January 07, 2020

பரம்பொருள்-பதிவு-112


           பரம்பொருள்-பதிவு-112

அரவான் :
“உதவியில்
உதவி செய்தவருக்கும் ;
உதவி பெற்றவருக்கும் ;
இடையே தொடர்பு
என்ற ஒன்று எப்போதும்
இருந்து கொண்டே இருக்கும் ;
ஆனால் யாசகத்தில்
யாசகம் அளித்தவருக்கும் ;
யாசகம் பெற்றவருக்கும் ;
இடையே தொடர்பு என்ற
ஒன்று எப்போதும் இருக்காது ;”

துரியோதனன் :
“நீ சொல்வது எனக்கு
புரியவில்லை மகனே !”

அரவான் :
“உதவி கேட்டு
வந்தவருக்கு
நாம் உதவி செய்து
விட்டோம் என்றால்,
என்றாவது ஒரு நாள்
நமக்கு உதவி
தேவைப்படும்போது
உதவி பெற்றவரிடம்
உதவி கேட்கத்
தோன்றும் - அவர் உதவி
செய்யவில்லை எனில்
உதவி பெற்றவரைப்
பார்த்து - அவர் கஷ்டத்தில்
இருக்கும் போது - நாம்
எப்படி உதவி செய்தோம்
நன்றி மறந்து விட்டான்
நன்றி கெட்டவன் என்று
திட்டுவோம் அவரிடம்
கோபம் கொள்வோம்
பகை உணர்வு ஏற்படக்கூட
வாய்ப்புண்டு - இது
உதவி செய்தவர் நிலை ;”

“அதைப்போல  
உதவி பெற்றவர்
உதவி செய்தவருக்கு
உதவி செய்ய வேண்டும்
என்ற எண்ணம் - அவர்
மனதில் இருந்து
கொண்டே இருக்கும் ;
உதவி செய்வதற்கான
காலத்தை எதிர்பார்த்துக்
காத்துக் கொண்டே இருப்பார்.
உதவி பெற்றவர்
உதவி செய்தவருக்கு
உதவி செய்யும் வரை
உதவி செய்தவரையும்
அவர் செய்த
உதவியையும் நினைத்துக்
கொண்டே இருப்பார் ;”

“அதாவது உதவியில்
உதவி செய்தவருக்கும் 
உதவி பெற்றவருக்கும்
இடையே தொடர்பு என்ற
ஒன்று எப்போதும் இருந்து
கொண்டே இருக்கும் “

“ஆனால் யாசகத்தில்
யாசகம் என்று
கேட்டு வந்தவருக்கு
யாசகம் அளிப்பவர்
அவர் கேட்கும் யாசகத்தை
அளித்து விட்டால்
யாசகம் அளித்தவர்- எந்த
காலத்திலும் தனக்கு
என்ன நேர்ந்தாலும்
யாசகம் அளித்தவர்
யாசகம் பெற்றவரிடம்
எதையும் எதிர்பார்த்து
காத்துக் கொண்டிருக்க
மாட்டார் - தான் யாருக்கு
யாசகம் அளித்தோம்
என்பதையும் - என்ன
யாசகம் அளித்தோம்
என்பதையும்
மறந்து விடுவார் “

“யாசகம் பெற்றவரும்
தான் யாரிடம்
யாசகம் பெற்றோமோ
அவரையும் - அவரிடம்
பெற்ற யாசகத்தையும்
மறந்து விடுவார் “

“அதாவது
யாசகம் அளித்தவர்
யாசகம் பெற்றவர்
ஆகிய இருவருக்கும்
இடையே எந்தவிதமான
தொடர்பும் இருக்காது “

“அதனால் தான் கேட்டேன்
பெரிய தந்தையே !
நீங்கள் என்னிடம்
கேட்டுப் பெற வந்திருப்பது
உதவியையா அல்லது
யாசகத்தையா என்று ?”

துரியோதனன் :
(அரவானின் அற்புதமான
அறிவுத் திறனைக்
கண்டு மலைத்துப் போன
துரியோதனன் வியந்து
போய் நின்றான் )

“அரவான் உன்னுடைய
வீரத்தைக் கேள்விப்பட்டு
மலைத்து நின்றேன் ;
நேரில் உன்னை சந்தித்த
போது உன்னுடைய
பணிவைக் கண்டு
ஆச்சரியப்பட்டு நின்றேன் ;
இப்போது உன்னுடைய
அறிவைக் கண்டு
வியந்து நிற்கிறேன் ;”

“வேறு யாருடனும்
ஒப்பிட முடியாத
தனிச்சிறப்பு பெற்றவனாக
இருக்கிறாய் மகனே ! “

“நீ செய்யக்கூடிய
செயலுக்கு இணையாக
என்னால் எதுவுமே
செய்ய முடியாது “

“உதவி செய்ய வேண்டுமா
யாசகம் தர வேண்டுமா
என்பதை தீர்மானிக்கும்
உரிமை அதைத்
தருபவருக்குத் தான்
இருக்கிறது ; - அதனால்
நான் உன்னிடம் கேட்டுப்
பெற வந்ததை உதவியாக
செய் என்றோ அல்லது
யாசகமாக தா என்றோ
நான் உன்னிடம்
கேட்க முடியாது ?
நீ தான் முடிவு
செய்ய வேண்டும் “

அரவான் :
“நான் ஒருவருக்கு
ஒன்றைக் கொடுத்து
விட்டால்
யாருக்கு கொடுத்தேன் ;
எப்போது கொடுத்தேன் ;
என்ன கொடுத்தேன் ;
என்ன காரணத்திற்காக
கொடுத்தேன் ; என்பதை
எல்லாம் எப்போதும்
என்னுடைய நினைவில்
வைத்துக் கொள்வதே
இல்லை ;”

“நான் யாருக்கு என்ன
கொடுத்தாலும்
அதை யாசகமாகக்
கொடுத்துத் தான்
எனக்குப் பழக்கம் ;”

“நீங்கள் என்னிடம்
கேட்டுப் பெற வந்ததை
நான் உங்களுக்கு
யாசகமாகவே தர
முடிவு செய்து விட்டேன் ;”

“சொல்லுங்கள் தந்தையே !
சொல்லுங்கள் என்னிடமிருந்து
யாசகமாக நீங்கள் எதை
எதிர்பார்க்கிறீர்கள் என்று
சொல்லுங்கள்……………………………? “

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 07-01-2020
//////////////////////////////////////////

January 06, 2020

பரம்பொருள்-பதிவு-111


            பரம்பொருள்-பதிவு-111

துரியோதனன் :
"அரவான் !
நான் இங்கு
வருவதற்கு முன்பு
நான் என்னுடைய
தேவையைப் பற்றியும் ;
என்னுடைய தேவையை
உன்னிடம் எப்படி
கேட்டு பெற்றுக்
கொள்வது
என்பதைப் பற்றியும் ;
என்னுடைய தேவையை
எப்படி நிறைவேற்றிக்
கொள்வது
என்பதைப் பற்றியும் ;
மட்டுமே நினைத்துக்
கொண்டு வந்தேன் "

"ஆனால் நான்
இங்கு வந்த பின்பு
நீ காட்டிய அன்பினையும் ;
உன்னுடைய உயர்ந்த
பண்பினையும் ;
கண்டு நான் மெய்
சிலிர்த்து நிற்கிறேன் "

"உன்னுடைய அன்பில்
கரைந்த நான்
எப்படி என்னுடைய
தேவையை
உன்னிடம் கேட்டுப்
பெறுவது என்பதைப்
பற்றி யோசித்துக்
கொண்டிருக்கிறேன் "

"நான் என்னுடைய
தேவையைக்
கேட்பதினால்
நீ கோபப்பட்டு
என்னைப் பார்த்து ,

“சாஸ்திரங்களைப்
படித்து இருக்கிறாயா ?
சாஸ்திரங்களைப் படித்து
இருந்தால் தர்மம்
என்றால் என்ன
என்று உனக்கு
தெரிந்து இருக்கும் ?"

"நீதியின் வழியில்
சென்று இருக்கிறாயா ?
தர்மத்தின் பாதையை
அறிந்து இருக்கிறாயா ? "

"உன்னை கொடியவன்
என்று இந்த உலகம்
சொல்வதில்
தப்பே இல்லை ;
உனக்கு அன்பு
என்றால் என்ன
என்றே தெரியவில்லை ;
கருணை உனக்குள்
இறந்து விட்டிருக்கிறது ;"

"இல்லை என்றால்
இப்படி ஒரு தேவையை
என்னிடம் வந்து
கேட்டு பெற்றுக்
கொள்ள வந்திருப்பாயா ?
உனக்கு பாசம் என்ற
ஒன்று இருந்திருந்தால்
இப்படி கேட்டிருப்பாயா ?"

"என்று என்னை
வசைமாரி பொழிந்து
விடுவாயோ என்று
யோசித்துக்
கொண்டிருக்கிறேன் ?"

"இத்தகைய
காரணங்களால்
நான் மனம்
சஞ்சலப்பட்டு - நான்
உன்னிடம் கேட்டு
பெற வந்ததை
கேட்கலாமா ?
வேண்டாமா ? என்று
யோசித்துக்
கொண்டிருக்கிறேன் ?
என்ன செய்வது
என்றே எனக்குத்
தெரியவில்லை - நான்
மனம் சஞ்சலப்பட்டு
இருக்கிறேன் அரவான் "

அரவான் :
"பெரிய தந்தையே !
நீங்கள் மனம்
சஞ்சலப் பட வேண்டிய
அவசியமே இல்லை
நீங்கள் என்னிடம்
எதைக் கேட்டுப்
பெற வந்திருக்கிறீர்களோ ?
அதை தைரியமாக
கேட்டு பெற்று
விட்டு செல்லலாம் "

"நீங்கள் என்னிடம்
கேட்டுப் பெற வந்தது
நல்லதாக இருந்தாலும் சரி
கெட்டதாக இருந்தாலும் சரி
தைரியமாகக் கேட்கலாம் ;"

"நீங்கள் என்னுடைய
பெரிய தந்தை - நான்
உங்களுடைய மகன் ;
தந்தை மகனிடம்
எந்த ஒன்றை
கேட்பதற்கும்  ;
எந்த ஒன்றை
கேட்டுப் பெறுவதற்கும் ;
முழு உரிமை
இருக்கிறது - ஆகவே
நீங்கள் என்னிடம்
கேட்டுப் பெற
வந்ததை தைரியமாகக்
கேட்டுப் பெற்று
விட்டுச் செல்லலாம் "

"ஆனால் ஒன்று
தந்தையே நீங்கள்
என்னிடம் ஒன்றைக்
கேட்டுப் பெற
வந்தேன் என்கிறீர்களே ?
அந்த ஒன்றை
நான் உங்களுக்கு
எப்படி அளிக்க வேண்டும்
உதவியின் மூலம்
அளிக்க வேண்டுமா ?
அல்லது யாசகத்தின்
மூலம் அளிக்க
வேண்டுமா ? "

துரியோதனன் :
"உதவிக்கும்
யாசகத்திற்கும்
பெரிய அளவில்
வேறுபாடு எதுவும்
இருப்பதாக எனக்குத்
தெரியவில்லையே
மகனே ! "

அரவான் :
" இருக்கிறது
பெரிய தந்தையே !
இருக்கிறது
உதவிக்கும்
யாசகத்திற்கும்
வேறுபாடு இருக்கிறது"

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 06-01-2020
//////////////////////////////////////////


January 04, 2020

பரம்பொருள்-பதிவு-110


             பரம்பொருள்-பதிவு-110

(துரியோதனன்
அரவானின்
மாளிகைக்குள்
நுழைகிறான் - தனது
பெரிய தந்தையான
துரியோதனனைக்
கண்ட அரவான்
துரியோதனனை ஓடிச்
சென்று வரவேற்கிறான்)

அரவான் :
"வாருங்கள்
பெரிய தந்தையே  !
வாருங்கள்
தங்கள் வரவால்
என் மாளிகை
பெருமை அடைகிறது ;
தங்கள் பாதம் பட்டு
என்னுடைய இல்லம்
சிறப்பு அடைகிறது ;
தங்களை வரவேற்பதில்
என் மனம் மிக்க
மகிழ்ச்சி அடைகிறது ;
வாருங்கள் பெரிய
தந்தையே வாருங்கள் "

(என்று சொல்லிக்
கொண்டே அரவான்
துரியோதனன்
காலில் சென்று
விழுந்து வணங்குகிறான்)

அரவான் :
"என்னை
ஆசிர்வதியுங்கள்
பெரிய தந்தையே ! "

