November 11, 2020

ஐயப் படாஅது-திருக்குறள்-பதிவு-4

 

திருக்குறள்-

ஐயப் படாஅது-பதிவு-4

 

“ஆனால்

தேடுவதை

நிறுத்தி விட்டு

அமைதியாக

இருந்த போது

மனமானது

இயங்கவில்லை.

மனமானது

ஒடுங்கி உயிரே

அறிவாகிறது.

அறிவு நிலையில்

இருக்கும் போது

நம்முடைய

தொலைந்த பொருள்

எங்கே இருந்தது

என்பதை யோசித்து

எடுப்பதற்கு அறிவே

காரணமாக இருந்தது”

 

“மனமானது

இயங்கிக்

கொண்டிருக்கும் போது

தேடியது

கிடைக்கவில்லை

மனம் ஒடுங்கி

அறிவாகவே

மாறும் போது

தேடியது

கிடைத்தது”

 

“அதைப்போல

உயிரானது

மனமாக

இருக்கும் போது

இந்த பிரபஞ்சத்தில்

உள்ள எந்த

ஒன்றையும்

அறிந்து கொள்ள

முடியாது

ஆனால்

மனமானது

அறிவாகவே

மாற்றம்

அடையும் போது

இந்த பிரபஞ்சத்தில்

உள்ள எந்த

ஒரு ரகசியத்தையும்

அறிந்து

கொள்ள முடியும்”

 

“மனமானது

ஒருவரை

தவறாக

வழி நடத்தும்

அறிவானது

ஒருவரை

சரியாக

வழி நடத்தும்”

 

“மனிதன்

மனதின் வழி

நடக்கும் போது

சிற்றின்பத்தின்

வழி நடந்து

கர்மவினைகளை

உருவாக்கி

பிறவிச் சுழலில்

சிக்குகிறான்

ஆனால் மனிதன்

அறிவின் வழி

நடக்கும் போது

பேரின்பத்தின்

வழி நடந்து

கர்மவினைகளைக்

கழித்து

பிறவிச் சுழலை

அறுக்கிறான் “

 

“மனிதன்

ஐம்புலன்களின்

வழி நடக்கும்

போதும்

உயிரானது

மனமாக

மாற்றமடைந்து

இயங்கிக்

கொண்டிருக்கும்

போது - மனதின்

வழி நடக்கும்

போது

மனிதனுக்கு

கர்ம வினைகள்

உருவாகிறது

பிறவிச் சுழல்

உருவாகிறது

ஆனால் மனிதன்

அறிவின் வழி

நடக்கும் போது

மட்டும் தான்

மனிதனுடைய

கர்ம வினைகள்

கழிகிறது,

பிறவிச் சுழல்

அறுகிறது

கர்ம வினைகள்

பிறப்பதில்லை

பிறவிகள்

உருவாகுவதில்லை”

 

“அந்தக் காலம்

முதல்

இந்தக் காலம்

வரை

இந்த உலகத்தில்

உள்ள அனைத்து

விஷயங்களையும்

உணர்ந்து

கொள்வதற்கு

மனிதன்

பயன்படுத்தும்

ஐம்புலன்கள்

மற்றும்

மனம்

ஆகியவை

மனிதனை

சிற்றின்பச்

சேற்றில் தள்ளி

கர்மவினையில்

பிறவி பல

எடுக்க வைக்கிறது”

 

“ஆனால் மனிதன்

அறிவைப்

பயன்படுத்தும்

போது தான்

மனிதன்

பேரின்பத்தில்

திளைத்து

கர்ம வினையை

எரித்து

பிறவிச் சுழலை

அறுத்து

ஞானத்தை சுவைத்து

சமாதியை சந்தித்து

முக்தி என்னும்

மோட்ச நிலையை

அடைய முடியும்

 

 

------என்றும் அன்புடன்

------K.பாலகங்காதரன்

 

------11-11-2020

////////////////////////////////////////

No comments:

Post a Comment