////////////////////////////////////////

December 03, 2019

பரம்பொருள்-பதிவு-91


           பரம்பொருள்-பதிவு-91

“காண்பவர் யாராக
இருந்தாலும்
மோகத் தீயில்
வெந்து சாகும்
படியான
அழகைக் கொண்ட
அழகுப் பதுமையான
உலூபியின்
வசீகரத்தால்
கவர்ந்திழுக்கப்பட்ட
அர்ஜுனன்
உலூபி பேசிய
வார்த்தைகளில் உள்ள
அர்த்தங்களை
உணர்ந்து உள்ளம்
உருகிப் போனான் ;
உலூபியின்
சாதுர்யமான
பேச்சைக் கேட்டு
மதி மயங்கிப்
போனான் ;
உலூபியின்
வார்த்தைகளில் உள்ள
வசீகரத்தைக் கண்டு
கிறங்கிப் போனான்;”  

“அழகு ;
வீரம் ;
அறிவு ;
ஆகிய முப்பெரும்
அரிய குணங்களைத்
தன்னகத்தே கொண்ட
உலூபியைக் கண்டு
அர்ஜுனன்
மனதைப்
பறி கொடுத்தான் ;
உலூபியின்
உண்மையான
காதலுக்குள்
விழுந்தான் ;
காதலானது
கொஞ்சம்
கொஞ்சமாக
அர்ஜுனனுக்குள்
உதிக்கத்
தொடங்கியது ;”

“அர்ஜுனனுக்குள்
காதலானது
முளை விட்டு
செடியாக
வளரத் தொடங்கியது  ;
செடியானது
மரமாக மாற்றம்
அடைந்தது ;
மரத்தில் பூவானது
மலரத் தொடங்கியது ;
பூத்த பூவானது
காயாக மாற்றம்
அடைந்தது ;
காயானது முற்றி
கனியாக
மாற்றம் அடைந்தது ;”

“இப்படியாக
அர்ஜுனனுக்குள்
காதலானது
படிப்படியாக
வளர்ந்து ஆழமாக
வேர் ஊன்றத்
தொடங்கி விட்டது ;
அர்ஜுனன்
உலூபியை
காதலிக்கத்
தொடங்கி
விட்டான் ;”

“உலூபியின் மேல்
காதல் வயப்பட்ட
அர்ஜுனன்
உலூபியை காதல்
பார்வையால்
பார்த்தான் ;
அர்ஜுனனின்
காதல் ரசம்
சொட்டும் காதல்
பார்வையைப்
புரிந்து கொண்ட 
உலூபி
அர்ஜுனனின்
கண்களை
நேருக்கு நேர்
பார்க்கத்
தொடங்கினாள் ;

“இருவருடைய
கண்களின் வழியாக
காதலானது
பரிமாற்றம்
செய்யப்பட்டது ;
பிரபஞ்சத்தின்
ஒரே மொழியான
மெளனத்தின்
மூலம் காதலானது
கண்கள்
மூலமாக பேசிக்
கொள்ளப்பட்டது ;
இருவருடைய
இதயங்களின்
வழியாக
காதல்
சங்கமிக்கும்
நிகழ்ச்சி
நடைபெற்றுக்
கொண்டிருந்தது ;”
அங்கே இது
வரை யாரும்
கண்டிராக ஒரு
ஆழ்ந்த அமைதி
நிலவிக்
கொண்டிருந்தது;”

“காதலின்
ஆழம் வரை
சென்ற உலூபியும்
அர்ஜுனனும்
மெய் மறந்து
நின்று
கொண்டிருந்தனர் ;
உலூபியின்
ஆசை
நிறைவேறுவதற்கான
சாத்தியக்
கூறுகள்
உதயமாகின ;”

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
-----------03-12-2019
//////////////////////////////////////////

November 22, 2019

பரம்பொருள்-பதிவு-90


            பரம்பொருள்-பதிவு-90

உலூபி :
“12 மாதங்கள் வனத்தில்
பிரம்மச்சாரியாக
வசிக்க வேண்டும்
என்பது தானே சட்டம்:”

“இந்த சட்டத்தை நன்றாக
ஆராய்ந்து பார்த்தால்.
வனத்தில் பிரம்மச்சாரியாக
இருக்க வேண்டும்
என்று தான் சட்டத்தில்
சொல்லப்பட்டு
இருக்கிறதே தவிர………….?
,நாட்டில் பிரம்மச்சாரியாக
இருக்க வேண்டும்
என்று சட்டத்தில்
சொல்லப்படவேயில்லையே?”

“அதன்படி பார்த்தால்
நீங்கள் நாட்டில் வசிக்கும்
போது பிரம்மச்சாரியாக
இருக்க வேண்டிய
அவசியமே இல்லை
சம்சாரியாகவே வசிக்கலாம்”

“ வனத்தில் தான்
நீங்கள் பிரம்மச்சாரியாக
இருக்க வேண்டும்
நாட்டில் இல்லை என்று
அந்த சட்டத்திற்கு
அர்த்தத்தை எடுத்துக்
கொண்டால் - இப்போது
நீங்கள் இருப்பது
எங்களுடைய நாட்டில்
உள்ள அரண்மனையில் ;
எங்களுடைய நாட்டில்
நீங்கள் பிரம்மச்சாரியாக
இருக்க வேண்டிய
அவசியம் இல்லை ;
எங்களுடைய நாட்டில் நீங்கள் 
சம்சாரியாகவே வசிக்கலாம்”

“அதாவது வனத்தில்
வசித்த போது
பிரம்மச்சாரியாக
இருந்த நீங்கள் ;
எங்களுடைய நாட்டில்
வசிக்கும் போது
சம்சாரியாக வசியுங்கள்”

அர்ஜுனன் :
“அப்படி என்றால்
12 மாதங்கள்
பிரம்மச்சாரியாக இருக்க
வேண்டும் என்று – அந்த
சட்டத்தில் சொல்லப்பட்டு
இருக்கிறதே !”

உலூபி :
“அது ஒன்றும் பெரிய
விஷயம் இல்லை”

 “12 மாதங்கள்
பிரம்மச்சாரியாக
இருக்க வேண்டும்
என்று தான் சட்டத்தில்
சொல்லப்பட்டு
இருக்கிறதே தவிர ;
12 மாதங்களும்
பிரம்மச்சாரியாக
இருக்க வேண்டும்
என்று அந்த சட்டத்தில்
சொல்லப்படவில்லையே?”

“அதன்படி பார்த்தால்
12 மாதங்களில் தேவைப்படும்
சமயத்தில் பிரம்மச்சாரியாகவும்
இருக்கலாம் - தேவைப்படும்
சமயத்தில் சம்சாரியாகவும்
இருக்கலாம் என்று தான்
அந்த சட்டம் சொல்கிறது”

“12 மாதங்களும்
பிரம்மச்சாரியாக
இருக்க வேண்டும் என்று
இருந்தால் மட்டுமே ;
12 மாதங்களும்
பிரம்மச்சாரியாக
இருகக வேண்டும் ;”

“12 மாதங்கள்
பிரம்மச்சாரியாக
இருக்க வேண்டும் என்றால்
தேவைப்படும் சமயத்தில்
பிரம்மச்சாரியாகவும் 
இருக்கலாம் - தேவைப்படும்
சமயத்தில் சம்சாரியாகவும்
இருக்கலாம் என்று
தான் அர்த்தம் ;

“மொத்தத்தில் உங்களுக்குள்
நீங்கள் வகுத்துக் கொண்ட
சட்டம் என்ன சொல்ல
வருகிறது என்றால்
12 மாதங்களில் தேவைப்படும்
சமயத்தில் வனத்தில்
பிரம்மச்சாரியாகவும்
இருக்கலாம் - தேவைப்படும்
சமயத்தில் நாட்டில்
சம்சாரியாகவும் இருக்கலாம்
என்று தான் சொல்கிறது;”

“தற்போது நீங்கள்
எங்களுடைய நாட்டில்
இருக்கிறீர்கள்-சட்டப்படி
பார்த்தால் நாட்டில் இருக்கும்
நீங்கள் சம்சாரியாக வாழலாம்”.

