June 20, 2020

திருக்குறள்-வினைவலி-பதிவு-3


        திருக்குறள்-வினைவலி-பதிவு-3

“நமக்கு
துணையாக
இருப்பவர்களுடைய
நட்பை
இரண்டு
நிலைகளில்
பிரித்து விடலாம்”

ஒன்று :  
“நம்மிடம்
எதையாவது
எதிர்பார்த்து நட்பு
கொள்பவர்கள்”

இரண்டு :
“நம்மிடம்
எதையும்
எதிர்பார்க்காமல்
நட்பு கொள்பவர்கள்”

“நம்மிடம்
எதையாவது
எதிர்பார்த்து
நட்பு கொள்பவர்கள்
நம்மிடம் பொய்யாக
நட்பு கொள்பவர்கள்”

“நம்மிடம்
எதையும்
எதிர்பார்க்காமல்
நட்பு கொள்பவர்கள்
நம்மிடம்
உண்மையாக
நட்பு கொள்பவர்கள்”

“நம்மிடம்
எதையாவது
எதிர்பார்த்து
நட்பு கொள்பவர்கள்
ஆபத்தானவர்கள் ;
அவர்கள் நம்மிடம்
ஏதாவது ஒன்றை
எதிர்பார்த்துத் தான்
நம்மிடம் நட்பு
வைத்து
இருப்பார்கள்;”

“நம்மிடம்
எதையும்
எதிர்பார்க்காமல்
நட்பு கொள்பவர்கள்
உண்மையானவர்கள் ;
அவர்கள் நம்மிடம்
எதையும்
எதிர்பார்க்காமல்
தான் நம்மிடம்
நட்பு வைத்து
இருப்பார்கள் ;”

“யாரை
சேர்த்துக்
கொண்டால்
நமக்கு
துணையாக
இருக்கும்
என்பதை
யோசிக்க
வேண்டும்”

“தன்னலம்
கருதாது
நம்மேல்
நட்பு கொள்பவர்
யார் என்று
பார்த்துத் தான்
நட்பு கொள்ள
வேண்டும்”

“நம்மிடம்
எதையாவது
எதிர்பார்த்து
நம்மிடம்
நட்பு கொண்டு
இருப்பவர்கள்
நமக்கு
உண்மையானவர்களாக
இருக்க மாட்டார்கள் ;
நமக்கு ஒரு
பிரச்சினை
ஏற்பட்டாலோ
நமக்கு துன்பம்
ஏற்பட்டாலோ
நாம் ஒரு
கஷ்டத்தில்
இருந்தாலோ
அவர்கள் நம்மை
விட்டு ஓடி
விடுவார்கள் ;
நம்மை கண்டு
கொள்ளவே
மாட்டார்கள் ;
எனக்கு ஏகப்பட்ட
பிரச்சினை
வீட்டில் கஷ்டம்
மனக்கவலை
என்று ஆயிரம்
கதைகள்
சொல்லி விட்டு
பிரச்சினை
முடிந்தவுடன்
நல்லவர்கள்
போல் நடித்து
நீலிக்கண்ணீர்
வடிப்பார்கள் ;
அத்தகையவர்களை
நாம் அருகில்
துணையாக
வைத்துக் கொண்டால்
அவர்களால்
நமக்கு
மன வருத்தமும்
பிரச்சினைகளும்
தான் தொடர்ந்து
இருக்கும் ;
அவர்களால்
நமக்கு
எந்த விதமான
நன்மையான
பயனும்
ஏற்படாது “

“நம்மிடம்
எதையும்
எதிர்பார்க்காமல்
நம்மிடம் நட்பு
கொண்டு நம்மிடம்
உண்மையாக
இருந்து நமக்காக
உயிரைக் கொடுக்கக்
கூடியவர்கள்
யார் என்பதை
அறிந்து
அவர்களுடன்
தான் நட்பு
கொள்ள வேண்டும் ;”

“அவர்கள் தான்
நமக்கு
ஒரு துன்பம்
வந்தாலும்
ஆபத்து வந்தாலும்
இக்கட்டான சூழ்நிலை
வந்தாலும்
நமக்காக
கூட இருந்து
அதை தீர்ப்பதற்கு
முயற்சி
செய்வார்கள்  ;
அவர்கள் தான்
நமக்காக
உயிரைக்
கொடுப்பார்கள் ;
இவர்கள் தான்
ஆபத்துக் காலத்தில்
நமக்கு உதவி
செய்வார்கள் ;”

“ஆகவே
நாம் நட்பு
கொள்ளும்
போது
நம்மிடம்
எதையும்
எதிர்பார்க்காதவர்களையே
நட்பாகக் கொள்ள
வேண்டும் “

-----------என்றும் அன்புடன்
-----------K.பாலகங்காதரன்

-----------20-06-2020
/////////////////////////////////////////

No comments:

Post a Comment