March 05, 2019

திருக்குறள்- பதிவு-119


                      திருக்குறள்- பதிவு-119

" ஜியார்டானோ
புருனோவினுடைய
முழு உருவ வெண்கல
சிலையின் மூன்றாவது
கூறு ஜியார்டானோ
புருனோவின் வாழ்க்கையில்
நடந்த முக்கியமான
மூன்று நிகழ்ச்சிகளை
சித்தரிக்கிறது "

"இந்த மூன்று
நிகழ்ச்சிகளும் ஒன்றுடன்
ஒன்று நெருங்கிய
தொடர்பு உடையது "

ஒன்று :
"ஜியார்டானோ புருனோ
பல்கலைக் கழகத்தில்
மாணவர்கள் மத்தியில்
பேசிய நிகழ்ச்சி
(Giordano Bruno
as a Professor)

இரண்டு :
ஜியார்டானோ புருனோவை
விசாரணை செய்த நிகழ்ச்சி
(Trial of Giordano Bruno)

மூன்று :
ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்து
கொல்லப்பட்ட நிகழ்ச்சி
(The Death of Giordano
Bruno)

“ இந்த மூன்று நிகழ்ச்சிகளும்
சிலையின் பக்கத்திற்கு
ஒன்றாக - மூன்று
பக்கங்களில்
மூன்று படங்களில்
சித்தரிக்கப்பட்டுள்ளது “

ஒன்று
(Giordano Bruno
as a Professor)
" ஜியார்டானோ புருனோ
எந்த கருத்துக்களைக்
கொண்டிருந்தாரோ ?- அந்த
கருத்துக்களைத் தான்
பல்கலைக் கழகத்தில்
மாணவர்கள் மத்தியில்
பேசினார் "

" சூரியனை மையமாக
வைத்து பூமி சுற்றுகிறது
என்று நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ்
சொன்ன கருத்தே
சரியானது ; - பூமியை
மையமாக வைத்து
சூரியன் சுற்றுகிறது
என்று பைபிளில்
சொல்லப்பட்ட கருத்து
தவறானது என்றார் ;"

" கல்வியும், விஞ்ஞானமும் ,
சுதந்திரமாக இருக்க
வேண்டும் - கிறிஸ்தவ
மதத்தின் ஆணைகளுக்கு
கட்டுப்பட்டு இருக்கக்
கூடாது என்றார் ; "

" அன்பையும்,
கருணையையும்
போதிக்கும் மதமாகத்தான்
கிறிஸ்தவ மதம் இருக்க
வேண்டுமேயொழிய……!
மக்களை அடிமையாக
வைத்து அரசாட்சி
செய்ய நினைக்கும்
மதமாக கிறிஸ்தவ
மதம் இருக்கக்
கூடாது என்றார் ;"

" கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையிலும் ;
சர்ச்சுகளிலும் ;
பைபிளிலும்  ;
திருத்தங்கள் செய்து
சீர்திருத்தம் கொண்டு
வர வேண்டும் என்றார் "

" தான் சொன்ன
கருத்திலிருந்து
ஜியார்டானோ புருனோ
அணு அளவும் பின்
வாங்கவில்லை "

இரண்டு :
(Trial of Giordano Bruno)
“ ஜியார்டானோ
புருனோவிற்கு
எதிராக நடத்தப்பட்ட
விசாரணையில் அவர்
தண்டனையிலிருந்து
தப்பிப்பதற்காக ஒரு
வாய்ப்பு தரப்பட்டது “

“ கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக செய்த
செயல்கள் அனைத்தும்
தவறு என்றும் - இனி
வருங்காலங்களில்
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக இதைப் போல்
வேறு தவறுகள் ஏதும்
செய்ய மாட்டேன் என்றும்
பொது மக்கள்
முன்னிலையில்
மண்டியிட்டு மன்னிப்பு
கேட்டுக் கொண்டால்
ஜியார்டானோ
புருனோவை உயிரோடு
விட்டு விடுவதாக
சொல்லப் பட்டது “

“ ஆனால் ஜியார்டானோ
புருனோ தான் கொண்ட
கொள்கையிலிருந்து
பின் வாங்காமல்
மன்னிப்பு கேட்கவில்லை “

மூன்று :
(The Death of Giordano
Bruno)
“ ஜியார்டானோ புருனோ
உயிரோடு இருந்தால்
அவருடைய கருத்துக்கள்
மக்கள் மனதில் பெரிய
தாக்கத்தை எற்படுத்தி  ;
அதன் மூலம்
பாதிப்பை ஏற்படுத்தி ;
அதன் மூலம்
பெரிய மாற்றத்தை
ஏற்படுத்தி ;
விடக்கூடும் என்று
நினைத்த காரணத்தினால் , “

“ மக்கள் அனைவரும்
ஜியார்டானோ
புருனோவின் கருத்துக்கள்
சரி என்று உணர
ஆரம்பித்து விட்டால்
கிறிஸ்தவ மதத்தில்
சீர்திருத்தம் கொண்டு
வர வேண்டும் என்று
போராடுவார்கள் ;
அதோடு நிற்காமல்
கிறிஸ்தவ மதத்தை
எதிர்த்து செயல்பட
ஆரம்பித்து விடுவார்கள் ;
என்ற காரணத்தினால் , “

“ ஜியார்டானோ
புருனோ கிறிஸ்தவ
மதத்திற்கு எதிராக
செயல்பட்டார் என்று
குற்றம் சுமத்தப்பட்டு
17-02-1600 அன்று
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்டார் ;”

 “ஜியார்டானோ
புருனோவின் வாழ்வில்
நடந்த இந்த மூன்று
நிகழ்ச்சிகளும் - சிலையின்
மூன்று பக்கங்களில்
பக்கத்திற்கு ஒன்றாக
செதுக்கப்பட்டுள்ளது “

“ சிலையின் நான்காவது
பக்கத்தில் ஒரு
முக்கியமான வாசகம்
இடம் பெற்று உள்ளது
அது தான்………………………………..? “

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  05-03-2019
//////////////////////////////////////////////







No comments:

Post a Comment