February 27, 2020

பரம்பொருள்-பதிவு-141


              பரம்பொருள்-பதிவு-141

உலூபி :
“பரவாயில்லை
நீங்கள் சொல்லலாம்”

சகாதேவன் :
“நான் சொல்வதால்
எனக்கு எந்த
பிரச்சினையும்
ஏற்படப் போவதில்லை ;
ஆனால், உங்களுக்கு
எந்த பிரச்சினையும்
ஏற்பட்டு விடக்கூடாது
என்பதற்காக யோசித்தேன் “

“நீங்களே ! கேட்கும் போது
சொல்லவேண்டியது
என்னுடைய கடமை
சொல்கிறேன் கேளுங்கள் “

“ஒருவர் இந்த உலகத்தை
கட்டி காப்பாற்றிக்
கொண்டிருக்கும்
பரந்தாமன் கிருஷ்ணன் “

“இன்னொருவர்
என்னுடைய அண்ணனும்
உங்களுடைய
கணவருமாகிய அர்ஜுனன் “

உலூபி  :
(ஐயோ ! என்று
சொல்லிக் கொண்டே
தன்னுடைய இரண்டு
காதுகளையும் மூடிக்
கொண்டாள் உலூபி)

சகாதேவன்  :
“நான் சொன்னேன் அல்லவா
நீங்கள் காதை மூடிக்
கொள்வீர்கள் என்று?”

உலூபி  :
( உலூபி தன்னுடைய
காதுகளில் இருந்து
தன்னுடைய இரண்டு
கைகளையும் எடுத்து
விட்டு சகாதேவனைப்
பார்த்தாள் - சகாதேவன்
பேசுவது எதுவும்
உலூபியின் காதுகளில்
விழவே இல்லை ;
அவளுடைய காதுகளுக்கு
எந்தவிதமான சத்தமும்
விழவே இல்லை ;

உலூபி எதுவும் சொல்ல
முடியாமல் மௌனமாக
இருந்தாள் - அவளை
அறியாமல் அவள்
கண்களிலிருந்து
கண்ணீர் வந்தது - அதைத்
துடைத்துக் கொண்டாள் )

சகாதேவன்  :
“நீங்கள் உங்களுடைய
வாயை மூடிக் கொண்டிருந்தால்
காதுகளை மூட வேண்டிய
அவசியம் உங்களுக்கு
ஏற்பட்டிருக்காது “

“நீங்கள் உங்களுடைய
வாயை மூடவில்லை
அதனால் உங்களுடைய
காதுகளை மூட வேண்டிய
அவசியம் ஏற்பட்டு விட்டது. “

தர்மர்  :
“சகாதேவா…………………….?”

சகாதேவன் :
“என்ன அண்ணா ? “

தர்மர்  :
“உன் முன்னால் நிற்பது
உன்னுடைய அண்ணி
என்பதை உணர்ந்து கொண்டு
வார்த்தையை அளந்து பேசு “

“மகனைப் பற்றிய கவலையில்
இருக்கும் ஒரு தாயிடம்
பேசிக் கொண்டிருக்கிறோம்
என்பதை உணர்ந்து
கொண்டு பேசு “

சகாதேவன் :
“உண்மையைத் தானே
அண்ணா பேசினேன் “

தர்மர் :
“உண்மை எல்லா இடங்களிலும்
இனிப்பாக இருக்காது ;
சில இடங்களில் உண்மை
கசப்பாகத் தான் இருக்கும் ;
என்பதை உணர்ந்து
கொண்டு பேசு“

“நீ பேசும் உண்மைகள்
தாய்ப்பாசத்தால்
வாடிப்போயிருக்கும்
ஒரு தாயின் இதயத்தை
காயப்படுத்துவது போல்
இருக்கக் கூடாது “

“அமைதியாக பேசு”

“அதே நேரத்தில்
நிதானமாகப் பேசு”

சகாதேவன்  :
“அப்படியே ஆகட்டும்
அண்ணா ! “

உலூபி :
(சகாதேவனைப் பார்த்து
உலூபி பேசத் தொடங்கினாள்)

“நீங்கள் என்ன
நினைக்கிறீர்களோ-அதை
தாராளமாகப் பேசலாம் ;
நான் எதையும் தவறாக
எடுத்துக் கொள்ள மாட்டேன்  
மிகப்பெரிய இடியையே
தாங்கிக் கொண்டிருக்கும்
என்னுடைய இதயம்
உங்களுடைய சூடான
வார்த்தைகளையா தாங்காது “

சகாதேவன் :
“நான் பேசிய எந்த
வார்த்தையாவது
உங்களுடைய மனதை
புண்படுத்தி இருந்தால்
அதற்காக நான் மன்னிப்பு
கேட்டுக் கொள்கிறேன் “

உலூபி :
“உங்களை மன்னிக்கும்
அளவிற்கு நீங்கள் - எந்த
தவறான சொல்லையும்
சொல்லவில்லை ;
காலம் என்ன சொல்ல
நினைத்ததோ - அதைத்
தான் நீங்கள் சொன்னீர்கள் ;
காலம் செய்து கொண்டிருக்கும்
தவறுக்கு உங்களை எப்படி
குற்றம் சொல்ல முடியும் “

“எனக்கு சோதிட
சாஸ்திரத்தில் ஒரு சந்தேகம்
இருக்கிறது - அதை
உங்களால் தீர்க்க முடியுமா ? “

சகாதேவன் :
“என்னால் முடிந்த அளவு
உங்களுடைய சந்தேகத்தை
தீர்க்கிறேன் கேளுங்கள்
உங்கள் சந்தேகம் என்ன ?”


----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 27-02-2020
//////////////////////////////////////////

February 26, 2020

பரம்பொருள்-பதிவு-140


             பரம்பொருள்-பதிவு-140

சகாதேவன் :
“என்னால்
ஏற்பட்டதல்ல
காலத்தால்
ஏற்பட்டது”

உலூபி :
“தவறை நீங்கள்
செய்து விட்டு
பழியை ஏன்
காலத்தின் மேல்
போடுகிறீர்கள் ? ”

சகாதேவன் :
“இந்த உலகத்தில்
நடைபெறும் எந்த
ஒரு செயலும்
காலத்திற்கு
உட்பட்டது தான் ;
காலத்தை மீறி
எந்த ஒரு செயலும்
நடைபெறாது ; “

“நேற்று நடைபெற்றது ;
இன்று நடைபெற்றுக்
கொண்டிருப்பது ;
நாளை
நடைபெறப்போவது ;
அனைத்தும்
காலத்திற்கு
உட்பட்டது தான் ;  

“காலத்தை மீறி
எதுவும் நடைபெறாது”

உலூபி :
“அரவானின்
பெயரை
சொல்லாமல்
நீங்கள்
மறைத்திருக்கலாமே ?”

சகாதேவன் :
“அரவானின் பெயரை
மறைப்பதால்
ஒரு பயனும்
ஏற்படப்
போவதில்லை”

“நான்
சொல்லாவிட்டாலும்
அரவானின் பெயரை
அனைவரும்
தெரிந்து
கொள்ளத்தான்
போகிறார்கள் ”

உலூபி :
“அப்படி என்றால்
சோதிட
சாஸ்திரத்தைப்
பயன்படுத்தி
அரவானைக்
களப்பலியாகக்
கொடுக்கப்போவதை
தடுத்திருக்கலாம்
அல்லவா?“

சகாதேவன் :
“சோதிட
சாஸ்திரத்தின்படி
இந்த உலகத்தில்
நடைபெறும் எந்த
ஒரு செயலையும்
தடுத்து நிறுத்த
முடியாது - அந்த
செயலை
மாற்றியமைக்கத்
தான் முடியும் “

“பாண்டவர்கள்
சார்பாக
அரவானைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
செய்யப்படும்
செயல்கள்
அனைத்தும்
நடக்கவிருக்கும்
செயலை மாற்றி
அமைப்பதற்கு
செய்யப்படும்
முயற்சிகள் தான்”

“அதனால் தான்
நான் ஒப்புதல்
அளித்தேன்”

உலூபி :
“களப்பலியாகக்
கொடுப்பதற்கு
அரவானைத் தவிர
வேறு யாரும்
இந்த உலகத்தில்
இல்லையா?

சகாதேவன் :
“இரண்டு பேர்
இருக்கிறார்கள்”

உலூபி :
“கெளரவர்கள் ஏன்
அவர்களுடைய
சம்மதத்தை பெற
முயற்சிக்கவில்லை?”

சகாதேவன் :
“அவர்களை
நெருங்க
முடியாது
என்பதால்”

உலூபி :
“அப்படியென்றால்
பாண்டவர்கள் ஏன்
அவர்களுடைய
சம்மதத்தைப் பெற
முயற்சிக்கவில்லை?”

சகாதேவன் :
“அவர்கள்
நெருக்கமானவர்கள்
என்பதால்”

உலூபி :
“யார் அவர்கள்”

சகாதேவன் :
“சில கேள்விக்குரிய
விடையை
தெரிந்து கொள்ள
முயற்சி
செய்யக் கூடாது” .

“சில விஷயங்களை
தெரிந்து
கொள்ளாமல்
இருப்பதே நல்லது”  .

“நீங்கள் கேட்ட
கேள்விக்கு நான்
பதிலை சொன்னால்
உங்களுடைய
காதுகளை நீங்கள்
மூடிக் கொள்வீர்கள்”.

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 26-02-2020
//////////////////////////////////////////

February 25, 2020

பரம்பொருள்-பதிவு-139


           பரம்பொருள்-பதிவு-139

சகாதேவன் :
" களப்பலியாகக்
கொடுப்பதற்கு
தகுதி உடையவன்
அரவான்
என்பதையும்  ;
களப்பலி
கொடுப்பதற்கு
உகந்த நாள்
வருகின்ற
அமாவாசை
என்பதையும் ;
குறித்துக்
கொடுத்தேன் ; "

"இதில் தவறு
எதுவும்
இருப்பதாக
எனக்குத்
தெரியவில்லையே ! "

"நான் சொன்னதில்
அரவானைப்
பற்றிய
தனிப்பட்ட
விஷயங்கள்
எதுவும்
இல்லையே ! "

"பொதுவான
விஷயங்கள்
தானே
இருக்கிறது ! "

"சோதிட
சாஸ்திரத்தை
மீறி எந்த ஒரு
சொல்லையும்  
நான் சொல்லவே
இல்லையே  ! "

உலூபி :
"அரவானைப் பற்றி
நீங்கள் சொன்னது
இன்னொருவருடைய
தனிப்பட்ட
விஷயம்
இல்லையா ? "

சகாதேவன் :
"அரவான்
எதிர்காலத்தில்
எப்படி இருப்பான்  ?
அரவானுடைய
எதிர்கால
வாழ்க்கை
எப்படி இருக்கும் ?
என்ற கேள்வி
எழுப்பப்பட்டு
அதற்கு நான்
பதில் சொல்லி
இருந்தால் - அது
அரவானுடைய
தனிப்பட்ட
விஷயங்களை
சொன்னதாக
இருக்கும் "

"அப்போது தான்
நான் சோதிட
சாஸ்திரத்தை
மீறியவனாவேன் "

"ஆனால் நான்
களப்பலி
கொடுப்பதற்கு
தகுந்த ஆள்
அரவான்
என்பதையும்  ;
வருகின்ற
அமாவாசை
தினத்தன்று
களப்பலி
கொடுப்பதற்கு
உகந்த நாள்
என்பதையும்  ;
குறித்துக்
கொடுத்தேன் ;"

"இது எப்படி
அரவானுடைய
தனிப்பட்ட
விஷயங்களை
நான் சொன்னதாக
எடுத்துக் கொள்ள
முடியும் "

"அரவானைப்
பற்றிய
பொதுவான
விஷயங்களைத்
தானே
சொல்லியிருக்கிறேன் "

"இது எப்படி
தவறாகும்  "

"நான் தவறு
எதுவும்
செய்யவுமில்லை "

"சோதிட
சாஸ்திரத்தை
மீறவும் இல்லை "

"எந்த ரகசியத்தை
சொல்ல வேண்டும்
எந்த ரகசியத்தை
சொல்லக்கூடாது
என்று
சோதிட சாஸ்திரம்
வகுத்து வைத்த
விதியின் படி
தான் சொன்னேன் ;
சோதிட சாஸ்திர
விதிகளுக்குக்
கட்டுப்பட்டுத்தான்
சொன்னேன் ; "

"சோதிட
சாஸ்திரத்தை
மீறி நான்
எந்த ஒரு
சொல்லையும்
சொல்லவேயில்லை  !

உலூபி :
"ஆனால்
உங்களுடைய
செயலால்
எத்தகைய
விளைவுகள்
ஏற்பட்டிருக்கிறது
என்பதைப்
பார்த்தீர்களா ? "

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 25-02-2020
//////////////////////////////////////////