January 06, 2020

பரம்பொருள்-பதிவு-111


            பரம்பொருள்-பதிவு-111

துரியோதனன் :
"அரவான் !
நான் இங்கு
வருவதற்கு முன்பு
நான் என்னுடைய
தேவையைப் பற்றியும் ;
என்னுடைய தேவையை
உன்னிடம் எப்படி
கேட்டு பெற்றுக்
கொள்வது
என்பதைப் பற்றியும் ;
என்னுடைய தேவையை
எப்படி நிறைவேற்றிக்
கொள்வது
என்பதைப் பற்றியும் ;
மட்டுமே நினைத்துக்
கொண்டு வந்தேன் "

"ஆனால் நான்
இங்கு வந்த பின்பு
நீ காட்டிய அன்பினையும் ;
உன்னுடைய உயர்ந்த
பண்பினையும் ;
கண்டு நான் மெய்
சிலிர்த்து நிற்கிறேன் "

"உன்னுடைய அன்பில்
கரைந்த நான்
எப்படி என்னுடைய
தேவையை
உன்னிடம் கேட்டுப்
பெறுவது என்பதைப்
பற்றி யோசித்துக்
கொண்டிருக்கிறேன் "

"நான் என்னுடைய
தேவையைக்
கேட்பதினால்
நீ கோபப்பட்டு
என்னைப் பார்த்து ,

“சாஸ்திரங்களைப்
படித்து இருக்கிறாயா ?
சாஸ்திரங்களைப் படித்து
இருந்தால் தர்மம்
என்றால் என்ன
என்று உனக்கு
தெரிந்து இருக்கும் ?"

"நீதியின் வழியில்
சென்று இருக்கிறாயா ?
தர்மத்தின் பாதையை
அறிந்து இருக்கிறாயா ? "

"உன்னை கொடியவன்
என்று இந்த உலகம்
சொல்வதில்
தப்பே இல்லை ;
உனக்கு அன்பு
என்றால் என்ன
என்றே தெரியவில்லை ;
கருணை உனக்குள்
இறந்து விட்டிருக்கிறது ;"

"இல்லை என்றால்
இப்படி ஒரு தேவையை
என்னிடம் வந்து
கேட்டு பெற்றுக்
கொள்ள வந்திருப்பாயா ?
உனக்கு பாசம் என்ற
ஒன்று இருந்திருந்தால்
இப்படி கேட்டிருப்பாயா ?"

"என்று என்னை
வசைமாரி பொழிந்து
விடுவாயோ என்று
யோசித்துக்
கொண்டிருக்கிறேன் ?"

"இத்தகைய
காரணங்களால்
நான் மனம்
சஞ்சலப்பட்டு - நான்
உன்னிடம் கேட்டு
பெற வந்ததை
கேட்கலாமா ?
வேண்டாமா ? என்று
யோசித்துக்
கொண்டிருக்கிறேன் ?
என்ன செய்வது
என்றே எனக்குத்
தெரியவில்லை - நான்
மனம் சஞ்சலப்பட்டு
இருக்கிறேன் அரவான் "

அரவான் :
"பெரிய தந்தையே !
நீங்கள் மனம்
சஞ்சலப் பட வேண்டிய
அவசியமே இல்லை
நீங்கள் என்னிடம்
எதைக் கேட்டுப்
பெற வந்திருக்கிறீர்களோ ?
அதை தைரியமாக
கேட்டு பெற்று
விட்டு செல்லலாம் "

"நீங்கள் என்னிடம்
கேட்டுப் பெற வந்தது
நல்லதாக இருந்தாலும் சரி
கெட்டதாக இருந்தாலும் சரி
தைரியமாகக் கேட்கலாம் ;"

"நீங்கள் என்னுடைய
பெரிய தந்தை - நான்
உங்களுடைய மகன் ;
தந்தை மகனிடம்
எந்த ஒன்றை
கேட்பதற்கும்  ;
எந்த ஒன்றை
கேட்டுப் பெறுவதற்கும் ;
முழு உரிமை
இருக்கிறது - ஆகவே
நீங்கள் என்னிடம்
கேட்டுப் பெற
வந்ததை தைரியமாகக்
கேட்டுப் பெற்று
விட்டுச் செல்லலாம் "

"ஆனால் ஒன்று
தந்தையே நீங்கள்
என்னிடம் ஒன்றைக்
கேட்டுப் பெற
வந்தேன் என்கிறீர்களே ?
அந்த ஒன்றை
நான் உங்களுக்கு
எப்படி அளிக்க வேண்டும்
உதவியின் மூலம்
அளிக்க வேண்டுமா ?
அல்லது யாசகத்தின்
மூலம் அளிக்க
வேண்டுமா ? "

துரியோதனன் :
"உதவிக்கும்
யாசகத்திற்கும்
பெரிய அளவில்
வேறுபாடு எதுவும்
இருப்பதாக எனக்குத்
தெரியவில்லையே
மகனே ! "

அரவான் :
" இருக்கிறது
பெரிய தந்தையே !
இருக்கிறது
உதவிக்கும்
யாசகத்திற்கும்
வேறுபாடு இருக்கிறது"

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 06-01-2020
//////////////////////////////////////////


No comments:

Post a Comment