November 06, 2022

ஜபம்-பதிவு-892 மரணமற்ற அஸ்வத்தாமன்-24 (கிருஷ்ணனுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-892

மரணமற்ற

அஸ்வத்தாமன்-24

(கிருஷ்ணனுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

இத்தகைய

சிறப்பு மிக்க

வார்த்தையில்

உள்ள

உயிரோட்டத்தைத்

தெள்ளத் தெளிவாக

அறிந்தவர் நீங்கள்

அதனால் தான்

கடவுள் இதுவரை

யாருக்கும்

கொடுக்காத

சாகாவரம் என்ற

வரத்தை

யாருக்கும்

கொடுக்கக் கூடாத

சாகாவரம் என்ற

வரத்தை

கடவுளால்

கூட மறுக்க

முடியாது

கொடுத்தே ஆக

வேண்டும்

என்ற வகையில்

வார்த்தைகளைப்

பயன்படுத்தி

பிறக்கப் போகும்

உங்கள் மகனுக்கு

சாகாவரத்தை

மறைமுகமாகக்

கேட்டுள்ளீர்கள்

 

உங்கள் மகனுக்கு

சாகாவரம்

வேண்டும்

என்ற வரத்தை

கடவுளிடம்

நேரடியாகக்

கேட்டால்

கடவுள் தரமாட்டார்

என்ற

காரணத்தினால்

மனித குலத்தின்

கடைசி மனிதன்

இறந்த பிறகு

இறக்கும் மகன்

வேண்டும் என்று

நீங்கள்

கேட்டதினால்

உங்களுக்குப்

பிறக்கப்

போகும்

மகனுக்கு

சாகாவரத்தை

மறைமுகமாகக்

கேட்டுள்ளீர்கள்

 

வார்த்தைகளை

எப்படி பயன்படுத்த

வேண்டும் என்பது

உங்களுக்கு

தெள்ளத்

தெளிவாகத்

தெரிந்திருக்கிறது

 

துரோணர் :

அப்படி என்றால்

நான் கேட்ட

வரம்

 

சிவன் :

நான் கொடுப்பேனா

என்ற சந்தேகம்

ஏற்பட்டு விட்டதா

 

துரோணர் :

ஆமாம்

 

சிவன் :

கடவுளின் மேல்

சந்தேகமா

 

துரோணர் :

இல்லை

நான் கேட்ட

வரத்தின் மேல்

தான் சந்தேகம்

 

சிவன் :

நீங்கள் கேட்ட

வரம் அப்படி

 

உங்களுக்குப்

பிறக்கப் போகும்

மகனுக்கு

சாகாவரத்தைக்

கூட கொடுத்து

விடலாம்

ஆனால்

சிவ அவதாரம்

எடுக்க வேண்டும்

என்று நீங்கள்

கேட்ட வரத்தைப்

பற்றித் தான்

நான் யோசித்துக்

கொண்டிருக்கிறேன்

 

அவதாரத்தைப்

பற்றித் தெரியாமல்

கேட்டிருக்கிறீர்கள்

 

அவதாரத்தைப்

பற்றித் தெரிந்து

இருந்தால்

இவ்வாறு

கேட்டு இருக்க

மாட்டீர்கள்

 

எந்த அவதாரத்தை

எடுத்துக்

கொண்டாலும்

அந்த

அவதாரங்கள்

காரணம் இல்லாமல்

இந்த உலகத்தில்

தோன்றுவதே

இல்லை

 

அதர்மம்

தழைத்தோங்கும்

போது

தர்மத்தை நிலை

நாட்டுவதற்காக

பாதிக்கப்பட்டவர்களின்

வேண்டுகோளுக்கிணங்க

கடவுளால்

இந்த மண்ணில்

எடுக்கப்படுவது தான்

அவதாரங்கள்

 

இந்த உலகத்தில்

அதர்மம் எதுவும்

தற்போது

நடக்கவில்லை

அதர்மம்

நடப்பதற்கான

சூழ்நிலை எதுவும்

தற்போது

நிலவவில்லை

அப்படி இருக்கும்

போது நான் ஏன்

சிவ அவதாரம்

எடுக்க வேண்டும்

என்று யோசிக்க

வேண்டிய

கட்டாயத்திற்கு

என்னைத்

தள்ளி விட்டாய்

 

-------ஜபம் இன்னும் வரும்

 

------என்றும் அன்புடன்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------06-11-2022

------ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////////

 

 

ஜபம்-பதிவு-891 மரணமற்ற அஸ்வத்தாமன்-23 (கிருஷ்ணனுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-891

மரணமற்ற

அஸ்வத்தாமன்-23

(கிருஷ்ணனுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

இடம் நேரம்

காலம் சூழ்நிலை

கர்மவினை

ஆகியவற்றைப்

பொறுத்து

மனிதன் கேட்க

நினைத்த

வரத்தைக்

கேட்கலாம்

கேட்காமலும்

போகலாம்

அல்லது

தவறாகவும்

கேட்கலாம்

 

என்ன

வேண்டுமானாலும்

நடக்கலாம்

 

அதனால்

தான் என்ன

வரம் வேண்டி

தவம்

இருந்தார்களோ

அவர்களே

அவர்கள்

வரத்தை

கேட்கச்

சொல்லி

வரங்கள்

வழங்கப்பட்டு

வருகிறது

 

துரோணரே

அதனால்

தான் நானும்

கேட்கிறேன்

 

நீங்கள்

எந்த வரம்

வேண்டி தவம்

செய்தீர்களோ

அதை உங்களால்

வார்த்தையால்

கேட்க முடிந்தால்

அதை வார்த்தையின்

மூலம் கேளுங்கள்

 

நீங்கள்

வார்த்தையால்

என்ன வரம்

கேட்கிறீர்களோ

அந்த வரத்தை

வழங்குவதற்காகவே

நான்

வந்திருக்கிறேன்

 

துரோணர் :

ஐயனே

மனித குலத்தின்

கடைசி மனிதன்

இறந்த பிறகு

இறக்கக்

கூடியவனாக

நீங்களே

எனக்கு

மகனாகப்

பிறக்க

வேண்டும்

 

சிவன் :

வார்த்தைகள்

என்பது

பல்வேறு

ஆச்சரியங்களை

தன்னுள்

அடக்கி

வைத்துக்

கொண்டிருப்பவை

 

வார்த்தைகளைப்

பயன்படுத்துபவர்களைப்

பொறுத்து

வார்த்தைகள்

பிரமிப்பை

ஏற்படுத்திக்

கொண்டிருப்பவை

 

வியப்பை

ஏற்படுத்திக்

கொண்டிருக்கும்

வார்த்தைகளை

எந்த இடத்தில்

எப்படி

பயன்படுத்த

வேண்டும்

என்பதை

அறிந்து

திறமையாகக்

கையாள்பவனால்

மட்டுமே

வாழ்க்கையை

வெற்றிகரமாக

நடத்த

முடியும்

 

வார்த்தைகளுக்கு

உயிர் கொடுக்க

முடிந்தவனால்

மட்டுமே

காலத்தை

வென்று

மக்கள்

மத்தியில்

சிறப்புற்று

இருக்க

முடியும்

 

வார்த்தைகளைப்

பிறருக்கு

ஏற்றவாறு

வெளிப்படுத்தத்

தெரிந்தவனால்

மட்டுமே

சோதனைகளைக்

கடந்து

சாதனைகள்

படைக்க

முடியும்

 

வாழ்க்கையில்

உயர்ந்த நிலையை

அடைய வேண்டும்

என்றாலும் யாராலும்

அடைய முடியாததை

அடைய வேண்டும்

என்றாலும்

அடைய வேண்டியதை

அடைய வேண்டும்

என்றாலும்

வார்த்தைகள்

வலிமையானவை

என்பதை உணர்ந்து

அந்த வார்த்தைகளைத்

திறம்படப்

பயன்படுத்தத்

தெரிந்திருக்க

வேண்டும்

 

-------ஜபம் இன்னும் வரும்

 

------என்றும் அன்புடன்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------06-11-2022

------ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-890 மரணமற்ற அஸ்வத்தாமன்-22 (கிருஷ்ணனுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-890

மரணமற்ற

அஸ்வத்தாமன்-22

(கிருஷ்ணனுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

சிவன் :

துரோணரே

உங்களுக்கு என்ன

வரம் வேண்டும்

கேளுங்கள்

 

துரோணர் :

என் மனதில்

என்ன உள்ளதோ

அதை அப்படியே

எனக்கு வரமாகத்

தாருங்கள்

 

சிவன் :

மனிதன் மனதில்

உள்ளதை எல்லாம்

வழங்க வேண்டும்

என்றால்

அதற்கு ஒரு

யுகம் போதாதே

பல யுகங்கள்

தேவைப்படுமே

               

துரோணர் :

என் மனதில்

உள்ளதை எல்லாம்

நான் கேட்கவில்லை

 

எந்த வரத்தை வேண்டி

நான் தங்களை

நோக்கி இருந்தேனோ

அந்த வரத்தைத்

தான் நான்

கேட்கிறேன்

 

சிவன் :

அதை நீங்கள் வாய்

திறந்தே கேட்கலாமே

 

துரோணர் :

மனதில் நினைப்பதைத்

தரமாட்டீர்களா

 

சிவன் :

வாய் விட்டுக் கேட்காத

எந்த ஒரு வரமும்

வழங்கப்படுவதில்லையே

 

துரோணர் :

வாய் விட்டுக்

கேட்டால் தான்

வரம் கிடைக்குமா

 

சிவன் :

மனிதன் தன்னுடைய

மனதில் உள்ளதை

அப்படியே

வார்த்தையில் சொல்ல

அவனால் முடியாது

 

அப்படியே சொன்னாலும்

மாற்றித் தான்

சொல்வான்

அதுவும் தவறாகத்

தான் சொல்வான்

 

மனிதன் மனதில்

ஒன்று நினைப்பான்

அதை வார்த்தையில்

சொல்லும்போது

வேறு ஒன்றாக

மாற்றி சொல்வான்

 

மனிதன் மனதில்

என்ன நினைக்கிறானோ

அதை அப்படியே

அவனால்

சொல்ல முடியாது

 

கோடியில்

ஒருவனால் மட்டுமே

மனதில் என்ன

நினைக்கிறானோ

அதை அப்படியே

வார்த்தையில்

சொல்ல முடியும்

 

அதனால் தான்

உங்களுக்கு

என்ன வரம்

வேண்டும் என்பதை

உங்களுடைய

வார்த்தையிலேயே

கேட்கச் சொல்கிறேன்

 

மனதில் உள்ள

வரத்தை

அப்படியே கேட்டு

பெற்றுக் கொள்ளப்

போகிறீர்களா

அல்லது

மனதில் உள்ள

வரத்தை

மாற்றிச் சொல்லி

வம்பில் மாட்டிக்

கொள்ளப் போகிறீர்களா

என்பது தெரிந்து

விடும் அல்லவா

 

துரோணர் :

என்னை வம்பில்

சிக்க வைக்க

வேண்டும் என்று

நினைக்கிறீர்களா

 

சிவன் :

வரத்தைக் கேட்க

வேண்டியது

உங்களுடைய உரிமை

கொடுக்கும்

உரிமை இருந்தால்

அந்த வரத்தைக்

கொடுக்க வேண்டியது

என்னுடைய கடமை

 

கடவுளை நோக்கி

வரம் வேண்டி

தவம் இருந்த

பலபேர்

கடவுள் நேரில்

தோன்றிய போது

எதை வேண்டி தவம்

இருந்தார்களோ

அதை மறந்து

இடம் நேரம்

காலம் சூழ்நிலை

ஆகியவற்றைப்

பொறுத்தும்

கர்மவினையின்

விளைவைப்

பொறுத்தும்

தேவையில்லாத

வரத்தைக் கேட்டுப்

பெற்று சங்கடத்தில்

மாட்டிக்

கொண்டுள்ளனர்

 

-------ஜபம் இன்னும் வரும்

 

------என்றும் அன்புடன்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------06-11-2022

------ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////////

 

 

ஜபம்-பதிவு-889 மரணமற்ற அஸ்வத்தாமன்-21 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-889

மரணமற்ற

அஸ்வத்தாமன்-21

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

கிருபி :

அப்படி எல்லாம்

ஒன்றும் இல்லை

 

துரோணர் :

பெண்கள் தங்கள்

உள்ளத்தில் உள்ளதை

அவ்வளவு எளிதில்

சொல்ல மாட்டார்கள்

 

எந்த ஒன்றையும்

அவ்வளவு எளிதில்

ஒத்துக் கொள்ள

மாட்டார்கள்

 

ஆண்களை தங்கள்

பின்னால் அலையவிட்டு

வேடிக்கை பார்ப்பது தான்

அவர்களுடைய பழக்கமே

 

கிருபி :

எனக்கு அந்த

பழக்கம்

எல்லாம் இல்லை

அதிகமாக கற்பனையை

வளர்த்துக் கொள்ளாதீர்கள்

 

(என்று சொல்லி விட்டு

கிருபி திரும்பி

நடந்து சென்று

கொண்டிருந்தார்

 

துரோணர் கிருபி

என்கிறார்

கிருபி திரும்பிப்

பார்க்கிறார்)

 

துரோணர் :

கிருபி அவர்களே

நீங்கள் வரும் போது

உங்கள் முன் பக்கம்

பார்த்தேன்

இப்போது நீங்கள்

செல்லும் போது

உங்கள்

பின் பக்கம்

பார்க்கிறேன்

 

இனி நீங்கள்

எனக்கு

முன் பின்

தெரியாதவர்

கிடையாது

 

எனக்கு

முன்பின்

தெரிந்தவர்

 

(என்று துரோணர்

சொன்னதும்

வெட்கத்தால் முகம்

சிவந்த கிருபி

அந்த இடத்தை

விட்டுச் சென்று

விட்டார்)

 

துரோணர் தன்னுடைய

ஆசிரமத்தின்

எல்லைக்குள்

வந்து தவம்

செய்து

கொண்டிருப்பதை

அக்னிவேஸ்யரின்

ஆசிரமவாசி மூலமாகக்

கேள்விபட்ட கிருபர்

துரோணரைச் சந்தித்து

அவர்

மனநிலை அறிந்து

கிருபியின்

சம்மதத்தைப் பெற்று

துரோணருக்கும்

கிருபிக்கும்

திருமணம்

செய்து வைத்தார்

 

கௌதம முனிவரின்

மகனான சரத்வான்

மற்றும்

ஜலாவதி என்ற

தேவலோக அழகிக்கும்

பிறந்த கிருபிக்கும்

 

பரத்வாஜர் மற்றும்

க்ருதாசியென்னும்

அப்ஸரஸ் பெண்ணுக்கும்

பிறந்த துரோணருக்கும்

திருமணம்

இனிதே நடந்தேறியது

 

அவர்களின்

இல்லற வாழ்க்கை

மகிழ்ச்சியுடன்

தொடங்கியது

 

மகாபாரதக் கதையில்

சிவபெருமான்

அவதாரம்

எடுத்திருக்கிறார்

என்பது எத்தனை

பேருக்குத் தெரியும்

 

துரோணருக்கும்

கிருபிக்கும்

மகனாகப் பிறந்து

சிவபெருமான்

அவதாரம் எடுத்தார்

 

மகாபாரதக்

கதையில் சிவபெருமான்

எடுத்த அவதாரம்

என்ன அவதாரம்

என்பதைத் தெரிந்து

கொள்வதற்கு

துரோணரையும்

கிருபியையும்

பின் தொடருங்கள்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----24-10-2022

----திங்கட் கிழமை

 

//////////////////////////////////////////////////