October 11, 2020

10-10-2020-பிறந்த நாள்-பதிவு-4

 

பதிவு-4

 

நீங்கள் இருவரும்

REST எடுத்து விட்டு

செல்லுங்கள் என்றார்கள்

சிறிது நேரம் கழித்து

எனக்கு மயக்கம்

தெளிந்து நான்

NORMAL நிலைக்கு

வந்து விட்டேன்

என்னுடைய நண்பன்

கார்த்திக்கிற்கும்

நினைவு வந்து விட்டது

ஆனால் தரையில்

என்னுடைய கையும்

காலும் தேய்ந்ததால்

ஏற்பட்ட காயங்களால்

வலி உயிரை எடுத்தது

 

என்னுடைய நண்பனுக்கும்

உடல் முழுவதும்

காயங்கள்

அவனும் அவ்வாறே

வேதனைப் பட்டுக்

கொண்டிருந்தான்

 

வண்டிக்கு ஒரு சில

சேதங்களைத் தவிர

பெரிய வகையில்

சேதம் எதுவும் இல்லை

 

நான் கார்த்திக்கிடம்

கேட்டேன்

டேய் இப்போது

தான் உனக்கு கல்யாணம்

ஆகியிருக்கு இப்படி

பண்ணி விட்டாய்

உனக்கு ஏதாவது

ஆகி இருந்தால்

நான் என்ன

பண்ணுவேன்

எனக்கு உதவி பண்ண

வந்து உனக்கு இப்படி

ஆகி விட்டது என்றேன்

 

அந்த நேரத்திலும்

என்னுடைய நண்பன்

சொன்னான்

“என்னுடைய

பொண்டாட்டிக்கு

தாலி STRONG ஆக

கட்டியிருக்கேன்

அது அவ்வளவு

சீக்கிரத்தில்

அறுந்து விடாது

நான் அவ்வளவு

எளிதில்

சாக மாட்டேன்

 

அது மட்டுமல்ல

பாலா நாம்

போவது நல்ல

விஷயத்திற்கு

போகிறோம்

நாம் நல்ல விஷயம்

செய்ய போகிறோம்

நம்மை கடவுள்

சாக விட மாட்டார்

ஏன் நம்மை கடவுள்

தான் நம்முடைய

உயிரை காப்பாற்றினார்

என்று நினைத்துக்

கொள்ளேன்”

என்றான்

 

சரி ஜோக் அடிக்காதே

நாம் வண்டியை ஓரமாக

விட்டு விட்டு

ஆட்டோவில்

சென்று விடுவோம்

சரியா என்றேன்

 

வேண்டாம்

நாம் வண்டியில்

செல்வோம்

என்னால் வண்டியை

ஓட்ட முடியும்

என்று சொன்ன

காரணத்தினால்

நானும் என்னுடைய

நண்பன் கார்த்திக்கும்

BESANT NAGAR -ல்

இருந்து PERAMBUR

வந்தோம்

நாங்கள் தங்கி இருந்த

QUARTERS வந்தோம்

கீழே கார் நின்று

கொண்டிருந்தது

இப்போது தான்

சார் வந்தேன் என்றார்

கார் டிரைவர்

 

AD-22 நாங்கள்

தங்கி இருந்த

வீட்டிற்குள் நுழைந்தோம்

படுக்கையறையில்

படுத்துக் கொண்டிருந்த

என்னுடைய அப்பாவை

பார்த்தபடியே என்னுடைய

அம்மா அழுது

கொண்டிருந்தார்

 

நான் உள்ளே

நுழைந்ததும்

என்னுடைய அம்மா

என்னைக் கட்டிப்

பிடித்துக் கொண்டு

ஓ வென அழுத்

தொடங்கி விட்டார்

அப்பாவைப் பாருடா

அப்பாவைப் பாருடா

என்றார்

என்னுடைய அருகில்

என்னுடைய நண்பன்

நின்று கொண்டிருந்தான்

 

நான் சென்று

அப்பாவைப் பார்த்தேன்

உயிர் இருந்தது

அப்பா நன்றாகத் தான்

இருக்கிறார்

மயக்கத்தில் இருக்கிறார்

உடனே HOSPITAL

போவோம் என்று

கிளம்பினோம்

 

அப்பாவை நானும்

என்னுடைய நண்பர்

கார் டிரைவர் ஆகிய

அனைவரும்

தூக்கிக் கொண்டு

காரில் உட்கார

வைத்து விட்டு

HOSPITAL

நோக்கி சென்று

கொண்டிருந்தோம்

 

வண்டி HOSPITAL

வாசலில் போய்

நின்றது

EMERGENCY என்ற

காரணத்தினால்

ஸ்ட்ரெச்சர்

கொண்டு வந்து

அவரை படுக்க

வைத்து கூப்பிட்டு

போனார்கள்

 

---------என்றும் அன்புடன்

---------K.பாலகங்காதரன்

 

------11-10-2020

//////////////////////////////////////////////

 

10-10-2020-பிறந்த நாள்-பதிவு-3

 

பதிவு-3

 

“கார் வைத்திருக்கும்

என்னுடைய நண்பருக்கு

போன் செய்தேன்

விஷயத்தை சொன்னேன்

வீட்டிற்கு செல்லுங்கள்

அப்பாவைக்

காரில் ஏற்றுங்கள்

அதற்குள் நான் வந்து

விடுகிறேன்” என்றேன்.

 

அவர் சொன்னார்

“நீங்கள் நேரடியாக

HOSPITAL வந்து

விடுங்கள்” என்றார்

 

இல்லை நான் FILES

BILLS எடுக்க வேண்டும்

என்னுடைய அம்மாவிற்கு

தெரியாது எப்படியும்

அப்பாவை ADMISSION

போடுவார்கள்

அதற்கு தயாராக

நான் வர வேண்டும்

அதனால் நீங்கள் போய்

என்னுடைய அப்பாவை

வண்டியில் ஏற்றி

விட்டு எனக்கு

போன் செய்யுங்கள்”

என்றேன்

 

“நான் எங்கிருக்கிறேன்

என்று சொல்கிறேன்

கிட்டே வந்து

விட்டால் ஒன்றாக

செல்லலாம்

இல்லை என்றால்

நான் சொல்கிறேன்

நீங்கள் கிளம்பி

விடுங்கள் - நான்

HOSPITAL வந்து

விடுகிறேன்” என்றேன்

 

கார் டிரைவர்

“சரி சார்”

என்றார்.

 

நான் என்னுடைய

நண்பன் கார்த்திக்கிடம்

திரும்பினேன்

விஷயத்தைச்

சொன்னேன்

கொஞ்சம் SPEED ஆக

போக வேண்டும்

என்றேன்

BIKE ஓட்டுவதில்

நான் எவ்வளவு

பெரிய ஆள் SPEED

ஆக ஓட்டுவதைப்

பார் என்று

வேகத்துடன் ஓட்டினான்

கவனத்துடன்

தான் ஓட்டினான்

 

கார்த்திக் எவ்வளவு

வேகமாக ஓட்டினாலும்

தவறு நேராத வகையில்

தான் ஓட்டுவான்

அன்றும் அவ்வாறே

தான் ஓட்டினான்

 

வண்டி வேகமாக

சாலைகளைக்

கடந்து சென்று

கொண்டிருந்தது

எதிர்பாராதவிதமாக

ஏற்பட்ட விபத்தால்

நாங்கள் இருவரும்

லாரியின் அடியில்

சக்கரத்துக்கு அடியில்

கிடந்தோம்

 

அங்குள்ள மக்கள்

அனைவரும் எங்கள்

இருவரையும்

லாரியின் கீழிருந்து

எங்களை இழுத்து

வண்டியை

வெளியே எடுத்தனர்

 

எனக்கு கொஞ்சம்

நினைவு இல்லை

எதிரே மங்கலாகத்

தான் தெரிந்தது

என்னுடைய கண்ணாடி

உடைந்து விட்டது

தரையில் என்னுடைய

பர்ஸ் பணத்துடன்

கிடந்தது

அதனை எடுக்க

என்னால் முடியவில்லை

நான் எடுத்துக் கொண்டு

வந்த FILE அனைத்தும்

சிதறிக் கிடந்தது

கை கால்

தேய்ந்திருந்தது

காலில் இருந்து

இரத்தம் கொட்டியது

என்னுடைய கர்சீப்பை

வைத்து துடைத்தேன்

 

என் அருகில்

இருக்கும் என்னுடைய

நண்பன் கார்த்திக்கும்

அதே நிலை தான்

ஒருவர் தண்ணீர்

கொண்டு வந்து

கொடுத்தார்

நான் குடித்தேன்

 

நான் தண்ணீர்

குடித்த போது

தான் எனக்கு

கொஞ்சம் மயக்கம்

தெளிந்தது

எதிரே இருப்பவர்கள்

எனக்கு கொஞ்சம்

கொஞ்சமாக

தெரிய ஆரம்பித்தார்கள்

 

ஒருவர் என்னுடைய

பணம் நிரம்பி

இருந்த என்னுடைய

பர்ஸை கொண்டு வந்து

என்னிடம் கொடுத்தார்

தம்பி நிறைய பணம்

பர்ஸில் இருக்கிறது

சரியாக இருக்கிறதா

என்று பார்த்துக்

கொள் என்றார்

 

ஒருவர் சொன்னார்

“யார் செய்த

புண்ணியமோ

நீங்கள் இரண்டு

பேரும் உயிரோடு

இருக்கிறீர்கள்

ஏற்பட்ட விபத்திற்கு

செத்திருப்பீர்கள்”

என்றார்

 

---------என்றும் அன்புடன்

---------K.பாலகங்காதரன்

 

------11-10-2020

//////////////////////////////////////////////

 

10-10-2020-பிறந்த நாள்-பதிவு-2

 

பதிவு-2

 

மறுநாள் காலை

10-10

(10—ம் தேதி

அக்டோபர் மாதம்)

அன்று

 

அப்பா

“எங்கே

போகிறாய் ?”

 

நான்

“DIALYSIS

சம்பந்தமாக

CERTIFICATE

வாங்க வேண்டும்

நான்

BESANT NAGAR

போக வேண்டும்

அதான் நான்

BESANT NAGAR

செல்கிறேன்”

 

அம்மா

“கோயிலுக்கு

போய் விட்டு

போ”

 

நான்

“கோயிலுக்கு

போகிறேன்”

 

அப்பா

“யாருடன்

போகிறாய்?”

 

நான்

“கார்த்தி

வண்டியில்

தான் போகிறேன்

ஏதேனும்

பிரச்சினை

இருந்தால்

எனக்கு

உடனே போன்

செய்யுங்கள்”

 

என்று

சொல்லி விட்டு

என்னுடைய

நண்பன்

கார்த்தியுடன்

நான் வண்டியில்

கிளம்பி விட்டேன்

 

என்னுடைய

நண்பன்

கார்த்தி

உயிர் காப்பான்

தோழன்

என்பதற்கு

எடுத்துக்காட்டு

 

“என்னுடைய

அப்பா உடல்நிலை

சரியில்லாத

இரண்டு வருடங்கள்

என்னுடன் இருந்தவர் ;

நான் கூப்பிட்ட

குரலுக்கு

ஓடோடி வந்து

உதவிகள் செய்தவர் ;

24 மணி நேரத்தில்

எந்த நேரம்

கூப்பிட்டாலும்

ஓடி வந்து

உதவிகள் செய்பவர் ;

இரவு பகல்

பாராமல்

கூப்பிட்ட குரலுக்கு

ஓடோடி வருபவர் ;

நான் HOSPITAL-ல்

எத்தகைய

வேலைகளைச்

செய்தேன்

எவ்வளவு

கஷ்டப்பட்டேன்

எவ்வளவு

அவமானப்பட்டேன்

எவ்வளவு

வேதனைப் பட்டேன்

அனைத்தும் தெரிந்து

ஒரே புண்ணிய ஆத்மா

என்னுடைய நண்பன்

கார்த்தி அவர்கள்

மட்டும் தான்

அவர் செய்த உதவிக்கு

நான் இன்னும்

எத்தனை பிறவி

எடுத்தாலும்

கார்த்திக்

அவர்களுக்கு நான்

பட்ட நன்றிக்

கடனை அடைக்க

முடியாது என்பது

மட்டும் உண்மை”

 

அத்தகைய

உயர்ந்த உள்ளம்

கொண்டவர் தான்

கார்த்திக்

அவருடன் தான்

நான் BESANT NAGAR

சென்று

கொண்டிருந்தேன்

 

கோயிலுக்கு

போகச் சொன்னார்களே

என்று கோயிலைத்

தேடி கோயிலின்

வாசலில் முதல்

படிக்கட்டில் காலடி

எடுத்து வைத்தேன்

 

எனக்கு ஒரு

போன் வந்தது

எடுத்தேன்

என்னுடைய அம்மா

ஓவென்று

அழுதார்

நான் “அம்மா

அழாமல் சொல்லுங்கள்”

என்றேன்.

 

என்னுடைய அம்மா

சிறிது நேரம் அழுதார்

பின்பு பேசத்

தொடங்கினார்

 

“அப்பா பேச்சு

மூச்சு இல்லாமல்

இருக்கிறார்

எனக்கு என்ன செய்வது

என்றே தெரியவில்லை

உடனே வா” என்றார்.

 

“BESANT NAGAR –ல்

இருந்து PERAMBUR

வருவதற்கு குறைந்தது

45 நிமிடங்களாவது

ஆகும்

நான் வரும் வரை

அப்பாவைப் பார்த்துக்

கொள்ளுங்கள்

ஒன்றும் ஆகாது”

என்றேன்

 

---------என்றும் அன்புடன்

---------K.பாலகங்காதரன்

 

------11-10-2020

//////////////////////////////////////////////

 

10-10-2020-பிறந்த நாள்-பதிவு-1

 

பதிவு-1


அன்பிற்கினியவர்களே,

10-10-2020-ம் தேதி

சனிக்கிழமை அன்று

பிறந்த நாள்

கொண்டாடிய எனக்கு

வாழ்த்து தெரிவித்த

அனைத்து அன்பு

உள்ளங்களுக்கும்

என்னுடைய

நன்றியினைத்

தெரிவித்துக்

கொள்கிறேன்

 

ஒவ்வொரு வருடமும்

என்னுடைய

பிறந்தநாள் வரும்போதும்

என்னுடைய மனதில்

உள்ளவற்றை சொல்ல

வேண்டும் என்று

ஆசைப்படுவேன்

ஆனால் அதை

சொல்வதற்கு எனக்கு

வாய்ப்பு எதுவும்

கிடைக்கவில்லை.

 

நான் என்ன சொல்ல

வேண்டும் என்று

நினைத்துக்

கொண்டிருந்தேனோ

அதை எழுத்தில்

சொல்லாம் என்று

முடிவெடுத்து

என்னுடைய பிறந்த

நாளில் நடந்த

நிகழ்வைப் பற்றி

இப்போது சொல்கிறேன்

இது நடந்தது

13 வருடங்களுக்கு

முன்பு

 

என்னுடைய

அப்பாவிற்கு உடல்நிலை

சரியில்லாத காரணத்தினால்

அவருக்கு வாரத்தில்

மூன்று நாட்கள்

DIALYSIS

பண்ண வேண்டும்

என்று DOCTOR-கள்

எல்லாம் சொல்லி

விட்ட காரணத்தினால்

என்னுடைய அப்பா

இறக்கும் வரை

இரண்டு வருடங்கள்

நான் செய்த வேலையை

விட்டு விட்டு

என்னுடைய

அப்பாவுடன் இருந்து

DIALYSIS

பண்ணுவதற்கு

தேவையான

உதவிகள் செய்து

கொண்டிருந்தேன்

 

இத்தகைய

சூழ்நிலையில்

09-10-ம்

(9-ம் தேதி

அக்டோபர் மாதம்)

அன்று

என்னுடைய அப்பா

என்னைக் கூப்பிட்டார்

நான் என்னுடைய

அப்பாவிடம்

சென்றேன்

 

அப்பா

“நாளை எனக்கு

DIALYIS

பண்ண வேண்டும்

அல்லவா?”

 

நான்

“ஆமாம்”

 

அப்பா

“நாளை வேண்டாம்?

 

நான்

“ஏன்?”

 

அப்பா

“நாளை உன்

பிறந்த நாள்

அல்லவா

அதனால் தான்

வேண்டாம் என்றேன்”

 

நான்

“DIALYSIS

பண்ண வேண்டும்

நாளை போகவில்லை

எனில் DOCTOR

திட்டுவார்

நான் நிறைய

முறை திட்டு

வாங்கி விட்டேன்

DOCTOR

கொடுத்த DATE-ல்

போகவில்லை எனில்

DORCTOR என்னை

திட்டுவார்

நாளை கண்டிப்பாக

போகத் தான்

வேண்டும்”

 

அப்பா

“மற்ற நாள் தான்

HOSPITAL

HOSPITAL

என்று அலைந்து

கொண்டிருக்கிறாய்

பிறந்த நாளில்

ஆவது

HOSPITAL

பக்கம் போக

வேண்டாம்”

 

“நான் சொல்வதைக்

கேள்”

 

“பிறந்த நாள்

கோயிலுக்குப்

போக வேண்டும்”

 

“HOSPITAL

போகக்கூடாது”

 

“யாரிடமும்

திட்டு வாங்கக்கூடாது”

 

“அதனால் தான்

நான் சொல்கிறேன்

நாளை நாம்

HOSPITAL

போக வேண்டாம்

எனக்கு

DIALYSIS

பண்ண வேண்டாம்

சரியா?”

 

நான்

“சரி”

 

---------என்றும் அன்புடன்

---------K.பாலகங்காதரன்

 

------11-10-2020

//////////////////////////////////////////////