May 09, 2020

பரம்பொருள்-பதிவு-232


            ஜபம்-பதிவு-480
          (பரம்பொருள்-232)

“ஆக மொத்தம்
இந்து மதக்
கோயில்களில்
உற்பத்தி
செய்யப்பட்டு
குவித்து
வைக்கப்பட்ட
கடவுள்
சக்தியுடன்
ஆன்ம நிலையில்
உயர் நிலை
அடைந்தவர்களுடைய்
சக்தியும்
அந்த சக்தி
களத்தில்
சேர்வதால்
உருவாக்கப்பட்ட
கடவுள்
சக்தியானது
சக்தி மிக்கதாக
இருக்கும் “

“மேலும் அந்த
கோயிலைச்
சுற்றி உள்ள
சக்தி களத்தில்
நாம் சுற்றி
வரும்போது
சக்தி களத்தில்
உள்ள
சக்திக்கும்
நம்முடைய
உடலில்
உள்ள
ஆன்ம
சக்திக்கும்
பரிமாற்றம்
நடைபெற்று
நன்மைகள்
நடைபெறும்
என்ற
காரணத்தினால்
தான்
இந்து மதக்
கோயிலுக்கு
செல்பவர்களை
கோயிலைச்
சுற்றி வரச்
சொல்கிறார்கள் “

“கோயிலை
நாம் சுற்றி
வரும் போது
அந்த கடவுள்
சக்தியானது
நம்முடைய
உடலுக்குள்
உயிருக்குள்
பாய்கிறது “

“இவ்வாறு
இந்து மதக்
கோயில்களில்
சக்தியை
உற்பத்தி
செய்தல் ;
சக்தியை
குவித்து
வைத்தல் ;
சக்தியை
பரிமாற்றம்
செய்தல் ;
என்று மூன்று
நிலைகள்
நடைபெற்றுக்
கொண்டிருக்கின்றன”

“இந்த மூன்று
விதமான
செயல்கள் தான்
அன்று முதல்
இன்று வரை
இந்து மதக்
கோயில்களில்
நடைபெற்று
வரும்
முக்கியமான
செயல்கள்
ஆகும் “

“மக்களுக்கு
நன்மைகளை
அளிக்கும்
வகையில்
உயர்ந்த
நிலைகளைத்
தன்னுள்
கொண்டதாக
இந்து மதக்
கோயில்கள்
உருவாக்கப்பட்டு
இயங்கிக்
கொண்டிருக்கும்
போது
ஏன்
இந்து மதக்
கோயில்கள்
மாதவிலக்கு
நாட்களில்
பெண்களை
அனுமதிப்பதில்லை
என்ற
கேள்வி
எழுகிறது “

“மனிதருக்குள்
ஏன்
பாரபட்சம்
காட்டுகிறது
என்ற
கேள்வி
எழுகிறது “

“அதாவது
பெண்களுக்கு
மாதவிலக்கு
என்பது
உடலியல்
ரீதியாக
பெண்களுக்கு
இயற்கையாகவே
நடைபெறும்
ஒரு நிகழ்வு “

“அப்படி
இயற்கையாகவே
நடைபெறும்
ஒரு நிகழ்வை
ஏன் தீட்டு
என்று
சொல்லி
பெண்களை
கோயிலுக்குள்
அனுமதிப்பது
இல்லை,
இது தவறான
செயல் தானே
என்ற
கேள்வி
எழும்புகிறது “

“இந்து மதக்
கோயில்களில்
மாத விலக்கு
நாட்களில்
பெண்களை
ஏன்
அனுமதிப்பது
இல்லை
என்று
தெரியுமா ?”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 09-05-2020
//////////////////////////////////////////


No comments:

Post a Comment