March 04, 2020

பரம்பொருள்-பதிவு-147


             பரம்பொருள்-பதிவு-147

உலூபி  :
“வேண்டும் !”

“அரவான்
களப்பலியாகத்
தான் வேண்டும் ! “

“பாண்டவர்கள்
சார்பாக அரவான்
களப்பலியாகத்
தான் வேண்டும் ! “

“ஒப்புதல் அளிக்கிறேன் ! “

“பாண்டவர்கள் சார்பாக
அரவானைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
ஒப்புதல் அளிக்கிறேன் ! “

(என்று கண்ணீர்
விட்டு அழுது
கொண்டே ஒப்புதல்
அளித்தாள் உலூபி ;
நிற்க முடியாமல்
தரையில் படுத்த
உலூபியினுடைய
தலையை தரையில்
அமர்ந்து தன்னுடைய
மடியில் வைத்துத்
தாங்கிக் கொண்டாள்
திரௌபதி ;
உலூபியின் கூந்தலை
வருடிக் கொண்டே
இருந்தாள் திரௌபதி ;
திரௌபதியின் மடியில்
தலை சாய்த்தபடி
அழுத வண்ணம்
இருந்தாள் உலூபி ;)

கிருஷ்ணன் :
“அழு உலூபி அழு
நன்றாக அழு “

“உன்னுடைய கண்களில்
உள்ள தண்ணீர்
தீரும் வரை
நன்றாக அழு “

“நீ வடிக்கும்
கண்ணீரில் தான்
நாளைய உலகம்
பூப்பூக்கப் போகிறது “

“நீ வடிக்கும் கண்ணீரிலும்
அரவான் சிந்தப் போகும்
இரத்தத்தினாலும் தான்
நாளைய உலகம்
விடியப் போகிறது “

“வருங்கால உலகத்தில்
உள்ள மக்கள்
அனைவரும்
நிம்மதியாக வாழ
வேண்டும் என்பதற்காக ;
நல்லவர்கள்
அமைதியாக வாழ
வேண்டும் என்பதற்காக ;
பெண்கள் மானத்தோடு
வாழ வேண்டும்
என்பதற்காக ;
தர்மம் அழியாமல்
நிலைத்து இருக்க
வேண்டும் என்பதற்காக ;
பாண்டவர்கள் சார்பாக
அரவானைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்கு நீ
ஒப்புதல் அளித்த
விஷயம்
மிகப்பெரிய விஷயம் “

“இந்த உலகத்தில்
எந்தத் தாயும் செய்ய
முடியாத மிகப் பெரிய
விஷயத்தைத் தான்
நீ இப்போது
செய்து இருக்கிறாய் “

“இந்த உலகம் அரவானுக்கு
மட்டுமல்ல உனக்கும்
தான் நன்றிக்
கடன் பட்டிருக்கிறது “

“உன்னுடைய மகனுக்காக
நீ மட்டும் தான்
அழுது கொண்டிருக்கிறாய்
என்று நினைத்து விடாதே
நாளைய உலகமே
அரவான் செய்யப்போகும்
தியாகத்தை நினைத்து
கண்ணீர் விடப்போகிறது
என்பதை மட்டும்
மறந்து விடாதே “

“அரவான் செய்யப்போகும்
தியாகத்திற்காக இந்த
உலகம் அரவானைத்
தெய்வமாக வழிபட்டாலும்  ;
அந்தத் தெய்வமகனை
பெற்றெடுத்த
தெய்வத் தாயாக
நீ என்றும் திகழ்ந்து
கொண்டிருப்பாய் ;
என்பது சத்தியம் உலூபி “

“அரவானின் பெயர்
இந்த உலகத்தில்
இருக்கும் வரைக்கும்  ;
அரவானின் தாயான
உன்னுடைய பெயரும்
இந்த உலகத்தில்
இருக்கும் என்பது
நிச்சயிக்கப்பட்ட
உண்மை உலூபி ; “

“காலங்கள் மாறினாலும்
காட்சிகள் மாறினாலும்
கொண்ட கோலங்கள்
மாறினாலும்
இந்த உலகம்
இருக்கும் வரை
இந்த உலகத்தில்
அழியாமல்
இருக்கப்போவது
அரவானின் பெயரும்
உன்னுடைய பெயரும்
மட்டும் தான் உலூபி “

“அழு உன்னுடைய
வேதனைகளின்
பாரம் குறையும் வரை
நன்றாக அழு உலூபி
நன்றாக அழு
நன்றாக அழு
உலூபி
நன்றாக அழு”

 (என்று கிருஷ்ணன்
சைகை காட்ட
அந்த அவையில்
இருந்தவர்களில்
ஒவ்வொருவராக
வெளியேறினர் ;
திரௌபதியின்
மடியில் தலை
சாய்த்து படுத்துக்
கொண்டிருந்த உலூபி
அழுது கொண்டு
இருந்தாள் ;
அவளுடைய அழுகுரல்
மட்டுமே - அந்த
அறையில் எதிரொலித்துக்
கொண்டே இருந்தது)

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 04-03-2020
//////////////////////////////////////////



No comments:

Post a Comment