November 18, 2022

ஜபம்-பதிவு-900 மரணமற்ற அஸ்வத்தாமன்-32 (கிருஷ்ணனுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-900

மரணமற்ற

அஸ்வத்தாமன்-32

(கிருஷ்ணனுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

நம்முடைய மகனுக்கு

நீங்கள் தான் பெயர்

வைக்க வேண்டும்

இது தான்

என்னுடைய விருப்பம்

 

மனைவியின்

விருப்பத்தை

நிறைவேற்ற

வேண்டியது

கணவனின்

கடமையல்லவா

 

சிவன்

உங்களுடைய

விருப்பதை

நிறைவேற்றியது போல்

என்னுடைய

விருப்பத்தை

நீங்கள் தான்

நிறைவேற்ற

வேண்டும்

 

சிவனே மகனாகப்

பிறந்திருக்கும் போது

சிவனுக்கே பெயர்

வைக்கும் தகுதி

உங்களுக்குத் தான்

இருக்கிறது

 

சிவனுக்கே

நீங்கள் தான்

பெயர் வைக்க

வேண்டும்

 

துரோணர் :

சிவனே

மகனாகப் பிறந்த

காரணத்தினால்

சிவன் பெயரையே

வைத்து விடுவோம்

 

கிருபி :

என்ன பெயர்

 

துரோணர் :

அஸ்வத்தாமன்

 

கிருபி :

அஸ்வத்தாமன்

என்றால்

 

துரோணர் :

உயர்வான

அர்த்தத்தைத்

தன்னுள்

கொண்டது

 

கிருபி :

என்ன அர்த்தம்

 

துரோணர் :

இந்த உலகத்தில்

உள்ளவர்களில்

பெரும்பாலானவர்கள்

அர்த்தம்

இல்லாத பெயரை

வாயில் நுழைய

முடியாதபடி

புரியாத வகையில்

வைத்து விட்டு

அந்த

பெயருக்கென்று

ஒரு அர்த்தத்தை

தாங்களாவே

உருவாக்கிக் கொண்டு

உயர்ந்த பெயர்

நல்ல பெயர் என்று

சொல்லிக் கொண்டு

திரிந்து கொண்டு

இருக்கின்றனர்

 

அர்த்தம் நிறைந்த

பழைய பெயர்களை

ஒதுக்கி விட்டு

புதிய முறையில்

பெயர் வைக்கிறேன்

என்று சொல்லி விட்டு

புரியாத வகையில்

அர்த்தம் இல்லாத

பெயர்களை

வைத்து விட்டு

பெயருக்கான

அர்த்தத்தை

தேடிக் கொண்டு

அலைந்து கொண்டு

இருக்கின்றனர்

 

ஆனால் நாம்

வைக்கப்போகும்

அஸ்வத்தாமன்

என்ற பெயர்

பிறப்பிற்கான

அர்த்தத்தைத்

தெரிவிக்கும் பெயர்

 

நம்முடைய

மகன்

எதற்காகப்

பிறந்தான்

என்பதை இந்த

உலகத்திற்குத்

தெரிவிக்கும் பெயர்

 

கிருபி :

என்னவென்று

சொல்லுங்கள்

 

துரோணர் :

அஸ்வத்தாமன்

என்றால்

சிவன் என்று

பொருள்

 

கிருபி :

சிவனா

 

துரோணர் :

ஆமாம்

சிவனே தான்

 

சிவனே நமக்கு

மகனாப் பிறந்து

சிவ அவதாரம்

எடுத்து இருப்பதால்

சிவன் என்று

பொருள் படும்

அஸ்வத்தாமன்

என்ற பெயரை

வைக்கலாம்

 

கிருபி :

அஸ்வத்தாமன்

என்ற பெயர்

அருமையாக

இருக்கிறது

 

பெயரைச்

சொன்னாலே

உடலில்

ஒரு அதிர்வு

ஏற்படுகிறது

 

உணர்வுகள்

மேலிடுகிறது

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------18-11-2022

------வெள்ளிக் கிழமை

 

/////////////////////////////////////////

 

 

900-வது பதிவு

 900-வது பதிவு

 

ஜபம்-பதிவு-900

 

அன்பிற்கினியவர்களே!

 

2011-ஆம் ஆண்டு

முதல்

இணையதளத்தில்

திருக்குறள்

பழமொழிகள்

சித்தர் பாடல்கள்

இலக்கியங்கள்

ஆகியவற்றுக்கு

விளக்கங்கள்

எழுதத் தொடங்கிய

நான்

அதனைத் தொடர்ந்து

பல்வேறு

கதைகளை

உரையாடல்

நடையில் எழுதத்

தொடங்கினேன்

 

அவ்வாறு

எழுதத் தொடங்கிய

நான்

எழுதிய

என்னுடைய

இரண்டு கதைகளை

புத்தகமாக

வெளியிட்டு

இருக்கிறேன்

 

இன்னும்

சில புத்தகங்களை

வெளியிடுவதற்கான

தயாரிப்பு

பணிகள்

தற்போது

நடைபெற்று

வரும் வேளையில்

ஜபம் தன்னுடைய

900 பதிவை

அடைந்திருப்பதைக்

கண்டு நான்

மிக்க மகிழ்ச்சி

அடைகிறேன்

 

இத்தகைய

மகிழ்ச்சியை

எனக்கு அளித்த

என் உயிரில்

கலந்திருக்கும்

அனைத்து

அன்புள்ளங்களுக்கும்

என்னுடைய

நன்றியினைத்

தெரிவித்துக்

கொள்வதோடு

இனி

வருங்காலங்களில்

தமிழை

நேசிப்பவர்களுக்கு

என்னுடைய

எழுத்துக்கள்

சுவாசமாக

இருக்கும் என்று

தெரிவித்துக்

கொள்கிறேன்

 

நன்றி!

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------18.11.2022

------வெள்ளிக் கிழமை

 

/////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-899 மரணமற்ற அஸ்வத்தாமன்-31 (கிருஷ்ணனுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-899

மரணமற்ற

அஸ்வத்தாமன்-31

(கிருஷ்ணனுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துரோணர் :

ஆணை விட

பெண் தான்

உயர்ந்தவள்

 

அதனால் நீ தான்

பெயர்

வைக்க வேண்டும்

 

கிருபி :

ஏன் இவ்வாறு

சொல்கிறீர்கள்

 

துரோணர் :

ஒரு செயல்

நடைபெறும் போது

ஐம்புலன்கள் என்று

சொல்லப்படக்கூடிய

மெய் வாய் கண்

மூக்கு செவி

என்ற ஐந்தில்

இரண்டோ அல்லது

மூன்றோ தான்
ஒன்றாக இணைந்து

செயல்படும்

 

ஆனால்

ஐந்து புலன்களும்

ஒரே சமயத்தில்

ஆணுக்கு

ஒரு முறையும்

பெண்ணுக்கு

இரண்டு முறையும்

இணைந்து செயல்படும்

 

அதனால் தான்

ஆணை விட

பெண் என்பவள்

உயர்ந்தவள்

என்கிறேன்

 

கிருபி :

எந்த விஷயத்தில்

ஒன்றாக இணைந்து

செயல்படும்

 

துரோணர் :

பிரபஞ்ச ரகசியங்கள்

என்று

சொல்லிக் கொண்டு

மறைத்து

வைக்கப்பட்டிருப்பவை

அனைத்தும்

நாம்

அறிந்தவைகளாகத்

தான் இருக்கும்

 

கிருபி :

இதுவும் எனக்குத்

தெரிந்தது தான்

என்கிறீர்களா

 

துரோணர் :

அது நான் சொன்ன

பிறகு தான்

தெரியும்

 

கிருபி :

நீங்கள் சொன்னாலே

அது புதியதாகத்

தான் இருக்கும்

 

சொல்லுங்கள்

 

துரோணர் :

ஆண்

உடல் உறவு

கொள்ளும் போது

ஐம்புலன்கள் என்று

சொல்லப்படும்

மெய் வாய் கண்

மூக்கு செவி

என்ற ஐந்தும்

ஒன்றாக

இணைந்து செயல்படும்

 

இந்த ஒரு

முறையில்

மட்டும் தான்

ஆணுக்கு

ஐம்புலன்களும் ஒன்றாக

இணைந்து

செயல்படும்

 

ஆனால்,
பெண்

உடல் உறவு

கொள்ளும் போது

ஒரு முறையும்

பெண்

குழந்தையைப்

பெற்றெடுக்கும் போது

ஒரு முறையும்

ஆக இரண்டு

முறைகளில்

பெண்களுக்கு

ஐம்புலன்களும்

ஒன்றாக இணைந்து

செயல்படும்

 

ஒரு முறையில்

மட்டுமே

ஐம்புலன்களும்

ஒன்றாக இணைந்து

செயல்படும்

ஆண் உயர்ந்தவனா

அல்லது

ஐம்புலன்களும்

இரண்டு முறைகளில்

இணைந்து செயல்படும்

பெண் உயர்ந்தவளா

 

கிருபி :

ஆண் உயர்ந்தவனா

பெண் உயர்ந்தவளா

என்று எனக்குத்

தெரியாது

ஆனால் எனக்கு

ஒன்று மட்டும்

தெரியும்

 

என்னைப்

பொறுத்தவரை

நீங்கள் தான்

எனக்கு உயர்ந்தவர்

 

அனைத்தையும்

அறிந்தவர் நீங்கள்

 

சகலத்தையும்

கற்றவர் நீங்கள்

 

கலைகளில்

சிறந்தவர் நீங்கள்

 

அதுமட்டுமல்ல

நீங்கள்

என் மேல்

அன்பைப் பொழிபவர்

 

என்னை

வருத்தப்படாமல்

பார்த்துக் கொள்பவர்

 

என்னை பாதுகாப்பாக

வைத்துக் கொள்பவர்

 

எனவே

நீங்கள் தான்

எனக்கு உயர்ந்தவர்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------18-11-2022

------வெள்ளிக் கிழமை

 

/////////////////////////////////////////

 

ஜபம்-பதிவு-898 மரணமற்ற அஸ்வத்தாமன்-30 (கிருஷ்ணனுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-898

மரணமற்ற

அஸ்வத்தாமன்-30

(கிருஷ்ணனுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துரோணர் :

ஒரு தாய்

தன்னுடைய

குழந்தையை

தன்னுடைய

வயிற்றில்

பத்து மாதம்

சுமந்திருக்கும் போது

குழந்தைக்கு

எந்த ஒரு பாதிப்பும்

ஏற்பட்டு

விடக்கூடாது

என்பதற்காக

கஷ்டங்கள்

பலவற்றை தான்

மட்டுமே அனுபவித்து

உண்ணாமல்

உறங்காமல்

குழந்தையை

பாதுகாத்து

மிகப்பெரிய

வலியைப்

பொறுத்துக் கொண்டு

குழந்தையைப்

பெற்றெடுத்து விட்டு

உடலில்

ஏற்பட்ட வலியால்

கண்களைத்

திறக்க முடியாமல்

கை கால்களை

அசைக்க முடியாமல்

எழுந்திருக்க

முடியாமல்

படுத்த நிலையில்

இருக்கும் போது

அந்தத் தாயின்

முகத்தருகே

அவள் பெற்றெடுத்த

குழந்தையைக்

கொண்டு வந்து

காட்டும் போது

முதன் முதலாக

அந்தக் குழந்தையை

அந்தத் தாய்

பார்க்கும் போது

தன்னுடைய

குழந்தையை

தன்னுடைய

கைகளால்

தூக்க முடியாமல்

தன்னுடைய

கண்களால்

மட்டுமே கண்டு

தன்னுடைய

கண்ணீரால்

தழுவும் போது

அந்தத் தாயின்

மனதில் ஏற்படும்

மகிழ்ச்சி இருக்கிறதே

அந்த மகிழ்ச்சி தான்

உலகத்திலேயே

பெரிய மகிழ்ச்சி

அந்த மகிழ்ச்சியை

விட பெரிய

மகிழ்ச்சி இந்த

உலகத்திலேயே இல்லை

 

கிருபி :

நீங்கள் சொல்வது

உண்மை தான்

 

அந்த மகிழ்ச்சியை

நான் அனுபவித்தேன்

 

அந்த மகிழ்ச்சியை

விட பெரிய மகிழ்ச்சி

இந்த

உலகத்திலேயே

இல்லை என்பது

உண்மை தான்

 

துரோணர் :

இப்போது சொல்

மகன் பிறந்தது

மகிழ்ச்சியா

அல்லது

அந்த இறைவனே

மகனாகப் பிறந்தது

மகிழ்ச்சியா

 

கிருபி :

எனக்கு குழந்தை

பிறந்ததே

மகிழ்ச்சி தான்

 

துரோணர் :

புரிந்து கொண்டாய்

 

கிருபி :

புரியாததை

புரிய வைக்க

நீங்கள்

இருக்கும் போது

புரிந்து கொள்வதில்

எனக்கு என்ன

சிரமம் ஏற்படப்

போகிறது

 

அனைத்தையும்

அறிந்தவர் நீங்கள்

நம்முடைய மகனுக்கு

நீங்கள் தான்

ஒரு நல்ல பெயர்

வைக்க வேண்டும்

 

துரோணர் :

நம்முடைய மகனை

கஷ்டப்பட்டு

பெற்றெடுத்தவள்

நீ தான்

 

நம்முடைய

மகனுக்கு

பெயர் வைக்கும்

உரிமையும்

உனக்குத் தான்

இருக்கிறது

 

கிருபி :

