June 07, 2020

அறிய வேண்டியவை-பதிவு-14


              ஜபம்-பதிவு-506
        (அறிய வேண்டியவை-14)

இந்திரன் :
“சித்திர சேனா ஊர்வசி
நடனம் ஆடும் போது
அவளுடைய அழகில்
மயங்கிய காரணத்தினால்
அர்ஜுனன் அவளை
கடைக்கண்ணால்
பார்த்தான் என்று
நினைக்கிறேன் ;
ஊர்வசியின் காதல்
வலையில் சிக்கி
காமத்தில் மூழ்கி
தடுமாறினான் என்று
நினைக்கிறேன் ;
அவனுக்குள்
ஏற்பட்ட காமத்தீயை
அணைப்பதற்கான
மருந்து ஊர்வசி
தான் என்று
நினைக்கிறேன் ;
அவன் இன்பம் என்னும்
கடலில் மூழ்கி முத்து
எடுக்க வேண்டும் ;
சொர்க்கத்தின் வாசலைத்
திறந்து ஆசையின்
எழிலுருவங்களை
அனுபவிக்க வேண்டும்;
இல்லை என்று
சொல்லாமல்
குறை என்ற
ஒன்று வைக்காமல்
காமத்தின் உச்சத்தை
தொட வேண்டும் ;
அதனை வழங்கக்
கூடியவள் ஊர்வசி
மட்டுமே ;
அவளால் மட்டுமே
அர்ஜுனன்
எதிர்பார்க்கும்
ஆசைகளை அள்ளி
வழங்க முடியும் ;
அர்ஜுனனின்
காம தாகத்தை தீர்க்கும்
நீராக இருப்பவள்
ஊர்வசி மட்டுமே ;
அர்ஜுனனின்
ஆசையை தீர்ப்பதற்காக
அர்ஜுனனுடன்
ஒன்றாக இணைந்து
இன்பம் அனுபவிக்க
வேண்டும் என்று
ஊர்வசிக்கு நான்
கட்டளை இட்டிருக்கிறேன்
என்று நான்
சொன்னதாக
ஊர்வசியை
அழைத்து வந்து
அர்ஜுனனுடன்
இணையச் சொல் ;
அர்ஜுனனும்
ஊர்வசியும் ஒன்றாக
இணைவதற்கான
செயல்களைச்
செய்வாயாக ;”

(சித்திர சேனன்  
ஊர்வசியின் மாளிகை
சென்றான் )

சித்திர சேனன் :
“அம்மா! அழகால்
மயக்கக் கூடியவனும் ;
வீரத்தால் ஆச்சரியப்பட
வைக்கக் கூடியவனும் ;
அவனுக்கு இணையாக
வீரன் யாரும் இந்த
உலகத்தில் இல்லை
என்று சொல்லத்தக்கவனும்;
தவத்தில் உயர்ந்தவனும் ;
பாசத்தில் சிறந்தவனுமாக;
திகழ்ந்து கொண்டிருக்கிற
அர்ஜுனனுடன் இன்று
இரவு ஒன்றாகக் கலந்து
சொர்க்கத்தின் சுகங்களை
அவனுக்குக் காட்டுவாய்  ;
இன்பத்தை அவன்
அனுபவிக்கும்படிச்
செய்வாய்; - காதலின்
ஆழம் என்றால் என்ன
என்பதையும்
காமத்தின் உச்சம்
என்றால் என்ன
என்பதையும்
அவனுக்கு
செயல்முறையில்
விளக்குவாய் ;
இதுவரை அவன்
காணாத மகிழ்ச்சியின்
காட்சிகளை அவன்
காணும்படிச் செய்வாய்  ;
இல்லை என்று
சொல்லாமல்
சந்தோஷத்திற்கு
எல்லை வகுக்காமல்
சந்தோஷத்தை வாரி
வழங்குவாய் ;
என்று இந்திரன்
கட்டளை
பிறப்பித்துள்ளார் ;
இச்செய்தியை
உங்களுக்கு
தெரிவிப்பதற்காக
நான் வந்தேன் ;
இந்திரன் உங்களுக்கு
இட்ட கட்டளையை
நிறைவேற்றுவீர்களாக ;”

(ஏற்கனவே
அர்ஜுனனுடைய
அழகில் மயங்கி
காதல் போதையில் சிக்கி
காமத்தீயில் கருகிக்
கொண்டிருந்த
ஊர்வசியின்
காதில் விழுந்த
இச்செய்தி தேனில்
விழுந்து மூழ்கிய
பலாச்சுளை நம்முடைய
வாயில் விழுந்தால்
எத்தயை இன்பமாக
இருக்குமோ அவ்வளவு
இனிமையாக இருந்தது
ஊர்வசியின் காதுகளுக்கு ;
இச்செய்தி ஊர்வசியின்
இதயத்தை குளிர்வித்தது ;
மனதை மகிழச் செய்தது ;
அனைவரையும்
மயக்கும்
அழகைக் கொண்ட
ஊர்வசி அழகுக்கு
அழகு சேர்ப்பது போல்
தன்னை நன்றாக
அலங்கரித்துக் கொண்டு ;
பல்வேறு வாசனை
திரவியங்களை
தன்னுடைய உடலில்
அள்ளி தெளித்துக் கொண்டு;
பட்டாடைகளை
அணிந்து கொண்டு ;
எங்கும் கிடைக்காத
அரிய வகை
கற்களால் செய்யப்பட்ட
அணிகன்களை
பூட்டிக் கொண்டு ;
அன்ன நடை நடந்து
தங்க மயிலென
காண்போரின்
இதயத்தை துடிக்க
வைக்கும் வண்ணம்
அழகு தேவதையாக
அர்ஜுனனுடைய
மாளிகையை
அடைந்தாள் ; “

“அர்ஜுனனின் எதிரில்
வந்து நின்றாள்
அந்த அழகு தேவதை ;
ஊர்வசியை மனதில்
எந்தவிதமான
சலனமும் இல்லாமல்
அமைதியாகப் பார்த்தான்  
அர்ஜுனன் ;
ஊர்வசியின் அழகில்
ஈரேழு உலகங்களும்
மயங்கினாலும் ;
ஊர்வசியின் அழகில்
மயக்கம் கொள்ளாமல்
அமைதியாகப் பார்த்தான்  
அர்ஜுனன் ;
தாயே என்று
அவளுடைய பாதங்களில்
விழுந்து வணங்கினான் ;”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 07-06-2020
//////////////////////////////////////////

அறிய வேண்டியவை-பதிவு-13


             ஜபம்-பதிவு-505
         (அறிய வேண்டியவை-13)

“சாபம் என்பது
ஒருவருடைய
கர்மவினையை
கழிப்பதற்காக
மற்றொருவரால்
கொடுக்கப்படுவது ஆகும்”

“பத்தினிகள்;
தவத்தில்
உயர்ந்தவர்கள்;
நல்லவர்கள் ;
உண்மையே பேசி
வாழ்பவர்கள் ;
வாழ்க்கையில்
நல்லவற்றை
செய்பவர்கள் ;
கெட்டவற்றை
நினைக்காதவர்கள் ;
துன்பம் கண்டு
ஓடி வந்து
உதவி செய்பவர்கள் ;
ஆகியோரால்
கொடுக்கும் சாபம்
மட்டும் தான்
பலிக்கும்
என்று இல்லை “

“சாபம் என்பது
உயர்ந்தவர்; தாழ்ந்தவர்;
நல்லவர்; கெட்டவர்;
பத்தினி; விலைமகள்;
பிறர் துன்பம் கண்டு
உதவி செய்பவர்கள் ;
பிறர் துன்பம் கண்டு
உதவி செய்யாதவர்கள்;
வாழ்க்கையில்
நல்லவற்றை
செய்பவர்கள் ;
வாழ்க்கையில்
நல்லவற்றை
செய்யாதவர்கள் ;
கெட்டவற்றை
நினைப்பவர்கள் ;
கெட்டவற்றை
நினைக்காதவ்ர்கள் ;
துன்பம் கண்டு
ஓடி வந்து
உதவி செய்பவர்கள்;
துன்பம் கண்டு
ஓடி வந்து உதவி
செய்யாதவர்கள் என்று
யார் கொடுத்தாலும்
சாபம் பலிக்கும் “

“சாபம்
கொடுப்பவருடைய
தன்மையைப்
பொறுத்து
சாபத்தின்
விளைவானது
இடம் காலம் நேரம்
சூழ்நிலை
ஆகியவற்றைப்
பொறுத்து
வெளிப்படும்”

“இந்த உலகம் முழுவதும்
எடுத்துக் கொண்டால்
சாபம் கொடுப்பதை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்”

ஒன்று :
“கெட்டவை நடக்க
வேண்டும் என்பதற்காக
கொடுக்கப்படும் சாபம் “

இரண்டு :
“நல்லவை நடக்க
வேண்டும் என்பதற்காக
கொடுக்கப்படும் சாபம் “

“ஒருவருடைய
கர்மவினையில் உள்ள
பாவப்பதிவுகளை
அனுபவிக்க
வேண்டும்
என்பதற்காக
கொடுக்கப்படும் சாபம்
கெட்டவை
நடக்க வேண்டும்
என்பதற்காக
கொடுக்கப்படும் சாபம்”

“ஒருவருடைய
கர்மவினையில் உள்ள
புண்ணிய பதிவுகளை
அனுபவிக்க வேண்டும்
என்பதற்காக
கொடுக்கப்படும் சாபம்
நல்லவவை
நடக்க வேண்டும்
என்பதற்காக
கொடுக்கப்படும் சாபம்”

ஒன்று :
“கெட்டவை நடக்க
வேண்டும் என்பதற்காக
கொடுக்கப்படும் சாபம்”

“நீயும் உன்னுடைய
குடும்பமும் உன்னைச்
சுற்றியுள்ள சொந்தமும்
நன்றாக
இருக்க வேண்டும்
என்பதற்காக எனக்கு
கிடைக்க வேண்டிய
சொத்தை ஏமாற்றி
அபகரித்துக் கொண்டு
என்னை
கஷ்டப்பட வைத்தாய் ;
அத்துடன் நிறுத்தாமல்
என்னுடைய
பிள்ளைகளைகளையும்
ஏமாற்றி
அவர்களுக்கு
சேரவேண்டிய சொத்தை
அபகரித்துக் கொண்டு
அவர்களையும்
கஷ்டப்பட வைத்தாய் ;”

“எப்படி நானும்
என்னுடைய பிள்ளைகளும்
மன வேதனையால்
கஷ்டப்பட்டோமோ ?
அதைப்போல நீயும்
உன்னுடைய
பிள்ளைகளும்
கஷ்டப்படுவீர்கள் என்று
கொடுக்கப்படும் சாபம்
ஒருவருடைய
கர்மவினையில் உள்ள
பாவப்பதிவுகளை
அனுபவிக்க வேண்டும்
என்பதற்காக
கொடுக்கப்படும் சாபம்
கெட்டவைகளை
அனுபவிக்க வேண்டும்
என்பதற்காக
கொடுக்கப்படும் சாபம் “

இரண்டு :
“நல்லவை
நடக்க வேண்டும்
என்பதற்காக
கொடுக்கப்படும் சாபம்”

“ஒருநாள் இரவு
இந்திரன் சித்திசேனனை
அழைத்தான்”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 07-06-2020
//////////////////////////////////////////

June 02, 2020

அறிய வேண்டியவை-பதிவு-12


               ஜபம்-பதிவு-504
           (அறிய வேண்டியவை-12)

துரோணர் :
“அக்னி ஏற்பட்டால்
வருணமந்திரத்தைச்
சொல்லும் போது
நீர் வரும் அதைப்
பயன்படுத்தி தீயை
அணைக்க வேண்டும்
என்று நான்
எப்படி சொல்லிக்
கொடுத்தேனோ
அதை மட்டுமே
யோசித்துக் கொண்டு
தீயை அணைக்க மட்டுமே
வருணமந்திரம்
பயன்படும் - மற்ற
எதற்காகவாவது
பயன்படுமா என்பதை
சிந்திக்காமல் விட்டு
விட்டீர்கள்”

“வருணமந்திரத்தைப்
பயன்படுத்தினால்
நீர் வரும் என்றால்,
நமக்கு நீர்
தேவைப்படும் சமயத்தில்
வருணமந்திரத்தைப்
பயன்படுத்தினால்
வரும் நீரை
பயன்படுத்திக் கொள்ளலாம்
என்பதை அர்ஜுனன்
உணர்ந்து கொண்டான் ;”

“அர்ஜுனனைத் தவிர
வேறு யாரும் - இந்த
நிலையில் நின்று
யோசிக்கவேயில்லை ;

“அர்ஜுனனைத் தவிர
வேறு யாரும்
நீரை வரவழைக்கும்
வருணமந்திரத்தை
மாறுபட்ட
கோணத்தில் யோசித்து
பயன்படுத்தவில்லை ;”

