April 20, 2020

பரம்பொருள்-பதிவு-204


             ஜபம்-பதிவு-452
           (பரம்பொருள்-204)

தர்மர் :
“அரவான்
பாலகன்
அவன் அவ்வாறு
கேட்டிருந்தாலும்
அனைத்தையும்
உணர்ந்த தாங்கள்
அரவானுடைய
தலைக்கு மட்டும்
உயிரைக்
கொடுக்காமல்
உடலுக்கும் சேர்த்து
உயிர் கொடுத்து
இருக்கலாமே ? “

கிருஷ்ணன் :
“தர்மா !
உன்னுடைய பேச்சு
நீ இன்னும்
அரவானை
சரியாகப் புரிந்து
கொள்ளவில்லை
என்பதைத்தான்
காட்டுகிறது “

“நீங்கள் இன்னும்
அரவானைப் புரிந்து
கொள்ளவில்லை
என்பதை
நினைக்கும்
போது எனக்கு
வேதனையாகத்
தான்
இருக்கிறது “

“மரணத்தைப்
பார்த்து
பயப்படாதவன்
அரவான் “

“மரணத்தைப்
பார்த்து
பயப்படுபவனாக
அரவான்
இருந்திருந்தால்
களப்பலிக்கு
சம்மதித்தே
இருக்க மாட்டான் “

“அரவான்
களப்பலியானதிலிருந்து
மரணத்தைப் பார்த்து
பயப்படாதவன்
அரவான் என்பதை
நீங்கள் தெரிந்து
கொண்டிருக்க
வேண்டாமா “

“வாழ்க்கையைப்
பார்த்து
பயப்படுபவன் தான்
மரணத்தைப் பார்த்து
பயப்படுவான் “

“மரணத்தைப் பார்த்து
பயப்படாதவன்
வாழ்க்கையைப்
பார்த்து பயப்படவும்
மாட்டான்  

“வாழ்க்கையை
பெரியதாக நினைத்து
தனக்காக வாழ
வேண்டும் என்று
நினைக்கவும்
மாட்டான் “

“அரவான்
மரணத்தைப் பார்த்து
பயப்படாதவன்
அதனால் தான்
களப்பலியானான் “

“மரணத்தைப் பார்த்து
பயப்படாமல்
களப்பலியானவன்
களப்பலியான பிறகு
தான் வாழ வேண்டும்
என்ற வரத்தை
எப்படி கேட்பான் “

“இந்த உலகத்தில்
உள்ளவர்கள்
வாழ்க்கையை வாழ
வேண்டும் என்று
ஆசைப்பட்டு
மரணத்தைப் பார்த்து
பயப்படுகிறார்களே
அவர்களைப் போல்
நினைத்தாயா
அரவானை “

“அரவான்
மரணத்தைப் பார்த்து
பயப்படாதவன் “

“வாழ
வேண்டும் என்று
ஆசைப்படுபவர்கள்
தான் உயிர் பயத்தில்
இருப்பார்கள்
அவர்களால்
ஒரு செயலையும்
சரியாகச் செய்ய
முடியாது “

“அவர்களுக்கு
கிடைத்த
வாழ்க்கையைக்
கூட அவர்களால்
நிம்மதியாக வாழ
முடியாது “

“மரண பயத்தை
மனதில் வைத்துக்
கொண்டுத் தான்
வாழ்ந்து
கொண்டிருப்பார்கள் “

“தான் இறந்து
விட்டால்
தன்னுடைய
குடும்பம்
நிர்க்கதியாகிவிடும்  ;
தன்னுடைய
குடும்பத்தை
காப்பாற்ற
யாரும் இல்லை
என்று பல்வேறு
காரணங்களை
அவர்கள்
சொன்னாலும்
தாங்கள் வாழ
வேண்டும் என்ற
ஆசையே
அவர்களுடைய
மரண பயத்திற்கு
காரணம் என்பதைத்
தெரிந்து கொள்ளலாம் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 20-04-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment