April 10, 2020

பரம்பொருள்-பதிவு-184


               ஜபம்-பதிவு-432
             (பரம்பொருள்-184)

கிருஷ்ணன் :
“அரவானுடைய
தலையை வெட்டி
களப்பலி கொடுங்கள்
என்ற முக்கியமான
செயலை ஒப்படைத்து
அதை செய்யுங்கள்
என்று சொல்லியும்
கொடுக்கப்பட்ட
களப்பலி என்ற
செயலின்
முக்கியத்துவத்தை
உணர்ந்தும்
உணராதது போல்
நடித்துக் கொண்டு
உன்னுடன்
பிறந்தவர்கள்
தங்களுக்கு
அளிக்கப்பட்ட
பொறுப்பை தட்டிக்
கழித்து விட்டார்கள்  

“ அவர்களை குறை
சொல்லி ஒரு பயனும்
ஏற்படப் போவதில்லை “

“அவர்கள் செய்ய
முடியாத செயலுக்கு
பல்வேறு காரணங்களை
வைத்திருக்கிறார்கள் “

“நீயும் அவர்களைப்
போல் செய்ய முடியாது
என்று சொல்லி விட்டு
செய்ய முடியாது
என்பதற்கான காரணங்களை
வைத்திருக்க மாட்டாய்
என்று நம்புகிறேன் “

“நான் சொல்லும்
செயலை நீ செய்து
முடிப்பாய் என்பதற்காக
காத்திருக்கிறேன் “

“நீயும் என்ன
சொல்லப் போகிறாய்
என்று எனக்குத்
தெரியவில்லை “

“ஆனால் ஒன்று
மட்டும் நிச்சயம்
அர்ஜுனா ! இந்த
உலகத்தில் யாருமே
செய்ய முடியாத
மிகப்பெரிய செயலை
செய்வதற்குரிய
வாய்ப்பை காலம்
உனக்கு ஏற்படுத்திக்
கொடுத்திருக்கிறது “

“நடைபெற வேண்டிய
விஷயம் நல்லபடியாக
நடப்பதற்கு இந்த
உலகமே நீ
செய்யப்போகும்
உன்னுடைய இந்த
செயலுக்காகக்
காத்துக் கொண்டிருக்கிறது “

“ஆமாம் !
அரவானுடைய தலையை
வெட்டுவதற்குரிய
மிகப்பெரிய பொறுப்பு
தற்போது உன்னிடமே
ஒப்படைக்கப்பட்டிருக்கிறது

“இந்த உலகத்தில்
யாருக்குமே கிடைக்காத
மிகப்பெரிய பாக்கியம்
உனக்கு கிடைத்திருக்கிறது “

“அரவானுடைய தலையை
யார் வெட்டினாலும்
அது செய்தியாகத்
தான் இருந்திருக்கும்  ;
ஆனால் அரவானுடைய
தலையை நீ
வெட்டினால் அது
சரித்திரமாக இனி
இருக்கும் “

“நீ ! அரவானுடைய
தலையை வெட்டினால்
இது வரை
இந்த உலகத்தில்
யாரும் செய்யாத
செயலைச் செய்தவனாவாய்
இருப்பாய் “

“தந்தையே !
தன் மகனுடைய
தலையை வெட்டி
காளிதேவிக்கு படைத்த
சிறப்புக்கு உரியவனாவாய்
இருப்பாய் “

“உலகத்தின் நன்மைக்காக
மிகப்பெரிய செயலைச்
செய்தவனாய் இருப்பாய் “

“வாளை எடு அர்ஜுனா
வாளை எடு !
அரவானுடைய தலையை
வெட்டுவதற்காக
வாளை எடு ! “

“வாளை எடு அர்ஜுனா
வாளை எடு ! “

அரவான் :
“தந்தையே தாங்கள்
என் தலையை
வெட்டுவது நான்
செய்த பாக்கியம் “

“தந்தையே மகனுடைய
தலையை வெட்டுவது
யாருக்கு கிடைக்கும் ;
எனக்கு அந்த பாக்கியம்
கிடைத்து இருக்கிறது ; “

“யாருக்கும் கிடைக்காத
மிகப்பெரிய
பாக்கியம் எனக்குக்
கிடைத்திருக்கிறது “

“தாங்கள் என்னுடைய
தலையை வெட்டினால்
நான் மகிழ்வேன் “

“தந்தையே என்னுடைய
தலையை வெட்டுங்கள் “

(என்று தன்னுடைய
தலையை வெட்டுவதற்கு
வசதியாக தன்னுடைய
தலையை காட்டிக்
கொண்டு முட்டி
போட்டுக் கொண்டு
இருந்தான் அரவான் )

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 10-04-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment