November 21, 2019

பரம்பொருள்-பதிவு-89


          பரம்பொருள்-பதிவு-89

அர்ஜுனன்:
"நான் குந்தி
தேவியின் மகன் ;
இந்திரபிரஸ்தத்தை
அரசாளும்
தர்மரின் தம்பி ;.
பஞ்சபாண்டவர்களில்
நானும் ஒருவன் ;
என்னுடைய பெயர்
அர்ஜுனன் ; "
       
"பஞ்ச பாண்டவர்கள்
ஐவரும் திரௌபதியை
திருமணம் செய்து
கொண்டோம் - எங்கள்
வாழ்க்கையில்
எந்தவிதமான
பிரச்சினையும் ஏற்பட்டு
விடக் கூடாது
என்பதற்காக,……………………?

"திரௌபதியும் 
திரௌபதியுடன்
குடும்பம் நடத்திக்
கொண்டிருக்கும்
பஞ்ச பாண்டவர்களில்
ஒருவரும் தனித்து
ஒரு அறையில்
இருக்கும் போது
பஞ்ச பாண்டவர்களில்
மற்றவர்கள் அந்த
அறைக்குள்
நுழையக்கூடாது ;
அவ்வாறு நுழைந்தால்
அது குற்றச்
செயலாகக்
கருதப்படும் ;
அந்த குற்றச்
செயலுக்கு
தண்டனையாக
குற்றம் இழைத்தவர்
12 மாதங்கள்
வனத்தில்
பிரம்மச்சாரியாக
வசிக்க வேண்டும் ;
என்ற சட்டத்தை
எங்களுக்குள்
உருவாக்கிக்
கொண்டோம் ; "

"அந்த சட்டத்தின் படி
நாங்கள் வாழ்ந்து
கொண்டிருக்கும்
சூழ்நிலையில்
கவர்ந்து
செல்லப்பட்ட
அந்தணரின்
பசுக்களை
மீட்டு வர
வேண்டும் என்ற
காரணத்திற்காக ; 
என்னுடையை
கடமையை
நிறைவேற்ற
வேண்டும் என்ற
காரணத்திற்காக ;
ஆயுத சாலையில்
தர்மரும்
திரௌபதியும்
தனித்து இருக்கும்
போது என்னுடைய
ஆயுதங்களை
எடுப்பதற்காக ;
ஆயுத சாலைக்குள்
செல்ல
வேண்டியதாயிற்று ; "
இதனால் ,
சட்டத்தை மீறிய
குற்றத்திற்காக
நான் 12 மாதங்கள்
வனத்தில்
பிரம்மச்சாரியாக
வசிக்க 
வேண்டியதாயிற்று “

"அவ்வாறு நான்
12 மாதங்கள்
வனத்தில்
பிரம்மச்சாரியாக
வசிக்க வேண்டும்
என்ற காரணத்திற்காக
கங்கைக் கரையில்
தங்கி இருந்தேன் ;
அப்படி நான்
கங்கைக் கரையில்
தங்கி இருந்த
போது தான்
தாங்கள் என்னை
கடத்தி வந்தீர்கள் ; "

"உங்களுடைய
காதலை சொன்னீர்கள் ;
உங்களை என்னுடைய
மனைவியாக
ஏற்றுக் கொள்ளச்
சொன்னீர்கள் ; ""

"12 மாதங்கள்
பிரம்மச்சாரியாக
வனவாசம்
மேற்கொண்டிருக்கும்
நான் எப்படி
உங்களுடைய
காதலை ஏற்று............!
உங்களை எவ்வாறு
என்னுடைய
மனைவியாக
ஏற்றுக் கொள்ள
முடியும்…………………………….?"

உலூபி :
"நீங்கள் உங்களுக்குள் 
வகுத்துக் கொண்ட
சட்டத்தின்படி
நீங்கள் என்னை
மனைவியாக
ஏற்றுக் கொள்வதற்கு
அந்த சட்டத்தில்
எந்தவிதமான
தடையும் இருப்பதாக
எனக்குத்
தெரியவில்லையே!
நீங்கள் ஏற்றுக் கொண்ட
சட்டத்தின்படி
என்னை தாராளமாக
மனைவியாக
ஏற்றுக் கொள்ளலாம்!
என்பதற்கு அந்த
சட்டத்திலேயே வழி
இருக்கிறது”

அர்ஜுனன் :
(உலூபியின்
வார்த்தைகள்
அர்ஜுனனுக்கு
அதிர்ச்சியை
உண்டாக்கியது
சிறிது நேரம்
மௌனமாக இருந்த
அர்ஜுனன் பேச
ஆரம்பித்தான்)

“என்ன வழி
இருக்கிறது……………?”

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
------------21-11-2019
//////////////////////////////////////////

No comments:

Post a Comment