நீங்கள் கொடுத்ததை

நான் ஏற்றுக்

கொண்டதால் தானே

நமக்கு மகனே

பிறந்திருக்கிறான்

 

ஏற்றுக்

கொள்பவர்களை விட

கொடுப்பவர்கள் தானே

உயர்ந்தவர்கள்

நீங்கள்

கொடுக்கவில்லை

என்றால்

எனக்கு மகன்

பிறந்திருக்க

மாட்டானே

 

நீங்கள் தான்

உயர்ந்தவர்

நம்முடைய

மகனுக்கு பெயர்

வைக்கும் உரிமை

உங்களுக்கு

மட்டுமே இருக்கிறது

 

நீங்கள் தான்

பெயர் வைக்க

வேண்டும்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------18-11-2022

------வெள்ளிக் கிழமை

 

/////////////////////////////////////////

ஜபம்-பதிவு-897 மரணமற்ற அஸ்வத்தாமன்-29 (கிருஷ்ணனுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-897

மரணமற்ற

அஸ்வத்தாமன்-29

(கிருஷ்ணனுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

கிருபி :

மகன்

பிறந்திருக்கிறான்

 

துரோணர் :

இறைவன்

பிறந்திருக்கிறான்

என்று சொல்

 

சாகாவரம் பெற்றவன்

பிறந்திருக்கிறான்

என்று சொல்

 

சிரஞ்சீவியாக

வாழப் போகிறவன்

பிறந்திருக்கிறான்

என்று சொல்

 

சிவன்

பிறந்திருக்கிறான்

என்று சொல்

 

கிருபி :

ஆமாம்

அந்த

சிவனே நமக்கு

மகனாகப்

பிறந்திருக்கிறார்

 

சிவனே நமக்கு

மகனாகப் பிறந்து

இந்த மண்ணில்

சிவ அவதாரம்

எடுத்திருக்கிறார்

என்பதற்கு

நம்முடைய மகனின்

நெற்றியில் இருக்கும்

ஸ்யமந்தக

மணியே சாட்சி

 

சிவன்

சொன்னபடியே

செய்திருக்கிறார்

 

நம்முடைய

விருப்பத்தை

நிறைவேற்றி

இருக்கிறார்

அவர் கொடுத்த

வரத்தின்படியே

அனைத்தும்

நடந்து இருக்கிறது

 

எனக்கு

மகிழ்ச்சியாக

இருக்கிறது

 

துரோணர் :

மகன் பிறந்ததால்

மகிழ்ச்சி என்கிறாயா

அல்லது

அந்த சிவனே

மகனாகப் பிறந்ததால்

மகிழ்ச்சி என்கிறாயா

 

கிருபி :

எனக்கு சொல்லத்

தெரியவில்லை

 

துரோணர் :

உலகத்திலேயே

பெரிய மகிழ்ச்சி

எது தெரியுமா

 

கிருபி :

மகிழ்ச்சி என்றாலே

துன்பங்கள்

களைவதால்

வருவது தானே

 

அதில்

பெரிய மகிழ்ச்சி

என்ற ஒன்று

இருக்கிறதா என்ன

 

துரோணர் :

இருக்கிறது

 

இந்த உலகத்தில்

ஒன்றே

ஒன்று தான்

பெரிய மகிழ்ச்சி

 

மற்றது எல்லாமே

சிறிய

மகிழ்ச்சி தான்

 

கிருபி :

அப்படிப்பட்ட

மகிழ்ச்சியை நான்

கேள்விப்பட்டதே

இல்லையே

 

துரோணர் :

அதைத் தெரிந்தவர்கள்

சொன்னால் தானே

உனக்கு தெரிந்திருக்கும்

 

பெரிய மகிழ்ச்சியை

அனுபவித்தவர்கள் கூட

இது தான்

உலகத்திலேயே

பெரிய மகிழ்ச்சி

என்பதை

அறியாமல் தானே

இருந்திருக்கிறார்கள்

 

இந்த

உலகத்திலேயே

பெரிய மகிழ்ச்சியை

நீ கூடத் தான்

அனுபவித்தாய்

உன்னால் கூட

அதைப் புரிந்து

கொள்ள

முடியவில்லையே

 

புரிந்து

கொண்டிருந்தால்

நீயே அதைச்

சொல்லி இருப்பாயே

 

புரிந்து கொள்ள

முடியாத

காரணத்தினால் தான்

உன்னால் சொல்ல

முடியவில்லை

 

கிருபி :

எதைச்

சொல்கிறீர்கள்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------18-11-2022

------வெள்ளிக் கிழமை

 

/////////////////////////////////////////