December 03, 2025

சிதைக்கப்பட்ட பழமொழிகள் (விளக்கங்கள் கதைகளுடன்)

 சிதைக்கப்பட்ட பழமொழிகள்

(விளக்கங்கள் கதைகளுடன்)


அன்பிற்கினியவர்களே !

இது வரை 12-புத்தகங்களை
எழுதி உங்கள் பேரன்புடன் வெளியிட்ட நான்
அதன் தொடர்ச்சியாக இப்போது,

என்னுடைய 13-வது புத்தகமாக,

சிதைக்கப்பட்ட பழமொழிகள்
(விளக்கங்கள் கதைகளுடன்)

என்ற புத்தகம்
எழுதி முடித்துவிட்டேன்.

அந்த புத்தகத்தின் முக்கியமான சராம்சம் இது தான்.
இன்றைய கால கட்டத்தில் வாழும் பெரும்பாலான மக்களுக்கு பல பழமொழிகளின் உண்மையான அர்த்தம் தெரியவில்லை.
அதற்காக அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், அவர்களுடைய அறிவுக்கு ஏற்றபடி பழமொழிக்கு என்ன அர்த்தம் தெரிகிறதோ அந்த அர்த்தத்தைக் கொண்டு பழமொழிகளை அவர்களுக்கு ஏற்றவாறு பழமொழிகளின் வார்த்தைகளை மாற்றி உருவாக்கிக் கொண்டு,
இது தான் உண்மையான பழமொழி என்றும்,
இந்த அர்த்தம் தான் இந்த பழமொழிக்கு
உண்மையான அர்த்தம் என்றும்,
முன்பு பழமொழி இப்படித் தான் இருந்தது என்றும்,
இப்போது இந்த பழமொழி கால சுழற்சியில் மாறி விட்டது என்றும்,
முன்பு சொல்லப்பட்ட பழமொழி தான்
சரியான பழமொழி என்றும் சொல்லிக் கொண்டு திரிகின்றனர்.

முன்பு பழமொழியை இப்படித் தான் நம்முடைய முன்னோர்கள் சொல்லி விட்டுச் சென்று இருக்கிறார்கள்.

இந்த பழமொழி தான் நாளடைவில் இப்படி மாறி விட்டது என்றும், இப்படித்தான் பழமொழியைச் சொல்ல வேண்டும் என்றும், சொல்லி பழமொழிகளின் வார்த்தைகளையே தங்கள் அறிவுக்கு ஏற்றபடி மாற்றி விட்டு விடுகிறார்கள்.

அது மாதிரி சமுதாயத்தில் இருக்கக் கூடிய பல பேர் நிறைய பழமொழிகளின் வார்த்தைகளையே மாற்றிக் கொண்டே வருகிறார்கள் இது தவறான செயல்.

இந்த தவறான செயல் சமுதாயத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த தவறான செயல் தொடர்ந்து நடைபெற்று வந்தால் நம்முடைய முன்னோர்கள் நமக்கு கொடுத்து விட்டுச் சென்ற மிக உயர்ந்த பொக்கிஷமான பழமொழிகளை இழந்து விடுவோம்

நமக்கு பழமொழிகளின் அர்த்தம் தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்லி விட்டு செல்ல வேண்டும்.

அதை விட்டு விட்டு இது தான் பழமொழிக்கு அர்த்தம் என்று சொல்லி விட்டு பழமொழியின் வார்த்தைகளை மாற்றுவது என்பது தவறான விஷயம்.

பழமொழி ஒன்று தான் ஆனால் அதில் உள்ள அர்த்தம் என்பது ஒருவருடைய எண்ணத்திற்கும், அறிவிற்கும், புத்திசாலித்தனத்திற்கும், அனுபவத்திற்கும் ஏற்றபடி மாறிக் கொண்டே தான் இருக்கும்.

பழமொழியின் அர்த்தம் நமக்கு என்ன தெரிகிறதோ அதைச் சொல்ல வேண்டும். நம்முடைய அறிவில் நாம் என்ன கண்டோமோ அதைச் சொல்ல வேண்டும்.

இது தான் பழமொழியின் உண்மையான அர்த்தம் என்று பழமொழியையே மாற்றுவது கூடாது. அப்படி மாற்றுவது தவறான செயல் ஆகும்.

இந்தப் புத்தகத்தில் நான் 22 பழமொழிகளுக்கு விளக்கங்கள் கதைகளுடன் சொல்லி இருக்கிறேன்.

சிதைக்கப்பட்ட பழமொழிகள் (விளக்கங்கள் கதைகளுடன்)

என்ற புத்தகம் எழுதி முடித்து இப்போது LAY OUT, PROOF CORRECTION
சென்றிருக்கிறது.

நான் எழுதிய என்னுடைய 13-வது புத்தகம் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது என்பதை சொல்லிக் கொள்வதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றி

K.பாலகங்காதரன்
எழுத்தாளர்

///////////////////////////////////////////////////////////////////

November 12, 2025

புத்தர்-விளாப்பாக்கம் குடைவரைக் கோயில்-2

 



#புத்தர்-விளாப்பாக்கம் குடைவரைக் கோயில்-2

#பண்டவமலை

#பஞ்சபாண்டவர்

#பஞ்சபாண்டவர்மலை

#ராணிப்பேட்டை

#ஆற்காடு

#வேலூர்


August 28, 2025

லாடன் குடைவரைக் கோயில்-வரலாறு-(1)

 

லாடன் குடைவரைக் கோயில்-வரலாறு-(1)

#லாடன்

#முருகன்

#நினைவுக்_கோட்டம்

#குடைவரைக்_கோயில்

#கிபி765_கிபி790

#பராந்தக_நெடுஞ்சடையன்

#இரண்டாம்_இராஜசிம்மன்




July 27, 2025

வரலாறு-(23)-கல்யாண தீர்த்தம்-அறிமுகம்-பாகம்-(1)-27-07-2025

 

வரலாறு-(23)-கல்யாண தீர்த்தம்-அறிமுகம்-பாகம்-(1)-27-07-2025

 

அன்பிற்கினியவர்களே!

 

திருநெல்வேலி மாவட்டம்,

பாபநாசம் அருகில்

மேற்குத் தொடர்ச்சி

மலையில்

கல்யாண தீர்த்தம்!

உள்ளது

அதன் சிறப்புகளைப்

பற்றிப் பார்ப்போம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்

 

-----27-07-2025

-----ஞாயிற்றுக் கிழமை

///////////////////////////////////////////////




பதிவு-3- கூடா நட்பு கேடாய் முடியும்

 

பதிவு-3

 

அதற்கு மருத்துவர்

நாம் நண்பரைத் தேர்ந்தெடுக்கும் போது

எந்த ஒரு தவறும் ஏற்படுவதில்லை.

ஆனால், நம்முடன் நண்பராக இருப்பவர்

நண்பராக பழகிக் கொண்டு இருப்பவர்

நல்லவராக வெளியில் தெரிந்தவர்

உள்ளுக்குள் கெட்டவராக இருந்து

நம்மை அழிக்கக் கூடிய வேலைகளைச்

செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்தால்

அதை நாம் கண்டுபிடித்தால்

அவர் வெளியில் நல்லவர் போல் இருக்கிறார்

ஆனால் உள்ளுக்குள் கெட்டவராக இருக்கிறார் என்பதை

நாம் கண்டு பிடித்து விட்டால்

அந்த நேரத்திலேயே அவரை விட்டு

நாம் விலகி வந்து விட வேண்டும்.

நம்மால் கண்டு பிடிக்க முடியவில்லை என்றால்

அவரிடம் தொடர்ந்து நட்பு கொண்டிருந்தால்

அவரால் நமக்கு பாதிப்பு தான் ஏற்படும்

அழிவு தான் ஏற்படும்

என்றார்.

 

மருத்துவர் சொன்னது உண்மை தான் என்பதை உணர்ந்த அந்த பெண் தன்னுடைய மலைப்பாம்பை கொண்டு போய் காட்டில் விட்டு விட்டார். பெரிய ஆபத்திலிருந்து தப்பித்தார். பெரிய அழிவிலிருந்து தப்பித்தார். இறப்பிலிருந்து தப்பித்தார்.

 

இந்தக் கதை தான் கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கான கதை.

 

நாம் நண்பரைத் தேர்ந்தெடுக்கும் போது

எந்த ஒரு தவறும் ஏற்படுவதில்லை.

ஆனால், நம்முடன் நண்பராக இருப்பவர்

நண்பராக பழகிக் கொண்டு இருப்பவர்

நல்லவராக வெளியில் தெரிந்தவர்

உள்ளுக்குள் கெட்டவராக இருந்து

நம்மை அழிக்கக் கூடிய வேலைகளைச்

செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்தால்

அதை நாம் கண்டுபிடித்தால்

அவர் வெளியில் நல்லவர் போல் இருக்கிறார்

ஆனால் உள்ளுக்குள் கெட்டவராக இருக்கிறார் என்பதை

நாம் கண்டு பிடித்து விட்டால்

அந்த நேரத்திலேயே அவரை விட்டு

நாம் விலகி வந்து விட வேண்டும்.

நம்மால் கண்டு பிடிக்க முடியவில்லை என்றால்

அவரிடம் தொடர்ந்து நட்பு கொண்டிருந்தால்

அவரால் நமக்கு பாதிப்பு தான் ஏற்படும்

அழிவு தான் ஏற்படும் என்பது தான்

கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கான

அர்த்தம் ஆகும்.