“அர்ஜுனனைத் தவிர
வேறு யாரும்
நீரை வரவழைக்கும்
வருணமந்திரத்தை
எப்படி எல்லாம்
பயன்படுத்தலாம்
என்பதை யோசித்து
பயன்படுத்தவில்லை ;”
எத்தகைய சூழ்நிலையில்
பயன்படுத்த வேண்டும்
என்பதையும்
யோசிக்கவில்லை ; “

“மந்திரங்கள் என்பவை
மனப்பாடமாக
மனதில் இருக்க
வேண்டும்;
அப்போது தான் எந்த
ஒரு சூழ்நிலையிலும்
மந்திரத்தை
பயன்படுத்த முடியும் ;
அர்ஜுனனைத் தவிர
நீங்கள் யாரும்
மந்திரங்களை
மனப்பாடமும்
செய்யவில்லை;
மந்திரங்களை
மனதில்
நிறுத்தவுமில்லை;
எந்த சூழ்நிலையில்
மந்திரத்தை பயன்படுத்த
வேண்டும் என்று
தெரியவுமில்லை ;
மந்திரங்களை
பயன்படுத்துவதற்கு
தகுந்த சூழ்நிலை
வாய்த்தும்
பயன்படுத்தவுமில்லை;”

“குருவானவர் அளிக்கும்
நிலையில் இருக்கிறார்
சீடர்கள் ஏற்றுக்
கொள்ளும் நிலையில்
இருக்கிறார்கள்;
குருவானவர் அளிப்பதில்
எந்தவிதமான
மாறுபாட்டையும்
காட்டுவதில்லை;
ஆனால் ஏற்றுக்
கொள்ளும் நிலையில்
தான் சீடர்கள்
மாறுபடுகிறீர்கள் ;”

“கல்வியை உங்கள்
அனைவருக்கும் நான்
சமமாகத் தான்
பயிற்றுவித்தேன் - ஆனால்
அர்ஜுனனைத் தவிர
கற்றுக் கொடுத்த
கல்வியை நீங்கள்
எங்கே ? எப்படி ?
எப்போது ?
எந்த வகையில் ?
பயன்படுத்த
வேண்டும் என்று
யோசிக்கவேயில்லை ;
பயிற்சியும்
செய்யவில்லை ;
முயற்சியும்
செய்யவில்லை ;“

“ஆனால் அர்ஜுனன்
மட்டுமே நான் கற்றுக்
கொடுத்த கல்வியை
முயற்சி செய்து
பயிற்சி செய்தான் ;
நான் கற்றுக்
கொடுத்த கல்வியை
எங்கே ?எப்படி ?
எப்போது ?
எந்த வகையில் ?
பயன்படுத்த
வேண்டும் என்று
யோசித்தான் ;
பயன்படுத்தினான்;”

“அது மட்டுமில்லை
அர்ஜுனன் - நான்
கற்றுக் கொடுத்த
கல்வியை அப்படியே
பயன்படுத்தாமல்
அதை எப்படி
பயன்படுத்தலாம்
என்பதையும்
யோசித்தான் ;
ஆனால் நீங்கள் யாரும்
அப்படி யோசிக்கவில்லை “

“இப்பொழுது
புரிந்து கொண்டீர்களா
அர்ஜுனன் ஏன் உங்களை
விட சிறந்தவனாக
இருக்கிறான் என்பதை”

(அனைவரும் தலை
குனிந்து நின்றனர்)

“இந்த கதையில்
அறிந்து கொள்ள
வேண்டிய உண்மை
என்னவென்றால்
ஒருவர் நம்மை
விடதிறமைசாலியாக
இருந்தால்
நாமும் நம்முடைய
திறமையை வளர்த்து
அவரைப் போல
திறமை சாலியாக
முயற்சி செய்ய
வேண்டுமே ஒழிய
அவரைப் பார்த்து
பொறாமைப்படக்
கூடாது என்பதையும்;

குருவானவர்
சீடர்கள் அனைவருக்கும்
கல்வியை ஒரே மாதிரி
தான் போதிக்கிறார் ;
அதை ஏற்றுக் கொள்ளும்
வகையில் தான் சீடர்கள்
மாறுபடுகிறார்கள்
என்பதும் புலப்படுகிறது “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 02-06-2020
//////////////////////////////////////////