August 09, 2020

உயிரே அழுக்குத் துணி-கண்ணதாசன்-1

 

பதிவு-1

கண்ணதாசன் பாடல்

 

உயிரே

அழுக்குத் துணி

உவர்மண்ணே

நம் பிறப்பு
பூவுலக வாழ்க்கை

எனும் பொல்லாத

கல்லினிலே
மோதி

அடிக்கையிலே

முற்றும்

கசக்கையிலே
ஆதி சிவன்

என்னும்

ஆற்றில் வரும்

வெள்ளத்திலே
அழுக்கெல்லாம்

வெளூக்குதடா

வெள்ளையப்பா

அவன்
அருள் என்னும்

நிழல்தனிலே

வெள்ளையப்பா

 

--------படம் –

     திருவருட் செல்வர்

 

-------எழுதியவர்-

     கண்ணதாசன்

 

“மேலே

சொல்லப்பட்ட

கண்ணதாசனின்

பாடல் வரிகள்

உவமையணியைக்

கொண்ட

பாடல் வரிகள்”

 

உவமையணி :

“ஒரு பொருளை

இன்னொரு

பொருளுடன்

ஒப்பிட்டு அழகு

படுத்திக் கூறுவது”

 

“தெரியாத

ஒன்றைப் பற்றி

தெரிந்து

கொள்வதற்காக

தெரிந்த

ஒன்றைக் கொண்டு

விளக்குவது”

 

“ஒரு பொருளை

ஒரு பொருளுடனோ

அல்லது

வேறு

ஒரு பொருளுடனோ

அல்லது

பல பொருளுடனோ

அப்பொருளின்

பண்பு,

தொழில், பயன்

என்பவற்றைக்

காரணமாக் கொண்டு

இயைபு படுத்தி

இரு பொருள்களுக்கும்

இடையே உள்ள

ஒப்புமைப்

புலப்படும்படி

பாடுவது

உவமையணி

எனப்படும்”

 

அழுக்குத் துணி :

 

“ஒரு

தூய்மையான

வெள்ளைத் துணியில்

அழுக்கு படிந்தால்

அதற்கு

அழுக்குத் துணி

என்று பெயர்”

 

“அந்த

அழுக்குத் துணியில்

படிந்துள்ள

அழுக்கானது

முற்றிலும்

நீக்கப்படாத வரை

அந்த

அழுக்குத் துணியானது

அழுக்குத் துணி

என்று தான்

அழைக்கப்படும்”

 

“அந்த

அழுக்குத் துணியில்

உள்ள அழுக்கானது

முழுவதும்

நீக்கப்பட்டு

தூய்மையான

வெள்ளைத் துணியாக

மாறி விட்டால்

அந்த

அழுக்குத்

துணியானது

தூய்மையான

வெள்ளைத் துணி

என்று

அழைக்கப்படும்”

 

“அந்த

அழுக்குத் துணியில்

படிந்துள்ள

அழுக்குகளை

நீக்க வேண்டுமானால்

அழுக்கை

நீக்கும் பொருளாக

சோப்பைப்

பயன்படுத்த வேண்டும்”

 

----------என்றும் அன்புடன்

----------K.பாலகங்காதரன்

 

------------09-08-2020

////////////////////////////////////////////////

No comments:

Post a Comment