April 06, 2020

பரம்பொருள்-பதிவு-177


               ஜபம்-பதிவு-425
             (பரம்பொருள்-177)

“தூக்கத்திலிருந்து
விழித்து எழுந்தான்
அரவான் ;
படுக்கையையும்
அந்த அறையும்
சுற்றும் முற்றும்
பார்த்தான்
திருநங்கை இல்லை
என்பதை
தெரிந்து கொண்டான் ;
அவள் தன்னுடைய
கடமைகளை
முடிப்பதற்காக
சென்றிருக்கிறாள்
என்பதை
உணர்ந்து கொண்டான் ; “  

“உடல் முழுவதும்
சந்தனத்தால் பூசப்பட்ட
நிலையில் நின்று
கொண்டிருந்த அரவான்
கஸ்தூரி ; அத்தர் ;
ஜவ்வாது ; புனுகு ;
கோரோஜன் ; போன்ற
வாசனை திரவியங்கள்
தெளிக்கப்பட்ட பன்னீரில்
குளித்து எழுந்தான் “

“பகைவனின் பகையை
முடிக்க வேண்டும்
என்றால் தான்
களப்பலியாக வேண்டும்
என்ற உண்மையை
உணர்ந்திருந்த அரவான்
போருக்கு செல்பவர்கள்
போரின் போது
அணியக் கூடிய
போர் ஆயுதங்களுடன் கூடிய
போர் உடையை
அணிந்து கொண்டு
குகை விட்டுக்
வெளிக்கிளம்பும்
ஒரு புலியென  ;
வில்லிலிருந்து
புறப்பட்ட
ஒரு அம்பென ;
உறை விட்டுக்
கிளம்பும்
ஒரு வாளென ;
வெளிக் கிளம்பிய
அரவான்
தன்னையே
களப்பலியாகக்
கொடுப்பதற்காக
களப்பலி நடக்கப்
போகும் இடத்தை
நோக்கி நடந்து சென்று
கொண்டிருந்தான் “

“குருஷேத்திரப் போரில்
பாண்டவர்கள் வெற்றி
பெற வேண்டுமென்றால்
தான் களப்பலியாக
வேண்டும் என்ற
உண்மையை
உணர்ந்திருந்த
அரவான்
இந்த உலகம்
கண்டிராத தியாக
மனப்பான்மை
கொண்டிருந்த
அரவான்
தன்னையே
களப்பலியாகக்
கொடுப்பதற்காக
களப்பலி நடக்கப்
போகும் இடத்தை
நோக்கி நடந்து சென்று
கொண்டிருந்தான் “

“நாளைய உலகத்தில்
வாழக்கூடிய
மக்கள் அனைவரும்
அமைதியாக
வாழ வேண்டும்
என்றால் ,
நிம்மதியாக
வாழ வேண்டும்
என்றால் ,
ஒருவருக்கொருவர்
பகை நீக்கி
ஒற்றுமையுடன்
வாழ வேண்டும்
என்றால் ,
கவலை நீக்கி
இன்பமாக உயிரோடு
வாழ வேண்டும்
என்றால்,
தான் களப்பலியாக
வேண்டும் என்ற
உண்மையை
உணர்ந்திருந்த
அரவான்
தன்னையே
களப்பலியாகக்
கொடுப்பதற்காக
களப்பலி நடக்கப்
போகும் இடத்தை
நோக்கி நடந்து சென்று
கொண்டிருந்தான் “

“குமுறும் எரிமலைக்
குழம்பில் பிறந்து ;
சுழன்றடிக்கும் சூறாவளிக்
காற்றில் தவழ்ந்து ;
ஆவேசத்துடன் ஓடி
வரும் வெள்ளத்தில்
எதிர் நீச்சல்
அடித்து வாழ்ந்து ;
கொண்டிருந்த அரவான்
வீரத்தின் விளை நிலமாக
திகழ்ந்து கொண்டிருந்த
அரவான்
நாளைய உலகத்தில்
வாழக்கூடிய பெண்கள்
அனைவரும்
மானத்தோடு வாழ
வேண்டும் என்றால்
தான் களப்பலியாக
வேண்டும் என்ற
உண்மையை
உணர்ந்திருந்த
அரவான்
தன்னையே
களப்பலியாகக்
கொடுப்பதற்காக
களப்பலி நடக்கப்
போகும் இடத்தை
நோக்கி நடந்து சென்று
கொண்டிருந்தான் “

“அதர்மத்தை அழித்து
தர்மத்தை நிலைநாட்டி
நாளைய உலகத்தை
பேரழிவிலிருந்து
காப்பாற்றுவதற்காக
தன்னையே
களப்பலியாகக்
கொடுப்பதற்காக
களப்பலி நடக்கப்
போகும் இடத்தை
நோக்கி நடந்து
சென்று கொண்டிருந்த
அரவான்
களப்பலி நடக்கும்
இடத்தை அடைந்தான் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 06-04-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment