November 21, 2019

பரம்பொருள்-பதிவு-89


          பரம்பொருள்-பதிவு-89

அர்ஜுனன்:
"நான் குந்தி
தேவியின் மகன் ;
இந்திரபிரஸ்தத்தை
அரசாளும்
தர்மரின் தம்பி ;.
பஞ்சபாண்டவர்களில்
நானும் ஒருவன் ;
என்னுடைய பெயர்
அர்ஜுனன் ; "
       
"பஞ்ச பாண்டவர்கள்
ஐவரும் திரௌபதியை
திருமணம் செய்து
கொண்டோம் - எங்கள்
வாழ்க்கையில்
எந்தவிதமான
பிரச்சினையும் ஏற்பட்டு
விடக் கூடாது
என்பதற்காக,……………………?

"திரௌபதியும் 
திரௌபதியுடன்
குடும்பம் நடத்திக்
கொண்டிருக்கும்
பஞ்ச பாண்டவர்களில்
ஒருவரும் தனித்து
ஒரு அறையில்
இருக்கும் போது
பஞ்ச பாண்டவர்களில்
மற்றவர்கள் அந்த
அறைக்குள்
நுழையக்கூடாது ;
அவ்வாறு நுழைந்தால்
அது குற்றச்
செயலாகக்
கருதப்படும் ;
அந்த குற்றச்
செயலுக்கு
தண்டனையாக
குற்றம் இழைத்தவர்
12 மாதங்கள்
வனத்தில்
பிரம்மச்சாரியாக
வசிக்க வேண்டும் ;
என்ற சட்டத்தை
எங்களுக்குள்
உருவாக்கிக்
கொண்டோம் ; "

"அந்த சட்டத்தின் படி
நாங்கள் வாழ்ந்து
கொண்டிருக்கும்
சூழ்நிலையில்
கவர்ந்து
செல்லப்பட்ட
அந்தணரின்
பசுக்களை
மீட்டு வர
வேண்டும் என்ற
காரணத்திற்காக ; 
என்னுடையை
கடமையை
நிறைவேற்ற
வேண்டும் என்ற
காரணத்திற்காக ;
ஆயுத சாலையில்
தர்மரும்
திரௌபதியும்
தனித்து இருக்கும்
போது என்னுடைய
ஆயுதங்களை
எடுப்பதற்காக ;
ஆயுத சாலைக்குள்
செல்ல
வேண்டியதாயிற்று ; "
இதனால் ,
சட்டத்தை மீறிய
குற்றத்திற்காக
நான் 12 மாதங்கள்
வனத்தில்
பிரம்மச்சாரியாக
வசிக்க 
வேண்டியதாயிற்று “

"அவ்வாறு நான்
12 மாதங்கள்
வனத்தில்
பிரம்மச்சாரியாக
வசிக்க வேண்டும்
என்ற காரணத்திற்காக
கங்கைக் கரையில்
தங்கி இருந்தேன் ;
அப்படி நான்
கங்கைக் கரையில்
தங்கி இருந்த
போது தான்
தாங்கள் என்னை
கடத்தி வந்தீர்கள் ; "

"உங்களுடைய
காதலை சொன்னீர்கள் ;
உங்களை என்னுடைய
மனைவியாக
ஏற்றுக் கொள்ளச்
சொன்னீர்கள் ; ""

"12 மாதங்கள்
பிரம்மச்சாரியாக
வனவாசம்
மேற்கொண்டிருக்கும்
நான் எப்படி
உங்களுடைய
காதலை ஏற்று............!
உங்களை எவ்வாறு
என்னுடைய
மனைவியாக
ஏற்றுக் கொள்ள
முடியும்…………………………….?"

உலூபி :
"நீங்கள் உங்களுக்குள் 
வகுத்துக் கொண்ட
சட்டத்தின்படி
நீங்கள் என்னை
மனைவியாக
ஏற்றுக் கொள்வதற்கு
அந்த சட்டத்தில்
எந்தவிதமான
தடையும் இருப்பதாக
எனக்குத்
தெரியவில்லையே!
நீங்கள் ஏற்றுக் கொண்ட
சட்டத்தின்படி
என்னை தாராளமாக
மனைவியாக
ஏற்றுக் கொள்ளலாம்!
என்பதற்கு அந்த
சட்டத்திலேயே வழி
இருக்கிறது”

அர்ஜுனன் :
(உலூபியின்
வார்த்தைகள்
அர்ஜுனனுக்கு
அதிர்ச்சியை
உண்டாக்கியது
சிறிது நேரம்
மௌனமாக இருந்த
அர்ஜுனன் பேச
ஆரம்பித்தான்)

“என்ன வழி
இருக்கிறது……………?”

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
------------21-11-2019
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-88


            பரம்பொருள்-பதிவு-88

உலூபி :
"தங்களை கங்கைக்
கரையில் நேரில் கண்ட
அக்கணமே! தங்கள்
மேல் காதல்
கொண்டேன் - காதல்
எங்கே ?
எப்போது ?
எப்படி ?
எந்த இடத்தில் ?
எந்த நேரத்தில் ?
எந்த சூழ்நிலையில் ?
எந்த காலத்தில் ?
பிறக்கும் என்பது
யாருக்கும் தெரியாது ?
என்று நம்முடைய
முன்னோர்கள்
அனுபவித்து சொல்லிச்
சென்ற அனுபவ
வார்த்தைகள்
உண்மை என்பதை
நான் தங்களைக் 
கண்ட போது
எனக்குள் உண்டான
காதலை வைத்துத் தான்
தெரிந்து கொண்டேன் !"

"நான் தங்கள் மேல்
கொண்ட காதலை
தங்களிடம் எப்படி
சொல்வது  என்ற
வழி தெரியாமல்
விழி பிதுங்கி நின்றேன்!
பய உணர்ச்சியின்
காரணமாக
பேசுவதற்கு வார்த்தையே
எழவில்லை !.
தாங்கள் என்னுடைய
காதலை புரிந்து
கொள்ளாமல்
என்னுடைய மனம்
வருத்தப்படும்படி
ஏதேனும் பேசி
விடுவீர்களோ என்ற
அச்சத்தில் பயந்து
நின்று கொண்டிருந்தேன் ?"

"என்னுடைய நாட்டிலும்
நான் வசிக்கும்
அரண்மனையிலும்
அனைவரிடமும் எந்த
ஒரு விஷயத்தைப்
பற்றி பேசினாலும்
எந்தவிதமான
பய உணர்ச்சியும்
இல்லாமல் சரளமாக
பேச முடிந்த என்னால்
தங்களிடம் என்னுடைய
காதலை சொல்ல
முடியாமல் எப்படி
சொல்வது என்று
தெரியாமல் தவித்தேன்."

"எனவே நான் தங்கள்
மீது கொண்ட காதலை
நீங்கள் இருக்கும்
இடத்தில் சொல்வதை விட
நான் வசிக்கும் இடத்திற்கு
உங்களை அழைத்துச்
சென்று - என்னுடைய
அரண்மனையில் வைத்து
என்னுடைய காதலை
சொல்ல முடிவெடுத்தேன்".

"என்ன தான் சிங்கம்
காட்டிற்கே ராஜாவாக
இருந்தாலும் ,
எலியின் வளைக்குள்
சிங்கம் சென்றால்
எலியின் வளைக்குள்
சிங்கமும் விருந்தாளி தான்;
எலியின் வளைக்குள்
எலி தான் ராஜா !
என்று ஆண்டாண்டு
காலமாக வழங்கப்பட்டு
வரும் அனுபவ
மொழிக்கேற்ப
ஒவ்வொருவரும் அவர்கள்
வசிக்கும் இடத்தில்
அவர்கள் ஏழையாக
இருந்தாலும்
அவர்களுடைய வீட்டில்
அவர்கள் தான்  ராஜா
என்று சொல்வார்கள் !"

"அதைப்போல
நான் வசிக்கும்
என்னுடைய நாட்டில்
என்னுடைய
அரண்மனையில்
நான் தான் அரசி
என்ற காரணத்தினாலும்;
உண்மையில் நானும்
ஒரு இளவரசி
என்ற காரணத்தினாலும்;
நான் வசிக்கும்
இடத்தில் என்னால்
பயமின்றி பேச
முடியும் என்ற
காரணத்தினாலும்;
என்னுடைய காதலை
தங்களுக்கு தெளிவாக
எடுத்துரைக்க முடியும்
என்ற காரணத்தினாலும்;
தங்களை கடத்தி 
கொண்டு வந்தேன்;”

“நான் தங்கள் மீது
கொண்ட காதலை
சொல்வதற்கு தேர்ந்தெடுத்த
முறை வேண்டுமானாலும்
தவறாக இருக்கலாம் ;
ஆனால் நான் தங்கள்
மேல் கொண்ட
காதல் உண்மையானது ;
களங்கமில்லாதது ;
என்பதைத் தாங்கள்
உணர்ந்து
கொள்ள வேண்டும் ;”

“என்னுடைய காதலை
தாங்கள் ஏற்றுக் கொண்டு
என்னை மணமுடித்து
தங்களுடைய இல்லறத்
துணைவியாக என்னை
நீங்கள் ஏற்றுக்
கொள்ள வேண்டும்”

அர்ஜுனன் :
“பெண்ணே நீ அழகி
என்று தான் நினைத்தேன்!
ஆனால் உன்னிடம்
வீரம் கொப்பளிக்கிறது ;
விவேகம் தாண்டவமாடுகிறது;
கோபக்கனல் பறக்கிறது;
காதல் கனிகிறது ;
தென்றல் வீசுகிறது ;
குழந்தை சிரிக்கிறது ;
தெய்வம் அருள் சுரக்கிறது;
அன்பு தழைக்கிறது ;
அரவணைப்பு வழிந்தோடுகிறது;
பாசம் விளையாடுகிறது;
நேசம் சிரிக்கிறது;
கருணை வழிகிறது;”
என்று உலூபியைப் பற்றி
அர்ஜுனன் சொன்ன
வார்த்தைகளைக் கேட்ட
உலூபி நாணத்தால்
தலை குனிந்தாள் ;
கால்களால் தரையில்
கோலம் போட்டாள்;
நாணம் உலூபியை
ஆக்ரமித்துக் கொண்டது;”.

அர்ஜுனன் :
“உலூபி நீ என் மேல்
வைத்த காதலை
உணர்ந்து கொண்டேன் ;
ஆனால் உன்னுடைய
காதலை தற்போது
என்னால் ஏற்றுக்
கொள்ள முடியாத
இக்கட்டான சூழ்நிலையில்
இருக்கிறேன் ;”

உலூபி :
ஏன் ?
என்ன காரணம் ?

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
------------20-11-2019
//////////////////////////////////////////

November 19, 2019

பரம்பொருள்-பதிவு--87


            பரம்பொருள்-பதிவு-87
                                       
அர்ஜுனன் :
"நாம் விரும்பும்
ஒருவர் நம்மை
காதலிக்க வேண்டும்
என்றால் அவர் மீது
நாம் கொண்ட
காதல் எவ்வளவு
புனிதமானது
என்பதையும் ;
அவர் மீது நாம்
கொண்ட காதல்
எவ்வளவு
உண்மையானது
என்பதையும் ;
அவர் மீது நாம்
கொண்ட காதல்
எவ்வளவு ஆழமானது
என்பதையும்; 
அவர் மீது நாம்
கொண்ட காதல்
எவ்வளவு
தெய்வீகமானது  
என்பதையும் ;
முதலில் அவருக்கு
புரிய வைப்பதற்கான
முயற்சிகளை
மேற்கொண்டு
அதற்கேற்றவாறு
செயல்களைச்
செய்ய வேண்டும்;"

"நாம் செய்த
செயல்கள் மூலம்
அவர் மனது
காதலால் பாதிக்கப்பட்டு
நம் மீது அவருக்கு
காதல் பிறக்கும் வரை
நாம் பொறுமையாக
காத்திருக்க வேண்டும் ;
நம்முடைய காதலை
அவர் புரிந்து
கொண்ட பிறகே
நம் மீது அவருக்கு
காதல் பிறக்கும் ;
நம் மீது அவருக்கு
காதல் உண்டான பிறகே
அவர் நம்மை
காதல் செய்வார் ;
அதன் பிறகு தான்
இருவரும் இணைந்து
காதல் செய்ய வேண்டும் ;
இது தான் காதலின்
அடிப்படை இலக்கணம்"

"இது கூட தெரியாமல் ;
காதலின் அடிப்படை
இலக்கணம் கூட
அறியாமல் ;
காதலை
அமைதியான முறையில்
அணுகும் முறை
கூட புரியாமல்  ;
வன்முறையில் இறங்கி
என்னை கடத்தி
வந்து இருக்கிறீர்களே!
இது மட்டும் எந்த
விதத்தில் நியாயம்?"

"உங்களுடைய நியாயப்படி
கடத்தி வருவது
மட்டும் நியாயமா?

"கடத்தி வந்து காதலைச்
சொல்வது மட்டும்
நியாயமா?"

"பிறருடைய மனதை
அறியாமல் கடத்தி
வந்து காதலைச்
சொல்வது மட்டும்
எந்த விதத்தில் 
நியாயம்?"

உலூபி :
"நான் உங்களை
காதலித்ததை குற்றம்
என்கிறீர்களா ? (அல்லது)
தங்களை கடத்தி
வந்து காதலைச்
சொன்னது குற்றம்
என்கிறீர்களா?"

அர்ஜுனன் :
"தாங்கள் என்னைக்
காதலித்ததை குற்றம்
என்று சொல்லவில்லை
ஏனென்றால் அது
தங்களுடைய தனிப்பட்ட
உரிமை - ஆனால் என்னை
கடத்தி வந்து காதலைச்
சொன்னதைத் தான்
நான் குற்றம் என்கிறேன் "

உலூபி :
"பிறருடைய மனதை
அறியாமல் நான்
கடத்தி வந்தது
குற்றம் என்றால்
விசித்ரவீர்யனுக்காக
பீஷ்மர் அம்பா,
அம்பிகா, அம்பாலிகா,
ஆகிய மூவரையும்
கடத்தி வந்தாரே
அவர் யாருடைய
அனுமதி பெற்று
கடத்தி வந்தார்  ?
அந்த மூவரின்
அனுமதியைப் பெற்றா
கடத்தி வந்தார் ?
நானாவது எனக்காக
உங்களை
கடத்தி வந்தேன் - ஆனால்
பீஷ்மர் அவர்களை
இன்னொருவருக்கு மணம்
முடிக்கத் தானே கடத்தி
வந்தார்; - அவர் செய்த
செயல் மட்டும் எந்த
வகையில் நியாயம்;"

அர்ஜுனன் :
(அர்ஜுனன் எதுவும்
பேசாமல்
அமைதியாக
இருந்தான்)

உலூபி :
"ஏன் பேசாமல்
இருக்கிறீர்க்ள்
என் கேள்விக்கு
பதில் சொல்லாமல்
அமைதியாக
இருந்து கொண்டு
அமைதி காக்கிறீர்கள்
வார்த்தை
வரவில்லையா?(அல்லது)
வாயைத் திறக்க
முடியவில்லையா?(அல்லது)
உங்களால் பேச
முடியவில்லையா?(அல்லது)
நடந்த உண்மைக்கு
உங்களால் விளக்கம்
கொடுக்க
முடியவில்லையா.?இல்லை
மறுப்பதற்கு ஏதேனும்
ஆதாரத்தைத் தேடிக்
கொண்டிருக்கிறீர்களா? "

"உங்கள் பீஷ்மர்
அந்த மூவரை
இன்னொருவருக்காக
கடத்தி வந்தது
சரிதான் என்பதற்கான
சரியான காரணத்தை
பீஷ்மரால் சொல்ல
முடியாமல் இருக்கலாம் ;
ஆனால் தங்களை
காதலிக்கும் நான்
தங்களை கடத்தி
வந்ததற்கான சரியான
காரணத்தை என்னால்
சொல்ல முடியும் ;"

அர்ஜுனன் :
"அப்படி என்ன காரணத்தை
சொல்லப் போகிறீர்கள்?"

----------இன்னும் வரும்

-----------K.பாலகங்காதரன்
-----------19-11-2019
//////////////////////////////////////////