April 06, 2020

பரம்பொருள்-பதிவு-178


               ஜபம்-பதிவு-426
             (பரம்பொருள்-178)

“களப்பலி நடக்கும்
இடத்தில்
மிகப்பெரிய
காளி தேவியின் சிலை
நின்று கொண்டு
இருந்தது ;”

“பார்ப்பவர் மனதில்
கலக்கத்தை
ஏற்படுத்தும்
வகையில்
காளிதேவியின்
சிலை நின்று
கொண்டு இருந்தது ; “

“தைரியமுள்ள
மனதைக்
கொண்டவர்களால்
மட்டுமே
பார்க்க முடியும்  ;
தைரியமில்லாதவர்களால்
பார்க்கவே
முடியாது
என்று சொல்லத்தக்க
வகையில்
காளிதேவியின்
சிலை நின்று
கொண்டு இருந்தது ;”

“தைரியமில்லாதவர்கள்
பார்த்தால்
மரண பயத்தால்
இதயம் வெடித்து
இறந்து விடுவார்கள்
என்ற உண்மையை
சொல்லத் தக்க
வகையில்
மரண பயத்தை
உண்டாக்கும்
வகையில்
காளிதேவியின்
சிலை நின்று
கொண்டு இருந்தது  

“தன்னுடைய
இரத்தத் தாகத்தை
தீர்த்து விட்டு
நேரில் வந்து
ஆசிகளை அளித்து
வரம் அருளுவதற்காக
உயிரோடு
காளிதேவியானவள்
நேரில் வந்து நின்று
கொண்டிருக்கிறாள் என்று
சொல்லத்தகக்க வகையில்
காளி தேவியின் சிலை
அச்சத்தை மூட்டும்
வகையில் நின்று
கொண்டிருந்தது “

“காளிதேவியின் சிலை
முழுவதும் கழுவி
சுத்தம் செய்யப்பட்டு  ;
அலங்காரங்கள்
செய்யப்பட்டு ;
அணிகலன்கள்
அணியப்பட்டு ;
மலர்கள் சூட்டப்பட்டு ;
களப்பலி பூஜை
செய்வதற்கு
உகந்த வகையில்
காளிதேவியின் சிலை
தயார்
செய்யப்பட்டிருந்தது “

“களப்பலி
நடத்துவதற்குத்
தேவையான
அனைத்து பொருட்களும்
காளிதேவியின் சிலையின்
முன்னால் வரிசையாக
அடுக்கி
வைக்கப்பட்டிருந்தது “

“மலர்கள்  ; பழங்கள்  ;
வாசனை திரவியங்கள் ;
காளிதேவிக்கு
உகந்த பொருட்கள் ;
ஆகிய அனைத்தும்
தட்டுகளில் முறைப்படி
அடுக்கி வைக்கப்பட்டு
காளிதேவியின் முன்னால்
வைக்கப்பட்டிருந்தது ;”

“அரவானுடைய தலையை
வெட்டுவதற்காக
நன்கு தயார்
செய்யப்பட்டு
வைக்கப்பட்டிருந்த
வாளானது
காளிதேவியின்
கால்களில்
வைக்கப்பட்டு
மின்னிக் கொண்டிருந்தது ; “

“இவைகள் அனைத்தையும்
இமை கொட்டாமல்
பார்த்துக் கொண்டிருந்த
அரவான்
காளிதேவி சிலையின்
அருகில் நின்று
கொண்டிருந்த
பஞ்ச பாண்டவர்களின்
பக்கமாக தன்னுடைய
பார்வையை செலுத்தினான் “

“அவர்கள்
அனைவரையும்
இரு கரங்கள் கூப்பி
வணக்கம்
செலுத்தியதோடு
நிற்காமல்
அனைவருடைய
கால்களிலும் விழுந்து
வணங்கினான் ;
வணங்கிய அரவானை
பஞ்ச பாண்டவர்களும்
ஆசிர்வாதம் செய்தனர்  ; “

“அனைவரிடமும்
ஆசிகளைப் பெற்ற
அரவான்
கிருஷ்ணனிடம்
ஆசிகள் பெறுவதற்காக
கண்களால்
கிருஷ்ணனை தேடினான்
அந்த இடத்தில்
கிருஷ்ணன் இல்லை
என்பதை
உணர்ந்து கொண்ட
அரவான்
பேசத் தொடங்கினான் “

அரவான் :
“நான் களப்பலிக்கு
தயாராக இருக்கிறேன் “

தர்மர் :
“பரந்தாமன்
கிருஷ்ணனுடைய
வரவுக்காகக்
காத்திருக்கிறோம்  ;
அவர் இன்னும்
வரவில்லை ;
அவர் வரட்டும் ;”

(கிருஷ்ணன் வருகிறாரா
என்று அனைவரும்
பாதையையே பார்த்துக்
கொண்டிருந்த போது
அந்த பாதை வழியாக
கிருஷ்ணன் நடந்து
வந்து கொண்டிருந்தார் )

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 06-04-2020
//////////////////////////////////////////

1 comment:

  1. சிறப்பான பதிவு

    http://www.ypvnpubs.com/2020/04/unicode-voice-to-typing.html

    ReplyDelete