June 26, 2022

ஜபம்-பதிவு-783 (சாவேயில்லாத சிகண்டி-117)

 ஜபம்-பதிவு-783

(சாவேயில்லாத

சிகண்டி-117)

 

துருபதன் :

சென்ற

பிறவியிலேயே

பெண்ணாகப்

பிறந்த அம்பை

பீஷ்மனைக்

கொல்லவில்லை

 

இந்தப் பிறவியிலும்

அம்பை எனக்கு

பெண்ணாகப் பிறந்து

எப்படி

பீஷ்மனைக்

கொல்வாள்

 

அதனால் தான்

நான் ஆண்

பிள்ளை வேண்டும்

என்று கேட்கிறேன்

 

எனக்கு ஆண்

பிள்ளை பிறந்தால்

அவன் கண்டிப்பாக

பீஷ்மனைக்

கொல்வான்

 

சிவன் :

இந்த உலகத்தில்

பிறக்கும்

ஒவ்வொரு மனிதனும்

ஒரு காரணத்துடன்

தான் பிறக்கிறான்

 

இதற்காகத் தான்

நான்

பிறந்திருக்கிறேன்

என்று உணர்ந்தவன்

எதற்காக இந்த

உலகத்திற்கு

வந்தானோ

அதற்கான

கடமையைச் செய்து

முடிக்கிறான்

 

இந்த உலகத்தில்

எதற்காகப்

பிறந்திருக்கிறோம்

என்று

தெரியாதவர்கள்

எதற்காகப்

பிறந்தோம்

என்பது

தெரியாமலேயே

மாண்டு போகிறார்கள்

 

சென்ற பிறவியில்

அம்பை பீஷ்மனைக்

கொல்ல வேண்டும்

என்ற

காரணத்திற்காகப்

பிறக்கவில்லை

என்பதைத் தெரிந்து

கொண்ட

காரணத்தினால் தான்

சென்ற பிறவியில்

தன்னுடைய

வாழ்க்கையை

முடித்துக்

கொண்டாள் அம்பை

 

எடுக்கப் போகும்

இந்தப் பிறவியே

அம்பை பீஷ்மனைக்

கொல்வதற்காக

எடுக்கப் போகும்

பிறவி

 

இந்தப் பிறவியில்

அம்பை பிறப்பதே

பீஷ்மனைக் கொல்ல

வேண்டும் என்ற

காரணத்திற்காகத்

தான்

 

துருபதன் :

இதனை அம்பை

எப்படி உணர்ந்து

கொள்வாள்

 

சிவன் :

உனக்கு

பெண்ணாகப்

பிறக்கப் போகும்

பெண் பிள்ளையான

சிகண்டினி

குறிப்பிட்ட

காலத்திற்குப் பிறகு

சிகண்டி என்ற

ஆணாக மாறுவான்

 

அப்படி சிகண்டி

என்ற ஆணாக

மாறும் போது

அவனுக்கு சென்ற

பிறவியில்

நடந்தவைகள்

அனைத்தும்

அவனுடைய

நினைவுக்கு வரும்

 

துருபதன் :

இறைவா

எனக்கு

பிறக்கப்போகும்

பெண் பிள்ளை

பெண்ணிலிருந்து

ஆணாக மாறினால்

மாற்றுப் பாலினம்

என்று சொல்லி

என் பிள்ளையை

மட்டுமல்ல

என்னையும்

இந்த உலகம்

இழிவு படுத்துமே

 

கேவலமாகப்

பார்க்குமே

அவமானப் படுத்துமே

 

எங்களுக்கு

இத்தகைய ஒரு

அவமானம்

நேராமல் இருக்க

வேண்டுமானால்

எனக்கு ஒரு ஆண்

பிள்ளையைக்

கொடுங்கள்

அது போதும்

 

சிவன் :

துருபதா

அம்பை தன்னுடைய

தவ வலிமையால்

பீஷ்மனைக்

கொல்ல வேண்டும்

என்ற வரத்தைப்

பெற்று நெருப்பில்

இறங்கி தன்னுடைய

ஆயுள் முடிவதற்கு

முன் இறந்து

விட்டாள்

 

சென்ற பிறவியில்

விட்டு விட்டு வந்த

பெண்ணுக்கான

ஆயுளை

இந்தப் பிறவியில்

அவள் அனுபவிக்க

வேண்டும்

அதனால்

அவள் முதலில்

சிகண்டினி என்ற

பெண்ணாகப் பிறப்பாள்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----18-06-2022

-----சனிக்கிழமை

 

//////////////////////////////////////////////

 

ஜபம்-பதிவு-782 (சாவேயில்லாத சிகண்டி-116)

 ஜபம்-பதிவு-782

(சாவேயில்லாத

சிகண்டி-116)

 

இறந்து போன

அம்பை

மறு பிறவி

எடுக்க வேண்டும்

இந்த உலகத்தில்

பிறக்க வேண்டும்

முடிந்து போன

அம்பையின் கதை

இந்த உலகத்தில்

மீண்டும்

தொடங்கப்பட

வேண்டும்

 

அது தான்

 

“முடிந்தது

தொடங்க வேண்டும்”

 

என்பதற்குப் பொருள்

 

துருபதன் :

புதியது

தொடங்க வேண்டும்

என்றால்

 

சிவன் :

பீஷ்மனைக்

கொல்ல வேண்டும்

என்று

உன்னுடைய

நாட்டுக்கு வந்து

உன்னிடம்

கடைசியாக

உதவி கேட்டு

உன்னுடைய

நாட்டிலிருந்து

தான் சென்றாள்

அம்பை

 

எந்த

இடத்திலிருந்து

கடைசியாக

சென்றாளோ

அந்த இடத்திலேயே

பிறக்கப் போகிறாள்

அம்பை

 

எந்த இடம்

தன் வாழ்க்கை

முடிவதற்கு

காரணமான

இடமாக இருந்ததோ

அந்த இடத்தில்

தன் வாழ்க்கையை

ஆரம்பிக்கப்

போகிறாள் அம்பை

 

இறப்பதற்கு

காரணமாக

இருந்த இடமே

அம்பை பிறப்பதற்கும்

காரணமாக

இருக்கப் போகிறது

 

உன்னால்

புறக்கணிக்கப்பட்ட

அம்பை

மறுபிறவி எடுத்து

உனக்கே மகளாகப்

பிறக்கப் போகிறாள்

 

இந்த உலகத்தில்

புதியது ஒன்று

தொடங்கப்பட

இருக்கிறது

 

இது தான்

 

“புதியது

தொடங்க வேண்டும்“

 

என்பதற்குப் பொருள்

 

துருபதன் :

தொடங்கியது

முடிய வேண்டும்

எனறால்

 

சிவன் :

பீஷ்மன்

இறக்க வேண்டிய

காலம்

நெருங்கி விட்டது

விருப்பப்படும்

போது தான்

மரணம் என்ற

வரத்தைப் பெற்ற

பீஷ்மன்

கொல்லப்பட்டு

சாக வேண்டும்

என்பதற்கான

சூழ்நிலை

உருவாகி விட்டது

 

பீஷ்மனைக்

கொல்வதற்கு

ஒருவர் பிறந்தே

ஆக வேண்டும்

என்பதை காலம்

செயல்படுத்தத்

துவங்கி விட்டது

 

பீஷ்மனைக்

கொல்ல வேண்டும்

என்ற வரத்தைப்

பெற்ற அம்பை

பீஷ்மனைக்

கொல்ல ஒரு

பிள்ளை வேண்டும்

என்று பிள்ளை

வரம் கேட்ட

உனக்கு மகளாகப்

பிறந்து

பீஷ்மனைக்

கொல்ல வேண்டும்

என்ற

உன்னுடைய

எண்ணத்தை

நிறைவேற்றுவாள்

 

வாழ்க்கையைத்

தொடங்கி தொடர்ந்து

நடத்தி வாழ்ந்து

கொண்டிருக்கும்

பீஷ்மனுடைய

வாழ்க்கை

முடிய வேண்டும்

 

இது தான்

 

“தொடங்கியது

முடிய வேண்டும்”

 

என்பதற்குப்

பொருள்

 

மூன்று

பேர்களுடைய

கர்மாக்கள்

தன்னுடைய

விளைவைக்

கொடுக்க வேண்டும்

என்றால்

அம்பை உனக்கு

மகளாகப் பிறந்தால்

மட்டுமே சாத்தியம்

 

இந்த

காரணத்திற்காகத்

தான் அம்பை

உனக்கு மகளாகப்

பிறக்கப் போகிறாள்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----18-06-2022

-----சனிக்கிழமை

 

//////////////////////////////////////////////

 

 

 

 

 

ஜபம்-பதிவு-781 (சாவேயில்லாத சிகண்டி-115)

 ஜபம்-பதிவு-781

(சாவேயில்லாத

சிகண்டி-115)

 

சிறு மண்ணைக்

கூட மனிதனால்

உருவாக்க முடியாது

 

ஆனால்,

மனிதன் தன்னை

உயர்ந்தவன் என்று

நினைத்துக்

கொள்கிறான்

அறிவாளி என்று

தன்னைத் தானே

புகழ்ந்து கொள்கிறான்

 

தனக்காகத் தான்

இந்த உலகம்

படைக்கப்பட்டிருக்கிறது

என்று நினைத்துக்

கொண்டு

இயற்கையை

சீரழித்துக் கொண்டு

மற்ற உயிர்களை

அழித்துக் கொண்டு

ஆடாத ஆட்டம்

எல்லாம்

ஆடிக் கொண்டு

இருக்கிறான்

 

கடவுள் படைத்த

படைப்புகளில்

மனித படைப்பு தான்

உயர்ந்த படைப்பு

என்று

தனக்குத் தானே

சொல்லிக் கொண்டு

பெருமைப் பட்டுக்

கொண்டு

ஆணவத்தில்

ஆடுகிறான்

 

சுயநலம்

மிக்க மனிதன்

தான் வாழ

வேண்டும்

என்பதற்காக

எத்தகைய

செயலையும்

செய்யத் துணிகிறான்

 

பாவம் என்று

தெரிந்தும் தான்

வாழ்வதற்காக

யாரையும்

அழிப்பதற்கும்

மனிதன்

தயங்குதில்லை

 

துருபதன் :

நான் சுயநலம்

கொண்டவனல்ல

இறைவா

 

சிவன் :

பீஷ்மர் மேல்

உள்ள பகையினால்

பீஷ்மனைக்

கொல்ல வேண்டும்

அதற்கொரு

ஆண் பிள்ளை

வேண்டும் என்று

பிள்ளை வரம்

வேண்டி

என்னை நோக்கி

தவம் செய்தாயே

அது சுயநலம்

இல்லையா

 

சுயநலத்துடன்

நீ கேட்டதில்

முக்கியமான மூன்று

விஷயங்கள்

மட்டுமல்ல

பல்வேறு

ரகசியங்களும்

அடங்கி இருக்கிறது

 

இந்த மூன்று

விஷயங்கள்

நடைமுறைக்கு வர

வேண்டும் என்றால்

 

அம்பையின் கர்மா

துருபதனாகிய

உன்னுடைய கர்மா

பீஷ்மனின் கர்மா

ஆகிய மூன்று

பேருடைய

கர்மாக்களும்

ஒன்றாக இணைந்து

தன்னுடைய

விளைவைக்

கொடுப்பதற்குத்

தயாராக

இருக்க வேண்டும்

 

துருபதன் :

பிள்ளை வரம்

வேண்டி தவம்

செய்தது

நான் தான்

 

எனக்கு பிள்ளை

பிறக்க வேண்டும்

என்றால்

என்னுடைய

கர்மா தானே

செயல்பட வேண்டும்

மற்றவர்களுடைய

கர்மா ஏன்

இதில் செயல்பட

வேண்டும்

 

மற்றவர்களுடைய

கர்மாவுக்கும்

என்னுடைய

கர்மாவுக்கும்

என்ன தொடர்பு

 

சிவன் :

கர்மா

உருவாகும் போது

தனித்த நிலையில்

உருவாவதில்லை

இரண்டு அல்லது

மூன்று பேர்களை

இணைத்துத் தான்

உருவாகும்

 

அதைப்போல

கர்மா தன்னுடைய

விளைவினை

வெளிப்படுத்தும்

போதும்

தனித்த நிலையில்

வெளிப்படுத்துவதில்லை

இரண்டு அல்லது

மூன்று பேர்களை

இணைத்துத் தான்

வெளிப்படுத்தும்

 

துருபதன் :

எப்படி வெளிப்படுத்தும்

 

நீங்கள் சொன்ன

மூன்று

விஷயத்திற்கும்

பொருள் தான் என்ன

 

சிவன் :

பீஷ்மனைக்

கொல்ல வேண்டும்

என்று அம்பை

உன்னைத் தேடி

வந்த போது

நீ அவளுடைய

கோரிக்கையை

நிராகரித்ததால்

பீஷ்மனைக் கொல்ல

வேண்டும் என்ற

வரத்தை என்னிடம்

பெற்ற பின்பு

நெருப்பில் இறங்கி

அம்பை

இறந்து விட்டாள்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----18-06-2022

-----சனிக்கிழமை

 

//////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-780 (சாவேயில்லாத சிகண்டி-114)

 ஜபம்-பதிவு-780

(சாவேயில்லாத

சிகண்டி-114)

 

(பாஞ்சால மன்னன்

துருபதன்

பீஷ்மரிடம் கொண்ட

பகையினால்

யாராலும்

கொல்ல முடியாத

பீஷ்மரைக்

கொல்வதற்கு

தனக்கு ஒரு

மகன் வேண்டும்

என்று சிவனை

நோக்கி தவம்

செய்தான்

 

பாஞ்சால மன்னன்

துருபதன் செய்த

தவத்தில் மகிழ்ந்து

போன சிவபெருமான்

துருபதன் முன்னால்

காட்சியளித்து

பேசத் தொடங்கினார்)

 

சிவன் :

துருபதா

நீ கேட்கும்

வரம் எளிதில்

கிடைக்கக்கூடியதல்ல

என்பது உனக்குத்

தெரியுமா

 

துருபதன் :

எளிதில்

கிடைக்க வேண்டும்

என்பதற்காகத் தான்

தங்களை நோக்கித்

தவம் இருந்தேன்

இறைவா

 

சிவன் :

கடவுளை நோக்கி

தவம் இருந்தாலும்

கடவுளால் என்ன

கொடுக்க முடியுமோ

அதைத் தானே

கடவுளால்

கொடுக்க முடியும்

 

யாருக்கு என்ன

கிடைக்க வேண்டுமோ

அது தானே

கிடைக்கும்

 

விதிப்படி என்ன

நடக்க வேண்டுமோ

அது தானே நடக்கும்

 

துருபதன் :

இறைவா

விதியையே

மாற்றக் கூடியவர்

நீங்கள்

காலமே தங்களின்

கட்டளைக்கு

அடிபணிந்து தானே

நடக்கிறது

 

உங்களால்

முடியாதது என்று

எதுவும் இல்லை

நீங்கள் நினைத்தால்

எதையும் செய்யலாம்

 

கிடைக்காததையும்

கிடைக்கச் செய்யும்

வல்லமை

உங்களுக்கு உண்டு

அதனால் தான்

எனக்குத்

தேவையானதைக்

கேட்டு தங்களை

நோக்கி தவம்

இருந்தேன்

 

சிவன் :

துருபதா

நீ கேட்டதில்

மூன்று விஷயங்கள்

அடங்கி இருக்கிறது

 

துருபதன் :

என்ன விஷயங்கள்

இறைவா

 

சிவன் :

முடிந்தது

தொடங்க வேண்டும்

 

புதியது

தொடங்க வேண்டும்

 

தொடங்கியது

முடிய வேண்டும்

 

துருபதன் :

புரியவில்லை

இறைவா

 

சிவன் :

மனிதனால் புரிந்து

கொள்ள முடியாத

விஷயங்களில் தான்

பிரபஞ்ச ரகசியங்களே

அடங்கி இருக்கிறது

 

துருபதன் :

பிரபஞ்ச ரகசியங்களை

தெரிந்து கொள்ளும்

அளவிற்கு எனக்கு

சக்தி இல்லை

 

சிவன் :

மனிதனுக்கு

எதுவும் தெரியாது

தெரியாததை

தெரிந்து கொள்ள

வேண்டும் என்று

முயற்சி

செய்ய மாட்டான்

 

ஆனால்

அனைத்தையும்

தெரிந்து

கொண்டவன் போல்

ஆட்டம் மட்டும்

போடுவான்

 

கடவுள் படைத்த

படைப்புகளை

வைத்துக்

கொண்டு தான்

மனிதனால் எந்த

ஒன்றையும் உருவாக்க

முடியுமே தவிர

கடவுள் படைத்த

படைப்புகளைத்

தவிர்த்து

மனிதனால் எந்த

ஒன்றையும்

உருவாக்க முடியாது

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----18-06-2022

-----சனிக்கிழமை

 

//////////////////////////////////////////////