June 20, 2020

திருக்குறள்-வினைவலி-பதிவு-2


         திருக்குறள்-வினைவலி-பதிவு-2

“பாரத நாட்டிற்கும்
இலங்கைக்கும்
இடையே பாலம்
அமைக்க
வேண்டும் “

“இலங்கேஸ்வரன்
என்ற பட்டம்
பெற்று பலவித
கலைகள் கற்று
வீரத்திற்கு
இலக்கணமாக
வாழ்ந்து
கொண்டிருக்கும்
இராவணனை
வீழ்த்த வேண்டும்”

“இராவணனுக்காக
உயிரைக்
கொடுக்கக் கூடிய
நம்பிக்கையானவர்களை
வீழ்த்த வேண்டும்”

“இராவணனுடைய
படையை அழிக்க
வேண்டும்”

“இவைகள்
அனைத்தையும்
செய்தால்
மட்டுமே
இராவணனை
வீழ்த்தி
சீதையை
மீட்டு வர
முடியும்”

“இவைகள்
அனைத்தையும் 
யோசித்தால்
எதிரியின்
வலிமை மிக
அதிகமாக
இருக்கிறது”

“அதாவது
பிரச்சினையை
ஏற்படுத்திய
எதிரியின்
வலிமை மிக
அதிகமாக
இருக்கிறது “

“இதைத் தான்
மாற்றான்
வலிமை
என்கிறோம் “

“இராமர்
தன்னால்
தனித்து
இராவணனை
வீழ்த்துவது
இயலாத
காரியம்
என்பதை
உணர்ந்து
கொண்டார்;
இராமர்
தன்னால்
தன்னந்தனியாக
சீதையை மீட்டுக்
கொண்டு வர
முடியாது
என்பதை
உணர்ந்து
கொண்டார் ;”

“கடவுளாக
இருந்தாலும்
மனிதனாக
பிறந்து விட்டால்
மனிதன்
அனுபவிக்க
வேண்டியவைகளை
அனுபவித்துத்
தான் ஆக
வேண்டும்
என்பதை
இராமர்
உணர்ந்து
கொண்டார்”

“தனிப்பட்ட
முறையில்
தன்னால்
தன்னந்தனியாக
கடல் கடந்து
செல்வது என்பது
இயலாத காரியம்
என்பதை
உணர்ந்து
கொண்டார்”

“பாரத நாட்டிற்கும்
இலங்கைக்கும்
இடையே
தன்னால்
தன்னந்தனியாக
கடலில் பாலம்
அமைப்பது
என்பது
இயலாத காரியம்
என்பதை
உணர்ந்து
கொண்டார்;
வலிமை
வாய்ந்த
இராவணனுடனும்
இராவணனுக்கு
நம்பிக்கையாக
இருப்பவர்களுடனும்
இராவணனுடைய
படைகளுடனும்
போரிடுவது
என்பது
கடினமான காரியம்
என்பதை
உணர்ந்து
கொண்டார் ;”

“தன்னுடைய
வலிமை
எவ்வளவு
என்பதை
உணர்ந்து
கொள்வதைத் தான்
தன்வலிமை
என்கிறோம்”

“நமக்கு
துணையாக
இருப்பவர்களுடைய
நட்பு மிக
முக்கியம்
நமக்கு
துணையாக
இருப்பவர்களுடைய
நட்பு உண்மையான
நட்பாக
அமைந்து
விட்டால்
எந்த பிரச்சினையும்
நம்மால்
தீர்க்க முடியும்”

-----------என்றும் அன்புடன்
-----------K.பாலகங்காதரன்

-----------20-06-2020
/////////////////////////////////////////

No comments:

Post a Comment