(அரவானை அள்ளி
மார்போடு அணைத்து  
பிறகு பேசத்
தொடங்குகிறான்
துரியோதனன்)

துரியோதனன் :
"மகனே ! அரவான்
உன்னுடைய வார்த்தைகள்
என்னுடைய மனதை
ஏ‘தோ செய்கிறது ;
உன்னுடைய பணிவைக்
கண்டு என்னுடைய
கண்கள் கலங்குகிறது ;
உன்னுடைய
பெருந்தன்மை என்னை
வியக்க வைக்கிறது ; "

"அனைவரையும் சமமாக
பாவிக்கும் உன்னுடைய
பாசம் என்னை
மலைக்க வைக்கிறது ;
பகைவனாக
நினைக்க வேண்டியவனையும்
வரவேற்கும் உன்னுடைய
பண்பு என்னை
திகைக்க வைக்கிறது ;"

‘"நீ வீரத்தில்
சிறந்தவன் என்று
கேள்விப்பட்டிருக்கிறேன் ;
ஆனால் பண்பிலும்
உயர்ந்தவன் என்பதை
உன்னுடைய
செய்கையின் மூலமே
நிரூபித்து விட்டாய் ;"

"உன்னுடைய உயர்ந்த
அன்பில் கரைந்து
போன நான்
என்ன பேசுவது என்று
தெரியாமல் வார்த்தை
இன்றி தவித்துக்
கொண்டிருக்கிறேன் "

"இந்த பார் உள்ளளவும்
உன்னுடைய புகழ்
என்றும் நிலைத்து நிற்கும்
என்னுடைய ஆசிகள்
உனக்கு என்றும்
உண்டு மகனே அரவான் ! "

அரவான் :
"பெரிய தந்தையே !
நீங்கள் என்னை
பார்க்க வேண்டும் என்று
ஒரு வார்த்தை
சொல்லி இருந்தால்
உங்களைக் காண
நீங்கள் இருக்கும்
இடத்தைத் தேடி
நானே நேரில்
வந்திருப்பேனே ?
இந்த எளியவனைக்
காண தாங்கள்
இவ்வளவு தூரம்
வர வேண்டுமா ?
பெரிய தந்தையே ! "

துரியோதனன் :
"உலகத்தையே
கட்டி காப்பாற்றும்
கடவுளாக
இருந்தாலும் சரி ;
நாட்டை ஆளும்
மன்னவனாக
இருந்தாலும் சரி ;
அவர்களுக்கு ஒன்று
தேவைப்படுகிறது
என்றால்
அதை கொடுப்பவர்
யாராக இருந்தாலும்
அவர் இருக்கும்
இடத்தைத் தேடித்
தான் செல்ல
வேண்டும் என்பது
தானே உலக நியதி ! "

"எனக்கு உன்னிடம்
ஒன்று தேவைப்படுகிறது
அதனால் நானே
உன்னைத் தேடி
உன்னுடைய
இருப்பிடம் தேடி
நேரில் வந்தேன்
அரவான் !"

அரவான் :
"ஒன்றும் இல்லாத
இந்த எளியவனிடம்
அப்படி என்ன
தான் இருக்கிறது
என்று என்னைத்
தேடி வந்தீர்கள்
பெரிய தந்தையே ! "

துரியோதனன் :
"யாரிடமும் இல்லாத ஒன்று ;
அரிதாக இருக்கும் ஒன்று ;
யாருக்கும்
கிடைக்காத ஒன்று ;
கடவுளால்
அருளப்பட்டது என்று  
சொல்லப்படும் ஒன்று ;
சிலரிடம் மட்டுமே
இருக்கும் "

"அந்த ஒன்று
உன்னிடம் இருக்கிறது
என்பதைக் கேள்விப்பட்டேன் ;
அந்த ஒன்றைப் பெற
வேண்டும் என்பதற்காக ;
உன்னுடைய
சம்மதத்தைப் பெற ;
உன்னைக் காண
நானே நேரில்
வந்தேன் அரவான் ! "

அரவான் :
"என்னிடம் என்ன பெற
வேண்டும் என்பதற்காக
என்னுடைய சம்மதத்தைப்
பெற வந்திருக்கிறீர்கள்
என்பதை சொல்லுங்கள்
பெரிய தந்தையே ! "

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 04-01-2020
//////////////////////////////////////////