April 20, 2020

பரம்பொருள்-பதிவு-202


             ஜபம்-பதிவு-450
           (பரம்பொருள்-202)

“காளி மறைந்து
விட்ட அதே
கணத்தில்
கிருஷ்ணன்
ஆவேசமாக
குரல் எழுப்பி
பேசினார் “

கிருஷ்ணன் :
“பிறருக்காக
தன்னையே
தந்தவனுடைய
உடலைத்
தாங்கிப் பிடிக்க
யாரும் இல்லை
என்பதற்காக
அரவானுடைய
உடல் தானாகவே
தரையில் விழுவது
நல்லதல்ல  

“அதனால்
அனைவரும்
ஓடிச் சென்று
அரவானுடைய
உடலைத் தாங்கிப்
பிடியுங்கள் “

(என்று கிருஷ்ணன்
சொன்னபோது
பஞ்ச பாண்டவர்கள்
அனைவரும்
ஓடிச்சென்று
அரவானுடைய
உடலைத்
தாங்கிப் பிடித்துக்
கொண்டனர் )
   
கிருஷ்ணன் :
“தர்மா !
அர்ஜுனா !
நீங்கள் இருவரும்
சென்று
அரவானுடைய
கையில் இருக்கும்
அரவானுடைய
தலையைப் பிரித்து
எடுத்து என்னிடம்
கொண்டு வந்து
ஒப்படையுங்கள் ;
மற்றவர்கள்
அனைவரும்
அரவானுடைய
உடலைப் பிடித்து
பொறுமையாக
நிதானமாக
கொஞ்சம்
கொஞ்சமாக
அரவானுடைய
முதுகு தரையில்
படும்படி படுக்க
வையுங்கள் “

(அர்ஜுனனும்
தர்மரும்
அரவானுடைய
தலையை
கொண்டு வந்து
கிருஷ்ணனின்
கையில்
ஒப்படைத்தனர் ;
கிருஷ்ணன்
அரவானுடைய
தலையைப் பெற்றுக்
கொண்டார் ;
மற்ற பாண்டவர்கள்
அனைவரும்
அரவானுடைய
உடலை
பொறுமையாக
தரையில் படுக்க
வைத்தனர் )

கிருஷ்ணன் :
“நமக்கு ஒரு
முக்கியமான வேலை
காத்திருக்கிறது “

“அந்த வேலையை
செயல்படுத்துவதற்கு
நாம் ஒரு
முக்கியமான
இடத்திற்கு செல்ல
வேண்டியதிருக்கிறது ;
விரைந்து
வாருங்கள்
அந்த இடத்திற்கு
செல்ல வேண்டும்  ;
காலம் போய்க்
கொண்டே இருக்கிறது ; “

தர்மர் :
“என்ன வேலை  ?
எங்கே செல்ல
வேண்டும் ? “

கிருஷ்ணன் :
“குருஷேத்திரப் போர்
நடக்கப்போகும்
இடத்திற்கு
செல்ல வேண்டும் “

தர்மர் :
“எதற்காக செல்ல
வேண்டும் ? “

கிருஷ்ணன் :
“எதற்காக என்பதை
விளக்கமாக
சொல்வதற்கு
இப்போது எனக்கு
நேரமில்லை ; “

“எப்போது சொல்ல
வேண்டுமோ
அதை அப்போது
சொல்கிறேன் “

“எப்போது அதை
நீங்கள் தெரிந்து
கொள்ள வேண்டுமோ
அப்போது அதை
நீங்கள் அப்போது
தெரிந்து கொள்வீர்கள் “

“இப்போது
குருஷேத்திரப் போர்
நடக்கப்போகும்
இடத்திற்கு
செல்வோம் ;
அமைதியாக
அனைவரும் என்
பின்னால் வாருங்கள் ; “
 
(கிருஷ்ணன்
அரவானுடைய
தலையை
எடுத்துக் கொண்டு
முன்னே செல்ல
பஞ்ச பாண்டவர்கள்
அனைவரும்
அவர் பின்னால்
நடந்து சென்று
குருஷேத்திரப் போர்
நடக்கப்போகும்
இடத்திற்கு அருகில்
உள்ள ஒரு
இடத்தை அடைந்தனர்)

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 20-04-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment