November 11, 2011

பதி--பசு--பாசம்


                 பதி--பசு--பாசம்
ஆன்மீக உலகில் பயன்படுத்தப்படும் மிகவும் முக்கியமான ஒரு வார்த்தை பதி - பசு -பாசம் ஆகும்
பதி என்றால் கடவுள் அதாவது பரமாத்மா
பசு என்றால் ஆன்மா உயிர் அதாவது ஜீவாத்மா
பாசம் என்றால் ---- ஜீவாத்மாவை பரமாத்மாவிடம் இணைய விடாமல் தடுக்கும் ஆணவம்--கன்மம் --மாயை என்ற மும்மலங்கள்


இதனைத் திருமூலர் கீழ்க்கண்ட பாடலின் மூலம் விளக்குகிறார்
        ”"""ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்
              ஆய பசுவும் அடலே றெனநிற்கும்
              ஆய பலிபீட மாகுநற் பாசமாம்
              ஆய அரனிலை யாய்ந்துகொள் வார்கட்கே””””””””””
                                                                                -------திருமந்திரம் -----திருமூலர்--------

சிவன்--நந்தி---பலிபீடம்
இந்த பாடலின் தத்துவத்தை நாம் எளிதாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் கோயிலில் உள்ள ஒரு அமைப்பை எடுத்துக் கொள்வோம்
சிவன் கோயிலில் சிவன் சிலை இருக்கும்
நேர் எதிரே நந்தி இருக்கும்
நந்திக்குப் பின்புறம் பலிபீடம் இருக்கும்

இந்த அமைப்பை சிவன் கோயிலுக்கு சென்ற அனைவரும் பார்த்திருப்பீர்கள் அதனை நம் மனக்கண் முன்னே கொண்டு வருவோம்
“”””””ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்”””””””
சிவன் கோயிலில் உள்ள சிவலிங்க மூர்த்தம் தான் பதி ஆகும்


“””””””ஆய பசுவும் அடலே றெனநிற்கும்””””””””
சிவலிங்கத்துக்கு எதிராக அதற்கு முன்னே உள்ளே வலிமை மிக்க காளை தான் ஜீவாத்மாவாகிய பசு ஆகும்

“”””””””ஆய பலிபீட மாகுநற் பாசமாம்””””””””
இந்த காளையாகிய நந்திக்குப் பின்னாக வட்ட வடிவில் கல் ஒன்று அமைந்திருக்கும் அது தான் பலிபீடம் எனப்படும் இந்த பலிபீடமே பாசம் ஆகும்


“””””””””ஆய அரனிலை யாய்ந்துகொள் வார்கட்கே””””””””””
நம்முடைய உலக பந்தங்களை அதாவது பாசத்தை பலிபீடத்தில் வைத்து அழித்து விட்டால் அல்லது எரித்து விட்டால் ஜீவாத்மாவாகிய பசு பரமாத்வாகிய சிவனுடன் இணைகிறது
பதியாகிய சிவனை பசுவாகிய ஜீவாத்மா இணைய வேண்டும் என்றால் பாசமாகிய மும்மலங்கள் விலக வேண்டும் என்பதைக் குறிக்க அமைக்கப் பட்டதே சிவன்-நந்தி-பலிபீடம்

பதி-பசு-பாசம் என்ற மூன்றுக்கும் இடையே உள்ள தொடர்பை தத்துவத்தை ரகசியத்தை யார் ஒருவர் அறிந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு மரணம் என்பது இல்லை பிறப்பு இறப்பு என்ற சுழலில் சிக்காமல் பிறவிப் பெருங்கடலில் சிக்கி துன்புறாமல் ஞானம் அடைவர் என்கிறார் திருமூலர்
நந்தியின் காதுகளில் சொல்லுவது
சிவன் கோயிலில் நடக்கும் மற்றொரு செயலின் ரகசியத்தை இப்பொழுது பார்ப்போம்
சிவன் கோயிலில் நந்தியின் காதுகளில் சிலர் ஏதோ முணுமுணுப்பார்கள் நந்தியின் காதுகளில் நமக்கு என்ன தேவையோ அதை சொன்னால் நமக்கு தேவையானவை கிடைக்கும் என்பது ஐதிகம்

இதன் அர்த்தம் என்னவென்றால்
நாம் பிராணாயாமம் வாசியோகம் போன்ற மூச்சுப் பயிற்சிகளைச் செய்து மூலாதாரத்தில் அடைபட்டுக் கிடக்கும் அபானன் எனப்படும் மலக்காற்றோடு உள்ளே இழுக்கப்படும் பிராணன் எனப்படும் உயிர்க் காற்றைக் கலந்து ஆற்றல் மிக்க காற்றாக்கி

மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி ஆறாதாரங்களைத் துளைத்து மேலேற்றி பிரம்மரந்திரத்தில் உள்ள சிவனுடன் இணைக்க வேண்டும்
அவ்வாறு இணைத்தோமானால் அதாவது ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைந்தால் நாம் என்ன நினைக்கிறோமோ அது தான் நடக்கும் என்பது தான் அர்த்தம்

இருப்பு ---இயக்கம்-----உணர்வு
இந்த பதி--பசு--பாசம் என்ற மூன்றை சித்தாந்தவாதிகள் இருப்பு-- இயக்கம்-- உணர்வு என்ற மூக்கூறாக்கி கூறுகின்றனர்
இந்த இருப்பு நிலையைத் தான் கிறிஸ்தவர்கள் பிதா என்றும்

இருப்பு நிலை அசைந்து உண்டாகும் நுண்ணலையான விண் என்று சொல்லப்படக்கூடிய உயிரை கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவி என்றும்
உணர்வு நிலையான மனதை கிறிஸ்தவர்கள் சுதன் என்றும் கூறுகின்றனர்

இதனை ஒரு அட்டவணையின் மூலம் உணர்ந்து கொள்ளலாம்
ஆன்மீகம் ------ சித்தாந்தவாதிகள் ----- கிறிஸ்தவர்கள்
பதி                                            இருப்பு                                          பிதா
பசு                                             இயக்கம்                                       பரிசுத்த ஆவி
பாசம்                                      உணர்வு                                        சுதன்

பதி-பசு-பாசம் என்பதைப் பற்றி திருமூலர் பல்வேறு பாடல்களின் மூலம் விளக்குகிறார் அதில் பதி -பசு பாசம் மூன்றினுக்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றி திருமூலர் கூறும் பாடல் ஒன்றைப் பற்றி பார்ப்போம்

   
””””    "  பதிபசு பாசம் எனப்பகர்; மூன்றிற்
               பதியினைப் போற்பசு பாசம் அனாதி
               பதியினைச் சென்றது காப்பசு பாசம்
               பதியணு கிற்பசு பாசம் நில்லாவே”””””””
                                                                                      ------திருமந்திரம்--திருமூலர்-----

””    பதிபசு பாசம் எனப்பகர்; மூன்றிற்
     பதியினைப் போற்பசு பாசம் அனாதி””””””
ஆன்மீக உலகில் பதி-பசு-பாசம் என்ற மூன்று உண்டு இந்த மூன்றைப் பற்றி ஆராய்ந்தோமானால் பதி எனப்படுகின்ற பரமாத்மா எப்படி ஆதி நிலையாக, இருப்பு நிலையாக இருக்கிறதோ அதைப் போலவே பசு எனப்படுகின்ற ஜீவாத்மாவும் பாசமும் அனாதியே ஆகும்
அது எப்படி என்றால் ஆதிநிலை, முதல்நிலை, மூலநிலை, இருப்பு நிலை என்று சொல்லப்படுவது பதி எனப்படுகின்ற பரமாத்மா

இருப்பு நிலை அசைந்து நுண்ணலையான விண் என்று சொல்லப்படுகின்ற பசு ஆகிய ஜீவாத்மா உண்டாகிறது

