February 06, 2020

பரம்பொருள்-பதிவு-126


         பரம்பொருள்-பதிவு-126

கிருஷ்ணன் :
“நான் சொல்வதை
பொறுமையாகக்
கேள் உலூபி !”

“போரில் வெற்றி
பெற வேண்டும்
என்பதற்காக
துரியோதனன்
களப்பலி
கொடுப்பதற்காக
தகுந்த நாளையும் ;
களப்பலியாக
கொடுப்பதற்கு
சரியான ஆளையும் ;
தெரிந்து கொள்ள
வேண்டும் என்பதற்காக
சோதிட மேதை
சகாதேவனை
சந்தித்தான் ; “

“சோதிட மேதையான
சகாதேவனும்
களப்பலி கொடுப்பதற்கு
தகுந்த நாளாக வருகின்ற
அமாவாசை நாளையும் ;
களப்பலியாக கொடுப்பதற்கு
உகந்த ஆட்களில் ஒருவனாக
அரவானையும்; குறித்துக்
கொடுத்து விட்டான் “

“அதனால் துரியோதனன்
அரவானை சந்தித்து
தான் போரில்
வெற்றி பெறுவதற்காக
வருகின்ற அமாவாசை
தினத்தன்று தனக்காக
களப்பலியாக வேண்டும்
என்று அரவானை கேட்க
அரவானும் வருகின்ற
அமாவாசை தினத்தன்று
துரியோதனனுக்காக
களப்பலியாக
சம்மதித்து விட்டான் “

உலூபி :
“அரவான் ஏன்
இவ்வாறு செய்தான் “

கிருஷ்ணன் :
“பொறு உலூபி பொறு “

“முதலில் நான்
சொல்வதை
முழுமையாகக் கேள் “

“துரியோதனனுக்காக
அரவான்
களப்பலியாகி
துரியோதனன்
குருஷேத்திரப் போரில்
வெற்றி பெற்று
விட்டான் என்றால்
வருங்காலத்தில்
உலகம் இருள்
மயமானதாகி விடும் ;
அதற்கு காரணமான
அரவானையும்
வசைபாடக் கூடிய
நிலை ஏற்படும் ; “

“ஆனால்,
பாண்டவர்களுக்காக
அரவான்
களப்பலியாகி
பாண்டவர்கள் போரில்
வெற்றி பெற்று விட்டால்
வருங்கால உலகம்
ஒளிமயமானதாக
இருக்கும் ;
அரவானை தெய்வமாக
வணங்கக் கூடிய
நிலை ஏற்படும் ;
என்ற விஷயங்களை
எடுத்துச் சொல்லி
வருகின்ற அமாவாசை
தினத்தன்று
துரியோதனன் அரவானை
களப்பலியாகக் கேட்டு
வரவில்லை என்றால்
பாண்டவர்களுக்காக
களப்பலியாகிறாயா
என்று அரவானை
நான் கேட்டதற்கு
அரவானும் சரி
என்று சம்மதம்
தெரிவித்து விட்டான் “

“வருகின்ற அமாவாசை
தினத்தன்று
துரியோதனன்
களப்பலியாக
அரவானைக் கேட்டு
வரவில்லை என்றால்
பாண்டவர்கள் சார்பாக
அரவானை
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
உன்னிடம் ஒப்புதல்
பெறவே வந்தேன் “

உலூபி :
“நாட்டை ஆளும்
மன்னனின் மகன்
வந்து கேட்டார்
என்ற காரணத்தினால்
களப்பலியாவதற்கு
அரவான் சரி
என்று சொன்னது
தவறானது தான் “

“நடந்து விட்ட தவறை
நீங்கள் சரி செய்யாமல்
மேலும் ஒரு தவறை
நீங்களும் சேர்ந்து
செய்து இருக்கிறீர்கள் “

“அறியாதவர்கள் செய்த
தவறை அனைத்தும்
அறிந்த நீங்கள்
திருத்தியிருக்க
வேண்டும்  ;
ஆனால் நீங்களும்
அவர்கள் செய்த
தவறை திருத்தாமல்
அவர்களுடன்
சேர்ந்து நீங்களும்
தவறை செய்து
இருக்கிறீர்கள் ;”

“தவறை திருத்த
வேண்டிய - நீங்களே
தவறு செய்தால்
தவறை திருத்துவது யார் “

கிருஷ்ணன்  :
“தவறு செய்யத்
தூண்டியவன்
துரியோதனன் “

“தவறு செய்தவன்
அரவான் “

“தவறு நேர்ந்து
விடக்கூடாது
என்பதற்காக அதை
மாற்றி அமைக்க
முயற்சி செய்தவன் நான் “

“தவறு செய்த
துரியோதனன் , அரவான்
ஆகியோர்களை விட்டு
விட்டு நல்லது
செய்வதற்கு முயற்சி
செய்த என்னை
தவறு செய்தவன்
என்கிறாய் “

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
------------ 06-02-2020
//////////////////////////////////////////


February 05, 2020

பரம்பொருள்-பதிவு-125


           பரம்பொருள்-பதிவு-125

(கிருஷ்ணன் உலூபியை
சந்திக்கச் செல்கிறார்.
கிருஷ்ணனைக் கண்ட
உலூபி கிருஷ்ணனின்
கால்களில் விழுகிறாள்)

உலூபி :
"என்னை ஆசிர்வதியுங்கள்
அண்ணா ! "

கிருஷ்ணன் :
"அரவானின் புகழ்
இந்த உலகத்தில்
இருக்கும் வரைக்கும்
உன்னுடைய புகழும்
இந்த உலகத்தில்
இருக்கும் ;
நீடுழி வாழ்க !
என் அன்புத் தங்கை
உலூபி ! "

(கிருஷ்ணன் உலூபியை
ஆசிர்வதிக்கிறார்)

"எழுந்திரு உலூபி "

(உலூபி எழுந்திருக்கிறாள்)

உலூபி :
"நீங்கள் வாழ்த்தியதின்
அர்த்தம் எனக்குப்
புரியவில்லை அண்ணா ! "

கிருஷ்ணன் :
“அரவானுக்குக்
கிடைக்கக்கூடிய புகழ்
இந்த உலகம் என்று
வரை இருக்குமோ
அன்று வரை இருக்கும் ;
அதைப்போல ,
அரவானின் புகழ்
இந்த உலகத்தில்
இருக்கும் வரை
உன்னுடைய
புகழும் இருக்கும் ;”

உலூபி :
“இந்த உலகம்
இருக்கும் வரை
அரவானின் புகழ் இருக்க
வேண்டுமென்றால்  
யாரும் செய்ய முடியாத
மிகப்பெரிய செயலை
அல்லவா அரவான்
செய்ய வேண்டும் ? “

கிருஷ்ணன் :
“ஆமாம் “

“யாரும் செய்ய முடியாத
மிகப்பெரிய செயலைத்
தான் அரவான்
செய்யப் போகிறான் “

“அதனால் தான் நானே
அரவானைப் பார்த்து
விட்டு வந்தேன் “

உலூபி :
“அரவானைப் பார்த்தீர்களா ?”

கிருஷ்ணன்  :
“அரவானை மட்டுமல்ல
அர்ஜுனனையும்
பார்த்து விட்டுத்
தான் வந்திருக்கிறேன் “

உலூபி :
“அனைவரும் நலமாக
இருக்கிறார்களா அண்ணா !”

கிருஷ்ணன் :
“அனைவரும் நலம் “

உலூபி :
“தாங்கள் என்னைக்
காண வந்ததின்
காரணத்தை நான் தெரிந்து
கொள்ளலாமா அண்ணா ! “

கிருஷ்ணன் :
“நான் ஏற்கனவே எடுத்த
முடிவு ஒன்றிற்கு ஒப்புதல்
பெறுவதற்காக உன்னைக்
காண வந்தேன் “

உலூபி :
“அண்ணா நீங்கள்
எந்த முடிவு எடுத்தாலும்
அந்த முடிவு சரியான
முடிவாகத் தானே இருக்கும் “

“உங்கள் முடிவு
எப்போதும் தவறான
முடிவாக இருந்ததில்லையே !”

“நீங்கள் எப்போதும்
தவறான முடிவை
எடுத்ததே இல்லையே “

“உங்கள் முடிவை தவறு
என்று சொல்வதற்கு
தகுதி படைத்தவர்கள்
இந்த உலகத்தில்
யார் இருக்கிறார்கள் “

“நீங்கள் எடுத்த முடிவிற்கு
ஒப்புதல் அளிக்கும்
அளவிற்கு நான்
ஒன்றும் பெரிய ஆள்
இல்லையே அண்ணா ! “

கிருஷ்ணன் :
“முடிவு என்னுடையது
என்றாலும் அதை
ஏற்றுக் கொண்டு
ஒப்புதல் அளித்தது
உன் மகன் அரவான் “

“உன்னுடைய ஒப்புதலும்
தேவைப்படுகிறது என்ற
காரணத்தினால் தான்
உன்னுடைய ஒப்புதலைப்
பெறுவதற்காக
உன்னைக் காண வந்தேன் “

உலூபி :
“என்ன ?
என் மகனா ?
என் மகன் அரவானா ? “

“ஒப்புதல் அளித்தானா ?”

“உங்களுடைய முடிவுக்கு
ஒப்புதல் அளித்தானா ?”

“எந்த முடிவுக்கு
ஒப்புதல் அளித்தான் “

“எந்த முடிவைச் சொல்லி
அரவானிடம் ஒப்புதல்
பெற்றீர்கள்“

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
------------ 05-02-2020
//////////////////////////////////////////

February 04, 2020

பரம்பொருள்-பதிவு-124


           பரம்பொருள்-பதிவு-124

கிருஷ்ணன்  :
"உன்னுடைய
ஒப்புதலை மட்டுமே
வைத்துக் கொண்டு
களப்பலி கொடுக்க
முடியாது என்பதையும் ;
அனைவருடைய
ஒப்புதலையும்
பெற்று தான்
களப்பலி கொடுக்க
வேண்டும் என்பதையும் ;
இப்போது நீ தெளிவாக
புரிந்து கொண்டிருப்பாய் "

அரவான் :
"நன்றாகப் புரிகிறது ;
ஆனால் நீங்கள் செய்யும்
செயல் தான் எனக்குப்
புரியவில்லை “

கிருஷ்ணன்  :
“எதைச் சொல்கிறாய்
அரவான்…………………………? ”

அரவான் :
“நான் பாண்டவர்களுக்காக
களப்பலியானால் - நீங்கள்
அனைவரிடமும்
ஒப்புதல் பெறலாம் ;"
ஆனால் ,
வருகின்ற அமாவாசை
தினத்தன்று பெரிய தந்தை
துரியோதனன் அவர்கள்
என்னை களப்பலியாகக்
கேட்டு வரவில்லை
என்றால் தானே
நான் பாண்டவர்களுக்காக
களப்பலி ஆக முடியும் ?"

"அப்படி இருக்கும் போது
அனைவரிடமும் ஒப்புதல்
பெற வேண்டியது
பெரிய தந்தை
துரியோதனன்
அவர்கள் தானே…………….?
அவரே யாரிடமும் சென்று
ஒப்புதல் பெறாத போது
நீங்கள் மட்டும் ஏன்
அனைவரின்
ஒப்புதலையும் பெற
வேண்டும் என்று
இப்போதே முயற்சி
செய்து கொண்டிருக்கிறீர்கள் "