“சட்டத்தைப் பார்த்துத்
தானே நீங்கள் பயந்தீர்கள். ;
சட்டம் நமக்கு சாதகமாகத்
தானே இருக்கிறது ;
எனவே நீங்கள் என்னை
மணந்து என்னை தங்களுடைய
மனைவியாக ஏற்றுக்
கொண்டால் நான் மனம்
மகிழ்வேன்.- என்னை
தங்களுடைய மனைவியாக
ஏற்றுக் கொள்வீர்களா?”

அர்ஜுனன் :
(“அர்ஜுனன் உலூபியின்
அபாரமான அறிவுக்
கூர்மையைக் கண்டு
வியந்து போய் நின்றான்;
பேச நாக்கு எழவில்லை;
வாயிலிருந்து வார்த்தை
வரவில்லை;
தலை சுற்றுவது போல்
இருந்தது அர்ஜுனனுக்கு.;
இவ்வளவு அறிவுக்
கூர்மையைக் கொண்ட
ஒரு பெண்ணை அவன்
பார்த்ததே இல்லை ;
சிறிது நேரம் அமைதியாக
இருந்த அர்ஜுனன்
தன்னை சமாளித்துக் கொண்டு
பேசத் தொடங்கினான்;”)

“நீங்கள் அழகானவர் என்று
தான் நினைத்தேன்
என்னுடைய கணிப்பு தவறு
நீங்கள் வீரம் மிக்க
நங்கையாக இருக்கிறீர்கள் ;
அறிவுக்கூர்மை கொண்ட
மங்கையாக இருக்கிறீர்கள்;
அதுமட்டுமல்ல
அழகு ,வீரம், அறிவு,
இந்த மூன்றும் ஒருங்கே
கொண்ட பெண்ணை இதுவரை
நான் பார்த்ததேயில்லை;
முதன் முதலாக உங்களைத்
தான்  நான் பார்க்கிறேன்;” 

“மாதர்குல மாணிக்கம் நீங்கள் ;
பெண்களுக்குள் அதிசயம் நீங்கள் ;
உங்களைப் புகழ்வதற்கு
எந்த மொழியிலும்
வார்த்தைகளே இல்லை ;
என்பது மட்டும் உண்மை;”

உலூபி :
“அர்ஜுனனின் வார்த்தைகளைக்
கேட்ட உலூபி வெட்கத்தால்
தலை குனிந்தாள் ;
நாணத்தால் தலை சாய்ந்தாள்;” 

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
-------------22-11-2019
//////////////////////////////////////////

November 21, 2019

பரம்பொருள்-பதிவு-89


          பரம்பொருள்-பதிவு-89

அர்ஜுனன்:
"நான் குந்தி
தேவியின் மகன் ;
இந்திரபிரஸ்தத்தை
அரசாளும்
தர்மரின் தம்பி ;.
பஞ்சபாண்டவர்களில்
நானும் ஒருவன் ;
என்னுடைய பெயர்
அர்ஜுனன் ; "
       
"பஞ்ச பாண்டவர்கள்
ஐவரும் திரௌபதியை
திருமணம் செய்து
கொண்டோம் - எங்கள்
வாழ்க்கையில்
எந்தவிதமான
பிரச்சினையும் ஏற்பட்டு
விடக் கூடாது
என்பதற்காக,……………………?

"திரௌபதியும் 
திரௌபதியுடன்
குடும்பம் நடத்திக்
கொண்டிருக்கும்
பஞ்ச பாண்டவர்களில்
ஒருவரும் தனித்து
ஒரு அறையில்
இருக்கும் போது
பஞ்ச பாண்டவர்களில்
மற்றவர்கள் அந்த
அறைக்குள்
நுழையக்கூடாது ;
அவ்வாறு நுழைந்தால்
அது குற்றச்
செயலாகக்
கருதப்படும் ;
அந்த குற்றச்
செயலுக்கு
தண்டனையாக
குற்றம் இழைத்தவர்
12 மாதங்கள்
வனத்தில்
பிரம்மச்சாரியாக
வசிக்க வேண்டும் ;
என்ற சட்டத்தை
எங்களுக்குள்
உருவாக்கிக்
கொண்டோம் ; "

"அந்த சட்டத்தின் படி
நாங்கள் வாழ்ந்து
கொண்டிருக்கும்
சூழ்நிலையில்
கவர்ந்து
செல்லப்பட்ட
அந்தணரின்
பசுக்களை
மீட்டு வர
வேண்டும் என்ற
காரணத்திற்காக ; 
என்னுடையை
கடமையை
நிறைவேற்ற
வேண்டும் என்ற
காரணத்திற்காக ;
ஆயுத சாலையில்
தர்மரும்
திரௌபதியும்
தனித்து இருக்கும்
போது என்னுடைய
ஆயுதங்களை
எடுப்பதற்காக ;
ஆயுத சாலைக்குள்
செல்ல
வேண்டியதாயிற்று ; "
இதனால் ,
சட்டத்தை மீறிய
குற்றத்திற்காக
நான் 12 மாதங்கள்
வனத்தில்
பிரம்மச்சாரியாக
வசிக்க 
வேண்டியதாயிற்று “

"அவ்வாறு நான்
12 மாதங்கள்
வனத்தில்
பிரம்மச்சாரியாக
வசிக்க வேண்டும்
என்ற காரணத்திற்காக
கங்கைக் கரையில்
தங்கி இருந்தேன் ;
அப்படி நான்
கங்கைக் கரையில்
தங்கி இருந்த
போது தான்
தாங்கள் என்னை
கடத்தி வந்தீர்கள் ; "

"உங்களுடைய
காதலை சொன்னீர்கள் ;
உங்களை என்னுடைய
மனைவியாக
ஏற்றுக் கொள்ளச்
சொன்னீர்கள் ; ""

"12 மாதங்கள்
பிரம்மச்சாரியாக
வனவாசம்
மேற்கொண்டிருக்கும்
நான் எப்படி
உங்களுடைய
காதலை ஏற்று............!
உங்களை எவ்வாறு
என்னுடைய
மனைவியாக
ஏற்றுக் கொள்ள
முடியும்…………………………….?"

உலூபி :
"நீங்கள் உங்களுக்குள் 
வகுத்துக் கொண்ட
சட்டத்தின்படி
நீங்கள் என்னை
மனைவியாக
ஏற்றுக் கொள்வதற்கு
அந்த சட்டத்தில்
எந்தவிதமான
தடையும் இருப்பதாக
எனக்குத்
தெரியவில்லையே!
நீங்கள் ஏற்றுக் கொண்ட
சட்டத்தின்படி
என்னை தாராளமாக
மனைவியாக
ஏற்றுக் கொள்ளலாம்!
என்பதற்கு அந்த
சட்டத்திலேயே வழி
இருக்கிறது”

அர்ஜுனன் :
(உலூபியின்
வார்த்தைகள்
அர்ஜுனனுக்கு
அதிர்ச்சியை
உண்டாக்கியது
சிறிது நேரம்
மௌனமாக இருந்த
அர்ஜுனன் பேச
ஆரம்பித்தான்)

“என்ன வழி
இருக்கிறது……………?”

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
------------21-11-2019
//////////////////////////////////////////