October 14, 2021

பதிவு-6-புத்தேள்- திருக்குறள்

 பதிவு-6-புத்தேள்-

திருக்குறள்-

 

ஹிட்லர்

இறந்த செய்தி

மக்களுக்கு

தெரியவும் கூடாது

ஹிட்லர்

இறுதி நிமிடத்தில்

தப்பி விட்டார்

என்ற

செய்தியைத் தான்

பரப்ப வேண்டும்

என்பதே

கோயபெல்ஸ் திட்டம்

 

நிலவறையில்

மீதமிருந்த

சில தளபதிகளும்

அதிகாரிகளும்

கோயபெல்ஸைத்

தேடி வந்தனர்.

அனைவருமே

அங்கிருந்து தப்பிக்கும்

அவசரத்தில்

நீங்களும் என்னுடன்

வந்து விடுங்கள்

என்றனர்

 

சோதனையான

தருணத்தில் நான்

தலைநகரை விட்டு

ஓடிவிட்டால் பிறகு

மற்றவர்களைக்

குற்றம் சொல்ல

முடியாது

என்னைக்

காப்பாற்றிக்

கொள்வதற்காகத்

தான் என்றாலும்

நான் அப்படிச்

செய்ய மாட்டேன்

ஒரு கப்பல்

மூழ்கும் போது

அதன் மாலுமியும்

சேர்த்து மூழ்கத்

தான் வேண்டும்

என்று

நிதானமாகச்

சொன்னார்

கோயபெல்ஸ்

 

இது கூட சில

தினங்களுக்கு முன்

ஹிட்லர் சொன்ன

வார்த்தைகள் தான்

அனைவரும்

அவரிடமிருந்து

விடை பெற்றார்கள்

 

கோயபெல்ஸ்ஸுக்கு

ஆறு குழந்தைகள்

மூத்தவளுக்கு

வயது 12

கடைசி பெண்ணுக்கு

வயது 4

HELGA.

HILDE.

HELMUT.

HOLDE,

HEDDA.

HEIDE.

எல்லோருடைய

பெயரும் H–ல்

தான் ஆரம்பிக்கும்..

 

கோயபெல்ஸ்க்கு

ஹிட்லர் மேல்

இருந்த பாசம்

தன்னுடைய

குழந்தைகளுக்கு

பெயர் வைத்ததிலிருந்து

தெரிகிறது

 

இரவு மணி 08.40

 

தங்களுக்குள்

சிரித்து பேசி

விளையாடிக்

கொண்டிருந்த

குழந்தைகள்

கோயபெல்ஸின்

மனைவி

மக்டா கோயபெல்ஸ்

அறைக் கதவைத்

திறந்து உள்ளே

நுழைந்ததுமே

தத்தம்

படுக்கைகளுக்குத்

தாவிச் சென்று

படுத்துக் கொண்டனர்

 

ஒவ்வொரு

குழந்தையின்

அருகில் சென்று

நெற்றியில்

முத்தமிட்டாள்

இறுதியாக

மூத்த பெண்

ஹெல்காவை

முத்தமிட்டாள்

 

அப்போது

பல் டாக்டர் குன்ஸ்

அறைக்குள்

தன்னுடைய

உதவியாளருடன்

நுழைந்தார்.

அவர் கையிலிருந்த

ஊசியைப் பார்த்ததும்

12 வயது

ஹெல்காவுக்கு

ஏதோ நடக்கப்

போகிறது என்று

தெரிந்து விட்டது

அதை அவளது

கண்கள் மற்றும்

உடல் அசைவின்

மூலம் உணர்ந்து

கொண்ட மக்டா,

 

ஹெல்காவின்

கரங்களை

இறுகப் பற்றினாள்.

குன்ஸ்

ஹெல்காவுக்கு

ஊசி போட்டார்

 

அது MORPHINE

என்ற மயக்க மருந்து.

ஒவ்வொரு

குழந்தையின்

உடம்பிலும்

ஊசி இறங்கியது.

மிரண்டு போன

ஒன்பது வயது

சிறுவன் ஹெல்மட்,

தன்னுடைய

படுக்கையிலிருநது

குதித்து

ஓடப்பார்த்தான்.

அவனை பிடித்து

வலுக்கட்டாயமாக

ஊசியைப் போட

வேண்டியதாயிற்று.

குழந்தைகள்

மயங்கினார்கள்

 

-----என்றும் அன்புடன்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----14-10-2021

/////////////////////////////////////////

No comments:

Post a Comment