April 10, 2020

பரம்பொருள்-பதிவு-186


                ஜபம்-பதிவு-434
              (பரம்பொருள்-186)

“நான் எப்போது
அரவானைக்
களப்பலியாகக்
கொடுக்க
சம்மதித்தேனோ
அப்போதே
அரவானை
இந்த உலகத்திற்கு
அர்ப்பணித்து
விட்டேன் “

“நான் எப்போது
அரவானை
இந்த உலகத்திற்கு
அர்ப்பணித்தேனோ
அப்போதே
அரவானைக்
களப்பலியாகக்
கொடுக்கக் கூடிய
மிகப்பெரிய பொறுப்பு
இந்த உலகத்திற்கு
வந்து விட்டது “

"அரவானை
களப்பலி
கொடுப்பதற்கு
ஒப்புதல்
அளித்ததோடு
என்னுடைய
கடமை
முடிந்து விட்டது “

“இந்த உலகம்
தான் தனக்கு
கொடுக்கப்பட்டிருக்கும்
பொறுப்பை உணர்ந்து
செயல் பட வேண்டும் “

“இந்த உலகம் தான்
தனக்கு வழங்கப்பட்ட
கடமையை உணர்ந்து
கடமையை
முடிக்க வேண்டும் “

“எனக்கு அளிக்கப்பட்ட
கடமையை நான்
சரியாக முடித்து
விட்டேன் “

“நான் என்றுமே
என்னுடைய
கடமையிலிருந்து
தவறியதே இல்லை “

“இப்போதும்
அவ்வாறு தான்
நான் என்னுடைய
கடமையிலிருந்து
தவறவேயில்லை “

“பெற்ற குழந்தையை
எந்தத் தாயும்
கழுத்தை நெறிக்கும்
செயலைச்
செய்ய மாட்டாள் “

“அதைப்போலத்
தான் நானும்
பெற்ற தந்தையான
என்னால்
எப்படி பெற்ற
மகனின் தலையை
வெட்ட முடியும் “

“ஒரு தாய்க்கு
இருக்கும்
தாய்ப்பாசம் தானே
பெற்ற தந்தையான
எனக்கும் இருக்கும் “

“பெற்ற தந்தையான
எனக்கு எப்படி
பெற்ற மகனின்
மேல் பாசம்
இல்லாமல் இருக்கும் “

“பெற்ற மகனின்
மேல் அளவுக்கதிகமாக
பாசம் வைத்திருக்கும்
ஒரு தந்தையால்
எப்படி பெற்ற
மகனின் தலையை
வாளால்
வெட்ட முடியும் “

“ஒரு தாயால்
பெற்ற குழந்தையின்
கழுத்தை எப்படி
நெறிக்க முடியாதோ
அப்படியே என்னால்
பெற்ற மகனான
அரவானுடைய
கழுத்தை
என்னால் வாளால்
வெட்ட முடியாது “

“அரவானுடைய
தலையை வெட்டி
களப்பலி
கொடுக்கக்கூடிய
மிகப்பெரிய
பொறுப்பு இந்த
உலகத்திற்குத்
தான் இருக்கிறது “

“அரவானுடைய
தலையை
வெட்டுவதற்குரிய
பொறுப்பை
இந்த உலகத்தில்
உள்ள யாருக்கு
வேண்டுமானாலும்
அளியுங்கள் “

“அவர்கள் அந்த
பொறுப்பை
நிறைவேற்றட்டும் “

“என்னை விட்டு
விடுங்கள் “

“அரவானுடைய
தலையை
வெட்டச் சொல்லி
தயவு செய்து என்னை
கட்டாயப்படுத்தாதீர்கள் “

“என்னால்
அரவானுடைய
தலையை
வெட்ட முடியாது “

(என்று அர்ஜுனன்
அமைதியாக
நின்று விட்டான்)

கிருஷ்ணன்  :
“நகுலா அடுத்து
நீ தான் “

“நீ இப்போது என்ன
சொல்லப் போகிறாய்
என்று பார்ப்போம் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 10-04-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment