May 03, 2024

தென்காசி சரித்திரம்(18)-அரியூர் மலையடிவாரத்தில் அகத்தியர் சிலை கூறும் அகத்தியர் பற்றிய உண்மைகள்-03-05-2024

 

தென்காசி சரித்திரம்(18)-அரியூர் மலையடிவாரத்தில் அகத்தியர் சிலை கூறும் அகத்தியர் பற்றிய உண்மைகள்-03-05-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

தென்காசி மாவட்டம்

சங்கரன்கோயில் தாலூகா

அரியூர்

மலையடிவாரத்தில்

எழுந்தருளியிருக்கும்

அகத்தியர் சிலை

மற்றும்

கல்வெட்டின்

மூலம்

பல்வேறு வரலாற்று

உண்மைகளையும்,

அகத்தியர் பற்றிய

உண்மைகளையும்,

அகத்தியரைப்

பற்றி அறியாத

பல செய்திகளையும்

வரலாற்று

ஆய்வாளர்கள்,

கல்வெட்டு

ஆய்வாளர்கள்,

கள ஆய்வாளர்கள்

ஆகியோரின்

மூலம்

தெரிந்து கொள்ளலாம்.

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

 

-----03-05-2024

-----வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////




May 01, 2024

ஜபம்-பதிவு-963 மரணமற்ற அஸ்வத்தாமன்-95 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-963

மரணமற்ற அஸ்வத்தாமன்-95

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

நீ உண்மையான வீரன்.அதை உன் செயலில் இருந்தே தெரிந்து கொண்டேன் நான் சொன்ன வார்த்தைகள் தவறு என்று எப்போது தைரியமாக சொன்னாயோ அப்போதே நீ வீரன் என்பது நிரூபணமாகி விட்டது

ஆகவே உன்னை சோதிப்பதற்கு தனிப்பட்ட முறையில் சோதனை வைத்து நீ வீரனா என்று சோதிக்க வேண்டிய அவசியம் இல்லை.

நான் வைத்த அனைத்து சோதனைகளிலும் நீ வெற்றி பெற்று விட்டாய். அறிவில் சிறந்தவன் என்பதைக் காட்டி விட்டாய். வீரத்தில் உயர்ந்தவன் என்பதை நிரூபித்து விட்டாய்.

பாசுபதாஸ்திரம் பெறுவதற்கு முழு தகுதி உடையவனாக இருக்கிறாய். உனக்கு பாசுபதாஸ்திரம் அளிக்கிறேன். அஸ்வத்தாமா பெற்றுக் கொள்.

அஸ்வத்தாமன் பாசுபதாஸ்திரம் சிவனிடம் இருந்து பெற்றுக் கொள்கிறேன்.சிவனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுகிறான்

சிவன்: எல்லா நலமும் பெற்று வாழ்க

(சிவன் மறைந்து விடுகிறார்.)

பாசுபதாஸ்திரத்தை தன்னால் உருவாக்கப்பட்ட அதர்வண வேதத்தின் சக்தியைக் கொண்டும்,எல்லாம் வல்ல ஈசனையும், சக்தியையும் முதற்கடவுளாக உருவேற்றி பாசுபதாஸ்திரம்  என்று சொல்லப்படும் சிவபாணத்தை உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஒரு அஸ்திரமாக அஸ்வத்தாமன் மாற்றுகிறார்.

மரணமற்ற அஸ்வத்தாமன் தயாராகி விட்டான்

 

(இங்கே ஒரு முக்கியமான விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்         

 

விஷ்ணுவுக்குரிய அஸ்திரம் நாராயண அஸ்திரம்,

பிரம்மாவிற்குரிய அஸ்திரம் பிரம்மாஸ்திரம்,

சிவனுக்குரிய அஸ்திரம் பாசுபதாஸ்திரம்,

மும்மூர்த்திகளுக்குரிய அஸ்திரங்களை வைத்திருந்தவன்

துவபாரயுகத்தில் அஸ்வத்தாமன் மட்டுமே

 

பிரம்மாஸ்திரம் கற்றவன் மனிதரில் சிறந்தவன்,

நாராயண அஸ்திரம் தெரிந்தவன் தேவர்களுக்கு சமமானவன்,

பாசுபதம் கற்றவன் தேவர்களையே அழிக்கும் வல்லமை பெற்றவன்.

துவாபர யுகத்தில்

நாராயணாஸ்திரம்,

பிரம்மாஸ்திரம்,

பாசுபதாஸ்திரம்

பெற்ற ஒரே ஒரு வீரன்

அஸ்வத்தாமன்

மட்டுமே.!

 

மகாபாரதக் கதையில்

இந்த மூன்று அஸ்திரங்களையும் வைத்திருந்தவன்

அஸ்வத்தாமன்

மட்டுமே!

 

இந்த விஷயத்தை சிந்தித்துப் பார்த்தீர்கள் என்றால்

மகாபாரதக் கதையில் அஸ்வத்தாமன்

எவ்வளவு சிறப்பு வாய்ந்தவன் என்பதையும்,

வீரத்தில் அவனுக்கு நிகர் யாரும் இல்லை என்பதையும்,

அவனுடைய வாழ்க்கை வரலாறு யாருக்கும் தெரியக் கூடாது

என்பதற்காக மறைக்கப்பட்டிருக்கிறது என்பதையும்,

தெரிந்து கொள்ளலாம்.

 

இராமாயணத்தில்

நாராயணாஸ்திரம்,

பிரம்மாஸ்திரம்,

பாசுபதாஸ்திரம்

ஆகிய மூன்று அஸ்திரங்களையும்

இராவணன் மகன்

இந்திரஜித் மட்டுமே

வைத்திருந்தான் என்பதை

நினைவில் கொள்ளுங்கள்)

 

------K.பாலகங்காதரன்

 

------01-05-2024

-----புதன் கிழமை

 

////////////////////////////////////////////////////

 

 

ஜபம்-பதிவு-962 மரணமற்ற அஸ்வத்தாமன்-94 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-962

மரணமற்ற அஸ்வத்தாமன்-94

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

சிவன்: இந்த உலகத்தில் வாழ்வதற்கு இவை எல்லாம் தேவை இல்லையா. எது தேவை என்கிறாய்

அஸ்வத்தாமன்: இந்த உலகம் நல்லவனை கெட்டவனாக்கும்

கெட்டவனை நல்லவனாக்கும்

திறமைசாலியை அழித்து விடும்

திறமையற்றவனை மேல் நிலைக்கு கொண்டு வரும்

அடிமையாக இருப்பவனை அரசாள வைக்கும்

அரசாள தகுதியானவனை கொன்று விடும்

தனக்கு பிடித்தவனுக்கு அரியணை வழங்கும்

அரியணையில் இருப்பவனை குழி தோண்டி புதைக்கும்

சேவை செய்ய நினைப்பவனை துன்பப்படுத்தும்

கொள்ளையடிப்பனுக்கு சேவையாளன் என்ற பட்டம் கொடுக்கும்

சிந்தனையற்றவனை மதிக்கும்

சிந்திப்பவை நிந்திக்கும்

போட்டுக் கொடுப்பவனை, காட்டிக் கொடுப்பவனை மதிக்கும்

உண்மையாக இருப்பவன் வாழ்வை அழிக்கும்

நேர்மையாக வாழ்பவனை துன்பத்தில் ஆழ்த்தும்

பொய்யாக வாழ்பவனை இன்பத்தில் திளைக்க வைக்கும்

தனக்கு பிடித்தவன் கெட்டவனாக இருந்தாலும் நல்லவன் என்றே சொல்லும்

தனக்கு பிடிக்காதவன் நல்லவனாக இருந்தாலும் கெட்டவன் என்றே சொல்லும்

சமுதாயம் கேடிக்கையானது

அதை புரிந்து கொண்டவர்கள் இந்த சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

புரிந்துகொள்ளாதவர்கள் வாழ முடியாமல் தவிக்கிறார்கள்

இவ்வளவு தான் உலகம்

இறைவா என்னை சோதித்துப் பார்த்து சோதனையில் நான் வெற்றி பெற்றால் பாசுபதாஸ்திரம் தருவதாக சொன்னீர்கள். எப்போது என்னை சோதித்துப் பார்ப்பீர்கள்.

அஸ்வத்தாமா உன் சோதிக்கவில்லை என்று யார் சொன்னார்கள், இவ்வளவு நேரம் உன்னை சோதித்துக் கொண்டு தானே இருக்கிறேன். உன் அறிவை சோதித்தேன்

அஸ்வத்தாமன்: என் வீரத்தை சோதிக்கவில்லையே!

சிவன்: வந்திருப்பது கடவுள் என்று தெரிந்திருந்தும், கடவுளே தவறாக சொன்னாலும், தவறை தவறு என்று தைரியமாக சொன்னாயே அதில் உன் வீரம் தெரிந்தது.

ஒருவருடைய அறிவையும், வீரத்தையும் சோதிப்பதற்கு சோதனைகள் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. சிறிது நேரம் அவரிடம் பேசிக் கொண்டு இருந்தாலே போதும் அவர் அறிவாளியா, வீரம் நிறைந்தவரா என்பது தெரிந்து விடும்

வீரம் இல்லாதவர்கள் தான், தான் வீரன் வீரன் என்று தன்னை சொல்லிக் கொண்டு திரிவார்கள். அவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்களும் அவர் வீரன் என்று கூச்சல் போடுவார்கள். அத்தகையவர்களை சோதித்துப் பார்க்க வேண்டும்

உண்மையான வீரன், தான் வீரன் என்று சொல்லிக் கொண்டு அலைந்து கொண்டிருக்க மாட்டான். வாய்ச்சொல்லில் வீரத்தைக் காட்ட மாட்டான். செயலில் காட்டுவான்.

------K.பாலகங்காதரன்

 

------01-05-2024

-----புதன் கிழமை

 

////////////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-961 மரணமற்ற அஸ்வத்தாமன்-93 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-961

மரணமற்ற அஸ்வத்தாமன்-93

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

சிவன்: கடவுளின் பெயரால் நடக்கும் இத்தகைய அக்கிரம அநியாயங்களை நிறுத்த என்ன செய்ய வேண்டும்.

இடம், நேரம், காலம் ,சூழ்நிலை ஆகியவற்றைப் பொறுத்து மனிதன் செய்த செயலானது கர்மவினையாக உருவாகிறது என்பதையும்,

 

அந்த கர்மவினையானது இடம், நேரம், காலம், சூழ்நிலை ஆகியவற்றைப் பொறுத்து விளைவுகளாக வெளிப்படுகிறது என்பதையும்,

 

செய்த செயலுக்குரிய கர்மவினையின் விளைவிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்பதையும்,

 

கர்மவினையின் விளைவுகளை கண்டிப்பாக அனுபவித்துத் தான் ஆக வேண்டும் என்பதையும்,

 

 

கடவுள் கர்மவினையின் விளைவுகளால் ஏற்படக் கூடிய

கஷ்டங்களின் தாக்கத்தைத் தான் குறைக்க முடியும்,

கஷ்டத்தைத் தாங்கக் கூடிய சக்தியையும் தர முடியும் என்பதையும்,

 

மனிதன் உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

கஷ்டம் எப்படி வருகிறது என்பதை மனிதன் உணர்ந்து கொண்டால் கடவுளை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள், கடவுள் மேல் வெறி கொண்டவர்கள் இந்த உலகத்தில் வாழ முடியாது.

கஷ்டம் எப்படி வருகிறது என்பதை மனிதன் உணர்ந்து கொண்டால் கஷ்டம் வந்தால் கடவுளைத் திட்ட மாட்டான் கடவுளை குறை சொல்ல மாட்டான். கடவுளை குற்றம் சொல்ல மாட்டான். இல்லை என்றால் சின்ன கஷ்டம் வந்தாலும் மனிதன் கடவுளைத் தான் குற்றம் சொல்வான். கடவுளை குற்றவாளி ஆக்குவான்.

கஷ்டம் எப்படி வருகிறது என்பதை மனிதன் உணர்ந்து கொண்டால் மீண்டும் கஷ்டம் வராமல் இருப்பதற்கு என்ன செயல்களைச் செய்ய வேண்டுமோ அந்த செயல்களை மனிதன் செய்வான்.

சிவன்: அஸ்வத்தாமா! நீ பிறப்பால் பிராமணன் அதனால் தான் நீ அறிவில் சிறந்தவனாக இருக்கிறாய், தகுதியில் உயர்ந்தவனாக இருக்கிறாய், திறமை படைத்தவனாக இருக்கிறாய் பாசுபதாஸ்திரம் மட்டுமல்ல எந்த ஒன்றையும் அடையும் தகுதி உனக்கு இருக்கிறது

அஸ்வத்தாமன்: இறைவா ஒருவருடைய அறிவு, தகுதி, திறமை என்பது பிறப்பால் வருவது கிடையாது, இந்த உலகத்தில் பிறந்த மனிதர்கள் அனைவருக்கும் அறிவு, தகுதி, திறமை இருக்கிறது. அது ஆர்வம், ஆற்றல், உழைப்பு ஆகியவற்றால் வெளிப்படும்..

இந்த உலகத்தில் உள்ள எத்தனையோ பேர் தன்னுடைய அறிவு, தகுதி, திறமையை வெளிப்படுத்துவதற்கு ஆர்வம், ஆற்றல், உழைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தியும் தேவையான வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தங்களுடைய அறிவு, தகுதி, திறமையை வெளிப்படுத்தாமலேயே இறந்து விடுகின்றனர்.

ஒரு சில பேர்கள் தான் இந்த உலகத்தில் பல சோதனைகளைக் கடந்து, துன்பங்களைக் கடந்து, துயரங்களைக் கடந்து, கஷ்டங்களைக் கடந்து தங்கள் அறிவு, தகுதி, திறமையை வெளிப்படுத்தி மேல் நிலைக்கு வருகின்றனர்.

ஒரு சில பேர்களை இந்த உலகம் தன்னுடைய சுய ஆதாயத்திற்காக அறிவு, தகுதி, திறமை இல்லாமல் இருப்பவர்களையும், அறிவு, தகுதி, திறமை கொண்டவனாக இருக்கிறான் என்பதை இந்த உலகம் ஏற்றுக் கொள்ளும்படிச் செய்து, மேல் நிலைக்குக் கொண்டு வருகிறது.

அறிவு, தகுதி, திறமை இல்லாவிட்டாலும் சமுதாயத்தின் சுயலாபத்திற்காக மேல் நிலைக்குக் கொண்டு வரப்பட்ட சிலர் இந்த உலகத்தில் இருக்கத் தான் செய்கிறார்கள்.

ஒருவருடைய பிறப்பை வைத்து, ஒருவருடைய அறிவு, தகுதி, திறமை ஆகியவற்றை நிர்ணம் செய்யக் கூடாது இறைவா

 

------K.பாலகங்காதரன்

 

------01-05-2024

-----புதன் கிழமை

 

////////////////////////////////////////////////////

 

 

 

 

ஜபம்-பதிவு-960 மரணமற்ற அஸ்வத்தாமன்-92 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-960

மரணமற்ற அஸ்வத்தாமன்-92

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

அறிவில்லாத மனிதர்களும் பாவங்கள் கழிந்து விட்டது என்றும்,

பாவம் செய்தால் அதை கழிப்பதற்கு கடவுள் இருக்கிறார் என்றும், பாவத்திற்கு அஞ்சாமல் தொடர்ந்து பாவத்தை செய்து கொண்டே இருக்கிறார்கள்.

 

கடவுளை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள் இந்த உலகத்தில் பிறந்த எந்த ஒரு மனிதனும் செய்த செயலுக்குரிய விளைவை அனுபவித்தே ஆக வேண்டும்.

அது நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி.மனிதன் அனுபவித்தே ஆக வேண்டும் என்பதை மனிதனுக்கு சொல்வதில்லை. மனிதர்கள் இதை அறிந்து கொள்ளாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

இந்த உலகத்தில் உள்ள அனைத்துமே ஒரு குறிப்பிட்ட நியதிக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறது. இது கடவுளுக்கும் பொருந்தும்

கடவுளால் ஒன்றை ஒன்று மட்டுமே செய்ய முடியும்.

கஷ்டத்தின் தாக்கத்தைக் குறைப்பார்,

கஷ்டத்தை தாங்கும் சக்தியை கொடுப்பார்.

இந்த இரண்டைத் தான் கடவுள் கொடுப்பார்.

இந்த இரண்டு செயல்களைத்தான் கடவுளால் செய்ய முடியும்.

 

கடவுளை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள் போல் கடவுள் மேல் வெறி கொண்டவர்களும் மிகவும் ஆபத்தானவர்கள்.

இவர்கள் மனிதத் தன்மையுடன் இருப்பதில்லை. மனிதத்தன்மை என்றால் என்ன என்றே அவர்களுக்குத் தெரியாது. வெறி பிடித்த நிலையில் இருப்பார்கள். இவர்களை மாற்றவும் முடியாது திருத்தவும் முடியாது.

தாங்கள் சொல்வது தான் சரி என்ற நிலையில் இருப்பார்கள். தாங்கள் செய்வது தான் சரி என்ற நிலையில் இருப்பார்கள். பைத்தியம் முற்றிய நிலையில் இருந்தால் எப்படி இருக்கும். அப்படி இருப்பார்கள்.

தாங்கள் வணங்கும் கடவுள் தான் உண்மையானது மற்றவர்கள் வணங்கும் கடவுள் பொய்யானது.

தன்னுடைய கடவுள் தான் உயர்வானது. மற்ற கடவுள் தாழ்வானது

தன்னுடைய கடவுளுக்குரிய கோயிலில் தான் கடவுள் இருக்கிறார். மற்ற கடவுளுக்குரிய கோயிலில் கடவுள் இல்லை.

தன்னுடைய கடவுள் தான் கடவுள். மற்ற கடவுள் எல்லாம் பேய் பிசாசு.

 

தன்னுடைய கடவுளை வணங்கினால் மட்டுமே கடவுளுடன் கலக்க முடியும். மற்ற கடவுளை வணங்கினால் கடவுளுடன் கலக்க முடியாது என்று கடவுள் மேல் வெறி கொண்டவன் பேசி திரிந்து கொண்டிருக்கிறான்.

தான் வணங்கும் கடவுள் தவிர்த்து மற்ற கடவுள் மேல் வெறுப்பு கொண்டு அலைந்து திரிந்து கொண்டிருக்கிறான்.

தன்னுடைய கடவுளுக்காக எத்தகைய செயலையும் செய்யத் தயாராக இருக்கிறான்.

அதற்காக எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கிறான்.

தன்னுடைய கடவுளை இகழ்ந்தவனை அழிப்பதற்கும் தயாராக இருக்கிறான்.

------K.பாலகங்காதரன்

 

------01-05-2024

-----புதன் கிழமை

 

////////////////////////////////////////////////////

 

 

ஜபம்-பதிவு-959 மரணமற்ற அஸ்வத்தாமன்-91 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-959

மரணமற்ற அஸ்வத்தாமன்-91

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

சிவன்: தெரிந்தும் சில பேர் பாவங்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்களே!

அஸ்வத்தாமன்: மனிதர்கள் அனைவரும் செய்வதில்லை ஒரு சில மனிதர்கள் மட்டும் தான் பாவங்களை துணிந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

சிவன்: பாவங்களில் மிகப்பெரிய பாவம் கடவுளின் பெயரைச் சொல்லி அக்கிரம அநியாயங்களைச் செய்து கொண்டிருப்பது.

நான் சொல்வது அனைத்தையும் தவறு என்று சொல்வாயே! இதுவும் தவறு தானே!

அஸ்வத்தாமன்: இறைவா நீங்கள் சொல்வதில் தவறு இருந்தால் மட்டுமே நான் தவறு என்று சொல்கிறேன். சரியாக இருப்பதை நான் ஏன் தவறு என்று சொல்லப் போகிறேன்.

மனிதர்களில் ஒரு சில பேர்கள் மட்டும் தான் கடவுள் பெயரைச் சொல்லி அக்கிரமம்,அநியாயம் செய்து கொண்டிருக்கிறார்கள். மனிதர்கள் அனைவரும் கடவுள் பெயரைச் சொல்லி அக்கிரமம், அநியாயம் செய்வதில்லை

கடவுள் மேல் பக்தி கொண்டவன் கடவுளை கும்பிட்டு விட்டு சென்று விடுகிறான்

கடவுளை வைத்துப் பிழைப்பு நடத்துபவன் மக்களை ஏமாற்றி வாழ்க்கையை நடத்துகிறான்.

கடவுள் மேல் வெறி கொண்டவன் வெறியனாக மாறி மற்றவர்களுக்கு கெடுதல்களைச் செய்கிறான்.

கடவுள் மேல் பக்தி கொண்டவன் கடவுள் பெயரைச் சொல்லி அக்கிரமம், அநியாயம் செய்வதில்லை.

கடவுளை வைத்துப் பிழைப்பு நடத்துபவன், கடவுள் மேல் வெறி கொண்டவன் ஆகியோர் தான் கடவுள் பெயரைச் சொல்லி அக்கிரமம், அநியாயம் செய்து கொண்டிருக்கிறார்கள்

உண்மையான பக்தி கொண்டவர்கள் கடவுள் இருக்கிறார் என்று கடவுளை நம்புகிறார்கள் கடவுளை வணங்குகிறார்கள் தங்களுக்கு என்ன வேண்டுமோ அதை கடவுளிடம் கேட்டு விட்டு சென்று விடுகிறார்கள்.

கடவுளுக்கு தங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அவ்வளவு பணம் செலவு பண்ணி பூஜைகள் செய்கிறார்கள். விழாக்கள் கொண்டாடுகிறாரகள் தங்கள் வேலையைப் பார்க்க போய் விடுகிறார்கள்.

கடவுள் மேல் பக்தி கொண்டவர்களுக்கு கடவுள் இருக்கிறார் என்று நம்பிக்கை கொண்டு இருக்கிறார்கள். கடவுளை வணங்கினால் அவர் என்றாவது ஒரு நாள் தாங்கள் கேட்டதைக் கொடுப்பார் என்று நம்புகிறார்கள். கடவுளை வணங்கி விட்டு தங்கள் வேலையை பார்க்க சென்று விடுகிறார்கள்.

ஆனால்,

கடவுளை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அவர்கள் தாங்கள் வாழ்வதற்காக எத்தகைய செயலையும் துணிந்து செய்யக் கூடிய நிலையில் இருக்கிறார்கள்.

கடவுளை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள்

மக்களுடைய ஏழ்மையையும், அறியாமையையும்

தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

 

கடவுளை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள்

கடவுளை வணங்கினால்

கடவுள் உங்கள் பாவங்களை மன்னிப்பார்.

கடவுள் உங்கள் பாவங்களைக் கழிப்பார்.

கடவுள் உங்கள் பாவங்களை எரிப்பார்

என்று நாடகம் போட்டுக் கொண்டு

பாவங்களைக் கழிப்பதாக சொல்லி

நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

 

------K.பாலகங்காதரன்

 

------01-05-2024

-----புதன் கிழமை

 

////////////////////////////////////////////////////

 

 

ஜபம்-பதிவு-958 மரணமற்ற அஸ்வத்தாமன்-90 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-958

மரணமற்ற அஸ்வத்தாமன்-90

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

சிவன்: பாசுபதாஸ்திரம் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறாய்

நீ சொன்னது போல் பாசுபதாஸ்திரத்தை உனக்கு நான் தரவேண்டுமென்றால் உன்னை நான் சோதித்துப் பார்க்க வேண்டும் அல்லவா?

அஸ்வத்தாமன்: கடவுள் மனிதர்களை சோதித்துப் பார்க்கிறேன் என்று சொல்லாவிட்டாலும், அதிகமாக சோதித்துப் பார்ப்பார். அந்த கஷ்டத்தையே மனிதர்களால் தாங்க முடியாது.

இப்போது சோதித்துப் பார்க்கப் பார்க்கப் போகிறேன் என்று சொல்லி விட்டீர்கள். அந்த சோதனைகளை சாதாரண மனிதனாக உள்ள என்னால் தாங்க முடியுமா

சிவன்: மனிதர்களுக்கு கஷ்டம் வந்தால் இந்த கஷ்டத்திற்குக் காரணம் கடவுள் தான் என்கிறார்கள். கடவுளையே குற்றம் சொல்கிறார்கள். கடவுளையே குற்றவாளி ஆக்குகிறார்கள்.

பிறரையே குற்றம் சொல்லி பழக்கப்பட்டவர்கள் அல்லவா மனிதர்கள். அதனால் கடவுளை குற்றம் சொல்லி திரிந்து கொண்டிருக்கிறார்கள்.

தங்களுக்கு கஷ்டம் ஏன் வருகிறது, எப்படி வருகிறது, எதற்காக வருகிறது,  என்ன காரணத்திற்காக வருகிறது என்று மனிதர்கள் என்றாவது சிந்தித்துப்                 பார்த்து இருக்கிறார்களா.

அப்படி சிந்தித்துப் பார்த்து இருந்தால் அடுத்து கஷ்டம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து இருப்பார்கள்.

அஸ்வத்தாமன்: இறைவா நீங்கள் சொல்வது தவறு.

சிவன்: எதைத் தவறு என்கிறாய். நான் எதைச் சொன்னாலும் தவறு என்கிறாய்.

அஸ்வத்தாமன்: கஷ்டம் ஏன் வருகிறது என்று  மனிதர்கள் அனைவரும் சிந்திக்கவில்லை என்று நீங்கள் சொல்வது தவறு.

கஷ்டம் ஏன் வருகிறது என்பதை சிந்தித்துப் பார்த்தவர்கள் தான் உண்மையை உணர்ந்து இருக்கிறார்கள்.

கஷ்டம் ஏன் வருகிறது என்பதை உணர்ந்து கொண்டவர்கள் தான் சித்தர்கள் ஆகி இருக்கிறார்கள்.

கஷ்டம் ஏன் வருகிறது என்பதை உணர்ந்து கொண்டவர்கள் தான் ஞானம், சமாதி, முக்தி அடைந்து இருக்கிறார்கள்.

கஷ்டம் ஏன் வருகிறது என்பதை உணர்ந்து கொண்டவர்கள் தான் கடவுளோடு இரண்டறக் கலந்து ஒன்றுக்குள் ஒன்றாகி இருக்கிறார்கள்.

சிவன்: ஒரு சில மனிதர்கள் தான் கஷ்டம் எப்படி வருகிறது என்பதை உணர்ந்து இருக்கிறார்கள். மீண்டும் கஷ்டப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்கான செயல்களைச் செய்து இருக்கிறார்கள்.

பெரும்பாலான மனிதர்கள் கஷ்டம் எப்படி வருகிறது என்பதை அறியாமல் தானே இருக்கிறார்கள்.

அஸ்வத்தாமன்: கடவுளை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள், கடவுள் மேல் வெறி கொண்டவர்கள் தான் இதற்குக் காரணம்.

மனிதர்களுக்கு கஷ்டம் எப்படி வருகிறது என்பதை சாதாரண மக்கள் அறிந்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். அதற்காக மனிதர்களை அறியாமையில் வைத்து இருக்கிறார்கள்.

சிவன்: நல்லது செய்தால் நல்லது நடக்கும். கெட்டது செய்தால் கெட்டது நடக்கும் என்பதும், தாங்கள் செய்த செயலுக்குரிய விளைவு தான் கஷ்டமாக வருகிறது என்பதும் மனிதர்களுக்குத் தெரியாதா?

அஸ்வத்தாமன்: தெரிந்திருந்தால் அவர்கள் ஏன் பாவங்களைச் செய்கிறார்கள்.

------K.பாலகங்காதரன்

 

------01-05-2024

-----புதன் கிழமை

 

////////////////////////////////////////////////////