May 10, 2020

அன்னையர் தின வாழ்த்துக்கள்- பதிவு-2


                          பதிவு-2

“பட்டினத்தார்
 பல ஆண்டுகள்
பல  இடங்களுக்கும்
சென்று பல்வேறு
கருத்துக்களைப்
பரப்பி வந்தார்.
அவ்வாறான
செயல்கள்
நடை பெற்றுக்  
கொண்டிருக்கும் 
வேளையில்,
ஒரு நாள்
தவநிலையில்
இருக்கும் போது
அவர் உடுத்தி
இருந்த
ஆடையில்
முடிந்து
வைக்கப்பட்ட
 நாணயம்
அவிழ்ந்து
கீழே  விழுந்தது.”

“அவர் தாய்
இறந்து விட்டார்
என்று
அவருக்கு
தெரிந்ததும்,
அவரையும்  
அறியாமல்
அவர் மனம்
தடுமாற்றம்
அடைந்தது.
மனம் கலக்கம்
அடைந்தது
துயர மேகங்கள்
அவருடைய
இதயத்தை
சூழ்ந்து கொண்டது
உடனே அவர்
அருகில்
இருந்தவர்களிடம்
தன் தாய்
இறந்து விட்டார்
அவரைப் பார்க்க
சென்று
வருகிறேன் என்று
சொல்லி விட்டு
கிளம்பி விட்டார்”

“அவர் தாய்
இருக்கும்
இடத்திற்கு
வந்தபோது
அங்கே அவர்
கண்ட காட்சி
அவரை அதிர்ச்சி
அடையச் செய்தது.
அவர்
 துறவியாகி
எல்லாவற்றையும்
துறந்து விட்டு
சென்று விட்டதால்
சாதி வெறியர்கள்
அவர்
குடும்பத்தை
விலக்கி
வைத்திருந்தனர்.
அதனால்  அவர்
தாயாரின்
இறந்த
உடலுடன்
ஓரிருவர்
மட்டுமே நின்று
கொண்டிருந்தனர்.”

“தன்னுடைய
தாயினுடைய
இறந்த உடலை
பார்த்த
பட்டினத்தார்
மனம்
வேதனையுற்று
தன்னையுமறியாமல்
கண்ணிலிருந்து
விழுந்த
கண்ணீரை
அடக்க
முடியாமல்,
துக்கம் தாளாமல்
தேம்பித்
தேம்பி அழ
ஆரம்பித்தார் ;
கதறி அழ
ஆரம்பித்தார் ;
தன்னுடைய
அழுகையை
கட்டுப்படுத்த
முடியாமல்
அழ ஆரம்பித்தார் ;
உடல் என்னும்
கூட்டை விட்டு
இதயம் வெடித்து
வெளியே
விழுந்து விடும்
என்று
எண்ணத்
தோன்றும்
வகையில்
ஆழ ஆரம்பித்தார் ;
ஆன்மீக
வரிசையில்
ஞானத்தைப்
பெற்று
சமாதியைச்
சுவைத்து
முக்தி என்ற
மோட்ச நிலையை
அடையக்
காத்துக்
கொண்டிருக்கும்
பட்டினத்தார்
தன்னை மறந்து
தாயின்
சடலத்தைப்
பார்த்து அழுதார்

“அப்பொழுது
தான் அவர்
தாய் சொன்னது
அவர்
நினைவுக்கு
வந்தது”

“உலகில் உள்ள
எந்த ஒரு
பாசத்தையும்
துறக்கலாம்  
ஆனால் தாய்
பாசத்தை மட்டும்
துறக்க முடியாது
என்ற வார்த்தை
அவர் காதில்
எதிரொலித்தது”

“தாயின்
வார்த்தையில் உள்ள
உண்மைகளை
உணர்ந்து கொண்டார்
பட்டினத்தார்”

“இந்த உலகத்தில்
உள்ள யாராலும்
தாய்ப்பாசத்தைத்
துறக்க முடியாது
என்ற உண்மையை
தன்னுடைய
அனுபவத்தின் மூலம்
உணர்ந்துகொண்டார்
பட்டினத்தார் “

“இப்போது
பட்டினத்தார்
கண்களிலிருந்து
கண்ணீர் வடிந்தது ;
அது தாய்ப்பாசத்தை
உணர்ந்ததால்
வந்த கண்ணீர் ;”

அன்னையர் தின
வாழ்த்துக்கள்-
10-05-2020

----------என்றும் அன்புடன்
---------K.பாலகங்காதரன்

--------10-05-2020
////////////////////////////////////////////






No comments:

Post a Comment