November 11, 2011

பிரணவ தவம்




                              பிரணவ தவம்


பிரணவ தவம் உலகின் பல்வேறு நாடுகளில் பலவிதமாக செய்யப்படுகிறது

பிரணவ தவத்தை திபெத்தியர்கள் செய்கிறார்கள் அதில் சிறிது மாற்றங்கள் செய்யப்பட்டு இந்தியாவில் செய்யப்படுகிறது இந்தியர்கள் அதனை கற்று தங்களுக்கு ஏற்ற விதத்தில் மாற்றி செய்கிறார்கள்


பிரணவ தவம் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களால் மட்டுமே செய்யப்படுகிறது இந்த தவம் குறைந்த எண்ணிக்கை கொண்ட மனிதர்களால் மட்டுமே செய்யப்படக் காரணம் இந்த தவத்தின் சிறப்புகள் மற்றும் அதன் மகிமைகள் பல பேருக்கு தெரியாத காரணத்தால் தான்
பிரணவ தவத்தை கீழ்க்கண்ட குறியீடுகள் மூலம் சொல்லலாம்

ஓம் காரம் எழுச்சி------- பிரணவம்
ஓம் தான் பிரணவம்
ஓம் என்ற சொல்லின் உட் பொருள் தான் பிரணவம்
பிரணவம் தான் இறைநிலையின் அடையாளம் ஓம் ------ம்----?---------ம்

 பிரணவ தவம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்

1 ஆன்மா விரிவடையும் தன்மையைப் பெறுகிறது
2 ஆன்மா பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளும் சக்தியைப் பெறுகிறது
3 ஆன்மா பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டு பிரபஞ்சத்தில் உள்ள ரகசியங்களை அறிந்து கொள்ளும் படி செய்கிறது
4 நம் ஆன்மாவுடன் மற்ற ஆன்மாக்கள் இணக்கமாக செல்லும் நிலையைப் பெறுகிறது

பிரணவ தவம் செய்யும் பொழுது கடைபிடிக்க வேண்டியவை
பிரணவ தவம் அதிகாலை 03.00 மணியிலிருந்து அதிகாலை 08.00 மணிவரை செய்யலாம்
பிரணவ தவம் அதிகாலை 03.00 மணியிலிருந்து அதிகாலை 05.00 மணிவரை செய்வது உத்தமம்
பிரணவ தவம் யாரும் இல்லாத தனி அறையில் செய்ய வேண்டும்
தவம் செய்வதற்கு முன் காப்பு மந்திரம் போட வேண்டும்
காப்பு மந்திர்ம் தெரியாதவர்கள் திக்கு கட்டு உடல் கட்டு போன்ற கட்டு மந்திரங்களை கண்டிப்பாக  போட வேண்டும்


பிரணவ தவம் செய்யும் முறை
பிரணவ தவம் செய்யும் முறையில் இரண்டு படிநிலைகள் உள்ளன

படிநிலை -1
1 முதலில் தனி அறையில் அமர வேண்டும்
2 பிறகு தன்னைச் சுற்றி காப்பு மந்திரம் போட வேண்டும்
3 காப்பு மந்திரம் தெரியாதவர்கள் தன்னைச் சுற்றி கட்டு மந்திரம் போட வேண்டும்

4 மூலாதாரத்தில் மனதை செலுத்தி ஓம் என்று உச்சரித்து மூச்சை இழுத்துக் கொண்டே துரியம் வரை    செல்ல வேண்டும்
5 மூச்சை விட்டுக் கொண்டே துரியத்திலிருந்து மூலாதாரம் வரை வர வேண்டும்
6 மேலே சொன்னபடி தொடர்ந்து 10 முறை செய்ய வேண்டும்

மூலாதாரம்----முதல்------- துரியம்----வரை----------ஓம்------10 முறை
 துரியம்-------முதல்--------மூலாதாரம்---வரை
7  அதைப் போலவே மூலாதாரத்தில் மனதை செலுத்தி ஓம் என்று உச்சரித்து மூச்சை இழுத்துக் கொண்டே துவாத சாங்கம் வரை செல்ல வேண்டும்
8  மூச்சை விட்டுக் கொண்டே துவாதசாங்கத்திலிருந்து  மூலாதாரம் வரை வர வேண்டும்
9 மேலே சொன்னபடி தொடர்ந்து 10 முறை செய்ய வேண்டும்
மூலாதாரம்-----முதல்------துவாத சாங்கம்---வரை----ஓம் ------10 முறை
துவாதசாங்கம்---முதல்---- மூலாதாரம்-------வரை

