November 11, 2020

ஐயப் படாஅது-திருக்குறள்-பதிவு-1

 

திருக்குறள்-

ஐயப் படாஅது-பதிவு-1

 

“ஐயப் படாஅது

அகத்தது

உணர்வானைத்

தெய்வத்தோ

டொப்பக் கொளல்”

 

-------திருக்குறள்

-------திருவள்ளுவர்

 

“அந்தக் காலம்

முதல்

இந்தக் காலம்

வரை

இந்த உலகத்தில்

உள்ள அனைத்து

விதமான

விஷயங்களையும்

உணர்ந்து

கொள்வதற்கு

மனிதன்

இரண்டே இரண்டு

முறைகளைத்

தான் பயன்

படுத்துகிறான்.”

 

ஒன்று :

ஐம்புலன்களின் மூலம்

உணர்ந்து கொள்ளும்

முறையைப் பயன்

படுத்துகிறான்

 

இரண்டு :

உயிரின் மூலம்

உணர்ந்து கொள்ளும்

முறையைப் பயன்

படுத்துகிறான்

 

ஒன்று :

“ஐம்புலன்களின்

மூலம்

உணர்ந்து

கொள்வதற்கு

மனிதன்

ஐம்புலன்கள்

எனப்படும்

மெய், வாய், கண்,

மூக்கு, செவி

ஆகியவற்றைப்

பயன் படுத்துகிறான்”

 

“மெய், வாய், கண்,

மூக்கு, செவி ஆகிய

ஐம்புலன்கள்

மூலமாக

உணரப்படும்

அழுத்தம், ஒளி,

ஒலி, சுவை மணம்

ஆகியவை

பஞ்சதன்

மாத்திரைகள்

எனப்படும்.”

 

“அதாவது

ஐம்புலன்கள்

எனப்படும்

மெய், வாய், கண்,

மூக்கு, செவி

ஆகியவற்றின்

மூலமாக மனிதன்

அழுத்தம், ஒளி,

ஒலி, சுவை, மணம்

என்ற பஞ்சதன்

மாத்திரைகளை

உணர்ந்து

கொள்கிறான். “

 

“என்றும் இருப்பது

அழியாமல் இருப்பது

அழிவில்லாமல்

இருப்பது

நிலையாக இருப்பது

நிலைத்து இருப்பது

என்று

சொல்லப்படக்கூடிய

கடவுள் என்ற

பரம்பொருளை

பரம் பொருள்

என்ற

பேரின்பத்தை

ஐம்புலன்களால்

உணர முடியாது”

 

“ஏனென்றால்

ஐம்புலன்கள் மூலமாக

உணரப்படும்

அனைத்தும்

அழிவை உடையது

அழிந்து

கொண்டிருப்பது

நிலையில்லாமல்

இருப்பது

நிலையற்று இருப்பது

கர்ம வினைகளை

உண்டு பண்ணுவது,

சிற்றின்பத்திற்கு

உட்பட்டது”

 

“ஐம்புலன்கள் மூலம்

உணரப்படும்

அனைத்தும்

சிற்றின்பத்தின்

வழி சென்று

கர்ம வினைகளை

உண்டு பண்ணி

பிறவிப்

பெருங்கடலில்

நீந்த வைக்கிறது’

 

இரண்டு :

“உயிரின் மூலம்

உணர்ந்து கொள்வதற்கு

மனிதன்

இரண்டு

முறைகளைப்

பயன்படுத்துகிறான்.”

 

ஒன்று :

உயிரின்

படர்க்கை நிலையான

மனதின் மூலம்

உணர்ந்து கொள்கிறான்.

 

இரண்டு :

உயிரின்

ஒடுக்க நிலையான

அறிவின் மூலம்

உணர்ந்து

கொள்கிறான்

 

“வீட்டில் ஒரு

பொருளை

எந்த இடத்தில்

வைத்தோம்

என்பதை

மறந்து விட்டோம்

வைத்த இடம்

தெரியாமல்

தொலைந்து

போனதாக

நினைத்துக் கொண்டு

அதைத் தேடிக்

கொண்டு இருக்கிறோம்

அந்த பொருளானது

நமக்கு அவசியமாக

தேவைப்படுவதால்

தேடுகிறோம்.

நீண்ட நேரமாக

தேடுகிறோம்

வீடு முழுவதும்

தேடுகிறோம்

கஷ்டப்பட்டு

தேடுகிறோம்

தேடுகிறோம்

தேடுகிறோம்

தேடிக்கொண்டே

இருக்கிறோம்

அப்படியும்

கிடைக்கவில்லை

கஷ்டப்பட்டு

தேடியும்

கிடைக்கவில்லை.”

 

------என்றும் அன்புடன்

------K.பாலகங்காதரன்

 

------11-11-2020

//////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment