August 05, 2020

அறிய வேண்டியவை-பதிவு-140

ஜபம்-பதிவு-632

(அறிய வேண்டியவை-140)

 

(தன்னுடைய

தந்தையிடம்

பேசிவிட்டு

துரியோதனன்

கர்ணனைத்

தேடிச் சென்று

கர்ணன் இருக்கும்  

அறைக்குள்

நுழைந்தான்)

 

கர்ணன் ;

"தந்தையை

சந்தித்து விட்டு

வந்தாயா

என்ன சொன்னார்"

 

துரியோதனன் :

"நாம் எதை

செய்ய

வேண்டாம் என்று

சொல்கிறோமோ

அதை செய்வேன்

என்கிறார்"

 

கர்ணன் :

"எதற்காக

அவர்

அவ்வாறு

சொன்னார்"

 

துரியோதனன் :

“இந்த நாடு

நம்மை

குற்றவாளி என்று

கண்டுபிடிக்காமல்

இருக்க வேண்டும்

என்பதற்காக

என்னுடைய தந்தை

விதுரரை

ரகசியமாக

அனுப்பி வைத்து

பாண்டவர்களை

அஸ்தினாபுரம்

அழைத்து

வருவதற்கான

ஏற்பாடுகளை

செய்திருப்பதாக

சொல்கிறார்”

 

 “இப்போது

என்ன செய்வது

நாம் எப்படி

தப்பிப்பது”

 

கர்ணன் :

“இதற்கான

விடையை

உன்னுடைய

மாமா

தான் சொல்ல

வேண்டும்

சதித்திட்டத்தை

தீட்டியது

அவர் தானே”

 

“உன்னுடைய

மாமாவால்

தீட்டப்பட்டு

செயல்படுத்தப்பட்ட

சதித்திட்டம்

தோல்வியடைந்து

விட்டது”

 

“சதித்திட்டத்தை

தீட்டி

செயல்படுத்தியது

நாம் தான்

என்பதை

இந்த நாடு

அறியாமல்

இருக்க

வேண்டுமானால்

நாம் என்ன

செய்ய வேண்டும்

என்பதை

உன்னுடைய

மாமாவிடம்

தான் கேட்க

வேண்டும்”

 

“இந்தப்

பிரச்சினையிலிருந்து

நாம் தப்பிப்பது

எப்படி என்பதை

உன்னுடைய

மாமா தான்

சொல்ல வேண்டும்”

 

“உன்னுடைய

மாமாவைப்

போய் பார்ப்போம்

அவர் என்ன

சொல்கிறார்

என்று கேட்போம்”

 

(துரியோதனனும்

கர்ணனும்

சகுனியை

சந்திப்பதற்காகச்

சென்றனர்)

 

துரியோதனன் :

“வணங்குகிறேன்

மாமா

அவர்களே”

 

சகுனி :

“உன்னுடைய

தந்தையை

பார்த்து விட்டு

வந்து விட்டாயா”

 

துரியோதனன் :

“பார்த்தேன்”

 

சகுனி :

“என்ன சொன்னார்”

 

துரியோதனன் :

“பாண்டவர்களை

அஸ்தினாபுரத்திற்கு

அழைத்து வரும்

திட்டத்தில் எந்த

மாற்றமும் இல்லை

என்று சொல்லி

விட்டார்”

 

சகுனி :

“இதைத் தான்

சொல்வார் என்று

எனக்குத் தெரியும்”

 

துரியோதனன் :

“தெரியும்

என்றால்

என்னை ஏன்

அனுப்பினீர்கள்”

 

சகுனி :

“இந்த

விஷயத்தில்

உன்னுடைய

தந்தை

என்ன சொல்வார்

என்பதை நீயும்

உன்னுடைய

நண்பன்

கர்ணனும்

தெரிந்து கொள்ள

வேண்டும்

அல்லவா

அதற்காகத் தான்

நான் உன்னை

உன்னுடைய

தந்தையிடம்

அனுப்பினேன்”

 

துரியோதனன் :

“இப்போது என்ன

செய்வது

மாமா

அவர்களே”

 

சகுனி :

“நீயும்

உன்னுடைய

நண்பனும் ஒன்றும்

செய்ய வேண்டாம்”

 

“நீயும் உன்னுடைய

நண்பன் கர்ணனும்

இங்கே

நடக்கப்போகும்

விஷயத்தில்

தலையிடாமல்

சற்று நேரம்

அமைதியாக

பேசாமல்

இங்கு நடப்பதை

கவனித்துக்

கொண்டு இருங்கள்

அது போதும்”

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

----------- 05-08-2020

/////////////////////////////////


அறிய வேண்டியவை-பதிவு-139

ஜபம்-பதிவு-631

(அறிய வேண்டியவை-139)

 

"ஏற்கனவே

இந்த நாட்டில்

உள்ள மக்கள்

அனைவரும்

வாரணாவதத்தில்

பாண்டவர்களை

கொல்வதற்கு

சதித்திட்டம்

தீட்டியவர்கள் என்று 

திருதராஷ்டிரன்,

துரியோதனன்,

சகுனி என்று

நம் மூவருடைய

பெயர்களைத் தான்

சொல்லிக் கொண்டு

இருக்கிறார்கள் "

 

"இந்த

சதித்திட்டத்திற்கு

உதவியதாக  

கர்ணனுடைய

பெயரையும்

சேர்த்து

சொல்லிக் கொண்டு

இருக்கிறார்கள் "

 

"பாண்டவர்கள்

உயிரோடு

இருக்கிறார்கள்

என்று தெரிந்தும்

நாம் அவர்களை

அழைத்து

வரவில்லை

என்றால்

பாண்டவர்களை

கொல்வதற்காக

நாம் மூவரும்

சேர்ந்து தான்

சதித்

திட்டத்தை தீட்டி

செயல்படுத்தினோம்

என்று இந்த

நாட்டில் உள்ள

மக்கள் அனைவரும்

பேச ஆரம்பித்து 

விடுவார்கள்"

 

"திருதராஷ்டிரன்

தன்னுடைய

மகனுக்கு

முடிசூட்டுவதற்காக

பாண்டவர்களை

கொன்று விட்டார்

என்று பேச

ஆரம்பித்து

விடுவார்கள்"

 

"மக்கள்

பேசக்கூடிய இந்த

பேச்சை நிறுத்த

வேண்டும் என்றால்

நாம்

பாண்டவர்களை

அஸ்தினாபுரம்

அழைத்து

வரத்தான்

வேண்டும்"

 

துரியோதனன் :

"மக்களைப் பார்த்து

பயப்படுகிறீர்களா?"

 

திருதராஷ்டிரன் :

"மக்களைப் பார்த்து

மன்னன்

பயந்தாலும்

மன்னனைப் பார்த்து

மக்கள்

பயந்தாலும்

நாட்டை

ஆள்வதற்குரிய

தகுதியை மன்னன்

இழந்துவிட்டான்

என்று பொருள்"

 

"மக்களைப்

பார்த்து நான்

பயப்படவில்லை

மக்களை புரிந்து

கொண்டதால் தான்

இந்த செயலுக்கு

ஒத்துக் கொண்டேன்"

 

"மக்களுடைய

எண்ணங்கள்

என்ன என்பதை

அறிந்து

கொண்டதால் அதை

நிறைவேற்றுவதற்கு

முயற்சி செய்து

கொண்டிருக்கிறேன்"

 

"மக்களைப்

புரிந்து கொண்டு

மக்களுடைய

எண்ணங்களுக்கு

ஏற்றபடி நான்

நடந்து

கொள்வதால் தான்

இன்று நான்

அரியணையில்

இருக்கிறேன்"

 

"நான் சொன்ன

வார்த்தைகளில்

உள்ள

அர்த்தங்களை

நீ புரிந்து

கொண்டால்

மக்களைப்

புரிந்து

கொள்வாய்"

 

"மக்களைப்

புரிந்து

கொண்டால்

பாண்டவர்ளை

அஸ்தினாபுரம்

அழைத்து

வருவதற்கு

விதுரரை

அனுப்பியது

சரிதான்

என்று நீயும்

ஒத்துக் கொள்வாய்"

 

"மகனே

நம் மேல் களங்கம்

வராமல் இருக்க

வேண்டுமானால்

நம் மேல் குற்றம்

சாட்டப்படாமல்

இருக்க

வேண்டுமானால்

நாம் தான்

குற்றவாளி

என்று இந்த நாடு

நம்மை

சொல்லாமல்

இருக்க

வேண்டுமானால்

பாண்டவர்களை

அஸ்தினாபுரம்

அழைத்துத் தான்

வர வேண்டும்"

 

"நீயும்

பாண்டவர்களை

வரவேற்றுத் தான்

ஆக வேண்டும்"

 

"பாண்டவர்களை

வரவேற்பதற்கு

தயாராக

இரு மகனே"

 

துரியோதனன் :

"விடைபெறுகிறேன்

தந்தையே!

 

(என்று

சொல்லி விட்டு

துரியோதனன்

அந்த

இடத்தை விட்டு

கோபத்துடன்

வெளியேறினான்)

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

----------- 05-08-2020

/////////////////////////////////


அறிய வேண்டியவை-பதிவு-138

ஜபம்-பதிவு-630

(அறிய வேண்டியவை-138)

 

"நீங்கள்

கெட்டவர்கள்

என்ற பெயரை

எடுத்து விட்ட

காரணத்தினால்

பீஷ்மரும் விதுரனும்

உனக்கு எதிராகவும்

நீ ஆட்சியில்

அமரக் கூடாது

என்பதற்காகவும்

இந்த உலத்தில்

உள்ள சிலரும்

உனக்கு

எதிராக

செயல்பட்டுக்

கொண்டிருக்கிறார்கள்"

 

"பீஷ்மரையும்

விதுரனையும்

எதிர்த்துக் கொண்டு

என்னால் ஆட்சியில்

இருக்க முடியாது

நான் ஆட்சியில்

இருப்பதே இவர்கள்

இருவருடைய

தயவினால் தான்

இவர்கள் இருவரும்

நினைத்தால் என்னால்

ஆட்சிக் கட்டிலில்

இருக்கவே முடியாது"

 

"பீஷ்மரையும்

விதுரனையும்

வைத்துத் தான்

அஸ்தினாபுரத்தின்

ஆட்சியே

இயங்கிக்

கொண்டிருக்கிறது

நான் அரசன் என்ற

முறையில் தான்

இருக்கிறேன்

அனைவரும்

என்னைப்

பார்த்து பயந்து

அடிமையாக

இருக்கிறார்கள்

ஆனால்

நான் பார்த்து

பயந்து அடிமையாக

இருப்பது அவர்கள்

இருவருக்கும்

மட்டும் தான்"

 

"மக்களோடு மக்களாக

இருக்கின்ற

காரணத்தினாலும்

மக்கள் மத்தியிலும்

மன்னர்களே மதித்து

போற்றும் அளவிற்கு

செல்வாக்கு

பெற்றிருக்கின்ற

காரணத்தினாலும்

மன்னர்கள்

மத்தியிலும் அரசியல்

வட்டாரத்திலும்

அவர்கள்

இருவருக்கும்

அளவற்ற செல்வாக்கு

உண்டு என்ற

காரணத்தினாலும்

யாரையும் பார்த்து

பயப்படாத நான்

அவர்கள் இருவரையும்

பார்த்து பயப்படுகிறேன்"

 

"அவர்கள் சொல்வதை

கேட்டு

செயல்படுத்துவதற்கு

இது தான் காரணம்"

 

"நீயும் அவர்கள்

இருவரையும் பகைத்துக்

கொள்ளாமல் இருக்கக்

கற்றுக் கொள்

அவர்களிடம் பணிந்து

நடக்கக் கற்றுக் கொள்"

 

"அவர்களுடைய

பேச்சைக்

கேட்டு நடக்கக்

கற்றுக் கொள்"

 

"அவர்களிடம்

மரியாதையாக

இருக்கக்

கற்றுக் கொள்"

 

"அவர்களிடம்

கோபப்படாமல்

இருக்கக்

கற்றுக் கொள்"

 

"அவர்கள்

இருவருடைய

தயவும் எனக்கு

மட்டுமல்ல உனக்கும்

தான் தேவைப்படும்"

 

"ஆகவே அவர்கள்

இருவரையும்

பகைத்துக்

கொள்ளாதே"

 

"இப்போது

செய்வதற்கு

ஒன்றும் இல்லை "

 

"பாண்டவர்களை

சந்தித்துப்பேசி

அவர்களை

அழைத்து வர

வேண்டும் என்று

பீஷ்மரும் விதுரனும்

முடிவு செய்து

அவர்களை

அழைத்து

வருவதற்கான

ஏற்பாடுகளைச்

செய்து

இருக்கிறார்கள்

அதனை என்னால்

தடுக்க

முடியவில்லை

அதனால்

அவர்களுடைய

செயலுக்கு நானும்

ஒப்புதல்

அளித்து

விட்டேன்"

 

"அவர்களை வரவேற்க

தயாராகி விட்டேன்

 

"நீயும்

பாண்டவர்களை

வரவேற்க

தயாராக இரு"

 

"அப்போது தான்

நாம் என்ன

நினைக்கிறோமோ

அதை நடத்துவதற்கு

நம்முடைய முதல்

அடியை எடுத்து

வைத்தாற்போல்

இருக்கும் "

 

"துரியோதனா நான்

சொன்னவைகளை

நன்றாக

யோசித்துப் பார்

பாண்டவர்களை

வரவேற்பதற்கு

தயாராக இரு"

 

துரியோதனன் :

"பாண்டவர்களை

அஸ்தினாபுரத்திற்கு

அழைத்து வரும்

திட்டத்தை தடுத்து

நிறுத்த முடியாதா?"

 

திருதராஷ்டிரன் :

"தடுத்து நிறுத்த

முடியாது

இந்த திட்டத்தை

செயல்படுத்தித்

தான் ஆக வேண்டும்"

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

----------- 05-08-2020

/////////////////////////////////