October 23, 2021

பதிவு-1-அருள்சேர்ந்த- திருக்குறள்

 பதிவு-1-அருள்சேர்ந்த-     

திருக்குறள்

 

"அருள்சேர்ந்த

நெஞ்சினார்க்

கில்லை

இருள்சேர்ந்த

இன்னா

உலகம்

புகல்""

 

-----திருக்குறள்

----திருவள்ளுவர்

 

இருள்

அடர்ந்திருக்கும்

துன்ப

உலகமாகிய

நரகத்துக்குச்

செல்லுதல்,

அருள்பொருந்திய

நெஞ்சம்

உடையவர்களுக்கு

ஒரு போதுமே

இல்லையாகும்

என்பதே

இந்த திருக்குறளுக்கு

வழங்கப்படும்

கருத்தாகும்

 

இந்தத்

திருக்குறளுக்கு

கீழ்க்கண்டவாறும்

அர்த்தம்

சொல்லலாம்

 

இன்பம்

துன்பம்

இரண்டையும்

ஒன்றாகப்

பாவித்து

அமைதி என்ற

நிலையை

அடைந்து

இறைவனுடன்

இரண்டறக்

கலந்து

இறைவனின்

அருளைப்

பெற்றவர்களுக்கு

பிறவிகள்

பல எடுத்து இந்த

உலகமாகிய

நரகத்தில்

வாழ வேண்டிய

அவசியம் இல்லை

 

இதனை

விளக்கமாகப்

பார்ப்போம்

 

மனிதனுடைய

வாழ்க்கையில்

எதிர்ப்படும்

அனைத்தையும்

இன்பம், துன்பம்,

அமைதி, பேரின்பம்

என்ற நான்கு

நிலைகளில்

பிரித்து விடலாம்

 

இன்ப

உணர்வுகளையும்

துன்ப

உணர்வுகளையும்

வார்த்தைகளால்

வெளிப்படுத்த முடியாது

ஆனால்

செயல்களால்

வெளிப்படுத்த முடியும்

 

அமைதி

பேரின்பம்

இரண்டையும்

வார்த்தைகளாலும்

வெளிப்படுத்த முடியாது

செயல்களாலும்

வெளிப்படுத்த முடியாது

இரண்டையும்

உணர மட்டுமே

முடியும்

 

(1) இன்பம்

 

இந்த உலகத்தில்

உள்ள அனைவரும்

இன்பம் என்ற

ஒன்றை மட்டுமே

அனுபவிக்க

வேண்டும் என்று

நினைக்கின்றனர் ;

இன்பம் என்ற

ஒன்றை மட்டுமே

அடைய வேண்டும்

என்று

விரும்புகின்றனர் ;

இன்பம் என்ற

ஒன்றை மட்டுமே

விரும்பி ஏற்றுக்

கொள்கின்றனர் ;

இன்பம் என்ற

ஒன்றை மட்டுமே

நாடிச் செல்கின்றனர் ;

இன்பத்தை

அடைய வேண்டும்

என்பதற்காக

எதைச் செய்தால்

இன்பம்

கிடைக்கும் என்று

நினைக்கிறார்களோ

அந்த செயல்களை

எல்லாம் செய்து

இன்பத்தை

அடையத்

துடிக்கின்றனர்.

 

தாங்கள் இன்பம்

என்று எதை

எல்லாம்

நினைக்கிறார்களோ

அந்த இன்பத்தை

எல்லாம்

அடைய வேண்டும்

என்பதற்காக

தாங்கள் சரியானது

என்று நினைக்கும்

செயல்களை

எல்லாம்

சரியானது என்று

நினைத்துக்

கொண்டு செய்து

வருகின்றனர்.

 

இன்பம் என்ற

ஒன்றை அடைய

வேண்டும் என்பதற்காக

செய்யக்கூடாத

செயல்களைக் கூட

துணிந்து செய்கின்றனர்

 

 

-----என்றும் அன்புடன்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----23-10-2021

/////////////////////////////////////////

 

No comments:

Post a Comment