July 11, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-40



               நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-40

பொதப்பி நாட்டின்
உடுப்பூர் தலைநகரத்தில்
வேடர்குல தலைவனான
நாகனுக்கு
இறைவனின் அருளால்
திண்ணன் பிறந்தார்
அவர் கல்வி பயிலும்
காலம் வந்த போது
வேட்டையாடுவதற்கு
தேவையான அனைத்து
கலைகளுடன்
விற்பயிற்சியும் கற்றார்

தின்னணார் ஒருநாள்
வேட்டையாடச்
சென்ற போது
வலிமையுடைய பன்றி
வலைகளை அறுத்துக்
கொண்டு மிக்க
வேகத்துடன் ஓடியது
அதனை மிகுந்த
வேகத்துடன் துரத்திச்
சென்று கொண்டிருந்த
திண்ணனாரைக் கண்ட
நாணன், காடன் ஆகிய
இருவரும் திண்ணனாரை
தொடர்ந்து சென்றனர்
அந்த பன்றி தொலை
தூரம் ஓடி ஒரு
மலைச்சாரலில் அதற்கு
மேலும் செல்ல
முடியாமல் மரங்களுக்கு
இடையில் நின்றது.
திண்ணனார் கணை
எறிந்து கொல்லாமல்
வீரத்துடன் எதிர்த்து
உடைவாளால் பன்றியின்
உடம்பைப் பிளந்தார்.

திண்ணனார் பொன்முகலி
நதியைக் கடந்து
வரும்போது
காளத்தி மலையில்
குடுமித் தேவர் என்ற
சிவலிங்கத்தைக் கண்டார்
சிவலிங்கத்தைக் கண்ட
திண்ணனார்
மெய் மறந்து நின்றார்
அவர் கல்லிலே
கடவுளைக் கண்டார்
அனைத்து பொருள்களிலும்
கடவுளைக் காண்பவர்களால்
மட்டுமே பக்தி செலுத்த
முடியும் அத்தகைய
நிலையில் தான்
தின்னணார் இருந்தார்
அவர் கல்லிலும்
கடவுளைக் கண்டார்

பொன்முகலி ஆற்றின்
நீரைத் தூய வாயினில்
எடுத்துக் கொண்டார்
மலர்களைக் கொய்து
தலைமயிரில்
சொருகிக் கொண்டார்
ஒரு கையில் வில்லும்
அம்பும் தாங்கியும்
மற்றொரு கையில்
இறைச்சியையும் எடுத்துக்
கொண்டு காளத்தி 
மலையை அடைந்தார்

சிவலிங்கத்தின் மேல்
இருந்த மலர்களை
தன் காலில் அணிந்த
செருப்பால் தள்ளினார்
வாயில் வைத்திருந்த
நீரை சிவலிங்கத்தின்
மேல் உமிழ்ந்தார்
தலைமயிரில் சுமந்த
மலரை சாத்தினார்
இறைச்சியை சிவலிங்கத்தின்
முன் வைத்து இறைவா
இதை சாப்பிடுங்கள்
என்று வேண்டினார்.

இரவு நேரத்தில்
விலங்குகளால் இறைவனுக்கு
துன்பம் நேரக்கூடாது
என்பதற்காக இறைவன்
கூடவே விழித்திருந்து
அருகில் நின்றார்.
மறுநாள் விடியும் நேரம்
இறைவனை விழுந்து
வணங்கி விட்டு
இறைவனுக்கு
உணவளிக்க மீண்டும்
வேட்டையாடச் சென்றார்.

கதிரவன் உதயம் ஆனதும்
திருக்காளத்தியப்பரை
முறைப்படி வழிபாடு
செய்யும் சிவகோசாரியார்
நீர், மலர், திருவமுது
எடுத்துக் கொண்டு
இறைவன் முன் வந்தார்
இறைவன் முன்
படைக்கப்பட்டிருந்த
இறைச்சிகளைக் கண்டு
மனம் நொந்து
வேடர்கள் யாராவது
இதனை செய்து இருப்பர்
என்று வருத்தப்பட்டு
இறைச்சிகளை அகற்றி
அந்த இடத்தை
தூய்மை செய்து
தான் கொண்டு வந்த
நீரால் சிவலிங்கத்திற்கு
அபிஷேகம் செய்து
மலர் சாத்தி
திருவமுது படைத்து
சிவலிங்கத்தை வணங்கி
விட்டு சென்றார்.

இந்த நிகழ்வு
தொடர்ந்து நடந்தது
திண்ணனார் பகலில்
வேட்டையாடுவார்
இரவில் காவல் புரிவார்
சிவகோசாரியார் நாள்தோறும்
அவைகளை அகற்றி
சுத்தம் செய்வார்

இவ்வாறாக நான்கு நாட்கள்
கடந்து விட்டது
திண்ணனார் அதிகாலையில்
வேட்டையாடச்
சென்று விட்டார்
ஐந்தாவது நாள்
சிவகோசாரியார் முறைப்படி
அன்றாடம் செய்ய
வேண்டியவைகளை செய்து
இறுதியில் கடவுளே உன்
சன்னிதானத்தில் வந்து
உன்னை அசிங்கப்படுத்துவது
யார் என்பதை
எனக்கு தெரியப்படுத்த
வேண்டும் என்று
சிவபெருமானை வேண்டினார்

சிவகோசாரியார் கனவில்
சிவபெருமான் தோன்றி
என்னை வணங்குபவனை
சாதாரணமாக எண்ணிவிடாதே
அவன் என் மேல்
வைத்திருக்கும் கடவுள்
பக்தியை நான்
உனக்குக் காட்டுகிறேன்
மறைந்து நின்று நடக்கும்
நிகழ்வைப் பார்
பக்தி என்றால் எப்படி
இருக்க வேண்டும்
என்பதை அவன் மூலம்
நீ தெரிந்து
கொள்வாய் என்றார்

ஆறாம் நாள் உதயம்
ஆனதும் திண்ணனார்
வேட்டையாடச் சென்றார்.
வீரகோசாரியாரும்
அன்றாடம் செய்ய
வேண்டிய பூசை
முறைகளைச் செய்துவிட்டு
மறைவாக நின்று கொண்டு
நடக்கப்போகும் நிகழ்வை
காணக் காத்திருந்தார்.

--------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////////////////


No comments:

Post a Comment