July 26, 2022

ஜபம்-பதிவு-817 (சாவேயில்லாத சிகண்டி-151)

 ஜபம்-பதிவு-817

(சாவேயில்லாத

சிகண்டி-151)

 

பிரச்சினையை

எப்படி தீர்ப்பது

என்று முயற்சி

செய்யாதவர்களாலும்

 

பிரச்சினையைக்

கண்டு பயந்து

ஓடி ஒளிந்து

கொள்பவர்களாலும்

 

பிரச்சினை முடிந்தால்

தான் நான் எந்த

ஒரு வேலையையும்

செய்வேன் என்று

சொல்லிக்

கொண்டிருப்பவர்களாலும்

 

பிரச்சினையைத்

தீர்க்கத் தெரியாதவர்களிடம்

தன்னுடைய

பிரச்சினையை சொல்லிக்

கொண்டிருப்பவர்களாலும்,

 

தன்னுடைய

பிரச்சினைச் சொல்லி

அனுதாபம் தேட

நினைப்பவர்களாலும்

 

தனக்கு மட்டும் தான்

பிரச்சினை

மற்றவர்களுக்கு

பிரச்சினை இல்லை

என்று நினைத்துக்

கொண்டிருப்பவர்களாலும்

 

வாழ்க்கையில் எந்த

ஒரு சாதனையையும்

படைக்கவும் முடியாது

வாழ்க்கையை

வாழ்க்கையாகவும்

வாழவும் முடியாது

 

பிரச்சினையில்

மூழ்கி இருப்பவர்கள்

வாழ்க்கையில்

எதிர்ப்படும்

இன்பங்களை

தவற விட்டு

விடுவார்கள்

 

வாழ்க்கையை

மாற்றுவதற்காக

வாழ்க்கையில்

எதிர்ப்படும்

வாய்ப்புகளையும்

பயன்படுத்தத்

தவறி விடுவார்கள்

 

இதனால்

வாழ வேண்டிய

வாழ்க்கையைத்

தொலைத்து

விடுவார்கள்

 

எனக்கு மனைவியால்

வந்த பிரச்சினையை

எப்படி எதிர்கொள்வது

என்பதை நான்

பார்த்துக் கொள்கிறேன்

எப்படி தீர்ப்பது

என்பதை நான்

யோசித்துக் கொள்கிறேன்

அந்த பிரச்சினை

என்னைத்

தாக்கும் போது

எப்படி எதிர்கொள்வது

என்பதை நானே

தீர்மானித்துக்

கொள்கிறேன்

 

துருபதன் :

நம்முடன் நட்பாக

இருந்தவர்கள்

நமக்கு பின்னால்

இருந்து கொண்டு

 

நம்மை கேவலமாக

பேசிக் கொண்டு

இருக்கிறார்கள்

 

குறை சொல்லிக்

கொண்டு இருக்கிறார்கள்

 

நமக்கு எதிராக

இழிவான செயல்களைச்

செய்து

கொண்டிருக்கிறார்கள்

 

இதற்கு நாம்

பதில் சொல்லியே

ஆக வேண்டும்

 

சிகண்டி :

நம்முடன் நேருக்கு

நேராக நின்று பேச

தைரியம் இல்லாதவர்கள்

 

நம்முடன் சரிசமமாக

நிற்பதற்கு பயப்படுபவர்கள்

 

நம்முடைய திறமையுடன்

போட்டி போட

முடியாதவர்கள்

 

நம்முடைய

வளர்ச்சியைக் கண்டு

பொறாமைப்படுபவர்கள்

 

தனித்தன்மையுடன்

தனித்து நின்று

வாழ்க்கையை

வாழத் தெரியாமல்

தன்னுடைய

வாழ்க்கையைக்

காப்பாற்றிக் கொள்ள

வேண்டும் என்பதற்காக

பிறருடைய காலைப்

பிடித்து வாழ்பவர்கள்

போட்டுக் கொடுத்து

வாழ்பவர்கள்

காட்டிக் கொடுத்து

வாழ்பவர்கள்

கூட்டிக் கொடுத்து

வாழ்பவர்கள் தான்

நம் பின்னால்

இருந்து பேசுவார்கள்

குறை சொல்வார்கள்

நமக்கு எதிரான

செயல்களைச் செய்து

கொண்டிருப்பார்கள்

 

நம்மைக் குறை

சொல்பவர்களுக்கும்

நம் பின்னால்

இருந்து கொண்டு

பேசிக் கொண்டு

இருப்பவர்களுக்கும்

நமக்கு எதிராக

இழிவான

செயல்களைச் செய்து

கொண்டிருப்பவர்களுக்கும்

நாம் பதில் சொல்லிக்

கொண்டே இருந்தால்

நம் வாழ்நாள்

முழுவதும் பதில்

சொல்லிக் கொண்டே

தான் இருக்க வேண்டும்

 

நம்முடைய கடமைகளை

நாம் செய்ய முடியாது

நம்முடைய வேலைகளை

நாம் முடிக்க முடியாது

நாம் எதற்காக

பிறப்பெடுத்தோமோ

அதைச் செய்யவே

முடியாது

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----26-07-2022

-----செவ்வாய்க் கிழமை

 

//////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-816 (சாவேயில்லாத சிகண்டி-150)

 ஜபம்-பதிவு-816

(சாவேயில்லாத

சிகண்டி-150)

 

அந்த காட்சிகள்

காண முடியாத

வகையில்

தெளிவில்லாமல்

இருந்தது

 

அர்த்தத்தைப்

புரிந்து கொள்ள

முடியாமல்

இருந்தது

 

எதற்காக

வருகிறது என்று

தெரிந்து கொள்ள

முடியாமல்

இருந்தது

 

நான்

பெண்ணிலிருந்து

ஆணாக  

மறுபிறப்பு எடுத்த போது

எனக்கு அனைத்தும்

தெரிந்து விட்டது

 

பீஷ்மனைக்

கொல்வதற்காகவே

நான்

பிறந்திருக்கிறேன்

என்பதைத் தெரிந்து

கொண்டேன்

 

துருபதன் :

அரண்மனை

வாயிலில் மாட்டி

வைக்கப்பட்டிருந்த

மாலை

காணவில்லை

 

அதை எடுத்து

உன்னுடைய கழுத்தில்

போட்டுக் கொண்டு

நீ சென்று விட்டாய்

என்று தெரிந்ததும்

அடுத்து என்ன

நடக்கப் போகிறது

என்று யோசித்துக்

கொண்டிருந்தேன்

 

எது நடக்க

வேண்டுமோ அது

நடந்து இருக்கிறது

 

நல்லதே

நடந்து இருக்கிறது

 

இப்போது என்ன

செய்யப் போகிறாய்

 

சிகண்டி :

அஸ்தினாபுரம் செல்லப்

போகிறேன்

பீஷ்மனைக்

கொல்லப் போகிறேன்

 

துருபதன் :

உன்னுடைய மனைவி

பிரச்சினையே இன்னும்

முடியவில்லை

அதற்குள் எதற்காக

பீஷ்மனைக் கொல்ல

வேண்டும் என்ற

வேலையைச் செய்யக்

கிளம்புகிறாய்

 

முதலில் உன்னுடைய

மனைவியின்

பிரச்சினையை

தீர்ப்பதற்கான

வழியைப் பார்

 

பிறகு பீஷ்மனைக்

கொல்லும்

வேலையைப் பார்க்கலாம்

 

சிகண்டி :

பிரச்சினை என்பது

வாழ்க்கையில் வந்து

போகும் ஒரு விஷயம்

அன்றாடம் நடக்கும்

ஒரு விஷயம்

அவ்வளவு தான்

 

பிரச்சினை முடிந்த

பிறகு தான்

எந்த ஒரு

வேலையையும்

செய்ய வேண்டும்

என்றால் நம்மால்

எந்த ஒரு

வேலையையும்

செய்ய முடியாது

பிரச்சினைக்குள்ளேயே

சுற்றிக் கொண்டு இருக்க

வேண்டியது தான்

 

என்னுடைய

பிரச்சினை

முடிந்த பிறகு தான்

நான் எந்த ஒரு

வேலையையும்

செய்வேன் என்று

சொல்பவர்களால்

எந்த ஒரு

சாதனையையும்

செய்ய முடியாது

 

பிரச்சினையின் முடிவு

நல்லதாக இருக்கட்டும்

அல்லது

கெட்டதாக இருக்கட்டும்

 

பிரச்சினை முடியும்

போது முடியட்டும்

அல்லது

முடியாமல் இருக்கட்டும்

 

என்று பிரச்சினையைப்

பற்றிக் கவலைப்படாமல்

மற்ற

வேலைகளைச் செய்து

கொண்டிருப்பவர்களால்

மட்டுமே

சாதனைகள்

செய்ய முடியும்

வாழ்க்கையை

வாழ்க்கையாக

வாழ முடியும்

 

பிரச்சினையைப்

பற்றியே யோசித்துக்

கொண்டிருப்பவர்களாலும்

 

பிரச்சினையில் மூழ்கி

கவலைப் பட்டுக்

கொண்டிருப்பவர்களாலும்

 

பிரச்சினையைக்

கண்டு

பயப்படுகிறவர்களாலும்

 

பிரச்சினையை

எதிர்த்துப் போரடத்

தெரியாதவர்களாலும்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----26-07-2022

-----செவ்வாய்க் கிழமை

 

//////////////////////////////////////////////

 

 

 

 

 

 

ஜபம்-பதிவு-815 (சாவேயில்லாத சிகண்டி-149)

 ஜபம்-பதிவு-815

(சாவேயில்லாத

சிகண்டி-149)

 

(பாஞ்சால நாட்டின்

அரண்மனைக்கு

வந்து சேர்ந்த

சிகண்டி

தனது தந்தை

துருபதனை சந்திக்க

சென்று அவனை

வணங்கினான்.)

 

சிகண்டி :

வணங்குகிறேன்

தந்தையே

 

துருபதன் :

சொல்லாமல் எங்கே

சென்றாய் சிகண்டினி

 

உன்னைக் காணாததால்

பல இடங்களிலும்

உன்னைத் தேடினோம்

 

சிகண்டி :

இப்போது

நான் சிகண்டினி

இல்லை

சிகண்டி

 

துருபதன் :

சிவன் சொன்னது

நடந்து விட்டதா

 

சிகண்டி :

சிவன் சொன்ன

வார்த்தையில் உள்ள

அர்த்தத்தைப் புரிந்து

கொண்டேன்

 

அதற்கான

வழிமுறைகளைப்

பின்பற்றினேன்

 

பெண்ணிலிருந்து

ஆணாக மாறினேன்

 

இப்போது உங்கள்

முன்னால்

சிகண்டியாக நின்று

கொண்டிருக்கிறேன்

 

துருபதன் :

நீ இல்லாத

சமயத்தில்

உன்னுடைய

வாழ்க்கையில்

விரும்பத்தகாத நிகழ்ச்சிகள்

எல்லாம் நடந்து விட்டது

 

சிகண்டி :

என்னுடைய வாழ்க்கையில்

விரும்பத்தக்க நிகழ்ச்சிகள்

நடந்தால் தான்

ஆச்சரியப்பட வேண்டும்

 

விரும்பத்தகாத

நிகழ்ச்சிகள் நடந்தால்

ஆச்சரியப்பட வேண்டிய

அவசியம் இல்லை

 

துருபதன் :

உன்னுடைய மனைவி

அவருடைய தந்தையான

ஹிரண்யவர்மனிடம்

சென்று விட்டார்

 

மகளின் விஷயத்தைக்

கேள்விப்பட்டு

ஹிரண்யவர்மன்

நம் மேல் மிகுந்த

கோபத்தில் இருக்கிறான்

 

உன்னைக்

கொல்லப் போவதாகச்

சொல்லி

இருக்கிறான்

 

தன்னுடைய மகளின்

வாழ்க்கை

பாதிக்கப்பட்டதற்கு

காரணமாக இருந்தவர்கள்

யாரையும் உயிரோடு

விடப்போவதில்லை என்று

சொல்லி இருக்கிறான்

 

நம் நாட்டில்

உள்ள ஒருவருக்கும்

இரக்கம்

காட்டப்போவதில்லை

அழித்து விடப்போவதாகச்

சொல்லி இருக்கிறான்

 

நம்முடைய

நாட்டின் மீது

படை எடுத்து

நாட்டை அழித்து

தன்னுடைய

கோபத்தைத் தணித்துக்

கொள்ளப் போவதாக

முடிவு எடுத்து

இருப்பதாக

நமக்குச்செய்திகள்

வந்திருக்கிறது

 

சிகண்டி :

இதைப் பற்றி எல்லாம்

கவலைப்பட்டுக்

கொண்டிருப்பதற்கு

எனக்கு நேரமில்லை

 

இதற்காக நேரத்தை

செலவிடவும்

நான் விரும்பவில்லை

 

நான் செய்ய

வேண்டிய கடமைகள்

எனக்கு

நிறைய இருக்கிறது

அதற்காக நான்

நேரத்தைச்

செலவிட வேண்டும்

 

என்னுடைய பிறப்பின்

ரகசியம் தெரிந்து விட்டது

 

துருபதன் :

எப்படி தெரிந்தது

 

சிகண்டி :

அரண்மனை

வாயிலில் மாட்டி

வைக்கப்பட்டிருந்த

மாலையை

என்னுடைய கழுத்தில்

போட்டதும் எனக்கு

சில காட்சிகள்

தெரிந்தது

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----26-07-2022

-----செவ்வாய்க் கிழமை

 

//////////////////////////////////////////////

July 20, 2022

ஜபம்-பதிவு-814 (சாவேயில்லாத சிகண்டி-148)

 ஜபம்-பதிவு-814

(சாவேயில்லாத

சிகண்டி-148)

 

சிகண்டி

உனக்காக நிறைய

கடமைகள்

காத்து இருக்கிறது

 

நீ செய்யப்போகும்

செயல்

யாராலும்

நினைத்துக் கூட

பார்க்க

முடியாத செயல்

காலம் காலமாக

இந்த உலகமே

நினைவில்

வைத்திருக்கக்

கூடிய செயல்

 

நீ கிளம்பலாம்

 

என்று

ஸ்தூணாகர்ணன்

சொன்னவுடன்

சிகண்டி

அவர் கால்களில்

விழுந்து

ஆசிர்வாதம்

பெற்று விட்டு

குதிரையின்

மேலே ஏறி

காற்றைக்

கிழித்துக்

கொண்டு

பாஞ்சால

நாட்டை

நோக்கி

சென்று

கொண்டிருந்தான்

சிகண்டி

 

புதிய

வரலாறு

படைக்க

சென்று

கொண்டிருந்தான்

ளசிகண்டி

 

வரலாற்றை

மாற்ற

முடியாது

என்று

சொன்னவர்களுக்கு

வரலாற்றை

மாற்ற

முடியும்

என்று

காட்டுவதற்கு

சென்று

கொண்டிருந்தான்

சிகண்டி

 

பீஷ்மரின்

இறுதி

யாத்திரையை

தொடங்குவதற்கு

கொடியசைக்க

சென்று

கொண்டிருந்தான்

சிகண்டி

 

இந்த

உலகத்தில்

உள்ள

யாராலும்

வீழ்த்த

முடியாது

என்று

சொல்லப்பட்ட

பீஷ்மனை

வீழ்த்த

சென்று

கொண்டிருந்தான்

சிகண்டி

 

சாகா வரம்

பெற்றவனை

சாகடிக்க

வேண்டும்

என்று வரம்

பெற்றவன்

சாகடிக்க

சென்று

கொண்டிருந்தான்

 

சிகண்டியின்

வரலாறு

ஆரம்பமாகி

விட்டது

 

சிகண்டி

செல்லும்

குதிரையின்

காலடித்

தடங்களைப்

பின்தொடருங்கள்

 

சிகண்டியின்

வரலாற்றைத்

தெரிந்து கொள்ளத்

தயாராகுங்கள்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழு.த்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----20-07-2022

-----புதன் கிழமை

 

//////////////////////////////////////////////