திருக்குறள்-பதிவு-77
“இந்தப்
பிரபஞ்சத்தில்
உட்சுவாசத்தை
(INNER
BREATH)
யாரெல்லாம்
செய்கிறார்கள்
என்று
தெரியுமா?” என்றார்
ஜியார்டானோ புருனோ
“எனக்கு
தெரியாது!”
என்றாள்
அந்தப் பெண்
“இந்தப்
பிரபஞ்சத்தில்
உள்ள
உயிரினங்கள்
அனைத்தும்
உட்சுவாசத்தை
செய்து
வருகின்றன
மனிதர்களில்
ஒருசில பேர் 
உட்சுவாசத்தை
முறைப்படி
உணர்ந்து
செய்து 
வருகின்றனர்”
என்றார்
ஜியார்டானோ புருனோ
மேலும் 
ஜியார்டானோ புருனோ
சில தகவல்களை
அந்தப் பெண்ணிற்கு
சொல்கிறார்
“உயிரினங்கள் அனைத்தும் 
அவைகளுக்கு ஏற்ற 
வகையில் உட்சுவாசத்தை
தொடர்ந்து செய்து 
வருகின்றன ;
இவ்வாறு தொடர்ந்து 
இந்த உயிரினங்கள் 
உட்சுவாசத்தை செய்து 
வருகின்ற காரணத்தினால்
இயற்கையில் தங்களுக்கு 
ஏற்படக்கூடிய 
இடர்ப்பாடுகளை
முன்கூட்டியே உணர்ந்து 
தங்களுக்கு ஏற்படக்கூடிய
இடர்ப்பாடுகளிலிருந்து
தங்களை காப்பாற்றிக்
கொள்வதற்கான
வழிமுறைகளை வகுத்து 
இந்தப் பிரபஞ்சத்தில்
இயற்கையோடு
இணைந்து ஒன்றுபட்டு
வாழ்கின்றன ! ”
“ஆனால், மனிதன் 
உட்சுவாசம் என்பது என்ன 
என்று தெரியாத
காரணத்தினாலும்
உட்சுவாசத்தை முறைப்படி 
கற்றுத் தேர்ந்து 
செய்யாத காரணத்தினாலும்
இந்தப் பிரபஞ்சத்தில்
உயிருடன் வாழும் போது
வாழ்க்கையில் ஏற்படக்கூடிய 
இடர்ப்பாடுகளை
முன்கூட்டியே உணர்ந்து
தங்களுக்கு ஏற்படக்கூடிய
இடர்ப்பாடுகளிலிருந்து
தங்களை காப்பாற்றிக்
கொள்வதற்கான
வழிமுறைகளை வகுக்காமல்
இந்தப் பிரபஞ்சத்தில்
இயற்கையோடு இணைந்து 
வாழ முடியாத நிலையை 
மனிதன் அடைகிறான் ! ”
என்றார்
ஜியார்டானோ புருனோ
“இத்தகைய சிறப்பு 
மிக்க உட்சுவாசத்தை 
தெரிந்து கொண்டால்
அற்புதம் ! அற்புதம் !
என்று அலையாமல்
அற்புதத்தை உணர்ந்து 
அற்புதமாகவே
மாறி விடுவாய்………..!!”
என்றார் 
ஜியார்டானோ புருனோ
”என் அருகில் வா இங்கே 
வந்து அமர்ந்துகொள்
உன் சுவாசத்தை 
அடி வயிற்றிலிருந்து மேல் 
நோக்கி நன்றாக இழு
உன் சுவாசம் 
வெளிப்புறமாகவும்
உட்புறமாகவும் 
ஓடிக் கொண்டு இருப்பதை 
நீ இப்போது உணர்கிறாய்”.
“ஆமாம் ! ஆமாம் ! நான் 
அதை உணர்கிறேன் 
புருனோ……………………………! ”
“நன்றாக உன் 
சுவாசத்தை கவனி
இரண்டு சுவாசங்களும்
ஓடிக் கொண்டு 
இருப்பதை உண்ர்கிறாய்”. 
“ஆமாம் ! ஆமாம் ! நான் 
அதை உணர்கிறேன் 
புருனோ……………………………! ”
இப்போ உன் சுவாசத்தை
வேகப்படுத்து !
வேகப்படுத்து !
இன்னும் 
வேகப்படுத்து !!
இன்னும் 
வேகப்படுத்து !!!
வேகப்படுத்திக் கொண்டே 
இருக்கிறாய்……………………………………. !
வேகப்படுத்திக் கொண்டே 
இருக்கிறாய்……………………………………. !
சுவாசம்
வேகத்தின் உச்சத்தை
அடைகிறது
உன் உடம்பு இப்போது 
அதிர ஆரம்பிக்கிறது………….!
உன் உடம்பு அதிர்வதை 
இப்போது நீ 
உணர்கிறாய் !
அந்த சக்தி பல்கிப் 
பெருகுகிறது !
பெருகிக் கொண்டே
இருக்கிறது !
அந்த சக்தி உன்
உடம்பை முழுவதும்
தன் கட்டுப் பாட்டிற்குள் 
கொண்டு வந்து விட்டது…….!
ஆமாம் ஆமாம்
இந்த பிரபஞ்சத்தின் 
ஆளுகைக்குள் நீ 
வந்து விட்டாய்……………………………….!
இப்போது நீ அற்புதத்தின்
வாயிலை அடைந்து
விட்டாய்…………………!
ஆமாம் உன்
வெளி சுவாசம் முழுவதும் 
நின்று விடுகிறது !!!
இப்போது உன்
உட்சுவாசம்
மட்டுமே ஓட
ஆரம்பிக்கிறது,,,,,,,,,,,,!
“உன்னுடைய உட்சுவாசம்
நேராக உன் தலை
உச்சியை சென்று
மோதுகிறது……………….!”
“ஐயோ! புருனோ
என்னால் தாங்க
முடியவில்லை நான்
செத்துக் கொண்டு
இருக்கிறேன்………………………….?
செத்துக் கொண்டு
இருக்கிறேன்………………………..?
என்னை காப்பாற்று,,,,,,,,,!
புருனோ என்னை
காப்பாற்று………………………………..!”
“சுவாசம் உன்
உச்சந்தலையின்
மையத்தை நோக்கி
நகர்கிறது”
“ஐயோ! புருனோ
என்னால் தாங்க
முடியவில்லை நான்
செத்துக் கொண்டு
இருக்கிறேன்,,,,,,,,,,,,,,,,,!
செத்துக் கொண்டு………………..
செத்து ………………….
என்னை,,,,,,,,,,,,,,,,,,
என்னை,,,,,,,,,,,,,,,,,,,,,,
காப்பாற்று,,,,,,,,,,,,,,,,,,
காப்பாற்று,,,,,,,,,,,,,,,,,,,,
என்னை,,,,,,,,,,,,,,,,,,,,,
என்னை,,,,,,,,,,,,,,,,,,,,,,
நான்
செத்துக் கொண்டு
இருக்கிறேன்,,,,,,,,,,,,,,,,,!
---------  இன்னும் வரும்
---------  29-12-2018
///////////////////////////////////////////////////////////