மேற்கண்ட செயல்களை எப்படி செய்தோமோ அப்படியே கீழ்க்கண்ட செயல்களையும் செய்ய வேண்டும்
மூலாதாரம்------முதல்-----சக்தி களம்-----வரை-----ஓம் ------10 முறை
சக்தி களம்------முதல்-----மூலாதாரம்------வரை
மூலாதாரம்-----முதல்------சிவ களம்-----வரை------ஓம் -----10 முறை
சிவ களம்------முதல்----- மூலாதாரம்----வரை
மூலாதாரம்------முதல்-----துரியம்------வரை--------ஓம் -----10 முறை
துரியம்----------முதல்-----மூலாதாரம்--வரை

படி நிலை 2
1  மூலாதாரத்திற்கும் துரியத்திற்கும் கம்பி போல் ஒரு இணைப்புக் கொடுத்து முதலில் சூக்கும் சரிரீத்த உடலின் இருபுறமும் மூன்று அடி அகலம் வரை விரிக்க வேண்டும்
2  பிறகு வீட்டு அளவு சூக்கும சரிரீரத்தை விரிக்க வேண்டும்
3  பிறகு ஊர்  அளவு சூக்கும சரிரீரத்தை விரிக்க வேண்டும்
4  பிறகு  மாநில அளவு நாடு அளவு சூக்கும சரிரீரத்தை விரிக்க வேண்டும்     
5  சூக்கும சரிரீரம் விரிந்த நிலையிலேயே தவம் செய்ய வேண்டும்
6  தவத்தினை முடிக்கும் போது நாடு அளவு மாநில அளவு ஊர்  அளவு வீட்டு அளவு உடலைச் சுற்றி மூன்று அடி இறுதியாக துரியம் வந்து தவத்தை நிறைவு செய்ய வேண்டும்
பிரணவ தவத்தை செய்யும் போது சூக்கும உடலை உடலுக்கு மேலே கொண்டு சென்று பிரபஞ்சத்தில் கலக்கிறோம்  அதைப் போல பக்க வாட்டில் சூக்கும உடலை விரித்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்கிறோம்


சூக்கும உடலை பிரபஞ்சத்தில் இணைத்து தவம் இயற்றுவதால் பிரபஞ்சத்தில் உள்ள உயிர்களுடன் இணக்கமாக செல்லும் தன்மையை சூக்கும உடல் பெறுகிறது


சூக்கம உடலில் பிரபஞ்ச ரகசியங்கள் அனைத்தும் பதிவாகி விடுகிறது காலம் வரும் போது வெளிப்படுகிறது


பிரணவ தவம் சோதித்து அறியும் முறை
நாம் புதிதாக ஒரு இடத்துக்குச் செல்கிறோம் நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களும் நமக்கு அறிமுகம் ஆகாதவர்கள் என்று வைத்துக் கொள்வோம்
அந்த இடத்தில் பிரணவ தவம் பண்ணும் பொழுது நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நமக்கு நெருங்கிய நண்பர்கள் போலவும் நாம் சொல்லும் வேலைகளைச் செய்பவர்களாகவும் நமக்கு அடங்கி நடப்பவர்களாகவும் இருப்பார்கள்

இதிலிருந்து பிரணவ தவத்தின் சக்தி நமக்கு அதிகரித்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்


ஓரே ஒரு எச்சரிக்கையை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் பிரணவ தவத்தை அதிகமாக பண்ணக் கூடாது ஏனென்றால் மனம் பித்து பிடித்து விடும் சித்த பிரமை வந்தது போல் ஆகிவிடும்


எனவே பிரணவ தவத்தை ஒரு அளவோடு பண்ணுவது அனைவருக்கும் நலம்









No comments:

Post a Comment