March 26, 2020

பரம்பொருள்-பதிவு-162


              ஜபம்-பதிவு-410
            (பரம்பொருள்-162)

(மாளிகைக்கு வெளியே
நின்று இயற்கைக்
காற்றை சுவாசித்துக்
கொண்டிருந்த அரவான்-அந்த
கும்மிருட்டில் தன்னுடைய
மாளிகை நோக்கி யாரோ
ஒருவர் நடந்து வந்து
கொண்டிருக்கிறார்
என்பதை பார்த்த அரவான்
அவர் யார் என்று
தெரியாததால் அவர் யார்
என்று தெரிந்து கொள்ளும்
பொருட்டு தன்னை நோக்கி
வந்து கொண்டிருப்பவரை
அணுகி அவரிடம்
பேசத் தொடங்கினார்)

அரவான் :
“பரந்தாமன் கிருஷ்ணன் தானே
உங்களை அனுப்பி வைத்தார்”

திருநங்கை  :
“யாரும் என்னை அனுப்பி
வைக்கவும் இல்லை ;
யாரும் என்னை அனுப்பி
வைக்கவும் முடியாது ;
நானே வந்தால் தான்
உண்டு - அதனால் தான்
நானே இங்கு வந்தேன்”

அரவான் :
“அப்படி என்றால் நீங்கள்”

திருநங்கை :
“நான் தான் கிருஷ்ணன்”

அரவான் :
“என்னது நீங்கள் கிருஷ்ணனா”

திருநங்கை :
“ஆமாம் நான் தான்
கிருஷ்ணன் “

அரவான் :
“என்ன சொல்கிறீர்கள்?”

திருநங்கை :
“நான் தான்
கிருஷ்ணன் என்றேன்”

அரவான்  :
“ஏன் அவ்வாறு சொல்கிறீர்கள்”

திருநங்கை :
“இந்த உலகத்தில் உள்ள
அனைத்து பொருட்களிலும்
அனைத்து உயிர்களிலும்
ஊடுருவி நீக்கமற
நிறைந்திருக்கக்கூடிய
கிருஷ்ணன் என் உள்ளேயும்
நிரம்பி இருக்கிறார்”

“அப்படி என்றால்
அவர் தானே நான் ;
நான் தானே அவர் ; ”

“அதனால் நான் தான்
கிருஷ்ணன் என்றேன்”

அரவான் :
“நீங்கள் அழகாக
இருக்கிறீர்கள் என்று தான்
நினைத்தேன் - ஆனால்
உங்களுக்கு அழகாகவும்
பேசத் தெரியும் என்பதை
நீங்கள் பேசுவதிலிருந்து
தெரிந்து கொண்டேன் “

“உங்களை அனுப்பி
வைத்ததற்கான காரணத்தை
உங்களுக்கு சொன்னார்களா ?“

“உங்களை இங்கு அனுப்பி
வைத்ததற்கான காரணம்
உங்களுக்கு தெரியுமா?”

திருநங்கை :
“யாரும் என்னை
அனுப்பி வைக்கவில்லை
நானே தான் வந்தேன் ;
யார் பேசும் பேச்சைக்
கேட்டும் நான் முடிவு
எடுப்பதில்லை - எனக்கு
சரி என்று பட்டால்
மட்டுமே நான் அந்த
செயலை செய்வேன் ;
எனக்கு சரி என்று
பட்டது அதனால் தான்
நானே நேரில் வந்தேன் “

அரவான் :
“அப்படி என்றால்
யாரும் உங்களை
கட்டாயப்படுத்தவில்லையே”

திருநங்கை :
“யாரும் என்னை
கட்டாயப்படுத்த முடியாது ;
நல்லவர்கள்
எங்கிருந்தாலும்
அவர்கள் செய்யக்கூடிய
நல்லதுக்கு நான்
எப்போதும் துணையாக
இருந்திருக்கிறேன் ;”

“உங்களையே
அர்ப்பணித்து இந்த
உலகத்திற்காக - நீங்கள்
செய்யப்போகும் நல்ல
செயலுக்காக - நான்
என்னுடைய வாழ்க்கையையே
உங்களுக்காக அர்ப்பணிக்க
வந்திருக்கிறேன் - உங்களுக்கு
துணையாக இருக்க
வந்திருக்கிறேன்”

அரவான்  :
“அப்படி என்றால்
அனைத்து உண்மைகளும்
தெரிந்து தான் இங்கு
வந்திருக்கிறீர்கள்”

திருநங்கை :
“உண்மை தெரியவில்லை
என்றால் நான் வந்தே
இருக்க மாட்டேன் உண்மை
எனக்கு தெரிந்த காரணத்தினால்
தான் நானே வந்தேன் “

அரவான் :
“அழகாக இருக்கிறீர்கள்
அறிவுபூர்வமாக பேசுகிறீர்கள்
உண்மையை உணர்ந்து
இருக்கிறீர்கள் - உங்களை
என்னுடைய இல்லறத்
துணைவியாக ஏற்றுக்
கொள்ள விரும்புகிறேன் ;
உங்களுக்கு விருப்பமா ?
உங்களுடைய
சம்மதத்திற்காகத் தான்
காத்துக் கொண்டிருக்கிறேன்
என்ன சொல்கிறீர்கள் ?“

திருநங்கை :
“எனக்கு சம்மதம் இல்லை”

அரவான் :
“என்ன சம்மதம் இல்லையா”

திருநங்கை :
“ஆமாம் எனக்கு சம்மதம்
இல்லை - நீங்கள் என்னை
மரியாதையுடன் அழைப்பதில்
எனக்கு சம்மதம் இல்லை “

அரவான் :
“வேறு எப்படி உங்களை
நான் அழைப்பது “

திருநங்கை :
“நீ! வா! போ! என்று
என்னை ஒருமையில்
அழையுங்கள்  

அரவான் :
“அப்புறம்”

திருநங்கை :
“கண்ணே! முத்தே! மணியே!
என்று அழையுங்கள் “

அரவான் :
“அவ்வளவு தானா அல்லது
இன்னும் ஏதாவது இருக்கிறதா “

திருநங்கை :
“உங்களுக்கு எப்படி
பிடித்திருக்கிறதோ ?
அப்படியே அழையுங்கள்”

அரவான் :
“அப்படி நான் உங்களை
அழைக்க வேண்டும்
என்றால் நீங்கள் எனக்கு
சொந்தமாக வேண்டாமா?”

திருநங்கை :
“நான் உங்களுக்கு மட்டுமே
சொந்தமாக இருப்பதற்காகத்
தான் வந்திருக்கிறேன் “

அரவான் :
“நான் உங்களுக்கு
சொந்தமாகவும் நீங்கள்
எனக்கு சொந்தமாகவும்
இருக்க வேண்டும் என்றால்
நாம் இருவரும் திருமணம்
செய்து கொள்ள வேண்டும் “

திருநங்கை  :
“நான் அதற்காகத்
தான் வந்திருக்கிறேன்  ;
நான் அதற்காகத்
தான் காத்திருக்கிறேன் ;”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 26-03-2020
//////////////////////////////////////////
/////////////////////////////////////////////
அரவானை திருமணம்
செய்வதற்காக சென்ற
திருநங்கையின் படம்
தங்கள் பார்வைக்காக
///////////////////////////////////////////////// 



March 25, 2020

பரம்பொருள்-பதிவு-161


              ஜபம்-பதிவு-409
            (பரம்பொருள்-161)

(கிருஷ்ணன் மனதிற்குள்
சிந்தனை செய்து
கொண்டிருந்தார்)

“இனியும் நான் கால
தாமதம் செய்து
கொண்டிருக்கக் கூடாது ; “

“நான் செயல்பட வேண்டிய
நேரம் நெருங்கி விட்டது;”

“நான் ஆணிலிருந்து
பெண்ணாக மாற
வேண்டிய தருணம்
ஆரம்பமாகி விட்டது ;
என்று கிருஷ்ணன்
நினைத்துக் கொண்டிருக்கும்
நேரத்திலேயே
கிருஷ்ணனின் உடலிலும் ;
உணர்விலும் ;
மாற்றங்கள் ஏற்படத்
தொடங்கி விட்டது “

“கிருஷ்ணன் கொஞ்சம்
கொஞ்சமாக பெண்ணாக
மாறிக் கொண்டு இருந்தார்”

“ஆணிலிருந்து பெண்ணாக
படிப்படியாக மாறிக்
கொண்டு இருந்தார்”

“இந்த உலகத்தில்
தோன்றுபவை எல்லாம்
இரண்டு நிலைகளில்
தோன்றுகிறது ;
ஒன்று பிறப்பினால்
தோன்றுகிறது ;
மற்றொன்று
மாற்றத்தினால்
தோன்றுகிறது ; “

“பிறப்பிற்கும் மாற்றத்திற்கும்
வேறுபாடு இருக்கிறது”

“பிறப்பது என்பது
புதிதாகத் தோன்றுவது ;
மாறுவது என்பது பிறந்தது
வளரும் போது இடையில்
ஏற்படக்கூடிய
மாற்றத்தினால் தோன்றுவது ;

“ஆண் இனம் மற்றும்
பெண் இனம் ஆகிய
இரண்டு இனங்களும்
பிறப்பதின் மூலம்
தோன்றுகிறது ;
திருநங்கைகள் இனம்
மாற்றத்தின் மூலம்
தோன்றுகிறது 

“ஒரு விதையிலிருந்து
செடி முளைக்கிறது
இது பிறப்பின்
மூலம் தோன்றுகிறது ;
பிறந்த செடியில்
பூவானது காயாகிறது,
காயானது கனியாகிறது
காய், கனி ஆகியவை
மாற்றத்தின் மூலம்
தோன்றுகிறது ; “

“ஒரு ஆண் குழந்தை
அல்லது
பெண் குழந்தை - தாயின்
கருவறையிலிருந்து
வெளியே வந்து பிறந்தால்
அது பிறப்பினால்
தோன்றியது என்கிறோம்  

“பிறந்த அதே ஆண்
குழந்தை வளர்ந்து
ஒரு குறிப்பிட்ட பருவம்
அடைந்தவுடன் அந்த
ஆணின் உடலில்
பெண்ணுக்குரிய
மாற்றங்கள் ஏற்படத்
தொடங்கி அதன்
விளைவாக அந்த
ஆண் பெண்ணாக
அதாவது திருநங்கையாக
மாற்றம் அடைந்தால்
அதை மாற்றத்தினால்
தோன்றியது என்கிறோம் “

“பிறந்த ஆண் குழந்தைக்கு
நான் ஆண் குழந்தை
பிறந்திருக்கிறேன்
என்று தெரியாது ;
அதைப்போல பிறந்த
பெண் குழந்தைக்கு
நான் பெண் குழந்தை
பிறந்திருக்கிறேன்
என்று தெரியாது-ஆனால்
திருநங்கையாக மாற்றம்
அடைந்த திருநங்கைகளுக்கு
தாங்கள் எப்படி
திருநங்கைகளாக மாறினோம்
என்பது தெரியும் “

“ஆண் இனத்திற்கும்
பெண் இனத்திற்கும்
தாங்கள் எப்படி
தோன்றினோம் என்று
சொல்ல முடிவதில்லை ;
ஆனால் திருநங்கை
இனத்திற்கு தாங்கள்
எப்படி தோன்றினோம்
என்று சொல்ல முடியும் ;”

“ஆண் இனத்திற்கும்
பெண் இனத்திற்கும்
தாங்கள் பிறக்கும்போது
தங்களுடைய உடலில்
ஏற்படக்கூடிய மாற்றங்களை
உணர்ந்து கொள்ள முடியாது”

“ஆனால் திருநங்கைகள்
தாங்கள் ஆணிலிருந்து
பெண்ணாக மாற்றம்
அடையும் போது
தங்களுடைய உடலுக்குள்
ஏற்படக்கூடிய மாற்றங்களை
உணர்ந்து கொள்ள முடியும்  

“தாங்கள் பிறக்கும் போது
தங்களுடைய உடலுக்குள்
ஏற்படக்கூடிய
உணர்வுகள் தெரியாமல்
பிறந்து இந்த
உலகத்திற்கு வரும்
ஆண் இனம் மற்றும்
பெண் இனத்தை விட
தாங்கள் பெண்ணாக
மாறும்போது தங்களுடைய
உடலுக்குள் ஏற்படக்கூடிய
மாற்றத்தை உணர்ந்து
திருநங்கைகளாக மாறக்கூடிய
திருநங்கைகள் உயர்ந்த
நிலையில் இருக்கிறார்கள் “

“திருநங்கைகள் பிறப்பினால்
உண்டானவர்கள் அல்ல ;
அவர்கள் உடலில்
ஏற்படக்கூடிய மாற்றத்தினால்
உண்டானவர்கள் ;”

“திருநங்கைகள் பிறந்து
வந்தவர்கள் அல்ல  ;
வாழ்க்கையின்
இடைப்பட்ட காலத்தில்
உடலிலும் உணர்விலும்
ஏற்பட்ட மாற்றத்தினால்
உண்டானவர்கள் ;”

“கிருஷ்ணனும் கொஞ்சம்
கொஞ்சமாக இவ்வாறு
தான் மாறிக் கொண்டிருந்தார்”

“ஆமாம் ! ஆணாக பிறந்த
கிருஷ்ணன் பெண்ணாக
மாறிக் கொண்டிருந்தார்”

“ஆமாம் ! கிருஷ்ணன்
ஆணிலிருந்து பெண்ணாக
மாறிக் கொண்டிருந்தார் “

“ஆமாம் ! கிருஷ்ணன்
திருநங்கையாக மாறிக்
கொண்டிருந்தார் “

“ஆமாம் ! கிருஷ்ணன்
திருநங்கையாகவே
மாறி விட்டார் “

“திருநங்கையாக
மாறிய கிருஷ்ணன்
அரவானைக் காண்பதற்காக
அரவான் இருக்கும்
மாளிகையை நோக்கி
சென்று கொண்டிருந்தார்”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 25-03-2020
//////////////////////////////////////////

March 24, 2020

பரம்பொருள்-பதிவு-160


                ஜபம்-பதிவு-408
              (பரம்பொருள்-160)

“இந்த உலகத்தில்
உள்ள மக்கள்
அனைவரும்
நிம்மதி என்றால்
என்ன என்று தெரிந்து
வைத்திருக்கிறார்களா
என்று தெரியவில்லை
ஆனால்
வருங்கால உலகத்தில்
உள்ள மக்கள்
அனைவரும் நிம்மதியாக
வாழ வேண்டும்
என்றால் நாளை காலை
பாண்டவர்கள் சார்பாக
அரவான் களப்பலியாக
வேண்டும் என்ற
உண்மையை நீ தெரிந்து
வைத்திருக்க வேண்டும் “

“நாளை காலை
அரவானைக்
களப்பலியாகக்
கொடுக்கவில்லை என்றால்
பாண்டவர்களால்
குருஷேத்திரப் போரில்
வெற்றி பெறவே
முடியாது - என்ற
உண்மையை நீ தெரிந்து
வைத்திருக்க வேண்டும்”

“நாளைய தினத்தை
தவற விட்டு விட்டால்
நம்மால் களப்பலி
கொடுக்கவே
முடியாது - என்ற
உண்மையை நீ தெரிந்து
வைத்திருக்க வேண்டும்”

“நாளை காலை
அரவானைக்
களப்பலியாகக்
கொடுக்க வேண்டும்
என்றால் இன்று இரவு
அரவானின் ஆசையை
நிறைவேற்ற
வேண்டும் - என்ற
உண்மையை நீ தெரிந்து
வைத்திருக்க வேண்டும்”

"அரவானுடைய ஆசையை
நிறைவேற்றுவதற்கு
அரவானுக்கு
கண்டிப்பாக-நாம்
ஒரு பெண்ணை
அனுப்பித் தான்
ஆக வேண்டும்
என்ற உண்மையை
நீ தெரிந்து
வைத்திருக்க வேண்டும் “

“நீ இவைகளை
தெரிந்து வைத்துக்
கொள்ளாத காரணத்தினால்
தான் களப்பலி எவ்வளவு
முக்கியமானது
என்பதையும்-நாளை
களப்பலி கொடுப்பதற்கு
செய்ய வேண்டிய
செயல்கள் எவை
என்பதையும் உணர்ந்து
அதை நீ செய்யவில்லை”

தர்மர் :
“எங்களால் முடிந்த
அளவு முயற்சி
செய்தோம் முடியவில்லை “

கிருஷ்ணன் :
“முடிக்க வேண்டிய
விஷயத்தை
முடிக்கவில்லை - எனில்
எத்தகைய தவறான
விளைவுகள் ஏற்படும் என்று
உனக்கு தெரிந்திருந்தும்
முயற்சி செய்தேன்
என்று நீ சொல்வதை
என்னால் ஏற்றுக் கொள்ள
முடியவில்லை தர்மா “

தர்மர் :
“முயற்சி செய்த
எங்கள் மேல் எந்தத்
தவறும் இல்லை “

கிருஷ்ணன் :
“தவறு உங்கள் மேல்
இல்லை என்றால் - தவறு
பெண்கள் மேல் தான்
இருக்கிறது என்கிறாயா தர்மா “

தர்மர் :
“நான் அவ்வாறு
சொல்ல வரவில்லை
பெண்கள் மனதை
புரிந்து கொள்ள
முடியவில்லை
என்று தான் நான்
சொல்ல வந்தேன் “

கிருஷ்ணன் :
“ஆமாம் பெண்களின்
மனதை புரிந்து கொள்ளவே
முடியாது தான்”

“வருங்கால உலகத்தில்
பெண்கள் அனைவரும்
மானத்தோடு வாழ
வேண்டும் என்பதற்காக
உலூபி என்ற பெண்
தன்னுடைய மகனையே
களப்பலியாகக் கொடுக்க
சம்மதித்தத்தை
நினைக்கும் போது
பெண்ணினத்தை நினைத்து
பெருமைப் படுவதா
(அல்லது)
பெண்களின் மானத்தை
காப்பாற்றுவதற்காக
களப்பலியாகப்
போகும் அரவானை
எந்த ஒரு பெண்ணும்
திருமணம் செய்ய
சம்மதிக்கவில்லை என்பதை
நினைக்கும் போது
பெண்ணினத்தை நினைத்து
வேதனைப்படுவதா
என்று தெரியவில்லை”

“ஆமாம் பெண்களின்
மனதை புரிந்து கொள்ள
முடியவில்லை தான் “

பீமன்  :
“இப்போது என்ன
செய்வது பரந்தாமா? “

கிருஷ்ணன்  :
“மனிதனால்
ஒரு செயலைச் செய்ய
முடியும் என்ற நிலை
இருக்கும் வரை
கடவுள் நேரில் வரமாட்டார் ;
மனிதனால் - ஒரு
செயலைச் செய்ய
முடியவில்லை என்ற
நிலை வரும்போது தான்
நேரம் பார்த்து
கடவுள் நேரில் வருவார் “

“ஆமாம் இப்போது
என்னுடைய நேரம்  

“ஆமாம் நான் களத்தில்
இறங்க வேண்டிய நேரம் “

பீமன் :
“என்ன செய்யப்
போகிறீர்கள் பரந்தாமா ?“

கிருஷ்ணன் :
 “-----------------------------“

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 24-03-2020
//////////////////////////////////////////