October 14, 2021

பதிவு-7-புத்தேள்- திருக்குறள்-

 பதிவு-7-புத்தேள்

திருக்குறள்-

 

ஆகட்டும் என்று

டாக்டர் குன்ஸை

அடுத்த வேலையை

பார்க்கக் சொன்னார்

அவர் தன்னால்

முடியாது என்று

அங்கிருந்து நகர்ந்தார்

என்னால் மட்டும்

முடியுமா என்ன

மக்டா தவித்தாள்.

 

ஹிட்லரின் பிரத்யேக

டாக்டர் லூட்விக்

ஸ்டெம்ப்பெக்கரை

வரவழைத்தாள்.

அவர் தயக்கத்துடன்

ஒப்புக் கொண்டார்.

ஆறு குழந்தைகளின்

வாயிலும் இனிப்பு

கலந்த கலவை

ஊற்றப்பட்டது.

அதில் சயனைடு

கலந்து இருந்தது.

 

போரில்

பல்லாயிரக்

கணக்கானவர்களின்

உயிரைக் குடித்த

அதே சயனைடு

 

குழந்தைகளின்

இறுதி இருமல்கள்

அந்த அறை

முழுவதும்

எதிரொலித்தது

நெஞ்சு வெடித்த

நிலையில்

அறைக்குள்ளிருந்து

வெளியேறினாள்

மக்டா

அதற்குள்

குழந்தைகளின்

உயிர்கள்

வெளியேறி

இருந்தன

 

தன் அறையில்

கோர்ட் தொப்பி

கையுறை எல்லாம்

அணிந்து

கோயபெல்ஸ்

தயாராகவே இருந்தார்.

மக்டாவைப் பார்த்த

கோயபெல்ஸ்

அவரிடம் எதுவும்

கேட்கவுமில்லை

ஒன்றும்

பேசவுமில்லை

மக்டாவும்

அமைதியாக இருந்தார்

அவரும் எதுவும்

சொல்லவில்லை.

மக்டாவின்

கையைப் பிடித்து

அங்கிருந்து

வெளியேறினார்

கோயபெல்ஸ்.

 

நிலவறையின்

மேற்குப் பக்க

படிக்கட்டுக்களில்

ஏறி தோட்டத்துக்கு

வந்தார்கள்.

அங்கே

இரு வீரர்கள்

பெட்ரோல் கேனுடன்

தயாராக இருந்தார்கள்

கோயபெல்ஸும்

மக்டாவும்

சற்று தள்ளி ஒரு

மறைவிடத்துக்குச்

சென்றார்கள்

 

எதிர் எதிரே

நின்று கொண்டார்கள்.

அடுத்த நிமிடம்

தோட்டா வெடிக்கும்

சத்தம் கேட்டது

அடுத்த நொடியில்

கோயபெல்ஸின்

அலறரோடு

இன்னொரு

தோட்டா வெடித்தது

 

இரண்டு வீரர்கள்

இரண்டு கேன்களுடன்

ஓடி வந்தார்கள்

 

பிணமாகக் கிடந்த

கோயபெல்ஸ் மற்றும்

மக்டா மீது

பெட்ரோலை

ஊற்றினார்கள்.

பெட்ரோல்

குறைவாகத்

தான் இருந்தது

 

பரவாயில்லை

நெருப்பை வை

என்றார்கள்.

கோயபெல்ஸ்

மக்டா கோயபெல்ஸ்

ஆகிய இருவருடைய

உடலும்

அரை குறையாக

எரிந்து அணைந்தது.

 

நம்பிக்கைக்கு

எடுத்துக் காட்டாய்

இந்த உலகத்தில்

வாழ்ந்த கோயபெல்ஸ்

உடல் சாம்பலானது

 

ஹிட்லர்

வாழும் போதே

நம்பிக்கைக்குரியவராக

வாழ்ந்தவர்

ஹிட்லர்

சொன்னவைகளை

செயல்படுத்தியவர்

ஹிட்லர்

இறந்த பிறகு

ஹிட்லருக்காக

தன்னுடைய

குடும்பத்தையே

அழித்துக்

கொண்டவருடைய

சாம்பல்

காற்றில் கலந்தது

 

ஹிட்லர்

உயிரோடு

இருந்த போதும்

ஹிட்லர்

இறந்த பிறகும்

அவருடைய

நம்பிக்கையை

காப்பாற்றுபவராகவே

இருந்தார்

கோயபெல்ஸ்

 

கோயபெல்ஸ்

தனக்காக

வாழாமல்

தன்னுடைய

குடும்பத்திற்காக

வாழாமல்

ஹிட்லருக்காகவே

வாழ்ந்தவர்

ஹிட்லருக்காகவே

இறந்தவர்

“இந்த உலகத்திலும்,

வேறு எந்த

உலகத்திலும்

பிறருக்காகவே

வாழ்வதைப் போன்ற

செயலை விட

உயர்ந்த செயல்

வேறு ஒன்றும்

கிடையாது.”

என்பதை

கோயபெல்ஸ்

தான் வாழ்ந்த

வாழ்க்கையின்

மூலம் இந்த

உலகத்திற்கு

நிரூபித்து

இருக்கிறார்

 

இந்த உலகத்திலும்,

வேறு எந்த

உலகத்திலும்

பிறருக்காகவே

வாழ்வதைப் போன்ற

செயலை விட

உயர்ந்த செயல்

வேறு ஒன்றும்

கிடையாது.”

என்பதைத் தான்

 

“புத்தேள்

உலகத்தும்

ஈண்டும்

பெறல்அரிதே

ஒப்புரவின்

நல்ல பிற”

 

என்ற திருக்குறளின்

மூலம்

தெளிவுபடுத்துகிறார்

திருவள்ளுவர்

 

-----என்றும் அன்புடன்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----14-10-2021

/////////////////////////////////////////

No comments:

Post a Comment