கிருஷ்ணன் :
"துரியோதனனுக்கு
களப்பலி
கொடுப்பதற்கென்று
உள்ள விதிமுறைகள்
பற்றி தெரியுமா அல்லது
தெரியாதா என்பது
பற்றி எல்லாம்
எனக்குத் தெரியாது
ஆனால்,
களப்பலி
கொடுப்பதற்கென்று
உள்ள விதிமுறைகள்
பற்றி எனக்குத் தெரியும்
என்ற காரணத்தினால் தான்
நான் அனைவரிடமும்
இப்போதே சென்று
ஒப்புதல் வாங்கி
வைத்துக் கொள்ள முயற்சி
செய்து கொண்டிருக்கிறேன் "

"வருகின்ற அமாவாசை
தினத்தன்று
துரியோதனன் உன்னை
களப்பலியாகக் கேட்டு
வரவில்லையென்றால்
பாண்டவர்களுக்காக - நீ
களப்பலியாகும் போது
அந்த சமயத்தில் சென்று
நான் அனைவரிடமும்
ஒப்புதல் பெற
முடியாது அல்லவா ?
அதனால் தான் - நான்
இப்போதே அனைவரிடமும்
சென்று ஒப்புதல் வாங்கி
வைத்துக் கொள்ள முயற்சி
செய்து கொண்டிருக்கிறேன்"

அரவான்  :
"பரந்தாமா நீங்கள்
எதைப் பற்றி
சிந்திக்கிறீர்கள் ?
எதைப் பற்றி
பேசுகிறீர்கள் ?
எதை செயல்படுத்தப்
போகிறீர்கள் ? - என்பது
புரியாத புதிராகவே
இருக்கிறது "

"புரிந்து கொள்ள
முயற்சி செய்கிறேன்
என்னால் புரிந்து
கொள்ளவே முடியவில்லை "

"வருங்காலத்தில் என்ன
நடக்கும் என்பதை
என்னால் கணிக்கவே
முடியவில்லை "

கிருஷ்ணன் :
"அரவான் வருங்காலத்தில்
என்ன நடக்கும் என்பதை
கணிக்க முயற்சி செய்தால்
நிகழ்காலத்தை
இழந்து விடுவாய் "

"நிகழ்காலத்தில் நிம்மதி
இழக்காமல் இருக்க
வேண்டுமானால்
வருங்காலத்தைப் பற்றி  
யோசிக்காதே ! ""

"எது எப்போது
எப்படி நடக்க வேண்டுமோ ?
அது அப்போது
அப்படி நடக்கும்
என்பதை மட்டும்
நினைவில் கொள் "

"வருகின்ற அமாவாசை
தினத்தன்று துரியோதனன்
உன்னை களப்பலியாகக்
கேட்டு வரவில்லை
என்றால்
பாண்டவர்களுக்காக
உன்னை களப்பலியாகக்
கொடுப்பதற்காக
உன்னுடைய
தாய் தந்தை மற்றும்
இரத்த சம்பந்தம்
உடையவர்களுடைய
ஒப்புதலை பெறுவதற்காக
அவர்களை
சந்திக்கச் செல்கிறேன்

அரவான் :
"முதலில் யாரை
சந்திக்கப் போகிறீர்கள் "

கிருஷ்ணன் :
"வேறு யார் உன்
தாய் உலூபியே தான் ! "

"அனைவருடைய
ஒப்புதலையும் பெற்ற
பிறகு மீண்டும் வந்து
உன்னை நான் சந்திக்கிறேன்
அப்படி சந்திக்கும் போது
நீ ஏதேனும் என்னிடம்
கேட்க விரும்பினால்
அதை கேட்கலாம் "

"இப்போது நான்
உன்னிடமிருந்து
விடை பெறுகிறேன் ! "

"வருகிறேன்
அரவான் வருகிறேன் "

(கிருஷ்ணன்
அரவானிடம் இருந்து
விடை பெற்றுச்
சென்றார் )

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
------------ 04-02-2020
//////////////////////////////////////////