இருப்பு நிலையும் இயக்க நிலையும் இணைந்து உண்டாவது தான் இந்த பிர்பஞ்ச தோற்றங்கள் எல்லாம் இது தான் பாசம் எனப்படுகிறது
இருப்பு நிலையிலிருந்து தான் பசு பாசம் இரண்டும் உண்டாவதால் அல்லது இருப்பு நிலையே இயக்க நிலையாக விரிவடைவதால் பதி எப்படி அநாதியோ பசு பாசம் இரண்டும் அநாதியே ஆகும்


””   பதியினைச் சென்றது காப்பசு பாசம்
     பதியணு கிற்பசு பாசம் நில்லாவே”””””””
பதி பாசம் என்றால் என்னவென்றும் அதில் உள்ள ரகசியங்கள் என்னவென்றும் உணர்ந்து கொண்டு இந்த உலக மாயையிலிருந்து விடுபட்டு ஜீவாத்மாவை பரமாத்மாவுடன் இணைத்து விட்டால் பிறப்பு இறப்பற்ற நிலை உருவாகி விடும் முக்தி நிலை உருவாகி விடும்
இல்லையென்றால் மாயையில் அகப்பட்டு துன்பச் சகதியில் சுழன்று பிறப்பு, இறப்பு என்ற மாயையில் வாட வேண்டியது தான் என்கிறார் திருமூலர்



பதி-பசு-பாசம்---சின் முத்திரை
பதி -பசு- பாசத்தை விளக்கும் திருமூலர் கீழ்க்கண்ட பாடலில் சின்முத்திரையின் ரகசியத்தை தன் பாடலின் மூலம் விளக்குகிறார்
 ””””””பசுப்பல கோடி பிரமன் முதலாய்
           பசுக்களைக் கட்டிய பாசமூன் றுண்டு
           பசுத்தன்மை நீக்கியப் பாசம் அறுத்தாற்
           பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே””””””””””
                                                                                      ---------திருமந்திரம்------திருமூலர்---------

“””””பசுப்பல கோடி பிரமன் முதலாய்””””””
பிரமன் - படைப்புக் கடவுள் படைப்புக்குக் காரணமாக இருப்பவர்
இருப்பு நிலை - இயக்க நிலைக்கு வரும் பொழுதே படைப்பு தோன்றி விட்டது

இருப்பு நிலை - இயக்க நிலைக்கு வரும் பொழுது தோன்றிய நுண்ணலையான விண் எனப்படுகின்ற ஜீவன் பல்கிப் பெருகி கோடான கோடி ஜீவன்களாக உருவாகி விட்டது இந்த ஜீவனைத் தான் நாம் பசு என்கிறோம்
இருப்பு நிலை அசைந்து இயக்க நிலைக்கு வரும் பொழுதே அதாவது படைப்பு என்பது தோன்றிய நாள் முதல் இன்று வரை பசு எனப்படுகின்ற உயிர் இந்த பிரபஞ்சம் முழுவதும் கோடிக்கணக்கில உருவாகி இந்த பிரபஞ்சத்தில் இயங்கிக் கொண்டும் இந்த பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்தும் இருக்கிறது



”””””பசுக்களைக் கட்டிய பாசமூன் றுண்டு””””””
பசு எனப்படுகின்ற உயிரானது உலக பந்தங்களில் ஈடுபட்டு ஆணவம-கன்மம்-.மாயை என்ற மூன்றில் சிக்குண்டு தவிக்கிறது
ஆணவம்
நாம் ஒரு செயலைச் செய்கிறோம் அது பதிந்து விடுகிறது அந்த செயலின் மேல் கொண்ட பற்றுதலின் காரணமாக அந்த செயலைத் திரும்பத் திரும்பச் செய்கிறோம் நல்லன தவிர் தீய செயல்களை திரும்ப திரும்ப செய்ய செய்ய துன்பம் அதிகரிக்கும் தீய செயல்களைச் செய்வதன் மூலம் உண்டாகும் விளைவு தீயதாகத் தான் இருக்கும் என்று தெரிந்தும் செய்யக் கூடாத செயல்களையே மனிதன் செய்கிறான் தகாத செயல்களிலேயே ஈடுபடுகிறான் இது தான் ஆணவம்


கன்மம்
இந்த ஆணவத்தின் காரணமாக மனிதனுக்கு ஆறு குணங்கள் உண்டாகின்றன அவையாவன காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் ஆகியவை ஆகும் இந்த ஆறு குணங்கள் வாயிலாக செயல்கள் செய்யும் போது துன்பமே விளைவிக்கக் கூடிய செயல்கள் மட்டுமே தான் விளையும் அதைத் தான் கன்மம் என்கிறோம்


மாயை
ஆணவத்திலேயும் கன்மத்திலேயும் சிக்கிக் கொண்ட மனதிற்கு சிந்தித்து செயல்படக் கூடிய தன்மை இருக்காது இதைச் செய்ய வேண்டும் இதைச் செய்யக் கூடாது செய்தால் என்ன விளைவு உண்டாகும் என்பது தெரியாமல் செயலைச் செய்து துன்பங்களை அனுபவித்து ஒரு வித மயக்கத்தில் இருக்கக் கூடிய நிலை மாயை எனப்படும்

இந்த ஆணவம் -கன்மம்-மாயை எனப்படுகின்ற பாசத்தை செய்து ஜீவாத்மாவில் (உயிரில்) மூன்று களங்கங்களை ஏற்படுத்திக் கொள்கிறான்


””””பசுத்தன்மை நீக்கியப் பாசம் அறுத்தாற் 
         பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே”””””””””” 
பசு எனப்படுகின்ற ஜீவாத்மாவை களங்கப் படுத்தி வைத்திருப்து பாசம் பாசத்தின் மூன்று அங்கங்களான ஆணவம் கன்மம் மாயை ஆகியவற்றில் சிக்கிண்டு மனிதன் செய்யும் செயல்கள் கர்ம வினைகளாக பதிந்து விடுகிறது
இந்த கர்ம வினைகளை தவம், பிரணாயாமம் வாசியோகம் போன்றவற்றால் நீக்கி விட்டால் ஜீவாத்மா துhய்மை அடைந்து விடும். எந்த ஜீவாத்மா கர்ம வினைகள் நீக்கப் பட்டு துhய்மை அடைந்து இருக்கிறதோ அந்த ஜீவாத்மாவே பரமாத்மாவிடம் இணையும்
கர்ம வினைகள் கழிக்கப் பெறாத ஜீவாத்மா பர்மாத்மாவுடன் இணையாது பிறப்பு இறப்பு என்ற பிறவிப் பெருங்கடலில் சிக்கி துன்பச் சகதியில் சுழல வேண்டியது தான்

இந்த தத்துவத்தை விளக்குவதற்காகவே முனிவர்களும் யோகிகளும் ஒரு முத்திரையை பயன்படுத்துகின்றனர் அது தான் சின் முத்திரை


சின்முத்திரை
சின்முத்திரை என்பது இந்த சமூகத்திற்கு ஒரு ரகசியத்தை சொல்லுவதற்காக காட்டப்படும் ஒரு முத்திரை ஆகும்


சின்முத்திரை சொல்லும் தத்துவம் இதுதான்

1. முதலில் வலது கையை எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் ஐந்து விரல்கள் இருக்கின்றன
2. சுண்டு விரல் ஆணவம் எனப்படுகிறது
3. மோதிர விரல் கன்மம் எனப்படுகிறது
4. நடுவிரல் மாயை எனப்படுகிறது
5. ஆள்காட்டி விரல் ஜீவாத்மா எனப்படுகிறது
6. கட்டை விரல் பரமாத்மா எனப்படுகிறது


ஜீவாத்மாவுடன் ஒட்டியிருக்கும் ஆணவம் - கன்மம்- மாயை ஆகியவற்றை விலக்கி விட்டு ஜீவாத்மா விலகி வந்தால் பரமாத்மாவுடன் இணையும் என்ற தத்துவத்தைக் குறிப்பதற்காகவே சின்முத்திரை காட்டப்படுகிறது












1 comment: